செவ்வாய், 22 அக்டோபர், 2019

டக்பெர்க்கில் உலகக் கோப்பை-டொனால்ட் டக் கலாட்டா_Mr.இளங்கோ Wedding Day Gift

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே..
தீபாவளியை முன்னிட்டு எக்கச்சக்க அரிய புதிய வெளியீடுகளை காமிக்ஸ் இரசிகர்களுக்கு அள்ளித்தரவிருக்கிறார்கள்..
அதில் இதோ முதல் பரிசு..
உயரிய பதவியின் பொறுப்புகளுக்கு இடையே
உலக காமிக்ஸ்களின் தமிழாக்கத்தை
வடிவமைப்பு செய்யவும் நேரம் ஒதுக்கும்
காமிக்ஸ் காதலர், பண்பாளர்
*மதுரை திரு இளங்கோ* *அவர்களுக்கு*
*இன்று திருமண நாள்*
அந்த வைபவத்தை அவர் மகிழ்வுடன் கொண்டாடும் வேளையில் அதை இன்னும் சிறப்பாக்கிட இந்த தமிழாக்க கார்ட்டூன் காமிக்ஸ் கலக்கலை விருந்தாக்குகிறோம்
*டக்பர்க்கில் உலக கோப்பை*
*அங்கிள் ஸ்க்ரூஜ்ஜின் துப்பறியும் நிறுவனம் நடத்தும் கலக்கல் காமெடி பிரம்மாண்ட கார்ட்டூன் காமிக்ஸ்*
டக்பர்க் நகரம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கத் தயாராக காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதைத் தடுக்க கால்பந்து ஆட்டத்தை வெறுக்கும் பம்பர் கிராப் என்ற மிகப்பெரிய பணக்கார விஞ்ஞானி முயற்சி செய்கிறான். அதற்காக ஒரு விண்கலத்தை உருவாக்கி அதன் மூலமாக அழிவு கதிர்களை அனுப்பி கால்பந்துகள் அனைத்தையும் உருமாற்றி விளையாடுவதற்கு முடியாதபடி செய்வது அவன் திட்டம். அது அங்கிள் ஸ்குரூஜ்ஜின்யின் துப்பறியும் நிறுவனத்திற்கு தெரியவர அதை தடுக்க அவர் தன் ஏஜென்டுகளான சுமார் மூஞ்சி குமாரையும் வெத்து வேலாயுதத்தையும் நியமிக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையான வினோதமான கருவிகள் அடங்கிய பெட்டியும் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்படுகிறது....
நிற்க...
ஒரு சீரியஸான ஆக்ஷன் திரில்லரை கற்பனை செய்து விடாதீர்கள்.. இந்தப் படக்கதையின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு படமும் நம்மை விலா நோக சிரிக்க வைக்கும் கார்ட்டூன் சித்திரங்கள்.. இதில் வரும் காமெடி சீக்ரெட் ஏஜெண்ட்கள் இருவரும் வில்லன் இருக்கும் ஜெர்மனிக்கு செல்வதும் அங்கு ஒரு கார்னிவலில் நடத்தும் துப்பறிதல்களும் வில்லனின் பிரம்மாண்டமான மறைவிடத்தில் செயல்படும் லாவகங்களும் அதன்பின் விண்கலத்தில் ஏறி வான்வெளியில் நடத்தும் சாகசங்களும் சொல்லப் பட்டிருக்கும் விதம் அனைத்துமே வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவு காமெடி கார்ட்டூன் சித்திரங்கள் . 


































ஒரு நல்ல மனிதரின் திருமண நாளை சிறப்பிப்பதற்பதற்காக இந்த காமெடி காமிக்ஸின் பிடிஎஃப் இன்று உங்களுக்கு
*டக்பர்க்கில் உலக கோப்பை*
*அங்கிள் ஸ்க்ரூஜ்ஜின் துப்பறியும் நிறுவனம் நடத்தும் கலக்கல் காமெடி பிரம்மாண்ட கார்ட்டூன் காமிக்ஸ்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...