திங்கள், 22 டிசம்பர், 2014

திரை விமர்சனம்_யாதேன்!

வணக்கங்கள் அன்பு நண்பர்களே! கிறிஸ்துமஸ் ட்ரெஸ் எடுத்தாச்சா?
கிறிஸ்து பிறப்பு ஒரு விழாவாகக் கொண்டாடப்படவேண்டும் என்கிற செய்தி முதன்முதலில் யாருக்கு தெரிவிக்கப்பட்டது என்று நினைக்கிறீர்கள்? ஆடு மேய்க்கும் பணியை மேற்கொண்டு ஊருக்கு வெளியே கடும் பனி விழும் இரவினில்  தங்கள் ஆடுகளுக்குக் காவல் புரிந்து கொண்டிருந்த ஆட்டு இடையர்களுக்கு வானதூதர்கள் தோன்றி தகவல் தெரிவித்தனர். அவர்களே கொண்டாட்டத்தின் துவக்கப்புள்ளியாக அமைந்தனர். மிகவும் எளியவர்களுக்கே தேவன் தன் மகிமையை வெளிப்படுத்தினார். இறையரசு எளியவர்களுக்கு உரியது என்பதே இயேசு பூமிக்குக் கொண்டு வந்த செய்தி. எளிமையான வாழ்வினை மேற்கொள்ளும் மனிதர்கள் கொடுத்து வைத்தவர்கள். 
அப்புறம், இன்றும் கல்கியின் ராஜ்யத்தில் வெளியான பழமை ததும்பும் யாதேன் என்கிற இந்தி திரைப்படம் திரை உலகில் தாக்கத்தை உண்டாக்கியதை விமர்சிக்கும் குறிப்பு  வெளியாகிறது.
அப்புறம் கொஞ்சம் என் பர்சனல் பக்கங்கள். எனது பாட்டனார் திரு.அமிர்தன் அவர்களது ப்ளஸ் பாட்டி திருமதி.தாயார் அம்மாள் அவர்களது புகைப்படத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
தாத்தாவின் பணியை ஆவலுடன் ஏற்றுக் கொண்டு தொடர்வதிலும் ஒரு சுகம்  எனக்கு உண்டு. அவர்கள் வழிகாட்டாவிட்டால் என் வாழ்வு எப்படி அமைந்திருக்கும் என்பதை என்னால் கற்பனையாகக் கூட எண்ணிப்பார்க்க இயலவில்லை. காமிக்ஸ் மீதான எனது காதலும், இன்றுவரை உங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த தருணங்களும் அன்று எனது தாய்வழிப் பாட்டனார், பாட்டி ஆகியோரின் ஆசீரால் அமைந்ததே. மட்டுமல்லாமல் என் கரம்பிடித்து காமிக்ஸ் மீது வைத்து தமிழ் பயில ஆர்வத்தைத் தூண்டியதும் இறைவன் எனக்குக் காட்டிய மிகப்பெரிய கருணையே! எங்கிருந்தாலும் வாழ்க! 

என்றும் அதே அன்புடன் உங்கள் தோழன் ஜானி
கண்ணுக்குக் கீழே அடி தெரிகிறதல்லவா? காவல்துறையில் பயிற்சி நிறைவு விழாவுக்கு கராத்தே கலை நிகழ்ச்சிகள் செய்து காட்ட ரிகர்சல் செய்து கொண்டிருந்தபோது நண்பர் ஏடாகூடமாக என் மேல் கரணம் அடித்து வைக்க  அப்போது பட்ட சின்ன காயம். ஆனால் கண்ணமங்கலம் துப்பாக்கி சுடும் போட்டியில் பத்துக்கு ஏழு குண்டுகள் புல் எனப்படும் சரியான மையத்தில் அடித்தும் மயிரிழையில் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு பறிபோனது. இந்த புகைப்படப் பின்னணியில் தெரிவது கண்ணமங்கலம், விழுப்புரம் மாவட்டம்  துப்பாக்கி சுடும் பயிற்சி நிலையம்.
பை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...