திங்கள், 7 அக்டோபர், 2019

நவாஜோ மாயாவி-comics pdf times


தொழில் செய்வோருக்கும்
பணி புரிவோருக்கும்
பல நன்மைகளை
தர காத்திருக்கும்
நவராத்திரி
ஆயுதபூஜை
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
*முகமூடி வேதாளர் மாயாவியின்*
*முரட்டுத்தனமான சாகசம்*
*நவாஜோ மாயாவி*
*புத்தம் புதிதாய் வெளிவரும்*
*சித்தம் மயக்கும் மொழிபெயர்ப்பு படக்கதை*
பரந்த உலகம்....
பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக...
பதினேழாம் வேதாளர்....
லண்டன் சிட்டி செல்லும் வழியில் ஒரு அபலைப் பெண்ணின் கூக்குரல்...
சென்று பார்த்தால்...
வெள்ளை கொள்ளையரின் பிடியில் ஒரு நவாஜோ பெண்...
சிறைப்படுத்தியவர்களில் ஒருவன் மட்டும் செவ்விந்தியன்...
அவளைக் காப்பாற்றும் முயற்சியில் மரண காயம் அடைகிறார் வேதாளர்....
கொள்ளையர்கள் தப்பிச் செல்ல தனி ஒருவனாக மாட்டிக்கொள்கிறார் வேதாளர்.. பணத்தைப் பறிகொடுத்த வங்கியின் தலைவன் வில்சனும் மற்றும் பலரும் அவரை தூக்கிலிட முயற்சிக்கிறார்கள். ஆனால் சிறைப்பட்ட பெண்ணின் தந்தை அவரை காப்பாற்ற தொடர்ச்சியாக வரும் சம்பவங்களில் இப்பொழுது நடைபெறுவது போன்ற மிகப்பெரிய பொருளாதார குற்றம் ஒன்று அப்பொழுதே நடந்திருப்பதை வேதாளர் கண்டுபிடிக்கிறார்.
புனித ஆவிகள் காப்பாளராக காட்டியதால் தப்பித்த வேதாளர் தன்னையும் அந்தப் பெண்ணையும் காப்பாற்ற துர் ஆவிகளின் குகைக்குள்ளும் செல்ல நேரிடுகிறது.
மஞ்சள் சட்டைக்காரரின் அதிரடி வேலைகளை முகமூடி வேதாளர் முன்னமே செய்திருப்பதை போன்ற பிரம்மையை ஏற்படுத்தும் இந்த அட்டகாச படக்கதை இந்த ஆயுத பூஜை நாளினை சிறப்பிக்க பிடிஎஃப் வடிவாக. படியுங்கள்... மகிழுங்கள்.... விமர்சனங்களை எழுதுங்கள்.....
http://bit.ly/35a18I9http://bit.ly/35a18I9
*முகமூடி வேதாளர் மாயாவியின்*
*முரட்டுத்தனமான சாகசம்*
*நவாஜோ மாயாவி*
*புத்தம் புதிதாய் வெளிவரும்*
*சித்தம் மயக்கும் மொழிபெயர்ப்பு படக்கதை*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...