புதன், 27 ஜனவரி, 2021

இழப்பைக் கடப்போம்...

 *இதையும்...*


கடந்து வருவீர் 

நெஞ்சில் வலி

 கொண்டோரே..

காலமொன்றே 

கண்ணீரின் வலியைக்

கரைத்திடும் மருந்தாகும்..

எல்லோரின் நினைவிலும் 

எங்கோ ஒரு மூலையில்

சுகமாகவோ

வேதனையுடனோ

மகிழ்ச்சியுடனோ

வெறுப்புடனோ

ஏதாவது ஒரு நினைவின்

கீற்றாகத் தங்கும் எவரது இழப்பினையும்..

தவிர்க்கவே முடியா 

நினைவுகளும்...

தாங்கவே இயலா 

பாரங்களும்..

தொண்டையை அடைத்திடும் துக்கமும் நம்மிடம்

சொல்லிப் போகும் 

செய்தி ஒன்றுண்டு கேளீர்...

இதுவும் கடந்து போம்..

ஏற்கனவே இழந்த 

ஏதோவொன்றின் 

யாரோ ஒருவரின்

எண்ண மிச்சம் 

கரைந்தது போலவே...

ஆம்..

காலமே காயத்தையாற்றும் அருமருந்து.. 

மனதைத் தேற்றி

வாழ்வை மாற்றி

உறவைப் போற்றி 

வாழ்வோம் வாரீர்...

#செயலதிகாரம்...

#jscjohny

#ஜானி

#கவிதையதிகாரம் 


(நண்பர் ஒருவரின் பிரிவால் வாடும் குடும்பத்தாரின் ஆறுதலுக்கு...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

041_இயேசு கிறிஸ்து_11_வழி_விவிலிய சித்திரக்கதை வரிசை

இந்த சித்திரக்கதையை தரவிறக்க:  https://www.mediafire.com/file/9wuiujfw88hbjto/041_Vazhi_Jesus+Christ_tamil_viviliy+sithirakkathai+varisai.pd...