செவ்வாய், 31 ஜூலை, 2018

IND-22-004-தொல்லை தேடிய வல்லி-லெப்டினென்ட் ட்ரேக்-ஜேம்ஸ் ஜெகன்


அன்பார்ந்த வாசக பெருமக்களுக்கு வணக்கங்கள் அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய திரு.ஜேம்ஸ் ஜெகன் அவர்களது அடுத்த அன்பளிப்பு இது. இளம் சிறார்களை விழிப்புணர்வோடு கவனித்து, நல்வழிகாட்டி அரவணைத்து, ஆலோசனைகளை தக்கவாறு அவர்களின் துள்ளல் மனதுக்கேற்ப கொஞ்சம் விட்டுக் கொடுத்து, அவ்வப்போது சற்றே அதட்டி, அவசியமான இடத்தில் கண்டித்தும் அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவற்றிற்கான சரியான பாதையில் நடைபயின்று இந்த உலகை வெல்ல அவர்களை கூர்மையாக்குவது பெற்றோரின், உற்றாரின், அவர்கள் சார்ந்த அனைவரது கடமையும் சமுதாய பணியுமாகும்.. ஆனால் நாம் கேள்விப்படுவதெல்லாம் என்ன? செய்தித் தாள்களை திறந்தாலே இளைய சமூகத்தினர் மீதான போதை மருந்து, பாலியல் வன்கொடுமை, பெற்றோர் கைவிடுதல் போன்று அடுத்தடுத்த தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. நாம் எவ்விதத்தில் இளைய தலைமுறையினருக்கான பாலமாக இருக்கப்போகிறோம்?!?
இதோ ஒரு சிறுமி...பெற்றோரால் கைவிடப்பட்ட நிலைமையில் திருடிப் பிழைத்து வாழ வேண்டிய கொடுமைக்குள்ளாகிறாள்.
ஒரு பெண் தன் முன்னால் நடக்கிற கொலைக்கு சாட்சியாகிறாள். அதனால் கடத்தப்படுகிறாள். அவள் எழுதிய துண்டு சீட்டு அடங்கிய கைப்பை அந்த ஆதரவற்ற சிறுமியிடம் கிடைக்கிறது. அந்த சிறுமி முதலில் காவல் நிலையத்துக்கு சென்று பின்னர் அஞ்சி கடத்தப்பட்ட பெண்ணாக அடையாளம் மாறி வாழ முயற்சிக்கிறாள். லெப்டினென்ட் டிரேக் அறிமுகமே ஒரு சிறுவனை சீர்திருந்த அறிவுறுத்துவதோடு துவங்குகிறது. கடத்தப்பட்ட பெண்ணின் அடையாளத்துடன் வலம் வர முயலும் சிறுமியின் முயற்சி குறுகிய காலத்துக்குள்ளாகவே சிக்கலாகிவிட தன்னைப் பற்றிய உண்மைகளை லெப்.டிரேக் வசம் கூறி தன்னை விடுவிக்கக் கோருகிறாள் சிறுமி.  வில்லன் கொடூரமுகம் காட்டி கராத்தே கலையெல்லாம் பயின்றவனாக இருக்கிறான். அவனுடன் மோதிடும் டிரேக் பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்? பின்னணியில் நடக்கும் கடத்தல் எது? என்பதை பரபரக்கும் இக்கதை நமக்கு சிறப்பான மொழிபெயர்ப்புடன் நம் முன் ஆக்ஷன் விருந்து வைத்து அழைக்கிறது..வாருங்கள் கதைக்குள் புகலாம்...
பிடிஎப் தரவிறக்கத்துக்கு...
தொல்லை தேடிய வல்லி-ஜேம்ஸ் ஜெகன்
நிற்க.. தங்களிடம் ஏதேனும் இந்திரஜால் புத்தகங்கள் இருந்தால் பிடிஎப் செய்து அனுப்பி வையுங்களேன். இங்கே பகிர்ந்து இந்திரஜால பொற்காலத்தை நினைவு கூர்வோம். சேர்ந்து கொண்டாடுவோம்.. அந்த இழந்த நாட்களின் சொர்க்கத்தை...என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் பேட்மேன்..ஸ்பைடர்மேன்...சூப்பர்மேன்..ஹிஹிஹிஅப்படியே பழகிப் போச்சுங்....ஜானி...

2 கருத்துகள்:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...