ஞாயிறு, 27 அக்டோபர், 2019

கள்ளக்கடத்தல் அரசு (பாகம 1 & 2)



*தடதடக்கும் பட்டாசுகளின் வர்ணங்கள் அனைத்தும் ஒரே படக்கதையில்.....*
*கள்ளக்கடத்தல் அரசு (பாகம 1 & 2)
*ஈடிணையற்ற இந்திரஜால் காமிக்ஸ்*
வேதாளர் வெளிநாடு சென்று வருவதற்குள் கானகத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கிறது அந்த பேய் சாலை. அவைகளில் சென்று வருவதோ முழுவதும் வெள்ளை ஆடை பொருத்திய பேய்வண்டிகள்.. அதனால் கானகவாசிகள் அனைவரும் பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு வரும் வேதாளர் பேய்வண்டிகளைத் தொடரும் பொது அந்த போக்குவரத்து நிறுவனம் டவ் என்ற பணக்காரருக்கு சொந்தமானது என அறிகிறார். அந்தப் பணக்காரரை கண்டுபிடித்து சென்றடையும் வேலையில் அவரே கைதியாக இருப்பதையும் தெரிந்து கொள்கிறார் அதன்பின் அவரை கைதியாக்கிய ரவுடி கும்பலை தொடரும்போது அதன் முடிவு நேபா என்ற ஒரு தனி ராஜ்ஜியத்தின் எல்லையாக இருக்கிறது.
அங்கோ அந்த அரசாங்கத்தின் கொடுங்கோல் மன்னனான  மோலியா டவ்வின் மகளான கனியை கைதுசெய்து திருமணம் முடிக்க வற்புறுத்தி கொடுமை செய்து கொண்டிருக்கிறான். வேதாளர் கனியை காப்பாற்றி நேபாவின் தலைநகரை விட்டு வெளியேற முன்வாசலை நெருங்கும் போது அனைத்து கதவுகளும் மூடப்படுகின்றன. ஒரு சிறிய நாட்டின் பெரிய படை.. வழிகள் அனைத்தும் மூடப்பட உள்ளே சிக்கிக் கொண்ட வேளாளரும் கனியும்..
இந்த முதல் பாகத்தின் முடிவுப்பகுதிக்கு பின் இரண்டாவது பாகத்தில் கனியை அவளது தகப்பனிடம் வேதாளர் கொண்டு சேர்த்தாரா? அந்த மிகப்பெரிய கள்ளக்கடத்தல் அரசின் கோல்மால்களை முறியடித்தாரா? அதற்காக அவர் பட்ட சிரமங்களும் செய்த சாகசங்களும் என்னென்ன?  என்பதை விளக்கும் இரண்டாம் பாகத்துடன் முழுமையாக....
இந்த தீபாவளியின் மகிழ்ச்சிகளை இன்னும் இனியதாக்க இந்த முழு வண்ணப் படக்கதையின் பிடிஎஃப் உங்களுக்காக
*தடதடக்கும் பட்டாசுகளின் வர்ணங்கள் அனைத்தும் ஒரே படக்கதையில்.....*
*கள்ளக்கடத்தல் அரசு (பாகம 1 & 2)*
*ஈடிணையற்ற இந்திரஜால் காமிக்ஸ்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...