திங்கள், 14 அக்டோபர், 2019

வினை விதைத்தால்..வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்


பத்திரிக்கை வைக்க வீட்டிற்கு வந்த பங்காளி தம்பதியரை நிலத்தை விற்றதில் தனக்குக் கொடுக்காத பணத்தை நினைத்து கருவிக்கொண்டே வரவேற்ற இல்லம் அது.. மளுக்கென கழுத்து முறியும் சத்தம் அங்கே அடுத்தடுத்து கேட்டது.. பின்னால் வெட்டி வெச்சிருக்கும் குழிக்குள்ளே போட்டு மூடுங்கடா இவங்களை...கர்ஜிப்பு குரலில் அடியாட்களை பணித்து விட்டு காரை வேகமெடுக்க செய்தான் தென்வலன்..நான்காவது திருப்பத்தில் கடும் மழைக்கிடையே வண்டி நின்று விட்டது.. காரை விட்டிறங்கி பழுதை சரிபார்க்க தண்ணீரில் மிதக்கும் சாலையில் காலை விட்டவனை அப்படியே உள்வாங்கி இழுத்துக் கொண்டது பாதாள சாக்கடை...மழை தொடர்ந்து பெய்தது.  ஒருசில தினங்கள் கடந்ததும் இரங்கல் பத்திரிக்கையில் சின்னஞ்சிறு புகைப்படமாக தென்வலன்..

கதாசிரியர் குறிப்பு:
பத்திரிக்கைகளின் செய்திகளே எனது கதைக்கான கரு என்பார் பெரு மதிப்புக்குரிய அண்ணன் திரு.ராஜேஷ் குமார்..இது என் கோணத்தில் சொல்லப்பட்ட கற்பனைக் கதை..

2 கருத்துகள்:

  1. நேற்று முன்தினம் (12.10.2019) வெள்ளக்கோவிலில் நடந்த உண்மை சம்பவம் போல் உள்ளது இந்த கதை.

    பதிலளிநீக்கு

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...