வியாழன், 13 நவம்பர், 2025

MC 510 ஊழியம் செய்ய விரும்பு-ப்ளூ கோட் பட்டாளம்-நவம்பர் 2025

 வணக்கங்கள் வாசக நெஞ்சங்களே.. 



இம்முறை நாம் காணப் போவது ஊழியம் செய்ய விரும்பு. இரண்டு வட அமெரிக்க வீரர்களை சுற்றி வரும் யுத்தக் கதைதான் இந்த ஊழியம் செய்ய விரும்பு.. நவம்பர் மாதத்தின் முத்து காமிக்ஸ் வெளியீடாக மலர்ந்திருக்கும் இந்தக் கதை முற்றிலும் நகைச்சுவை  ததும்பும் கதை. 

வடக்கு அமெரிக்காவின் சுதந்திர சேனை தெற்கு அமெரிக்காவின் அடிமைத்தன சேனைகளுடன் பொருதுவதே கதை. இந்த கதையினூடாக யுத்தத்தின் அவல நிலைகளையும் சுட்டிக் காண்பித்துக் கொண்டே செல்கிறது கதாசிரியரின் சிந்தனை.. 



இம்முறை மெக்சிகோ தேசத்துக்குள் தெற்கு வீரர்களால் விரட்டியடிக்கப்படும் இரண்டு வீரர்கள் அதில் ஒருவர் சார்ஜென்ட் மற்றவர் அவரின் கீழ் பணிபுரிபவர். இரண்டு கேரக்டரும் ஒன்றையொன்று வாரி விட்டுக் கொண்டே ஆபத்துக்களையும், பிரச்சினைகளையும் அசால்டாக சமாளித்துக் கொண்டே தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணத்தையும் நிறைவாக்குவார்கள்.. அப்படி மெக்சிகோ மண்ணில் இம்முறை அவசர கதியில் புகுந்து பின் மாறுவேடம் தரிக்க ஒரு பாதிரியாராக வேடமிடும் சார்ஜெண்ட் அவரின் உதவியாளராக வேடமிடும் தோஸ்த்.. 



நிற்க.. 

நம்ம பாதிரியார் ஓர் ஆலயத்தில் ஆராதனை செய்வார்.. அந்த குறிப்பிட்ட பகுதி லத்தீன் மொழியில் இருந்ததால் மொழிபெயர்ப்புக்காக அருட்தந்தை.லூர்துசாமி மற்றும் அருட்தந்தை.ஜேம்ஸ் வின்சென்ட் இருவரையும் நாடினோம். ஆகவே அவர்களுக்கு நம் அன்பு எடிட்டர் திரு.விஜயன் மற்றும்  வாசகர்கள் மற்றும் லயன் -முத்து குடும்ப சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 



மெக்சிகோவில் உள்ளூர் செவ்விந்தியர்களும், புரட்சிக்காரர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளைகளை நிகழ்த்துவதும் அவர்களுக்கு அர்ஜெண்டாக ஒரு பாதிரி தேவைப்படுவதும் தெரியவருகிறது.. சரியாக அந்த தருணத்தில் நம்மவர்கள் பாதிரியார்-பணியாள் வேடத்தில் கச்சிதமாக அங்கே பிரசன்னமாக அப்படியே கோழி அமுக்குவது போல தூக்கிச் சென்று அருகில் உள்ள தேவாலயத்தில் அமர்த்தி விடுகிறார்கள் அந்த கும்பல்.. அதன் பிறகு நிகழும் கலாட்டாக்கள் என்னென்ன என்பதனை மிகவும் நகைச்சுவை தெறிக்க தெறிக்க நமக்கு சித்திரங்களில் காண்பிக்கிறது இந்த ஊழியம் செய்ய விரும்பு.. கமான் வாசக வாசகியரே.. சிரித்து மகிழலாம்.. 
மொழிபெயர்ப்பு செய்துள்ள நண்பர் மேச்சேரி ரவிக் கண்ணன் அவர்களுக்கும் அதில் நுணுக்கமாக தன் தடத்தினைப் பதித்திருக்கும் எடிட்டர் திரு.விஜயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. 
இதே இதழில் சாம்பலின் சங்கீதம் குறித்த விளம்பரம் பங்கு பெற்றுள்ளது.. 

இது சீரியஸ் வரலாற்றை திரும்பிப் பார்க்கும் தருணம்.. மிஸ் செய்து விடாதீர்கள்.. மனித குலம் இழைத்த மாபெரும் தவறின் வரலாறு இது.. அடுத்த தலைமுறை அறிந்திட உதவும் இந்த கிராபிக் நாவல்.. 
மற்ற ப்ளூ கோட் பட்டாளம் இதழ்களை வாங்கி மகிழ.. 



என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

MC 510 ஊழியம் செய்ய விரும்பு-ப்ளூ கோட் பட்டாளம்-நவம்பர் 2025

 வணக்கங்கள் வாசக நெஞ்சங்களே..  இம்முறை நாம் காணப் போவது ஊழியம் செய்ய விரும்பு. இரண்டு வட அமெரிக்க வீரர்களை சுற்றி வரும் யுத்தக் கதைதான் இந்த...