வெள்ளி, 18 அக்டோபர், 2019

காமிக்ஸூம்..கிரிக்கெட்டும்...

காமிக்சுக்கும் கிரிக்கெட்டுக்கும் லகான் காமிக்சு புக்க தவிர வேற சம்பந்தம் இருக்கா இல்லையானு விட்டத்த பார்த்து யோசிச்சதல தோணுண தகவல்கள் இதுங்கதான்...

கிரிக்கெட் மாதிரி காமிக்சுலயும் காச மேல தூக்கி டாஸ் போடுவாங்க.
என்ன ஒண்ணு அதுல எது விழுந்துச்சுனு பார்க்கறதுக்கு முன்னாடி லக்கி நிழல விட வேகமா சுட்ருவாரு...

ரெண்டு டீம் இருக்கதுலாம் காமிக்சுலயும் சாதாரணமா இருக்கதுதான்...
நாலஞ்சு டீமுனு ரசிகர்களே இருப்பாங்க...

கிரவுண்டுல நடக்கறத விட கிரவுண்டுக்காக நிறைய ஆட்டம் காமிக்சுல நடக்கும்...

பேட்டுக்கு பதிலா பேட்மேன் இருப்பாரு...
பந்துக்கு பதிலா இவரே பறப்பாரு அவ்ளோதான் வித்தியாசம்...

சிக்ஸ்க்கு பதிலா டெக்ஸ்...
என்னா ரொம்ப நல்லவரு பவுண்டரிய தாண்ட மாட்டேனு அடம் பிடிப்பாரு...

அங்க வைல்ட்னா இங்க வைல்ட் வெஸ்ட்...
கைய சைட்ல விரிக்காம தலைக்கு மேல தூக்கினா ஒருவேள தல சுடாம விட சான்ஸ் இருக்கு...

கேட்ச் பண்றதுலாம் இங்குட்டும் உண்டு.ஆனா தடத்த பாலோ பண்ணி போய்தான் பிடிப்பாங்க...

ரன் பண்ணாங்கனவே சுட்டு ரன் அவுட் ஆக்கிடுவானுங்க...

விக்கெட் எடுக்கறத பத்தி சொல்ல வேணாம்...
கிரிக்கெட்ட விட காமிக்சுல தான் அதிகம்...பக்கத்துக்கு பக்கம் டுமீல்,டமால் இருக்கும்.

"கலி" லாம் இல்ல.
சில காமிக்ச படிச்சா கிலி ஆவறது வேணுணா அப்பப்போ நடக்கும்...

இங்கிட்டும் நாட் அவுட்டா இருவது முப்பது வருசம் ஆடறவங்கலாம் இருக்காங்க....

ஸ்பின்னுக்கு பதிலா ஸ்பின் ஆப் இருக்கும்...
டெஸ்ட்,இருபது ஓவர்,ஒன்டே மாதிரி கார்ட்டூன்,கிராபிக்னு வெரைட்டி இருக்கு..

ஹிட் விக்கெட் விட "கிட்" கிட்ட விக்கெட் ஆனவங்க லிஸ்ட் பெரிசு...

கூட்டி கழிச்சு பார்த்தா ரெண்டும் ஒண்ணுதான்...
என்னா காமிக்சுல நல்லவன் மட்டுமே ஜெயிப்பான்..
கிரிக்கெட்ல வல்லவன் தான் ஜெயிப்பான்...

மத்தபடி ரெண்டுமே வாழ்க்கையோட போராட்டந்தான்...
-கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...