ஞாயிறு, 21 டிசம்பர், 2014

பஞ்சவர்ணக் கிளி _திரை விமர்சனம்_கல்கி வார இதழ்!

வணக்கம் வாசக தோழமைகளே! மனம் போல் வாழ்க என்று பெரியவர்கள் ஆசீர்வதிக்கும்போது சொல்வார்கள். அதன் உண்மை காரணம் உங்கள் மனமும் வலமாக நலமாக செழுமையாக இருந்தால்தான் உங்கள் வாழ்வும் அதேவிதமான இனிமையுடன் நிறைவாக அமையும் என்பதே அதன் உட்கருத்து.  இந்த சிந்தனைகளுடன் இனியதோர் வாரத்தினைத் துவக்குங்கள். உங்கள் வாழ்வு வசமாகட்டும்.
கல்கியின் அட்டகாசமான விமர்சன மழை அந்தக் கால ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஒன்றாகும். திரைப்படங்கள் மக்களின் கவனத்தினை ஈர்த்திட பெரிதும் துணை நின்றவை அன்றைய, இன்றைய, நாளைய திரை விமர்சனங்கள். 
தொலைக்காட்சியில் ஞாயிறு வந்தாலே சன் டிவி டாப் டென் ஸ்பெஷலை என் கண்கள் ஆர்வமுடன் நாடும். அதில்தான் ஹாலிவுட் ஸ்பெஷல் இடம்பெறும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திரைக்குப்பின்னால் எப்படி அந்தக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டன என்பதும் அருமையாக விளக்கமாக காட்சிப்படுத்தப்பட்டு அதன் கணநேர காட்சிகள் அந்த நிகழ்ச்சியில்தான் காட்டப்படும்.
பஞ்சவர்ணக்கிளி. கதாநாயகன் ஜெய்சங்கர் அவர்கள் இரட்டை வேடம் தாங்கி சுவாரஸ்யப்படுத்திய திரைப்பட விமர்சனத்தை வாசியுங்கள். அடுத்தும் பல கல்கியின் விமர்சனங்கள் இடம்பெறப் போகின்றன. புகழ் அனைத்தும் கல்கிக்கே. நாம ஒரு இடைப்பட்ட ஆசாமி மட்டுமே!    

அப்புறம் நண்பர் ஆவுடையப்பன் சங்கரன் அவர்களது காமிக்ஸ் அன்பளிப்பு 
சங்கர்லால் தோன்றும் அமித் காமிக்ஸின் 
என்கிற அதிரடி சித்திரக்கதையை இந்த லிங்கில் தரவிறக்கி வாசித்து மகிழ வேண்டுகிறேன்!
லயன் குழும வெளியீடுகள் இந்த வருடம் எப்படி அமைந்திருந்தன என்பதனைக் குறித்து 
லிங்கில் சென்று தங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்களேன்???
இவ்வருட இறுதி காமிக்ஸ் இந்த நித்தமும் குற்றம். குற்றவியல் நவீன சக்ரவர்த்தி அபாய மனிதன் டயபாலிக்கின் சாகசம்  லயன் காமிக்ஸில் வெளியாகிறது. வாங்க மறவாதீர்கள்!

என்றும் அதே அன்புடன்_உங்கள் நண்பன் ஜானி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

The Road Graphic Novel_intro அறிமுகம் மற்றும் கதைச்சுருக்கம்..

 வணக்கம் நண்பர்களே..  இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தி...