வணக்கங்கள் அன்புள்ளங்களே..
சிறுவர் சிறுமியருக்காக கதை எழுதும் கதாசிரியர்கள் மிகவும் குறைந்து வரும் காலக்கட்டமிது. இதில் தன்னுடைய திறமையான எழுத்துக்களால் உங்கள் இல்ல குட்டீஸ்களை மகிழ்ச்சிப்படுத்த திரு.கார்த்திக் எழுத்தாலான மாளிகை கட்டிக் கொண்டாட அழைப்பு விடுத்திருக்கிறார். இது அவரது அச்சில் வரும் இரண்டாம் படைப்பாகும்.. அவரைப் பற்றியும் அவர் சமீபத்தில் எழுதியுள்ள நூலைப் பற்றியும் அவரது அறிமுகத்துடன் வாசிப்போமா?
வணக்கம் வாசக நண்பர்களே! என் சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்தில் அருகாமையில் உள்ள அழகிய கிராமம் அஸ்தகிரியூர்! தான் எனது ஊர்,மேற்படிப்பு MBA வரை படித்துள்ளேன்! இப்போது பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன், சிறுவயதில் இருந்து கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன், இதுவரை ஆயிரம் கவிதைகள் மற்றும் ஐந்து கதைகள் எழுதியுள்ளேன், அதில் முதல் கதையாக மாய விளக்கும் குட்டி இளவரசியின் கதை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வாசிக்கக் கூடிய வகையில் கற்பனைத் திறன் எழுதி உள்ளேன். உறுதியளிக்கிறேன், மாயவிளக்கும் குட்டி இளவரசியும் புத்தகம் உங்களுக்கு பிடிக்கும் என்பது உண்மை! இப் புத்தகத்தை வாசித்து உங்கள் வாழ்த்து மடலை வாழ்த்துகளாக தருவீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் இப்படிக்கு உங்கள் நண்பன் கார்த்திக்!
கழுகு தீவு – வாசக நண்பர்களுக்கான அறிமுகம்
வணக்கம், வாசகர் நண்பர்களே!
இப்போது உங்கள் கைகளில் தவழும் கழுகு தீவு எனது எழுத்துப் பயணத்தின் இரண்டாவது புத்தகமாகும். எனது முதல் புத்தகமான மாய விளக்கும் குட்டி இளவரசியும், வகம் பதிப்பகத்தின் மூலம் கலீல் சாரின் பேருதவியுடன் வெளிவந்தது. மேலும் பல கதைகளை எழுதியுள்ளேன். அவற்றையும் விரைவில் உங்கள் வாசிப்பிற்கு கொண்டு வருவேன். உங்கள் ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்!
கழுகு தீவு கதையின் சிறு அறிமுகம்… 🦅
இரத்தினபுரி நாட்டின் மன்னருக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணத்தில், மந்திரி செய்த செய்வினையால் நாடே ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறது. அந்தத் தீய விளைவுகளை முறியடிக்கவும், தங்கள் நாட்டைக் காப்பாற்றவும் வீரவேந்தனும் வெற்றிவேந்தனும் தங்க மாம்பழத்தைத் தேடி மர்மங்கள் நிறைந்த கழுகு தீவை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
அவர்களின் பயணத்தில் பாதி வழியில் இளவழகியும் இணைந்துகொள்கிறாள். ஆபத்து நிறைந்த மர்மங்களும் இந்தப் பயணத்தில், மூன்று நண்பர்களும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
அப்படியானால்…
🦅 தங்க மாம்பழம் அவர்களுக்குக் கிடைத்ததா?
மர்மங்கள் நிறைந்த கழுகு தீவை மூன்று நண்பர்களும் சென்றடைந்தார்களா?
மந்திரியின் சதியை முறியடித்து நாட்டைக் காப்பாற்றினார்களா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள கழுகு தீவு கதையுடன் பயணிக்கவும்!
உங்கள் அன்பும் ஆதரவும் என் எழுத்துப் பயணத்தை மேலும் சிறக்கச் செய்யும். தொடர்ந்து ஆதரவு அளிக்கும் வாசகர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! ❤️
நண்பரின் முந்தைய வெளியீட்டைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்கு:



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக