செவ்வாய், 14 ஜனவரி, 2014

பொங்கலோ பொங்கல்!!!

வணக்கம் அன்பு உள்ளங்களே!
அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! பால் பொங்கியாச்சா???_இந்த கேள்வியுடன் இரு தினங்கள் கழித்து தெரிந்த பெரியவர்களை எல்லாம் துரத்த்திப் பிடித்து காசு வாங்கி அதை வைத்து காமிக்ஸ் வாங்கி ரசிக்க பொங்கல் அடிக்கடி வாராதா என்கிற சிந்தனைகள் நெஞ்சினை நனைக்க பொங்கல் திருநாள் ஒவ்வொரு முறையும் இனிப்பாகவே கடந்து செல்கிறது!!! இந்த பொங்கலுக்கு அருமையான நிகழ்வுகளில் இரண்டு உண்டு! நமது லயன் காமிக்ஸ் குறித்து தினகரனில் அணில் சார் எழுதிய அட்டகாசமான கட்டுரை மற்றும் சன் செய்தியில் விஜயன் சாரின் பேட்டி என்று அதகளமான நிகழ்வுகள்!




இதை ரபிக் ராஜா அப்லோட் செய்திருக்கிறார்! முகநூலில் https://www.facebook.com/groups/lionmuthucomics/ என்கிற பக்கத்தில்! தேவைப் படுவோர் தரவிறக்கிக் கொள்ளவும்! நன்றி நண்பரே!

அப்புறம் என்னங்கப்பா? ஓ! காமிக்க்ஸா? நேற்றில் இருந்து அப்லோட் கொடுத்து கொடுத்து சரியாக தரவேறாமல் அடப் போப்பா என ஒரு காமிக்ஸை நிறுத்தி வெச்சி இருக்கிறேன்!  
நம்ம தங்கக் கரங்கள் ஒன்று சேர்ந்து இந்த பொங்கலுக்கு காமிக்ஸ் மழையாக கொட்டி இருக்காங்க https://www.facebook.com/groups/comicskk/ இங்க போய் ஒரு பார்வை பார்த்து 
ஸ்டாலின் பாகம் இரண்டு - Thanga Vel, பொடிச்சூர் எக்ஸ்பிரஸ் - Lucky Limat, கலாட்டா தாத்தா & பஸ் - Vinoj Kumar இந்த நூல்களை அள்ளிக் கொள்ளுங்கள்!! பொங்கிப் பிரவாகிக்கட்டும் அன்பும் அமைதியும்!! வாழ்க வளமுடன்! 
  

திங்கள், 6 ஜனவரி, 2014

முகச் சவரத்தின் கதை.....





அன்பிற்கினிய தோழர் பெருமக்களே! முக சவரத்தின் வரலாற்றினை நம்ம லயன் நிறுவனத்தார் பதிவு செய்து வைத்துள்ளனர்! அவர்களது அருமையான முயற்சி உங்கள் பார்வைக்கு!!
வரவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் தங்களை சந்திக்க மிக ஆவலுடன் உள்ளோம்! வாங்க பழகலாம்!!! என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!!!
https://www.facebook.com/bapasi

வியாழன், 2 ஜனவரி, 2014

புத்தாண்டு வாழ்த்துகளுடன்...

அன்பு நண்பர்களே! வணக்கம்! புது வருடம் புத்தம்புது மலர்களை தங்கள் மனம் கொண்டுவந்து சேர்க்கட்டும்!! என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கிடைத்த கொஞ்ச இடைவெளியில் நண்பர் கார்த்திகேயன் அவர்களது அன்புக்கு இணங்கி இந்த இதழை ஒருவாறு தங்கள் தங்கமான பார்வைக்குக் கொண்டு வந்துள்ளோம்! ராணி காமிக்ஸின் எதிர்காலக் கதை வரிசையில் வெளியிடப் பட்டு ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கதை இந்த "இருண்ட உலகின் இரும்பு மனிதன்!"
புத்தகத்தினை நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் சரவணா RSK அவர்களுக்கு எங்கள் அனைவரின் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! புத்தகத்தை சென்னை ரசிகப் பெருமக்களுக்கு பகிர்ந்த ரமேஷ் சண்முகசுந்தரம் அவர்களுக்கும் நன்றிகள்!!
  









































































வெளியிட்ட அன்பு பிரசுரத்தார் ராணி காமிக்ஸ் அன்னாருக்கும் எங்கள் ரசிகப் பெருமக்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்! 
டெங்கு அடிச்சிடுச்சு நண்பர்களே! கிடைத்த கேப்பில் கிடா வேட்டிட்டோம்! என்சாய்!!!! என்றும் அதே அன்புடன்! உங்கள் நண்பன் ஜானி!!!
தொடர்புடைய இடுகைகள்:
நண்பர் விமலாஹரனின் கைவண்ணத்தில் http://vimalaharan.blogspot.in/2011/05/blog-post.html


Ivo Milazzo - இவோ மிலாஸ்ஸோ-சித்திரக்கதை ஓவியர் குறிப்புகள்

 வணக்கங்கள் வாசக உள்ளங்களே..  இவோ மிலாஸ்ஸோ (பிறப்பு 20 ஜூன் 1947) ஓர் இத்தாலிய சித்திரக்கதை ஓவியர் ஆவார்.  ஐவோ மிலாசோ, தனது முக்கிய கதை எழுத...