ஞாயிறு, 27 அக்டோபர், 2019

கேப்டன் கிரவுனின் உயில்_மொழிபெயர்ப்பு காமிக்ஸ்_Comics Pdf TImes

சற்றும் எதிர்பாராத திருப்பங்கள்
 முற்றுமாக உங்களை மூழ்கடிக்கப் போகும்

 கேப்டன் கிரவுனின் உயில்

 மகா மெகா பிரம்மாண்டமான அட்வென்ச்சர் ஆக்‌ஷன் மொழிபெயர்ப்பு காமிக்ஸ்
 இந்தத் தீபாவளிக்கு ஹைலைட்டாக அமையப்போகும் அதிரடி சரவெடி மொழிபெயர்ப்பு காமிக்ஸ்

பழங்கால உலகம்....
சான்கல்லி மோராவுக்கு நூறு மைல்கள் அப்பால் ஒரு பிரென்ச் படைப்பிரிவை தாக்குகிறது பிரபல கடற்கொள்ளைக்காரன் கேப்டன் கிரவுனின் கப்பல். மற்ற கப்பல்கள் தப்பிச்செல்ல கோல்ட் பியர்ல் என்ற ஒரு கப்பல் மட்டும் சிக்கிக் கொள்கிறது.. வழிய வழிய தங்கம் நிரம்பிய அந்தக் கப்பலை கைப்பற்றும் கேப்டன் கிரவுன் அடுத்த துறைமுகத்தில் ஆங்கிலப் படைகள் தங்களைச் சுற்றி சூழ்வதை கண்டு தப்பிச் செல்கிறார். தனியாக கோல்ட் பியர்லில் செல்லும் அவர் அதை குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒளித்துவைத்துவிட்டு அதன்பின் அங்கிருந்து அகல்கிறார். ஒரு கண்டத்தையே வாங்கும் அளவிற்கு செல்வம் படைத்த அந்த கப்பலில் உள்ள தக்கத்தால் கடல் கொள்ளையர்களுக்காக ஒரு சுதந்திர நாட்டையே உருவாக்க வேண்டும் என்பது அவரது திட்டம். அதற்காக எங்கெங்கோ வளரும் தனது வாரிசுகள் ஐவரை பொறுப்பாளர்களாக நியமித்து ஒரு உயிலும் எழுதுகிறார்..

தன் துணை கேப்டன் ரெட்டிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கண்ணயரும் வேளையில் கிரவுன் கொல்லவும் படுகிறார். சாகும் தருவாயில் அவர் உதிர்த்த வார்த்தைகளால் அவரை கொன்றது அவரது வாரிசுகளின் ஒருவனே என்பது ரெட்டுக்கு தெரியவருகிறது. இருந்தாலும் அந்த வாரிசுகளை ஒருங்கிணைக்கும் ரெட் அவர்களுடன் கேப்டனின் புதையலைத் தேடி செல்கிறார்.. புதையலை நெருங்கும் நேரத்தில் கேப்டன் கிரவுனை கொன்றது யார் என்பது வெளிப்படுகிறது. நாம் யாருமே எதிர்பாராத கற்பனை செய்ய முடியாத ட்விஸ்ட் அது. அது வெளிப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே ரெட்டும் கொல்லப்படுகிறார். இது முதல் பாகம் மட்டுமே!

அதன்பின் வாரிசுகள் அனைவரும் தங்கத்தைத் தேடி ஒரு கொடூரமான ஆழநடுக் காட்டுக்குள் பயணம் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்களா? தங்கம் கைப்பற்றப்பட்டதா? கேப்டன் கிரவுனின் கடைசி ஆசை நிறைவேறியதா? கண்ணிமைக்கும் நேரத்தில் பரபரப்பான காட்சிகள் பட்டையைக் கிளப்பிக் கடந்து செல்லும் இந்தக் கதை. புதையல் வேட்டையை மையக் கருத்தாகக் கொண்ட ஆக்க்ஷன், அட்வென்ச்சர், கிரைம், திகில் என பரபரப்பை உண்டாகும் எல்லா அம்சங்களுடன் விறுவிறுப்பாக செல்லும் இந்த மொழி பெயர்ப்பு காமிக்ஸ் இரண்டு பாகங்களும் முழுதாக தீபாவளித் திருநாளுக்கான அதிரடி சரவெடி பிடிஎஃப் பதிவாக இன்று உங்களுக்கு

http://bit.ly/31Rwhx0

 சற்றும் எதிர்பாராத திருப்பங்கள்
 முற்றிலுமாக உங்களை மூழ்கடிக்கப் போகும்

 கேப்டன் கிரவுனின் உயில்

 மெகா பிரம்மாண்டமான அட்வென்ச்சர் ஆக்‌ஷன் மொழிபெயர்ப்பு காமிக்ஸ்
 இந்த தீபாவளிக்கு ஹைலைட்டாக அமையப்போகும் அதிரடி சரவெடி மொழிபெயர்ப்பு காமிக்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...