திங்கள், 7 அக்டோபர், 2019

கருந்தேள் மாயாவி...காமிக்ஸ் பிடிஎப் டைம்ஸ்


*மகிழ்வோடு படிக்க செய்யும் மாயாஜாலக் கதை*
*கருந்தேள் மாயாவி*
*இன்பராஜா எழுதிய அதிரடி மந்திர ஜால நாவல்*
தேனாடு நாட்டின் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் மேல் ஒரு நள்ளிரவில் மிக ஆவேசமான துரத்தல் ஒன்று நடக்கிறது.. முன்னால் ஓடுகிறவன் கொள்ளைக்காரன் தலைவெட்டி தம்பு.. பின்னால் துரத்துகிறவன் 12 வயது சிறுவன் வினோதன். அவனது நோக்கம் தலைவெட்டி தம்பு எதற்காக பத்து வயது இளவரசி தேவதேவியை கடத்த வந்தான் என்பதை தெரிந்து கொள்வது.
தலைவெட்டி தம்பு தப்பிவிட அவனைத் தேடி காட்டுக்குள் கிளம்புகிறான் வினோதன். பல அதிர்ச்சியான சம்பவங்களின் முடிவில் ஒரு உண்மை வெளிப்படுகிறது.. தம்பு ஒரு அம்பு மட்டுமே அவனை ஏவுவது பைரவன் என்ற கொடூரமான மந்திரவாதி. அவனது உயிர்நிலை இருப்பதோ ஒரு அமானுஷ்ய காட்டுக்கு நடுவில் இருக்கும் திகில் சூழ்ந்த இருள் அடைந்த இடிந்துபோன அரண்மனையில்.. அங்கிருக்கும் மிகப்பெரிய கருந்தேளை கொன்றால் தான் பைரவன் அறிவான்..
இதை தெரிந்துகொண்ட சூழ்நிலையில் நாட்டுக்கு திரும்பும் வினோதனை இளவரசி தேவ தேவி கடத்தப்பட்ட செய்தி வரவேற்கிறது. அதன் பின்னர்தான் கருந்தேள் பற்றிய ஒரு மிகப்பெரிய ரகசியமும் எதற்காக தேவதேவி பைரவனுக்கு தேவைப்படுகிறாள் என்பதும் தெரியவருகிறது. உயிர் ஆபத்தில் இருக்கும் இளவரசியை உடனடியாக காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் மீண்டும் கிளம்பும் வினோதன் சந்திக்கும் சாதனைகளும் சாகசங்களும் விறுவிறுப்பான பக்கங்களில் சுறுசுறுப்பாக படிக்க வைக்கும் இந்த மாயாஜால நாவல் விடுமுறை தின பிறப்பு பிடிஎஃப் ஆக இன்று
http://bit.ly/2ollSMn
*மகிழ்வோடு படிக்க செய்யும் மாயாஜாலக் கதை*
*கருந்தேள் மாயாவி*
*இன்பராஜா எழுதிய அதிரடி மந்திர ஜால நாவல்*

http://bit.ly/2ollSMn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...