செவ்வாய், 7 செப்டம்பர், 2021

பிணமென்று நினைத்தாயோ..?_வினாடி கதை வரிசை_ஜானி சின்னப்பன்

ஊஊஊஊ என்ற ஊளைச்சத்தம் அந்த சுடுகாட்டுக்கு அருகிலிருந்த ஜீவனேஷின் வீட்டை நிறைத்தது.. ஊருக்கு ஒதுக்குப்புறமாய் தன்னந்தனியே அவனது வீடு.. பலப்பல அசிங்கமான நிழல் காரியங்களுக்கு அவனுக்கு உதவிக் கொண்டிருந்த வீடு அது..

வீட்டுக்குள்ளே ஜீவனேஷ்..

எங்கோ ஒரு ஆந்தையின் அலறலில் அவனது இதயம் ஒருகணம் நின்று துடித்தது. நெற்றியில் துளித்துளியாய் வியர்வையோடு   ஜீவனேஷ் நிமிர்ந்தான். இந்த ஆறடி ஆழம் சரியாய்த்தானிருக்கும்..அவன் மனம் திட்டமிட மண்வெட்டியை ஓரம் வைத்து விட்டு அந்த பெண்ணின் சடலத்துடைய காலைப் பற்றி இழுத்து குழிக்குள் தள்ளினான்.. 

அப்படியே அவனை இழுத்துக் குழியில் தள்ளிய விசையோடு வெளியே பாய்ந்தாள் ஷைனிகா.

ஜீவனேஷ்  குழிக்குள் விழுந்த வினாடியில் பள்ளத்தின் பக்க சுவர்கள் அப்படியே சரிந்து ஜீவனேஷை மூடிக் கொள்ள மூச்சடங்கும் ஓசை..மயான அமைதி..

தன்னை அழிக்க நினைத்த காதலனின் பணக்கார புதுக் காதலி ஜூவாலினியை நினைத்து ஒரேயொரு செகண்ட் கடைக் கண்ணில் கசிவுடன் வெளியேறினாள்..

விடை பெறுகிறேன் காதலா..

@Copyright belongs to jscjohny.blogspot.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செவ்வாயின் உறங்கும் தேவதைகள் (The Sleeping Angels of Mars)_jscjohny

 வணக்கம் வாசக வாசகியரே, செவ்வாய் கிரகத்தை மையமாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை இதோ: வருடம் 2050. விண்வெளி ஆராய்ச்சியில் மனிதகுலம் ஒரு புதிய உச்சத...