சித்திரக்கதை உலகே விசித்திர வடிவம் கொண்டதுதான்..இங்கே ஜாலியும் கேலியும் கிண்டலும் துள்ளலும் இளமையும் முதுமையும் கைகோர்த்து ஹாய்யாக நடை போடுவதை நாம் காண நேரிடும்.. சிறுவர்களுக்கு மாத்திரமே காமிக்ஸ் என்கிற நிலை கடந்து இளைய தலைமுறையோடும் முதிய தலைமுறையோடும் வாசிப்பிலும் நேசிப்பிலும் ஒன்றித்து விடும் அக்கினிக்குஞ்சுகள் இங்கே இருக்கிறார்கள்..இதோ ஒரு வயதால் முதிய, மனதால் என்றும் பதினாறாக ஜொலிக்கும் அகில உலக தமிழ் காமிக்ஸ் விடிவெள்ளி நட்சத்திரம்...காமிக்ஸ் சூப்பர் ஸ்டார்...திரு.சுரேஷ் சந்த்...கதாசிரியர், காமிக்ஸ் ஆர்வலர்..காமிக்ஸ்களின் காப்பாளர், இரசிகர்களின் அன்புக்கும் ப்ரியத்துக்கும் உரிய திரு.சுரேஷ் சந்த்..
அவர்களை ஆனந்த விகடன் பேட்டி எடுத்து தீபாவளி மலர் 2019 மூலமாக பிரசுரித்து மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.. திறமை எங்கிருந்தாலும் தானாக தேடிவரும் தேனீக்களாக இதோ அடுத்தது NEWS 18 -CNN செய்திப் பிரிவும் அன்னாரை இல்லத்தில் சென்று சந்தித்து விட்டுப் போயிருக்கிறார்கள்... தினமலர் உலக செய்தி சேவை இணைய தளம் உள்ளூர் கோவை செய்தித்தாள் தனியே சந்தித்து பேட்டி எடுத்து விட்டு சென்றுள்ளனர் என்று தகவல். அத்தனையும் காமிக்ஸ் என்கிற அழகான ஓவியத்தை அலங்கரிக்கும் முயற்சிகளே...
ஓவியர் அப்பு சிவா அவர்களது கைவண்ணத்தில் திரு.சுரேஷ் சந்த் அவர்கள்..
பிறப்பால் வட மாநிலத்தை சேர்ந்தவராயினும் தன் சிறப்பான சேவையால் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும், சித்திரக்கதை உலகுக்கும் சேவை செய்து வரும் இவரை தமிழக மக்கள் தங்கள் அன்புக்கரத்தால் அரவணைக்க அங்கீகரிக்க வேண்டும் மேலும் தமிழக அரசு இவரது தன்னலமற்ற சேவை உள்ளத்தை ஏதாவது ஒரு விதத்தில் அங்கீகரித்து கவுரவப்படுத்த வேண்டும் என்பதே அடியேனின் மற்றுமுள்ள நண்பர்களின் பெரு விருப்பமாக உள்ளது..
தமிழ் சித்திரக்கதை வாசகர்கள் சார்பில் அவரை வாழ்த்துவதுடன் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்...