வியாழன், 31 அக்டோபர், 2019

இளகிய மனம்-வள்ளல் குணம்...திரு.சுரேஷ் சந்த் எனும் மாமனிதர்..

பிரியமானவர்களே வணக்கம்..

சித்திரக்கதை உலகே விசித்திர வடிவம் கொண்டதுதான்..இங்கே ஜாலியும் கேலியும் கிண்டலும் துள்ளலும் இளமையும் முதுமையும் கைகோர்த்து ஹாய்யாக நடை போடுவதை நாம் காண நேரிடும்.. சிறுவர்களுக்கு மாத்திரமே காமிக்ஸ் என்கிற நிலை கடந்து இளைய தலைமுறையோடும் முதிய தலைமுறையோடும் வாசிப்பிலும் நேசிப்பிலும் ஒன்றித்து விடும் அக்கினிக்குஞ்சுகள் இங்கே இருக்கிறார்கள்..இதோ ஒரு வயதால் முதிய, மனதால் என்றும் பதினாறாக ஜொலிக்கும் அகில உலக தமிழ் காமிக்ஸ் விடிவெள்ளி நட்சத்திரம்...காமிக்ஸ் சூப்பர் ஸ்டார்...திரு.சுரேஷ் சந்த்...கதாசிரியர், காமிக்ஸ் ஆர்வலர்..காமிக்ஸ்களின் காப்பாளர், இரசிகர்களின் அன்புக்கும் ப்ரியத்துக்கும் உரிய திரு.சுரேஷ் சந்த்..

அவர்களை ஆனந்த விகடன் பேட்டி எடுத்து தீபாவளி மலர் 2019 மூலமாக பிரசுரித்து மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.. திறமை எங்கிருந்தாலும் தானாக தேடிவரும் தேனீக்களாக இதோ அடுத்தது NEWS 18 -CNN செய்திப் பிரிவும் அன்னாரை இல்லத்தில் சென்று சந்தித்து விட்டுப் போயிருக்கிறார்கள்... தினமலர் உலக செய்தி சேவை இணைய தளம்  உள்ளூர் கோவை செய்தித்தாள் தனியே  சந்தித்து பேட்டி எடுத்து விட்டு சென்றுள்ளனர் என்று தகவல். அத்தனையும் காமிக்ஸ் என்கிற அழகான ஓவியத்தை அலங்கரிக்கும் முயற்சிகளே...
ஓவியர் அப்பு சிவா அவர்களது கைவண்ணத்தில் திரு.சுரேஷ் சந்த் அவர்கள்..

எத்தனையோ வாசகர்கள் இருக்கும் தமிழ் மண்ணில் சித்திரக்கதைகளை பாதுகாக்கும் எண்ணம் கொண்ட அபூர்வ மனிதர் இவர். மேலும் தமிழில் வந்த அரிய அபூர்வமான காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டதாக நம்பப்பட்ட எக்கச்சக்க கதைகளை, நாவல்களை, மாயாஜாலக் கதைகளை சித்திர தொடர்களை இவரது சேமிப்பில் இருந்து தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். ஸ்கேன் செய்வதில் பல மட்கிப் போன நூல்களை இவர் இழந்திருக்கக் கூடும்.ஆனால் அத்தனையும் வீணாகாமல் அடுத்த தலைமுறைக்கும் நமது புத்தக செல்வங்கள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்கிற கடும் பிரயத்தனத்தில் இதையெல்லாம் அவர் கண்டுகொள்வதில்லை...அவற்றை நல்ல விலைக்கு வாங்க எத்தனையோ நபர்கள் ஆசை காட்டியிருக்கக் கூடும். அவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு தான் உலகுக்கு கொடுக்கக் கூடிய அதுவும் தமிழ் வாசகர்களுக்கு தான் தரும் அரும்பெரும் பரிசுகளாக தனது புத்தக ஸ்கேன்களால் மனதில் என்றென்றும் நீடித்து நிலைத்து நிற்பார் என்பதில் ஐயம் ஏதுமில்லை...
பிறப்பால் வட மாநிலத்தை சேர்ந்தவராயினும் தன் சிறப்பான சேவையால் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும், சித்திரக்கதை உலகுக்கும் சேவை செய்து வரும் இவரை தமிழக மக்கள் தங்கள் அன்புக்கரத்தால் அரவணைக்க அங்கீகரிக்க வேண்டும் மேலும் தமிழக அரசு இவரது தன்னலமற்ற சேவை உள்ளத்தை ஏதாவது ஒரு விதத்தில் அங்கீகரித்து கவுரவப்படுத்த வேண்டும் என்பதே  அடியேனின் மற்றுமுள்ள நண்பர்களின் பெரு விருப்பமாக உள்ளது.. 
தமிழ் சித்திரக்கதை வாசகர்கள் சார்பில் அவரை வாழ்த்துவதுடன் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்...

2 கருத்துகள்:

  1. இன்று அவரிடம் பேசிய போது சொன்னார், "என் வயது 62, காமிக்ஸ் வாசிக்கத் துவங்கியது 9வது வயதில் என்று". அந்த வகையில் 52 ஆண்டுகளாக காமிக்ஸ் கடலில், ஊறித் திளைத்திருக்கிறார்.

    ஆகச்சிறந்த குணமாக நான் கண்டது, தனக்கு கிடைத்த அரும்பெரும் நூல்களை நமக்காகவும், வருங்கால சந்ததிகளுக்கும் பகிர்ந்து கொள்ள அவர் செய்யும் முயற்சிகளே.

    சாதாரண மனிதரல்ல, வாழ்நாள் சாதனையாளர்.

    தொடரட்டும் அவர் பணி

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...