வெள்ளி, 8 ஜனவரி, 2021

கொலுசின் மொழி_கவிதை_ஜானி சின்னப்பன்


விலகி விலகிப் பறக்க நினைத்தாலும் புவி ஈர்ப்பைத் தாண்டி பறவைக்கெங்கேவானம்.. 

புவியை சுற்றிடும் நிலவாய் அவள் நினைவை சுற்றிடும் என் மனம்..

தொலைவில் கேட்கும் கொலுசின் மொழி என் மனதை மயக்கும் சொக்குப்பொடி

எங்கோ எதிரொலிக்கும் அவளது சிரிப்பு எங்கெங்கோ அலைந்து என் இதயம் துளைத்த அம்பு.

காற்றில் வீசிவரும் வாசம்  வழியெங்கும் மணக்கும் பூக்களை மிஞ்சிடும்.. அவள் வந்து போன தடத்தில்..

_ஜானி சின்னப்பன்..

#கவிதையதிகாரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...