புதன், 6 மே, 2015

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு உதவிகரமான கேள்வி-பதில்கள்--003

51. A என்பவரின் மரணம் நஞ்சினால் விளைவிக்கப் பட்டதா என்கிற கேள்வியில் அவர் இறந்திருப்பது எந்த நஞ்சினால் என்று யூகிக்கப்படுகிறதோ அந்த நஞ்சினால் உண்டாக்கப்படும் அறிகுறிகள் பற்றி வல்லுனர்கள் கூறும் கருத்துக்கள் இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவின்படி தொடர்புடையதாகிறது? (Expert’s Opinion)
- இ.சா.ச. பிரிவு 45
52. Dactylo graphy என்பது எதனைக் குறிக்கிறது?
-கைரேகை
53. மரபணு சோதனை எதற்கெல்லாம் பயன்படும்?
- தந்தை வழி மரபு கண்டறிய, மனிதனை இன்னாரென அடையாளம் காண்பிப்பதற்கு.
54. Digital Signature http://wordinfo.info/unit/3673/ip:1/il:D (இலக்க முறை குறியிட்டுக் கையெழுத்து) குறித்து கருத்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?
-பிரிவு 47 (A)
55. குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் தீய குணநலன்கள் வழக்கிற்கு தொடர்பற்றது என்று கூறும் பிரிவு யாது?
-பிரிவு 54
56.நீதிமன்றம் நீதி முறையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருண்மைகளின் பட்டியல், இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?
- பிரிவு 57
57. IEA (Indian evidence act) sec 60-ன் கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத சாட்சியம் யாது?
- செவிவழி சாட்சியம்
58. செவிவழி சாட்சியம் தொடர்பற்றது என்ற விதியின் விதிவிலக்கு எது?
-ஒன்றிய செயல் கோட்பாடு மற்றும் மரண வாக்குமூலம்.
59. ஒரு ஆவணத்தின் உள்ளடக்கங்களை தலை நிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ மெய்ப்பிக்கலாம் எனக் கூறுகின்ற பிரிவு யாது?
-பிரிவு 61  
60. சார்நிலை சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலைகளை விளக்குகின்ற பிரிவு யாது?
-பிரிவு 65.
61. எது தனியார் ஆவணமாகும்?
-கிரைய ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், பாகப்பிரிவினை பத்திரம் ஆகியவை
62. எவை பொது ஆவணம்?
-சட்டமன்றத்துறை பதிவேடு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்
63. ஒரு ஆவணத்தை தொல் ஆவணம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்?
-முப்பது ஆண்டுகள்
64.ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்க்கவில்லை என்று வாதிட்டார். குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்த்ததாக வாதிட்டார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரைச் சேர்ந்தது?
-உரிமையாளர்.
65. B யின் மரண வாக்குமூலத்தை மெய்ப்பிக்க A விரும்புகிறார். இந்து அதற்குத் தொடர்புடைய பொருண்மையான B யின் மரணத்தை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு A யை சேர்ந்ததாகும் என்று சொல்லுகின்ற பிரிவு யாது?
-IEA sec 104
66.கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட A என்பவர் அது ஒரு விபத்து என்று கூறி தண்டனையில் இருந்து விலக்குக் கேட்கிறார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரை சேர்ந்தது?
- குற்றம் சாட்டப்பட்டவர் A யை சார்ந்தது.
67.வரதட்சணை மரணம் தொடர்பான அனுமானம் குறித்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் கூறப்படுகிறது?
-பிரிவு 113 –B
68.இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 113-A இந்திய தண்டனை சட்டத்தின் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது?
-இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-A
69. வன்புணர்ச்சி குற்றம் குறித்து அனுமானம் பற்றி விளக்குகின்ற பிரிவு யாது?
-பிரிவு 114-A IEA
70.குழந்தை சாட்சியங்கள் குறித்து கூறுகின்ற பிரிவு யாது?
-பிரிவு 118 IEA
71.IEA sec 119 எதைப் பற்றி விளக்குகிறது?
_ ஊமை சாட்சியம்
72.ஒரு கணவன், தன் மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் முன்னிலையில் குற்ற ஏற்பினை அளித்தார். இதில் யார் யார் அதனை மெய்ப்பிக்கலாம்?
-உறவினர்கள் மட்டும்
73.A எனும் கட்சிக்காரர்  B எனும் தனது வழக்கறிஞரிடம் பொய் ஆவணம் ஒன்றைப் பயன்படுத்தி சொத்தின் அனுபவத்தைப் பெற விரும்புகிறேன். எனவே அந்த ஆவணத்தின் மீது வழக்கிட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இது இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவோடு சம்மந்தப்பட்டிருக்கிறது?
-பிரிவு 126 ன் கீழ் மெய்ப்பிக்கலாம்.
74. உடன் குற்றவாளியின் சாட்சியம் தகுதியான சாட்சியே எனக் கூறும் பிரிவு யாது?
_பிரிவு 133 IEA
75.ஒரு சாட்சி எதிர்த்தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணையாகும்?
_குறுக்கு விசாரணை
76.ஒரு சாட்சி குறுக்கு விசாரணைக்குப் பிறகு அவரை அழைத்த தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணை ஆகும்?
-மறு விசாரணை
77. விடையமை வினாக்கள் (leading questions) எந்த விசாரணையின்போது கேட்கக் கூடாது?
-முதல் விசாரணை
78. பிறழ் சாட்சி (hostile witness) பற்றி கூறுகின்ற பிரிவு யாது?
_ பிரிவு 154 IEA
79.சாட்சியின் நாணயத்தைத் தாக்குதல் என்பது எந்தப் பிரிவில் விளக்கப்படுகின்றது?
-பிரிவு 155 IEA
80.நினைவைப் புதுப்பித்தல் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?

- பிரிவு 159 IEA

செவ்வாய், 5 மே, 2015

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு உதவிகரமான கேள்வி-பதில்கள்--002

இனிய வணக்கங்கள் தோழர்களே!
இதில் இன்னும் இருபத்தைந்து வினா விடைகளைப் பதிகிறேன். (டைப் அடிக்க அவ்வளவு நேரம்தான் கிடைத்தது)
வாசியுங்கள் விவேகமிகு வீரர்களே. உதவி ஆய்வாளர் பதவி மிகுந்த பொறுப்புணர்வும், அர்ப்பணிப்பும் கொண்டு விளங்கக் கூடிய செம்மையான பணியாகும். நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டு தேர்வினை அணுகினால் தங்களது வெற்றி உறுதி. 

26.மருத்துவ வரலாற்றுக் குறிப்புப் புத்தகத்தில் சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து குறிப்புப் பதிவு செய்ய வேண்டும்?
-இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை.
27. P.S.O. 708-ன்படி வட்ட ஆய்வாளர் நிலைய பொறுப்பு அதிகாரிகளிடமிருந்து மாத SHR கிடைக்கப்பெற்றவுடன் கீழ்க்கண்டவாறு செயற்பாடு திறன் மதிப்பிடுவார்....
-சராசரிக்கு மேல்
‘A’
சராசரி -‘B’ சராசரிக்குக் கீழ் - ‘C’  
28. மருத்துவ வரலாற்றுக் குறிப்புகள் எந்தெந்தக் காவல் அதிகாரிகளுக்குப் பராமரிக்கப்பட வேண்டும்?
-தலைமைக் காவலர் முதல் இரண்டாம் நிலைக் காவலர் வரை
29.PSO 730-ன்படி காவல் நிலையத் தலைமை அலுவலர் தன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு உடைச் செல்லு பட்டியலை (Acquittance Roll of clothing) எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை தயார் செய்து அனுப்பவேண்டும்?
-அரையாண்டிற்கு ஒருமுறை (ஜூன் மற்றும் டிசம்பர்)
30.PSO 731 –ன்படி ஒரு காவல் நிலையத்தில் எந்த அளவிலுள்ள அறிவிப்புப் பலகை வைத்திருக்கப்படவேண்டும்?
31.PSO 732-ன்படி ஒரு காவல் நிலையப் பெயர்ப்பலகை (Station Name Boards) எந்த மொழியில் எழுதி வைக்கப்படவேண்டும்?
-தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
32.எந்தக் காவல் நிலை ஆணை எண் படி அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளுக்கு (notified offenders) காவல் நிலையங்களில் பதிவேடுகள் வைத்து வரப்படவேண்டும்?
-PSO 735
33.சென்னை வழக்குக் குற்றவாளிகளின் கட்டுப்பாடு விதிகள் 1949-ன் 21-வது விதியின் கீழ் அறிக்கைகள் நீக்கப்பெற்ற அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை முடிவுகட்ட காவல் நிலையங்களில் எத்தனை ஆண்டுகள் வரை வைத்திருக்கவேண்டும்?
-பத்து ஆண்டுகள் வரை
34.PSO 735 –ன்படி இறந்துபோன அறிவிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை யார் ஆணையின்பேரில் அழிக்க வேண்டும்?
-உட்கோட்ட அலுவலரின் உத்தரவின் பேரில்.
35.குற்ற பதிவேடுகளில் பாகம் IV எதைப்பற்றிக் கூறுகிறது?
-கிராம சரித்திரப் பதிவேடுகள் பற்றி
36.கெட்ட நடத்தைக்காரர்களை கண்காணிக்க பராமரிக்கப்படும் சரித்திரப் பதிவேடுகள் பற்றி குற்ற ஆவணம் எந்த பாகம் விளக்குகிறது?
-பாகம் – V
37.தண்டனை பெற்றவர்களது வரலாற்றுக் குறிப்புகள் தானாகவே ஆரம்பித்தல் குறித்து கூறும் PSO எது?
-PSO 777
38.இந்திய ஆயுதச் சட்டம் & வெடி பொருட்கள் சட்டம் பிரிவு -  22-ன் கீழ் சோதனை நடத்த அதிகாரமுள்ள காவலர்கள்
-உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அலுவலர்கள்.
39. இந்திய ஆயுதச் சட்டம் 1959-ன்படி மாவட்டங்களில் உரிமம் வழங்கும் அதிகாரம் உள்ளவர்
-மாவட்ட ஆட்சியர்
40.PSO 321-ன்படி துப்பாக்கி உரிமங்களை ஒரு உதவி ஆய்வாளர் எவ்வெப்பொழுது தணிக்கை செய்ய வேண்டும்?
-அரையாண்டுக்கு ஒருமுறை
41.தமிழ் நாடு காவல் நிலை ஆணைகள் திருத்தி அமைத்து வெளியிடப்பட்ட ஆண்டு...
- 1999
42.காவல் நிலை ஆணைகளை இயற்ற காவல் துறை இயக்குனருக்கு அதிகாரமளிக்கும் சட்டப்பிரிவு
- பிரிவு 9 தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம் 1859
43.காவல் நிலை ஆணைகள் தொகுதி III-ல் அடங்கியுள்ள விபரங்கள்...
-படிவங்கள்
44.மாநில அளவிலான உயர் காவல் அலுவலர்களின் அமைப்பு பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை
- PSO 1
45.காவல் துறையினருக்கு அளிக்கப்படும் வெகுமதிகளுக்கான ஒப்பளிப்புத் தொகையினை விளக்கும் காவல் நிலை ஆணை
- PSO 46
46. ஒரு குழுவினருக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறைத் தலைவர் அளிக்கக் கூடிய பண வெகுமதிக்கான உச்ச வரம்பு
- ரூபாய் பத்தாயிரம்
47. காவல் நிலை ஆணை எண் 51  விளக்குவது
- முப்படையின் விட்டோடிகளைக் கைது செய்ததற்காக வெகுமதிகள்
48.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அளிக்கப்படும் வெகுமதிகள் பற்றிய விபரங்களை வெளியீடு செய்வது
- வாராந்திர குற்ற மற்றும் சம்பவத் தாள்
49.தனி நபர்களுக்கு வெகுமதி அளிக்க வழி வகுக்கும் காவல் நிலை ஆணை எண்
-PSO 55
50.PSO 56 விளக்குவது

-நற்சான்றிதழ் மற்றும் நன்றிக் கடிதம் அளித்தல் 
என்றும் அதே அன்புடன் - உங்கள் இனிய நண்பன்- ஜானி    

திங்கள், 4 மே, 2015

விவிலிய சித்திரக் கதை வரிசை-யாக்கோபின் புத்திரர்

வணக்கங்கள் இனியவர்களே! யாக்கோபு ஏசா சித்திரக்கதையைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக வெளியாகும் இந்த சித்திரக்கதை jw.org என்கிற யெகோவாவின் சாட்சிகள் சபையினரின் கைவண்ணம். மொழி பெயர்த்தால் தமிழ் மண்ணின் சித்திரக்கதை பிரியர்களுக்கு வண்ணமிகு காட்சிகளும், கிறிஸ்தவ சகோதர உள்ளங்களுக்கு (ஹி ஹி அடியேனுக்கும்) சிறுவர் சிறுமிகளுக்கு கதை சொல்ல உதவும் என்கிற எண்ணத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். இதனைத் தமிழ் மொழிப் பிரிவில் சம்மந்தப்பட்ட சபை சகோதரர்கள் பயன்படுத்தினால் நமக்கு மகிழ்ச்சியே!
  



என்றும் அன்புடன் உங்கள் இனிய தோழன் _ஜானி.

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு உதவிகரமான கேள்வி-பதில்கள்--001

வணக்கம் தோழமை உள்ளங்களே! 
இந்த மாத இறுதியில் உதவி ஆய்வாளருக்கான தேர்வினை எதிர்கொள்ள இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். உங்களில் துறை ரீதியிலான தேர்வினை எதிர்கொள்வோருக்காக இந்த கேள்வி -பதில் தொகுப்பினை பதிவிட்டுள்ளேன். அடுத்தடுத்து நேரம் வாகாக அமைந்தால் இன்னும் கொஞ்சம் பதிவிடுகிறேன். இந்த கேள்வி-பதில்கள் திரு.S.R.ஜாங்கிட் I.P.S. அவர்கள் சென்னை புறநகர் காவல் ஆணையாளராக இருந்தபோது அவரது முயற்சியால் தொகுக்கப்பட்டன. அவருக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
நல்லாப் படிங்க பாஸ்!!!

1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume) உள்ளது?
-மூன்று தொகுதிகளாக.
2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைகள் உள்ளது?
-856 ஆணைகள்
3.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காலை ஆஜர் பட்டியலின்போது வியாழக்கிழமைகளில் எந்தப் பணி ஆஜராகும் காவலர்களுக்குத் தரப்படும்?
-ஆயுதங்களை சுத்தம் செய்தல்.
4.காவல் நிலையங்களில் ரொக்கப் புத்தகம் பராமரிக்கவேண்டும் என்று கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?
- காவல் நிலை ஆணை எண்  262
5. காவல் ஆய்வாளர் பதவிக்குக் கீழ் உள்ள அலுவலர்களது பிழை செய்தவர் குறிப்புத்தாள் (defaulter sheets) யாருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்?
-காவல் நிலைய பொறுப்பு அதிகாரி
6. காவல் நிலை ஆணை எண் 295 பிரகாரம் அனைத்துத் தலைமைக் காவலர்களுக்கும், படிவம் எண்  423யில் கீழ்க்கண்ட ஆவணம் வழங்கப்படுகிறது.
-மருத்துவ சரித்திர ஏடு.(medical history sheet)
7. காவல் நிலை ஆணை எண் 562-ன்படி ஒரு காவல் நிலைய பொறுப்பு அலுவலர் குற்றவிசாரணை முறை சட்டம் (சுருக்கமாக கு.வி.மு.ச.) 157(1)(ஆ) பிரிவின்படி கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் விசாரணையை மறுக்கும் விருப்புரிமை உள்ளது.
-பத்து ரூபாய்க்கு மேற்படாத திருட்டு வழக்கு சம்பந்தமாக.
8.எந்த காவல் நிலை ஆணை எண், ஒரு விசாரணை அதிகாரியின் விசாரணை நடுநிலையாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது?
- காவல் நிலை ஆணை எண் 566
9. வழக்கு நாட்குறிப்பு (case dairy) குறித்து கூறும் காவல் நிலை ஆணை எண் எது?
- காவல் நிலை ஆணை எண் 567
10.காவல் நிலையங்களில் இருந்து பெறப்படும் வழக்கு நாட்குறிப்புகளில் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு ஏதாவது குறிப்புரைகள் தர வேண்டும் என்றால் உட்கோட்ட அலுவலர் / உதவி ஆணையாளர் காவல் நிலை ஆணை எண் 570 ன்படி
-குற்றக் குறிப்புகள் மூலம் தெரிவிப்பார்.
11. காவல் நிலை ஆணை எண் 573-ன்படி சாட்சிகளின் பெயர்களும், முகவரிகளும் அடங்கிய குறிப்பை என்ன செய்ய முடியும்?
-நீதிமன்ற உபயோகத்துக்கு மட்டுமே தரவேண்டும்.
12.ஒரு இளம் குற்றவாளியை கைது செய்கையில் அல்லது வழக்குத் தொடர்கையில் அத்தகைய இளங் குற்றவாளியின் வயது பற்றிய செய்தியை நீதிமன்றத்திற்குத் தரவேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் எது?
- காவல் நிலை ஆணை எண் 574
13.ஒரு காவலர் பாதுகாவலில் நடக்கும் தற்கொலை குறித்து அறிக்கை உடனடியாக காவல்துறை இயக்குனருக்கு அனுப்பப் பட வேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?
- காவல் நிலை ஆணை எண் 576
14. ஒரு கள்ளப் பணத் தாள் குறித்து ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பொறுப்பு அதிகாரி ஒரு புகார் தரும் பட்சத்தில், காவல் நிலை ஆணை எண் 578 பிரகாரம் ஒரு காவல் நிலைய பொறுப்பு அதிகாரி....
-நேரடியாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வேண்டும்.
15. ஒரு பிடியாணை வேண்டா வழக்கில் காவல் அலுவலர் ஒருவருக்கு தானாகவே ஒருவரைக் கைது செய்யவோ, செய்யாமலிருக்கவோ விருப்புரிமை எந்தக் காவல் நிலை ஆணையின்படி உண்டு?
- காவல் நிலை ஆணை எண் 622
16. காவல் நிலை ஆணை எண் 706 எதைப்பற்றிக் கூறுகிறது?
-பொது நாட்குறிப்பு (general dairy)
17. P.S.O. 706-ன்படி எந்தவொரு சூழ்நிலையிலும் காவல் நிலைய பொது நாட் குறிப்பில்.....மணி நேரத்துக்கு மேல் பதிவு இடைவெளிகள் இருக்கக்கூடாது?
- இரண்டு மணி நேரத்திற்கு மேல்.
18.P.S.O. 710 – ன்படி எந்தத் தரத்திலுள்ள காவலர்கள் நோட்டுப் புத்தகம் பராமரிக்க வேண்டும்?
-காவல் ஆய்வாளர் தொடங்கி காவலர்கள் வரை.
19. P.S.O. 711 –ன்படி ஒரு காவலர் பணி மாறுதலில் செல்லும்போது அவரது நோட்டுப்புத்தகத்தினை என்ன செய்ய வேண்டும்?
-அவர் பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.
20. P.S.O. 713 –ன்படி ஒரு சிறைக் கைதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டபின், சோதனைப் பதிவேட்டில் எந்தக் கட்டத்தில் அவனுடைய முழு விவரங்களை கவனத்தோடு பதிவு செய்ய வேண்டும்?
- மூன்றாவது கட்டத்தில்
21.P.S.O.715-ன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேடு கீழ்க்கண்ட படிவத்தில் பராமரிக்கப் படவேண்டும்.
-படிவம் எண் 103
22. P.S.O.715-ன்படி ஒவ்வொரு வட்ட ஆய்வாளரும் தனக்குக் கீழ் உள்ள காவல் நிலையங்களில் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றப்பதிவேட்டுடன் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பீடு செய்ய வேண்டும்?
-இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை.
23.தொல்லை வழக்குப் பதிவேடு பராமரித்தல் பற்றிக் கூறும் காவல் நிலை ஆணை எண்...
-716
24. P.S.O. 717 ல் பராமரிக்கக் கூறப்பட்டுள்ள ஆவணம் எது?
-அலுவல் பட்டியல் (Duty Roaster)
25.P.S.O. 726-ன்படி ஒரு காவலர் பிணி அறிக்கை செய்யும்போது அவரது பிணி அறிக்கை கடவுச் சீட்டுடன் எந்த ஆவணத்தினை தந்து அனுப்ப வேண்டும்?

-மருத்துவ வரலாற்றுக் குறிப்புப் புத்தகம்.
அப்புறம் நண்பர்களே நடப்பு நிகழ்வுகளை மாதாமாதம் நீங்கள் படித்தறிய வசதியாக கீழ்க்கண்ட தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். டோண்ட் மிஸ் இட்! வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

http://www.tnpscportal.in/2014/06/tnpsc-current-affairs-in-tamil-june-2014.html

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

உழைப்பாளர்களுக்கு சல்யூட்!

வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே!
மே ஒன்றாம் தேதி பிரதி வருடம் உழைப்பாளர் தினமாகக் கடந்து செல்கிறது. அவர்களது வியர்வையும், இரத்தமும், தேசங்களைக் கட்டி எழுப்புகின்றன. அவர்களுக்கு கொஞ்சம் அட்வான்சாக நன்றி தெரிவித்துக் கொண்டாடும் விதமாக இந்தப் பதிவை அர்ப்பணிக்கின்றேன். 
நாம் இன்று அனுபவித்து வரும் அனைத்து வசதிகளும், முன்னர் யாரோ சிந்தித்து அதனை செயல்படுத்தி அதன் பலனையே அனுபவித்து வருகிறோம் அல்லவா. ஒரு சிலரைத் தவிர அந்த உழைப்பாளிகள் முறைப்படி கவுரவிக்கப்படுவதோ, சரித்திர ஏடுகளில் நினைவு கூறப்படுவதோ இல்லை. ஆனால் அவர்களது கடின உழைப்பும், பொறுமை நிறைந்த பணியும் காலம் கடந்தும் நம்மை சகல வசதிகளுடனும் வாழ்விக்கிறது. அப்படி ஒரு உழைப்பாளர்களின் திரள்தான் இரயில்வே துறையின் கட்டுமானப் பணியாளர்கள். இந்தியா 1853 ஆம் வருடம் மும்பையில் இருந்து தானே வரையிலான இரயில் என்ஜினை இயக்கியது சரித்திரம்.  

சென்னை டு ஆற்காடு வரையிலான இரயில் தடம் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து 1856ல் துவங்கியது. முதல் இரயில் இராயபுரம் முதல் ஆற்காடு வரை இயக்கப்பட்டது. (அரக்கோணம் என்று வரலாறு பாடப் புத்தகம் சொல்கிறது) ஆற்காடு நவாபுடன் ஆங்கிலேயர்கள் கொண்டிருந்த நட்பின் அடிப்படையில் பார்த்தால் முன்னது மிக சரியாகவே தோன்றுகிறது. 
இந்திய இரயில்வே பக்கம் :

இன்றைக்கும் நினைத்துப் பார்க்கையில் இந்திய இரயில் பயணங்கள் என்றுமே முடிவதில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளதல்லவா. விமானங்கள்-கட்டணம் உயர்வு, பேருந்துப் பயணமோ ஓரளவுக்கு மேல் சகிப்பது கடினம். ஆனால் இரயில் பயணம் குறித்து நினைத்துப்பார்த்தால் என்னவொரு சுகானுபவம்? நான் டெல்லியில் பணியில் இருந்த போது தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் என்னை சுமந்து செல்லும் ஒவ்வொரு தருணமுமே சுகானுபவமே. பர்த்தில் ஏறிக் காலை நீட்டிப் படுத்து ஒரு காமிக்ஸை கையில் எடுத்து வாசித்தால்....அலாதி அனுபவம்தான் போங்கள்.
இந்த கட்டுரை எனது இரயில் பயணங்களைக் குறித்தது அல்ல. நம்ம இரயில் கட்டுமான ஊழியர்களை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கவுரவிக்கும் விதமாக ஒரு சித்திரக்கதை விளக்கக் கட்டுரை ஆங்கிலத்தில் வாசித்தேன். ஆஹா அருமை. இதை ஏன் தமிழ்ப் பேசிட செய்யக் கூடாது என்கிற ஆர்வமிகுதியால் ஏதோ பண்ணி இருக்கேன். பிடிச்சிருந்தா உங்க நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்???




உலகெங்கிலும் தங்கள் இன்னுயிரையும், இரத்தத்தினையும், வியர்வைத் துளிகளையும் நமக்காக, நம் நல்வாழ்வுக்காக சிந்திடும் உழைப்பாள சகோதர, சகோதரிகளுக்கு இந்தக் கட்டுரை அர்ப்பணம்.

வாசிக்க:

நண்பர் ராஜ் முத்துக் குமார் அவர்களது மின்னும் மரணம் ரெவ்யூ: 

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

Shriram _கனவு பலித்ததே!!!

Comics: கனவு பலித்ததே!!!: எனது சந்தோஷ அளவினை சொல்ல முடியவில்லை... மின்னும் மரணம் எனும் கதையினை நான் இதுவரை முழுவதுமாக தமிழில் படித்ததில்லை ... ...

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சித்திரையில் நித்திரை தொலைத்து புத்தம் புதியதோர் ஆண்டினில் முத்திரை பதிக்கக் காத்திருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நித்தமும், அலுப்பும், சலிப்புமென விடைபெறும் நாட்களுள் புத்தம் புது ஆண்டானது மலர்கையில் ஆங்கே நம்பிக்கை எனும் கீற்று அடிவானின் சூரியனாக சுடர்விட்டு எழும்பிடும் நமது நெஞ்சங்களில். புது ஆண்டு புது திட்டங்களுக்கான வாயிலாக நின்று உங்கள் குறிக்கோள்களை அடைவதற்கான சக்தியை நல்கிட இறைவனை வேண்டுகின்றேன்.
அம்பேத்கார் அவர்களது நினைவாக ஆங்காங்கே பாடல்களும் பரபரப்புகளும், கட்சிக் கொடிகளும், புத்தர் வணக்கங்களும் என நிறைவானதொரு அனுபவமாக மலர்கிறது இன்று....
வாழ்ந்தது போதுமா சித்திரக்கதையின் பதினேழாம் அத்தியாயத்தின் வாயிலாக நம் தமிழை வாழ வைக்கும் இலங்கை சந்ரா அவர்களின் நினைவாகவும் தமிழுக்கு அவர் ஆற்றிய பங்கினை நினைவு கூறும் வாயிலாகவும் அவரது இந்தக் கதையின் பாகத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
    என்றும் அதே தமிழ் மீதான தீராக் காதலுடன்_உங்கள் இனிய நண்பன் ஜானி!

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

காமிக்ஸ்கள் மொத்தமாக விற்பனைக்கு....

வணக்கம் நண்பர்களே!
என் நண்பர் தவமணி அவர்கள் விற்பனைக்கு தனது காமிக்ஸ் சேகரிப்பை மொத்தமாக கொண்டு வந்துள்ளார். வாங்குவோர் தொடர்பு கொள்க.
contact :chickbill123@gmail.com
கைவசம் உள்ளவை
முத்து காமிக்ஸ்
1 மீண்டும் முதலைகள்
2 பழி வாங்கும் புகைப்படம்
3 குள்ள நரிகளின் இரவு
4 வைர வேட்டை
5 நரகத்தின் நடுவில்
6 புயல் தேடிய புதையல்
7 திசை திருப்பிய தோட்ட
8 காற்றில் கரைந்த பாலர்கள்
9 நள்ளிரவு நாடகம்
10 மிஸ்டர் முகமுடி
11 கல்லறையில் ஒரு கவிஞன்
12 மரண மண்
13 மரணத்தின் நிறம் கருப்பு
14 பரலோக பாதை
15 சிறையில் ஒரு புயல்
16 யானை கல்லறை
17 காற்றில் கரைந்த கதாநாயகன்
18 புயல் படலம்
19 மின்னல் ஜெர்ரி
20 புதையல் பாதை
21 கதை சொல்லலும் கொலைகள்
22 தோட்ட தலைநகரம்
23 துரத்தும் தோட்டா
24 விசித்திர வில்லன்
லயன் காமிக்ஸ்
1 கொலை செய்ய விரும்பு
2 மர்ம மைனா
3 புலி வருது
4 கிசு கிசு மரணம்
5 மியாவ் மியாவ் மரணம்
6 திகில் நகரம் டோக்கியா
7 ஆவியின் பாதையில்
8 கடலோரக் கொலைகள்
9 தலை வாங்கும் தாரகை
10 வெள்ளைய ஒரு வேதாளம்
11 தேடி வந்த தூக்குகயிறு
12 ்இரத்தப்படலம் 7
13 ்இரத்தப்படலம் 8
14 ்இரத்தப்படலம் 4
15 பனியில் ஒரு நாடகம்
16 கனவே கொல்லாதே
17 தலைகிழ்லாய் ஒரு தினம்
18 வேங்கை வேட்டை
19 மந்திர மண்ணில் மாடஸ்டி
20 மரணத்தை முறியடிப்போம்
21 பெர்முடா படலம்
22 பறக்கும் பரலோகம்
23 தூங்கி போன டைம் பாம்
24 வேங்கையோடு மோததே
25 கார்ட்டூன் கொலைகள்
26 சுல்தன்னுக்கு ஒரு சவால்
27 பூமிக்கு ஒரு ப்ளக்மெயில்
28 பரலோக பரிசு
29 மாண்டவன் மீண்டான்
30 சிறுத்தைகள் சாம்ராஜ்ஜியம்
கிளாச்சிக்
1 விண்வெளி கொள்ளையர்
2 களிமண் மனிதர்கள்
இவை அனைத்துமே அருமையான கதைகள். அரிய வாய்ப்பினை நழுவ விடவேண்டாம். 
என்றும் அதே அன்புடன் 
ஜானி!

இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 076-106 வரையிலான குறிப்புகள்!

வணக்கம் தோழமை உள்ளங்களே!
இந்திய தண்டனை சட்டத்தின் அத்தியாயம் நான்கின் குறிப்பு பகுதியினை உங்களுடன் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். என்ஜாய்!
இது இந்திய சட்டத்தினை தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவிடும் விதத்தில் சிறு குறிப்பாக மட்டும் பகிரப்படுகிறது என்பதையும் மறுபடியும் நினைவூட்டுகிறேன்.
அத்தியாயம் _ நான்கு_விதி விலக்குகள்
இ.த.ச. பிரிவு – 76
சட்டப்படி கடமையாற்றும் பொது ஊழியர் செயலில் தீங்கு ஏற்பட்டாலும் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 77
சட்டப்படி நீதிபதி தண்டிப்பதால் அவர் செயல் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 78
உத்தரவு (அ) தீர்ப்புப்படி காரியம் செய்பவர் மீது குற்றமாகாது. அம்மன்றத்துக்கு உத்தரவிட அதிகாரமில்லை என்றாலும் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 79
சட்டப்படி கடமையாற்றுகிறவர் நல்லெண்ணத்துடன் சரியானதென நம்பி செய்வதில் எதிர்பாராமல் தவறு நேர்ந்தாலும் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 80
சட்டப்படியும், கருத்துடனும், கவனத்துடனும் குற்றக் கருத்தின்றி செய்யும் செயலால் துன்பம் (அ ) விபத்தானால் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 81
குற்றக் கருத்தின்றி நல்லெண்ணத்துடன் பெரிய தீங்கு நேர்வதைத் தடுக்க செய்யும் சிறு காரியம் மூலம் சிறு தீங்கு நடந்தால் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 82
ஏழு வயதுக்குட்பட்டவர் செயல் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 83
ஏழு முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட அறிவு முதிர்ச்சி பெறாதவர் செயல் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 84
சித்த சுவாதீனம் இல்லாதவர் செயல் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 85
போதை நபர் செயல் குற்றமாகாது. ஆனால் போதை அவர் விரும்பி ஏற்றிருக்கக் கூடாது. அறியாமல் வந்திருக்கவேண்டும்.
இ.த.ச. பிரிவு – 86
சில சட்டப்பூர்வமான செயல்கள் கருத்தோடும் தெளிவோடும் செய்தால்தான் குற்றமாகும். அவை கூட 85 இ.த.ச. படி பொருந்தும்.
இ.த.ச. பிரிவு – 87
18 வயதுக்கு மேற்பட்ட நபர் சம்மதப்படியான செயலில் துன்பம் நேர்ந்தால் குற்றமாகாது. ஆனால் செயலில் குற்ற நோக்கு கூடாது.
இ.த.ச. பிரிவு – 88
ஒருவர் இசைவுடன் அவரது நலனுக்காக நல்லெண்ணத்துடன் செய்யும் செயலில் துன்பம் ஏற்பட்டால் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 89
12 வயதுக்குட்பட்டவர், மன நலம் குன்றியவர் ஆகியோரின் பாதுகாவலரின் சம்மதம் பெற்று அவரது நலனுக்கு செய்யும் காரியம் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 90
தனக்குத் தீங்கு நேரும் அச்சத்தால் சம்மதம் கொடுக்கப்பட்டாலும், விஷயம் புரியாமல் சம்மதம் தந்தாலும் அது சம்மதம் ஆகாது.
இ.த.ச. பிரிவு – 91
சில காரியத்தால் தீங்கு நேர்ந்தாலும், நேராவிட்டாலும் அச்செயல் குற்றமாகும். அது சம்மதத்துடன் புரிந்தாலும் குற்றமே. (எ.கா.- கருச்சிதைவு)
இ.த.ச. பிரிவு – 92
ஒருவரின் சம்மதம் இல்லாமலே சூழ்நிலை அனுசரித்து அவர் நலனுக்கு நல்லெண்ணத்துடன் செய்யும் காரியம் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 93
நல்லெண்ணத்துடன் ஒரு செய்தியை பிறரிடம் தெரிவிக்கும் செயலால் அந்த நபருக்குத் துன்பம் ஏற்பட்டால் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 94
மிரட்டலுக்கு அடங்கி ஒருவர் செய்யும் காரியம் குற்றமாகாது. ஆனால் தானே மிரட்டல் விடுப்பவரிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது.
இ.த.ச. பிரிவு – 95
மிகச் சிறிய குற்றச் செயலால் மிகச் சிறிய தீங்கு ஏற்பட்டால் அது குற்றமாகாது.
தற்காப்புரிமை:-
இ.த.ச. பிரிவு – 96
தற்காப்புரிமை பயன்படுத்தும்போது எதிரிக்கு ஏற்படும் துன்பம் குற்றமாகாது. ஆனால் தற்காப்புரிமை அத்துமீறக்கூடாது.
இ.த.ச. பிரிவு – 97
தனது, அதேபோல், பிறரது உடல், உடைமை, காத்துக்கொள்ள தற்காப்புரிமை உள்ளது. இதில் 99 இதச பிரிவின்படி நிபந்தனை உள்ளது.
இ.த.ச. பிரிவு – 98
இளமை, குடிபோதை, அறிவு தெளிவின்மை, பைத்தியக்காரன், போதைக்காரன், இவர்களிடமும் தற்காப்புரிமை பயன்படுத்தலாம்.
இ.த.ச. பிரிவு – 99
பொது ஊழியர் நல்லெண்ணத்துடன் செய்யும் காரியத்தை எதிர்த்து தற்காப்புரிமை பயன்படுத்தக் கூடாது.
இ.த.ச. பிரிவு – 100
-எதிராளி நம்மைத் தாக்கிக் கொலை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்படும்போது
-நம் உடலுக்கு எதிரியின் செயலால் கொடுங்காயம் ஏதாவது ஏற்படலாம் என்ற எண்ணம் தோன்றும்போது
-எதிராளி கற்பழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தாக்கும்போது
-இயற்கைக்கு மாறான முறையில் தன்னுடைய காம இச்சையை எதிரி தீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற வெறியுடன் நெருங்கும்போது
-கடத்திச் செல்ல வேண்டும் என்ற கருத்துடன் நம்மை அண்டியுள்ள ஒருவரை எதிரி தாக்க முனையும்போது
-சட்டவிரோதமாக ஒருவரை எதிரி காவலில் வைப்பதற்கென முயற்சி செய்து அதனினின்றும் சட்டப்பூர்வமான அலுவலர்களை அணுகி விடுதலை பெற முடியாத நிலை ஏற்படும்போது
ஆகிய ஆறுவித சந்தர்ப்பங்களில் எதிரிக்கு மரணம் ஏற்பட்டாலும் தற்காப்புரிமை படி குற்றமல்ல.
இ.த.ச. பிரிவு – 101
இ.த.ச. பிரிவு – 100-ல் உள்ளபடிதான் எதிரிக்கு மரணம் ஏற்படலாம். இதச 99ன் படி மரணம் குற்றமாகும். மற்றது குற்றமில்லை.
இ.த.ச. பிரிவு – 102

நமது உடலுக்கு ஆபத்து என்ற அச்சம் தோன்றியதுமே நமக்குத் தற்காப்புரிமை கிடைக்கின்றது.
இ இ.த.ச. பிரிவு – 103
ரவில் வீடு இடித்துக் கொள்ளை, தீ, அத்துமீறுதல், திருடுதலால் மரண பயமெனில் தற்காப்புரிமையில் எதிரிக்கு மரணம் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 104
பிரிவு 103ல் உள்ளது தவிர திருடு, தொல்லை, வரம்பு மீறல், செயலில் தற்காப்புரிமையில் எதிரிக்கு மரணம் தவிர மற்றது குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 105
நம் சொத்துக்கு ஆபத்து வரும்போது தற்காப்புரிமை கிடைக்கிறது. ஆபத்து நீங்கியதும் தற்காப்புரிமை இல்லை.
இ.த.ச. பிரிவு – 106
மரண தாக்குதலின்போது தற்காப்புரிமையில் நிரபராதிக்குத் தீங்கு ஏற்பட்டால் குற்றமில்லை.
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றிகள்_என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் _ஜானி!

நெஸ்டர் பர்மா - ஒரு ப்ரிவியூ

 வணக்கங்கள் வாசகர்களே.. இது கேஸ்டர்மேன் கோட் டி கிரானைட் ரோஸ் படைப்பு.. ஒரிஜினல் பிரெஞ்சு மொழியில் 16.09.2026 ல் வெளியாகியுள்ள அட்டகாசமான து...