வியாழன், 25 டிசம்பர், 2014

மாவீரன் சிம்சன்_விவிலிய சித்திரக் கதைகள்_திருத்தப்பட்ட பதிப்பு!

இனிய வாசகர்களே! உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி நிற்பி வழிந்தோடட்டும்! உங்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
 முன்னர் அறிவித்திருந்தபடி சிம்சோனின் அதிரடிகள் நிறைந்த வரலாறு மீள்திருத்தம் செய்விக்கப்பட்டு இன்று வலையேற்றம் செய்யப்படுகிறது. நண்பர்கள் வாசித்துப் பயனுற வேண்டுகிறேன். ஒரே இரவில் முந்நூறு நரிகளை பிடிக்க வேண்டுமெனில் எவ்வளவு தந்திரம் வேண்டும்? ஒரு கழுதையின் தாடை எலும்பினைக் கொண்டு எத்தனை பேரை அடித்து முறியடிக்க முடியும்? சிங்கத்தின் வாயினைப் பிளக்க எவ்வளவு வலிமை வேண்டும்? சிம்சோன் இறைவனுக்கு நேர்ந்து விடப்படும் பிள்ளை! இறைவனுக்காக தனது பெற்றோர்களால் அர்ப்பணிக்கப்பட்டவர்!
இறைவன் அவரை இஸ்ரவேல் மக்களை பெலிஸ்தியரின் தாக்குதலில் இருந்து  காக்கும் நியாயாதிபதிகளின் பட்டியலில் வைக்கிறார். அது முதல் நடந்த சம்பவங்கள் விலாவாரியாக இந்நூலில் விவரிக்கப்படுகின்றன.   இந்த கிறிஸ்துமஸை சிம்சோனின் வரலாற்றினை வாசித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்!
இப்படியாக சிம்சோனின் எழுச்சியும் வீழ்ச்சியும் அமைந்தன. இறைவனை இறுதியிலும் கூப்பிட்டு இத்தனை பேரை அழித்தொழித்த மாவீரன் சிம்சோனின் கதை விவிலியத்தின் வைர வரிகளில் செதுக்கப்பட்டிருக்கும் ஒரு வரலாறு. சிம்சோன் இறைவனது ராஜ்யத்தைக் காப்பாற்ற தன் உடல், ஆன்மாவினை தியாகம் செய்தவர். அவரது நினைவுகள் வரலாறு உள்ளவரை நிலைத்திருக்கும். ஆமென்!
என்றும் அதே அன்புடன் உங்கள் தோழன் ஜானி! 
  

7 கருத்துகள்:

031_காத்திருக்கும் உலகம்_இயேசு கிறிஸ்து_விவிலிய சித்திரக்கதை வரிசை

 அன்பு நண்பர்களே, இன்று எங்கள் திருமண வாழ்வின் 17 ஆண்டுகள் நிறைவு தினம். வாழ்க்கையின் எத்தனை சோதனைகளையும் வென்றெடுக்க துணை ஒன்று வாழ்வில் இர...