தரவிறக்க சுட்டி..
தமிழ் வாழ்க.. தமிழ்ப் புத்தாண்டு மலர்க.. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
மகா கவி பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். இதோ சித்திரக்கதைகள் உலகின் வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப் படுகின்றன.. நமது வலைப் பூ இதுவரையிலும் சிறு சிறு கதாபாத்திரங்களையும் அடையாளப்படுத்தியிருப்பதுடன் அதன் ஒரு சிறு பகுதி தமிழாக்கமும் செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதோ பான்ஸி பாட்டர் உங்களுடைய பார்வைக்கு..
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்வணக்கம் நண்பர்களே..
இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தினமாக உலகத்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் பொதுமக்கள் தென்னங்குருத்து ஓலைகளை கொண்டு வந்து வாழ்த்தி அவரை வரவேற்றனராம்..
தி ரோட் விரைவில் லயனில் வர வாய்ப்புள்ள கிராபிக் நாவல்..
பூமியின் இயற்கை வளங்கள் குறைந்துவிட்ட ஒரு போஸ்ட் அபோகாலிப்டிக் பாழான நிலத்தில், பெயரிடப்படாத ஒரு தந்தை மற்றும் மகன் தங்கள் மனிதநேயத்துடன் உயிர்வாழ முயற்சிக்கும் கதை, மேலும் சில உயிர் பிழைத்தவர்கள் இறைச்சிக்காக மற்றவர்களை வளர்க்க விடப்படுகிறார்கள், இது கோர்மக் மெக்கார்த்தியின் இருண்ட மற்றும் மிகவும் தொலைநோக்கு நாவல்களில் ஒன்றாகும்.
குறிப்பிடப்படாத ஒரு பேரழிவின் விளைவாக ஏற்பட்ட அழிவு நிகழ்விற்குப் பிறகு, ஒரு ஆணும் அவனது இளம் மகனும் உயிர்வாழப் போராடுகிறார்கள், இது அனைத்து தாவர உயிரினங்களும் கிட்டத்தட்ட அனைத்து விலங்குகளும் இறந்து போகின்றன.[5] பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில், தங்கள் பயணத்தில் பொருட்களைத் தேடி, துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய நரமாமிசக் கும்பல்களைத் தவிர்த்து, அந்த ஆணும் சிறுவனும் கடற்கரைக்கு ஒரு சாலையில் பயணிக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, பேரழிவுக்குப் பிறகு, அந்த மனிதனின் மனைவி ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள், அவள் படிப்படியாக நம்பிக்கையை இழக்கிறாள். அந்த மனிதன் கடைசி முயற்சியாக தங்கள் குடும்பத்திற்காக சேமித்து வைத்திருந்த மூன்று தோட்டாக்களில் ஒன்றைப் பயன்படுத்தி ஒரு ஊடுருவும் நபரைச் சுட்டபோது, அவள் தன் தற்கொலையைத் தடுக்க வேண்டுமென்றே தோட்டாவை வீணடித்ததாக அவன் மீது குற்றம் சாட்டுகிறாள். உறைபனியில் தனது கோட் மற்றும் தொப்பியைக் கழற்றி, அவள் காட்டுக்குள் நடக்கிறாள், மீண்டும் ஒருபோதும் காணப்படவில்லை.
தற்போது, நரமாமிசக் கும்பலின் ஒரு உறுப்பினரைச் சுட்டுக் கொன்ற பிறகு, அந்த மனிதனுக்கு ஒரே ஒரு தோட்டா மட்டுமே மிச்சம். ஒரு மாளிகையை ஆராய்ந்து, அவரும் சிறுவனும் அடித்தளத்தில் அடைக்கப்பட்ட மக்களைக் கண்டுபிடித்து, சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு உணவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நரமாமிசக் கும்பல்கள் திரும்பி வந்ததும், அந்த மனிதனும் அவனது மகனும் ஒளிந்து கொள்கிறார்கள். கண்டுபிடிப்பு உடனடியாக நிகழும் நிலையில், அந்த மனிதன் தனது மகனைச் சுடத் தயாராகிறான், ஆனால் தப்பியோடிய கைதிகளால் நரமாமிசம் உண்பவர்கள் திசைதிருப்பப்படும்போது அவர்கள் தப்பி ஓடுகிறார்கள்.
சாலையில் மேலும் கீழே செல்லும்போது, அந்த மனிதனும் சிறுவனும் பதிவு செய்யப்பட்ட உணவு மற்றும் பொருட்களால் நிறைந்த ஒரு நிலத்தடி தங்குமிடத்தைக் காண்கிறார்கள். அவர்கள் விருந்துண்டு குளிக்கிறார்கள். ஒரு நாய் உட்பட மேலே சத்தங்களைக் கேட்கும்போது, அந்த மனிதன் தங்குவது மிகவும் ஆபத்தானது என்று முடிவு செய்து முன்னேறுகிறான். அவர்கள் கிட்டத்தட்ட பார்வையற்ற ஒரு முதியவரைச் சந்திக்கிறார்கள், மகன் தந்தையை தன்னுடன் உணவைப் பகிர்ந்து கொள்ள வற்புறுத்துகிறான். பின்னர், இருவரும் பைக்குகளில் குழந்தைகளின் மண்டை ஓடுகளுடன் ஒரு முகாமை சந்திக்கிறார்கள். ஒரு புல்வெளியில் ஒரு தாயையும் மகனையும் ஒரு கும்பல் தாக்குவதைக் கண்டபோது, அவர்கள் இந்த முகாமை விட்டு அவசரமாக நகர்கிறார்கள். அவர்கள் ஓடிவிடுகிறார்கள்.
கடற்கரையில், கடற்கரையில் ஒரு கப்பலைத் துரத்த நீந்தும்போது, அந்த மனிதன் சிறுவனை தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க விட்டுவிடுகிறான். சிறுவன் தூங்கிவிடுகிறான், அவற்றின் பொருட்கள் திருடப்படுகின்றன. அந்த மனிதன் திருடனைத் துரத்திச் சென்று அவனிடமிருந்து எல்லாவற்றையும், அவனது ஆடைகளையும் எடுத்துக்கொள்கிறான். இது சிறுவனை மிகவும் வருத்தப்படுத்துகிறது, அந்த மனிதன் திரும்பிச் சென்று திருடனுக்காக துணிகளையும் ஒரு கேனையும் விட்டுவிடுகிறான்.
அவர்கள் ஒரு பாழடைந்த நகரத்தின் வழியாகச் செல்லும்போது, அந்த மனிதன் ஒரு அம்பினால் காலில் சுடப்படுகிறான். கப்பலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு துப்பாக்கியால் அவன் தனது பதுங்கியிருப்பவரைக் கொன்று, வில்லாளியின் பெண் தோழியை அதே அறையில் காண்கிறான். வில்லாளனும் பெண்ணும் தங்களைப் பின்தொடர்ந்ததாக அந்த மனிதன் நினைக்கிறான், ஆனால் அது நேர்மாறானது என்று அவள் கூறுகிறாள். அவன் அவளை உடலைப் பார்த்து அழ விட்டுவிடுகிறான்.
பலவீனமடைந்த ஆணும் பையனும் தங்கள் வண்டியையும் பெரும்பாலான உடைமைகளையும் விட்டுவிடுகிறார்கள். அந்த ஆணின் நிலை மோசமடைந்து இறுதியில் அவன் இறந்துவிடுகிறான். ஒரு மனிதன் தன் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் நாயுடன் சிறுவனை அணுகுகிறான். அவர்கள் சிறிது காலமாக சிறுவனையும் அவனது தந்தையையும் பின்தொடர்ந்து வருவதாகவும், அவனைப் பற்றி கவலைப்பட்டதாகவும் மனைவி விளக்குகிறாள். தந்தை சிறுவனை "நல்ல மனிதர்களில்" ஒருவர் என்று சமாதானப்படுத்தி, அவனைத் தன் பாதுகாப்பில் எடுத்துக்கொள்கிறார்.
மற்றவை.. திரையில் காணலாம். அல்லது மிக எளிதாக கிராபிக் நாவலாக லயன் காமிக்ஸில் வலம் வருகையில் வாங்கி வாசித்து மகிழலாம்..
நன்றிகள்: ஸ்ரீராம் இலட்சுமணன் உடனடி கவனத்துக்குக் கொண்டு வந்தமைக்கு..
என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன்.
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவும், எளிமையான வாசகர் வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற அக்கறையும் நண்பர்கள் பலரை தேடலில் ஈடுபட வைக்கிறது. திரைகடலோடியும் திரவியம் தேடும் நமது நண்பர்களில் திருமலை முக்கியமானவர். அவரது நெடுங்காலத் தேடலில் இதோ 1977ஆம் வருடம் மே மாதம் வெளியாகிய பொன்னி காமிக்ஸின் ஓநாய் தீவு புதையல் சித்திரக்கதை நம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார்.
இதன் விடுபட்ட பக்கங்கள் அட்டை அனைத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் திரு.பூபதி, ராசிபுரம் அவர்களுக்கும் அபூர்வமான புத்தகத்தை நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் திருமலை அவர்களுக்கும் நன்றியுடன்... வாசக நட்ப்பூஸ் உங்களுடனும் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த 2025 தமிழ் புத்தாண்டில் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மண்ணில் பதிப்பிக்கப்பட்டு நிறைய வாசகர்களை சென்றடைந்து கால வெள்ளத்தில் காணாமல் போய் விட்ட ஓநாய் தீவு புதையல் இதோ உங்கள் பார்வைக்கு..
துப்பறியும் க்வாக் சுந்தரம் 52PAGES-RSM 70/-
ஹைவே 117
62 PAGES. RS- 80/-
ஸ்வாம் நட்டி
72PAGES. -RS-90/-
அப்புசாமியின் கலர்டீவி
72PAGES. RS80/-
TOTAL RS 320/-
SET SALE ONLY
COURIER FREE
G PAY NO 98407 78947
ஒரு ஹேப்பி நியூஸ்.. காமிக்ஸ் எனும் கனவுலகப் போட்டியில்
2014ல் வெளியான இரவே இருளே கொல்லாதே சித்திரக்கதையிலிருந்து விமர்சனப் போட்டி வைத்தனர். அதில் பரிசைத் தட்டிட்டாரு நம்ம தோழர் @Sures Thanapal கூடவே நானும்..ஹிஹி விமர்சிச்ச அத்தனை பேரையுமே பரிசால் மகிழ்விச்சிருக்காங்க..
அவர்கள்
@Gunasekaran Muthuswamy
@discoverboo_Boopathi Rasipiram Nagpur
@~Baranitharan
@Sures Thanapal
@Cm Siva Ingam Cni 😇
@~Thottam Siva
@🤩Chris Ruban🥳
@சின்னமனூர் பி சரவணன்
@~Madhusoodhanan RK
காமிக்ஸ் எனும் கனவுலக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சக வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் காமிக்ஸ் வாசக வட்டம் சார்பாக நன்றிகள்.
அடுத்து நான் எழுதிய
இரவே இருளே கொல்லாதே விமர்சனத்திலிருந்து
காமிக்ஸ் என்னும் கனவு உலகம் விமர்சனப்போட்டி
தலைப்பு இரவே.. இருளே.. கொல்லாதே!
நடிகை ஒருத்தி தன்னுடைய எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டிப் பயணப்படுகிறாள். அப்போது கார் ஒரு விபத்தில் சிக்கி விட ஒரு குக்கிராமத்தில் சிகிச்சைக்காக தங்க நேரிடுகிறது. அவளை துரத்தும் இறந்த கால நினைவுகளில் அங்கிள் செஸ்டர் காமுகனாக துரத்திவர நிகழ்கால நடப்பில் சைக்கோ கொலையாளி ஒருவன் அவளை சுற்றிச்சுற்றி வலைப்பின்னலாக கொலைகளை நிகழ்த்தி வலைக்குள் சிக்க வைக்க முயற்சிக்கிறான். அவ்வப்போது கற்பனை கலந்த கனாக்களின் தாக்கமும் அவளை வாட்டியெடுக்கிறது. இந்த சைக்காலஜிக்கல் திரில்லருக்குள் கதைக்குள் கதையாக ஏகப்பட்ட கதைமாந்தர்கள் நிறைந்திருக்க நாம் காமிக்ஸ்தான் வாசிக்கிறோமா இல்லை இந்த அப்பாவிப் பெண்ணைத் துரத்திடும் பூச்சாண்டியின் கொடூரமான பல பாகத் திரைப்படத்துக்குள் ஒரு பாத்திரமாகி விடுகிறோமா என்ற சந்தேகமே எழுகிறது. வழக்கமான சைக்கோ த்ரில்லர்களின் கொலையாளிகள் பின்புலமாக கொலையாளியை நியாயப்படுத்தும் ஒரு கதைப்பின்புலம் இருக்கும். இங்கே நட்பு வட்டம் ஒன்றும் அதன் தைரியத்தை சோதிக்கும் ஒரு ஹேங்மேன் வீடும் பல திகில் சம்பவங்களும் நம்மை ப்ரேம் பை ப்ரேம் திகைப்புக்குள்ளும் குழப்பத்திலும் சிக்கலுக்குள்ளும் கதையை விட்டு நகராவண்ணம் இறுக்கிக் கட்டிப் போட்டு விடுகின்றன.. ஜோயெல் காலெடேவின் கதையமைப்பும் ஓவியர் டெனிஸின் கொடூரப் பூசணிக்காய் இளிப்போவியங்களும் ஹ்யூபெர்ட்டின் இருளும் ஆழமுமான வண்ணங்களும் லயன் காமிக்ஸ் கதைத் தேர்வும் தீபாவளி மலராக வெளியிடப்பட்ட இம் மூன்று பாகக் கதையும் ஹாலோவீன் தினத்திலேயே வெளியிடப்பட்டு நம்மை ஹாரர் கதைக்களத்துக்குள் தள்ளிய விதமும் நிச்சயமாக சிறப்பானவை.. குறியீடாக பூசணிக்காய்களும் புனுகுப்பூனை ஒன்றும் கதை நெடுக ஹாலோவீன் தொடர்புடைய காட்சிகளும் ஆங்காங்கே சரியான இடத்தில் வந்து ஒரு புரட்டுப்புரட்டி விட்டுப் போகிறது. ஆக மொத்தம் த்ரில் விரும்பும் பலமான இதயங்களுக்கும் கதையில் வரும் திரைப்பட ஓனரினைப் போல தைரியமாக பேய்ப்படங்களை ஒற்றை ஆளாக தியேட்டரிலேயே அமர்ந்து பார்க்கும் தில்லான வாசகர்களுக்கும் செமத்தியான ட்ரீட் இந்த இரவே..இருளே..கொல்லாதே..
நன்றிகள் அகெய்ன்.
ஒரு மனுஷன் உயிரோடு இருக்கும் போது, நமது ஊடகங்களை பெரும் உறக்கம் ஆட்கொண்டு விடுகிறது!
50 ஆண்டுகளைத் தொட்டு நின்ற 2022-ல்.... அல்லது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்ற 2023-ல் இவர்களது சிந்தைகளில் முத்து காமிக்சின் ஸ்தபாகர் / சீனியர் எடிட்டர் தோன்றிடாது போனது ஏனோ - படைத்தவருக்கே வெளிச்சம்!
*கபிஷ்* மீள்வருகையினை கேரள ஊடகங்கள் கொண்டாடித் தீர்த்தன - அது மிதமான 2 கலர் இதழாக இருந்த போதிலும்....
*டின்டின்* ஹிந்தியில் வெளியான சமயம் தேசிய ஊடகங்களே திருவிழாவாக்கினர் அந்தப் பொழுதினை!!
இங்கே - ஆசிய கண்டத்திலேயே முதன்முறையாய் ஒரு நூறு இதழ்களை நாம் வெளியிட்டாலும் - 'அப்டி ஓரமா போயி வெளாடு தம்பி ' தான்!
And இன்றைக்கு மாண்டு போனவரை மாய்ஞ்சு... மாஞ்சு ஒளிவட்டத்துக்குக் கொண்டு வர போட்டி அரங்கேறுகிறது! தபால்தலை போடுறதா? புக்கு எழுதுறதா? என்ற பட்டிமன்றங்கள் நடந்து வருகின்றன!
இருக்கும் போது இதனில் ஒரு கால் பங்கு வெகுஜன ஊடகங்களின் வெளிச்சம் கிட்டி இருந்தாலும் பூரித்துப் போயிருப்பாரே...!_ஆசிரியர் திரு.விஜயன் அவர்களது நியாயமான ஆதங்கம்..
சிற்றிலக்கிய வகையான சித்திரக்கதைகள் வெகுஜனப் பார்வைக்கு வருவதும் கால ஓட்டத்தில் நிலைத்து நிற்பதும் பெரிய சவாலான நாட்கள் அவை. இந்திரஜால், அம்புலி மாமா போன்ற பெரும் பத்திரிக்கைகளுக்கு இணையாக தமிழில் களமிறக்கி சிவகாசி மண்ணுக்குப் பெருமை தேடித்தந்த முத்து காமிக்ஸின் புகழுக்கு காரணமான பெரியவர் திரு.சௌந்தரராஜன் இறைவனடி சேர்ந்து விட்டார். அவருக்காக இறைவனை வேண்டுவோம்.
திரு.ஜெயமோகன் தனது கட்டுரையில்
முத்து காமிக்ஸ் நூல்களை நான் என் எட்டாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறேன். இன்றும்கூட மாதம் ஆயிரம் ரூபாய்க்கு அந்நூல்களை வாங்கிவிடுகிறேன். மூளை சூடாகாமல், இயல்பாக வாசிக்கத்தக்கவை. வணிக எழுத்தின் சில்லறைப் பாவனைகளும் அற்றவை. நம்மை சிறுவனாக உணரச்செய்பவை. குறிப்பாக நான் டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகன். என் நண்பர் கடலூர் சீனு, ஜா.ராஜகோபாலன் எல்லாருமே முத்து காமிக்ஸ் ரசிகர்கள்தான்.
ஐரோப்பிய ,அமெரிக்க காமிக்ஸ்களின் ஓவியச்சட்டகங்கள் மிகத்தேர்ச்சி கொண்டவை. சினிமா எனக்குச் சலிப்பூட்டுகிறது, அதில் நான் கற்பனை செய்ய ஏதுமில்லை. ஆனால் காமிக்ஸ் ஒரே சமயம் காட்சியனுபவமாகவும், என் கற்பனையைத் தூண்டும் வாசிப்பனுபவமாகவும் உள்ளது. ஆகவேதான் இந்த மோகம்.
முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி.
என தெரிவித்துள்ளார். சித்திரக்கதை வாசகர்களை துயரத்தில் ஆழ்த்தி மறைந்த ஐயா திரு.சௌந்தரபாண்டியன் தன் இறுதி மூச்சுவரை சித்திரக்கதைகளையே சுவாசித்தவர். மிக சமீபத்தில் ஒரு வாட்ஸ் அப் குழு அவருக்காக உருவாக்கப்பட்டிருந்தது. அதில் சித்திரக்கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்து தெரிவித்துக் கொண்டே இருப்பார். அந்த தீபத்தை தொடர்ந்து ஏந்திப் பயணிக்க வாசகர்களும் லயன் குடும்பத்தாரும் சித்திரக்கதை நேயர்களும் தயாராகவே இருப்பார்கள். அவரது கனவு என்றுமே இளமையாக இனிமையாக அன்னாரது நினைவுகளுடன் தொடரும்..
வணக்கம் தோழமை உள்ளங்களே.. நமது காமிக்ஸ் என்னும் கனவுலகம்
விமர்சனப் போட்டிக்காக விமர்சித்தது தங்களுக்கும் வாசிக்க எளிதாக இங்கே பகிர்கிறேன்.
நூல்: இளமையெனும் பூங்காற்று
வணக்கம்..
ஜனவரி 2025ல் வெளியாகியிருக்கும் இந்த சித்திரக்கதை லயன் கிராபிக் நாவல் வரிசை வெளியீடாகும். வெளியீட்டு எண் 461. விலை ரூ.125/-
வன்மேற்கை மையமாகக் கொண்ட இக்கதையில் இரண்டு கோச் வண்டிகள் தொடர்ச்சியாகக் கொள்ளையடிக்கப்படுகின்றன. கொள்ளையரில் ஒரு சிறுவனும் இருக்கிறான். கொள்ளைப்பணத்தை சேகரிப்பவனும் அவனே. பாதிப்புக்குள்ளாவோருக்கு சிறிது பணமும் திருப்பித் தருகிறான் என்பதை டெக்ஸ் வில்லரும் கிட் கார்சனும் பைனல் கவுண்டி ஷெரீப் மூலமாகக் கேள்விப்படுகிறார்கள். இது புதிதாக இருக்கிறதே என்று யோசித்து இதில் ஈடுபடுபவர்களை பிடிக்கப் போயிருக்கும் கும்பலைத் தொடர்கிறார்கள்.. கட் பண்ணா..
பெரும் முதலாளிகள் கொள்ளையருக்குப் பயந்து அமைத்த அந்த தனிப்படைக்குத் தலைமையேற்று நடத்துபவன் ஈவிரக்கமே துளியும் அற்ற ஹோஸ். அவன் பேர்ல் பெண் என்பது தெரிந்ததும் கிள்ளுக்கீரையாக எண்ணி அசிங்கப்படுத்த முயற்சிக்கும்போது திரௌபதியைக் காக்க கண்ணன் அருட்கரம் நீட்டினாற்போன்று வந்து சேர்கிறார்கள் டெக்ஸ் அண்ட் கார்சன். அவர்களிடம் ஹோஸ் சிறைப்பட்டுப் போக அனைவரும் ஊர் திரும்புகிறார்கள். வழக்கு நடக்கிறது. பெர்ல் தனது வழக்கை தானே வாதாடுவதாக தெரிவித்து நீதிபதி அனுமதியுடன் தன் தாய் நோய்வாய்ப்பட்டு இருப்பதால்தான் கொள்ளைக்காரியாகிப் போனேன் என்கிறாள். பத்திரிகைகள் இப்படி ஒரு பெண் கொள்ளைக்காரி வன்மேற்கில் முதன்முறையாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறாள் என்றால் சும்மா விடுவார்களா? சரித்திரத்தின் ஒரே பெண் கொள்ளைக்காரியாக பதிவு செய்யப்பட்ட உண்மை நபரான பெர்ல் ஹார்ட்டினை சுற்றி வளைத்துப் பேட்டி எடுக்கிறார்கள்.. நீதிமன்றம் அவளை குற்றமற்றவள் என்று விடுவித்தாலும் நீதிபதி அவளது கையொப்பத்தை ஒப்பிட்டு தன் தாய் எழுதியதாகக் காண்பித்த கடிதம் போலி என்று நிரூபிக்கிறார். ஆகவே சிறைக்கூடத்தில் ஐந்து ஆண்டுகள் அவளும் முப்பது ஆண்டுகள் ஜோ பூட் டும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பாகிறது. சிறையின் டைரக்டர் அவளை வைத்தே தன் சிறைச்சாலையை பிரபலமாக்குகிறார். அவளுக்கு வாசிக்க, எழுத என்று ஏகப்பட்ட சலுகைகள். அவளைப் பற்றி ஏகப்பட்ட பத்திரிகைகள் எழுதித் தீர்க்கின்றனர். ஒரு கட்டத்தில் டைரக்டரை தன் கவர்ச்சியால் வீழ்த்தி விட்டு தன் காதலனுடன் தப்பி மெக்சிகோ பறந்து விடுகிறாள். அங்கோ ஜோ தலைமறைவாகி விட மறுபடியும் அவல நிலைக்குள்ளாகிறாள்.
உண்மைக் கதைகளை டெக்ஸ் வில்லர் என்னும் இனிப்பைத் தடவிக் கொடுத்தால் வாசகரிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்பது இந்தக் கதையில் இன்னும் ஒரு முறை நிரூபிக்கப்படுகிறது. இதோ இன்னொரு நிஜமான பாத்திரத்துடன் நம் பயணம் தென்றலாக வருடிப் போகிறது இளமை எனும் பூங்காற்றாய்!
எடிட்டர் பக்கம்..
வணக்கங்கள் அன்புள்ளங்களே.. இன்று அறிமுகம் ஒரு கதை.. அரக்கர்களின் வீழ்ச்சி என்று பொருள்படும் இந்த கதையின் முதல் பாகம் இது.. இதன் பிரெஞ்சு வெர...