புதன், 28 அக்டோபர், 2020

ஜோடியாக்-4 சக்திகளின் சங்கமம்.. கோவையிலிருந்துர

 

திரு. பூபதி லட்சுமணன் அவர்களின் பிறந்தநாள், திரு.மதுரை இளங்கோ அவர்களின் திருமண நாள், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற சுப நிகழ்வுகள் நம்மை கடந்து சென்றுள்ளது, அந்த நாளில் வெளியிடவேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமும், ஆனால் லேப்டாப்பை தொட்டால் லேப்டாப்புடன் சேர்த்து எனக்கும் பூஜை நடக்கும் என்று மிரட்டல் வந்த காரணத்தினால் சற்றே தாமதமாக இன்று உங்களுக்காக, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்

படிப்பதற்கு முன் கான்சர் ராசியின் குணநலன்களை கூகிள் செய்து பார்த்துவிட்டு படித்தால் கதை புரிவதற்கு சற்று வாய்ப்புகள் அதிகம், மிக எளிமையான, எந்த ஒரு மிகைப்படுத்துதளும் இல்லாத ஒரு கதைக்களம், ஆங்காங்கே சில மயாஜாலங்களை தூவி இருக்கிறார்கள்

வழக்கம் போல படித்துவிட்டு உங்கள் பார்வையில் உள்ள குறை நிறைகளை விமர்சனமாக முன் வையுங்கள்

நன்றி!!!

https://www.mediafire.com/download/0o5q23arx8cxur2


திங்கள், 26 அக்டோபர், 2020

ஊரார் சொல் கேளேல்_ஒரு இரத்தக்காட்டேரியின் கதை

 


திரு Boopathi Lakshmanan அவர்களுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்🎂🎂🎂🎂🎂🎂



திரு பூபதி அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு சூடாக தயாரான

*ஊரார் சொல் கேளேல்*
சிறு *ஆயா* கதை

*ஊரார் பேச்சை கேட்காதீர்கள்
வீட்டம்மணி பேச்சை மட்டுமே கேட்டால் வாழ்வில் உயர் அடைவீர்கள்*

https://bit.ly/3olxucF

#COMICS_PDF_TIMES

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

தங்க மயில் தேவதை_முல்லை தங்கராசன்

 

































தொகுத்தளித்த சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் சாருக்கு நன்றிகளோடு.. 

தரவிறக்க சுட்டி:

கொன்றே தீர்ப்பேன்..ஜானி

 மாடஸ்டி-கார்வினின் *கொன்றே தீர்ப்பேன்*



சைப்ரஸ் தீவு..உற்சாகக் கூக்குரல்களின் மத்தியில் வழக்கமான கொண்டாட்டத்தோடு கடற்கரையெங்கும் இளம் ஜோடிகளின் கிறக்கங்களும், முதும் ஜோடியரின் அசைபோடுதலும், சின்னஞ்சிறாரின் கேளிக்கைகளும்..களைகட்டிக் கொண்டிருக்கும் வேளையில்.. சைப்ரஸின் பிரதான செக்போஸ்ட்.. 

அந்த ஜீப் பேரிகார்டுகளைத் தாண்டி செக்போஸ்ட் அலுவலகத்தினையொட்டி சரேலெனப் புகுந்து நின்றது.. இறுகிய முகமும் விறைப்பான யூனிபார்மும் அணிந்ததொரு உருவம்.. கரங்களில் இருந்த துப்பாக்கிகள் செக்போஸ்டின் காவலர்களை தோட்டா மழையால் நனைத்தன.. வயர்லஸ் எச்சரிப்புக்கே இடமின்றி இரத்த சகதியில் சட்டென விண்ணுலகம் ஏகினார்கள் காவலர்கள்.. அந்த உருவம் ஜீப்பிலேறிப் பறக்கடித்தது.. இலக்கு சைப்ரஸ் கடற்கரை...

நோக்கம்..

மாடஸ்டியினை தேடிப்பிடித்து அழிப்பது.. 


இளவரசி...


இளவரசி...




ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த மாடஸ்டி 


ம்ம்...என்றாள்..


கொஞ்சம் கடலைத்தான் இரசியேன்..

நாம் இத்தனை போராடித் திரும்பியிருக்கிறோம்..


கொஞ்சம் மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு கொடேன்.. 

-இது கார்வின்.


இல்லை.. எகிப்திய கடல் கொள்ளையர்களை வீழ்த்தி பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமான சரக்குகளை மீட்டுக் கொடுத்தோம்.. நம் அதிரடியில் கடற் கொள்ளையர் நால்வர் மரணம்.. பதினாறு பேர் பலத்த அடியோடு எகிப்திய தேச சிறை மருத்துவமனையில் உள்ளனர்.. அவர்கள் வந்த போட்டை ராக்கெட் லாஞ்சரின் நான்கைந்து குண்டுகளால் துளைத்தெடுத்தோம்.. 

இருந்தும்..


இருந்தும்?



தலைவன் வின்சென்ட் தப்பிவிட்டானே..


அவனை மாத்திரம் வளைக்காமல் விட்டுவிட்டோமே.. அடிபட்ட பாம்பை அடித்தே கொல்ல முடியாமல் போனதுதான் என் வருத்தம் என்ற மாடஸ்டியை நோக்கி புன்முறுவலுடன் கார்வின்..

இல்லை. இப்போதும் அவன் நம்மைத் தேடிவரத் தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டோம்.. எகிப்திய கடற்காவலில் பணிபுரிந்த அவன் ஒற்றனை இனம் கண்டு வைத்திருந்தோமல்லவா.. அவன் மூலமாகவே  நாம் சைப்ரஸ் தீவின் பிரபல நிஸ்ஸி கடற்கரையின் வெண்மணற்பரப்பில் நீலநிற கண்ணாடிக் கடலில் கால் நனைத்தமர்ந்திருப்போமென அத்தனை துல்லியமாக அவனறியாமலேயே ஒட்டு கேட்க வாய்ப்பளித்திருந்தோமே.. வருவான்..நிச்சயம் வருவான்..


கடற்கரையருகே தோட்டாக்களை வானில் உமிழ்ந்தவாறே ஜீப்பொன்று பாறையில் ஏறி விண்ணில் பறந்து டைவ் அடித்து இறங்கியது.. 


கொண்டாட்டங்கள் திடுமென அங்கே ஓய்ந்துவிட சுனாமி வந்தாற்போன்று அலறியடித்துக்கொண்டு வாரிச் சுருட்டிக் கொண்டு மக்கள் ஓட்டம்பிடிக்கலாயினர்.. எதிர்த்தோரை துப்பாக்கியால் விலக்கிக் கொண்டே பாய்ந்து வந்தது ஜீப்..


சரியாக அந்த இலக்கில் இறங்கிய வின்சென்ட் கையிலிருந்த ஜிபிஎஸ் வாட்சை கவனிக்க இதே இடம்தான்..இதே இடம்தானென கைக்கடிகாரத்தின் வெளிச்சப்புள்ளிகள் அம்புக்குறியிட்டன..


அவன் நின்ற இடத்தில் ஒன்றுமேயில்லை.. காலால் மணலை எத்த..வெள்ளை மணல் அப்படியே விசிறிப் பறந்தது.. சில எத்தல்களில் மாடஸ்டியின் கைப்பை கையிலகப்பட...விலகிப்பதுங்கிய ஜனங்களை நோக்கி கூக்குரலாக ஏய் மாடஸ்டி.. எங்கே இருக்கிறாய்.. தைரியமிருந்தால் நேரில் வா..மோதிப்பார்த்து விடலாம்..என கொக்கரித்தவனின் கையின் துப்பாக்கி மறுநொடி எகிறியது.. எங்கிருந்தோ பறந்து வந்த கார்வினின் கத்தி உபயம்..

மாடஸ்டி பாறையொன்றில் கம்பீரமாக எகிறிக் குதித்து வர..

மோதல் துவங்கியது...


கடும் யுத்தத்தின் முடிவில் மாடஸ்டியின் 

அதிரடியில் வின்சென்ட் விண்ணுக்குப் பறந்தான்..



ஹேப்பி ஆயுத பூஜை நண்பர்களே...



அவ்ளோதான்..


 கட் பண்ணா..

சைப்ரஸ் அதிபர் விருந்து..

கங்ராட்ஸ் மாடஸ்டி அண்ட் ப்ளைஸி என் சிரித்தார் சைப்ரஸ் அதிபர் டெமிட்ரிஸ் சில்லோரிஸ்..

குட் வொர்க் மாடஸ்டி..

அவனை கொன்றிருக்க அவசியமுண்டா ?

 யெஸ்.. அவனை உயிரோடு பிடித்து எகிப்துக்குப் பார்சல் போட்டு..

அதைவிட இங்கேயே அவனைப் பிரியாணி போட்டதே சரி..


க்ளிங்..


கண்ணாடி டம்ளர்கள் உரசிக் கொண்டன..


🍾🍸🍽️🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳


ஆசிரியர் குறிப்பு:

டாக்டர் ஏ.கே.கே.ராஜா அவர்களது ஸ்பைடர் படை வாட்ஸ் அப் குழுவின் கேள்விக்கான விடையாக பிறந்ததே இந்த சின்னூண்டு கதை...

நன்றி தோழர்களே.

வெள்ளைக்கண் பயங்கரம் -ஆயுத பூஜை ஸ்பெஷல்

 

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே..

ஆயுதபூஜை நல் வாழ்த்துக்கள்..

ராட்சத பல்லி, பூனைக்கண் மனிதன் வரிசையில் இதோ இன்னொரு நிக், டான் சாகஸம் 

45-வெள்ளைக்கண் பயங்கரம் (ஆயாவின் பயங்கரம்) க/வெ
தமிழில் திரு ஜானி (ஆயா பிரியர்)
வடிவமைப்பு திரு இளங்கோ
இரவில் தனியாக படித்து பயந்தால் ரொம்ப ஷந்தோஷம்

https://bit.ly/31AS3Yz

#COMICS_PDF_TIMES

அடுத்த வாரிசு-ஆயுத பூஜை சிறப்பு வெளியீடு

 


🔫🔨✂ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்✂🔨🔫
46-அடுத்த வாரிசு ( ஆயாகதை)
தமிழில் திரு ஜானி -ஆயா வெறியர்
வடிவமைப்பு திரு இளங்கோ

https://bit.ly/3omJWZF

#COMICS_PDF_TIMES

. 🌓நிழல்களின் நூற்றாண்டு பாகம் 4️⃣🔥

 


திரு.ராஜேஷ்ராமன்-சாய் பாலா அவர்களது சீரிய முயற்சியில், திரு.ரஞ்சித் இன்னொரு பாகத்தில் உங்களை சந்திக்க வருகிறார்கள் நிழல்களின் நூற்றாண்டின் பாத்திரங்கள்.. ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே...

ஆசிரியர் திரு.சரவணன் அவர்களின் விமர்சனம்..

🌓நிழல்களின் நூற்றாண்டு பாகம் 4️⃣🔥


🧛🏻‍♀️👹சூனியக்காரி👻😱


ஜூன் 1767 இல் பிரான்சில் உள்ள ஜெ விடான் என்ற இடத்தில் கதை தொடங்குகிறது. அது ஒரு பயங்கரமான இரவு.அடர்ந்த காட்டில் பெண் ஒருவரை ஒரு பயங்கரமான விலங்கு தாக்க வருகிறது. ஆனால் அப்புறம்தான் உணருகிறது அவ் விலங்கு,அது தனக்கு வைத்த பொறி என. ஆனால் அதற்குள் அனைத்தும் முடிந்து விடுகிறது.காரணம் மிகப்பெரிய துப்பாக்கி  ஒன்று வெடிக்கும் சத்தம் கேட்கிறது.  அப்பெண்  அவ் விலங்கின் இதயத்தை நோக்கி சரியாக சுட்டு விடுகிறாள்.அதேநேரம் அவ் விலங்கு  வேட்டையர்கள் ஆல் சூழப்பட்டு, தாக்கப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பி செல்லும் அவ் விலங்கு, அவ்வழியே செல்லும் ஒரு வண்டியில் அடைக்கலம் அடைகிறது. அந்த வண்டியில் நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ள அபியு டி ராக்கு  பெருனி இருக்கிறார். இங்குதான் அது விலங்கு அல்ல சாத்தானாக மாறியுள்ள மார்க்கஸ் டி அணிபர் பிரபு. அவருக்கு சைலீனா எவ்வளவோ சிகிச்சை செய்தும் காப்பாற்ற முடியாமல் இறந்து விடுகிறார். அதேநேரம் போப்பின் தூதுவர் அபி யூ டி ராக்கு பெருனியை சந்தித்து சாத்தானின் படத்தை காண்பித்து போப்பை உடனே சந்திக்குமாறு தூதுவன் தெரிவிக்கிறான்.

       ஒரு மிக பயங்கரமான இரவில் லூசியானா என்ற இடத்தில் டோனெஷ்சா தன்னுடைய  சூனிய சக்தி அனைத்தையும் பயன்படுத்தி சக்படா என்ற தெய்வத்திற்கு உயிர் பலி கொடுத்து சக்படா நேரில் தோன்ற பில்லிசூனியம் செய்கிறாள்.

     அந்த பயங்கரமான இரவில் அவள் வீடு திரும்பும் பொழுது வெல்ட் மேன் என்றழைக்கப்படும் பிரபு டி ஹோல் பேக் கவலை தோய்ந்த மனதுடன் இவள் வருகைக்காக காத்திருக்கிறார். இவரின் கவலை என்ன என அந்த சூனியக்காரி கேட்கும்பொழுது சைலினாவிர்கு தன் மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும், அதை வைத்து அவள் தன்னை மிரட்டுவதாகவும், அவளுக்குத் தேவையான விண்கல்லை கொடுத்தால் மட்டுமே அவருடைய குழந்தையை  ஒப்படைத்ததாகவும் இல்லையேல் சாத்தானிடம் குழந்தயை ஒப்படைப்பதாக மிரட்டுகிறாள் என கூறுகிறார்.

     1768 ரொக்ப்ரூன் எஷ்டெட்.

       மிகப் படுபயங்கரமான இரவு அது. இருள் சூழ்ந்த இடம் அது.666  ஆண்டு  தண்டனை காலம் முடிந்து  அந்த கொம்பு உடைய சாத்தான் வெளி வருகிறான்.

     அதேநேரம் டோநெசா தனது பில்லி சூனியத்தின் மூலம் தனது இஷ்ட தெய்வமான சக்படாவை  தனது பிரபுவின் மகளை தேடி கண்டுபிடிக்க ஏவுகிறாள்.

      அதேநேரம் கொம்புடைய சாத்தானுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு வால்ட் மேனை கொலை செய்ய கிளம்புகிறாள்.

    குழந்தையை தேடிச்சென்ற சக்படா ஆபத்தில் இருக்கும் பொழுது அவரை விடுவித்து  வால்ட் மேனை வரவழைக்க முயற்சிக்கிறான் சாத்தான். அதேநேரம் தனது சூனிய சக்தியால் கொம்புடைய சாத்தானிடம் தொடர்பு கொள்கிறாள் சூனியக்காரி.அவளைத் தேடி வரும் ஹோல் பேக் அவளின் உயிரற்ற சடலத்தை பார்த்து அலறுகிறார்.


-----------  🧛🏻‍♀️🦸🏻‍♂️👹 ---------

  


 இக்கதையை தேர்ந்தெடுத்து கடுமையாக மொழிபெயர்த்து நண்பர்களுக்கு அற்பணிக்கும் காமிக்ஸ் நண்பரான 👬🏻ஜானி அண்ணன் ❤️அவர்களின் முயற்சிக்கு மனமார்ந்த நன்றி.🙏



       பின்குறிப்பு🧐


 இக்கதை மக்களிடையே காணப்பட்ட மூட நம்பிக்கையையும், மதகுருமார்களின் ஆதிக்கத்தையும், ஆண்டவருக்கும் சாத்தானுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தையும், அறிவியலுக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே ஏற்பட்ட போட்டிகளையும் மிக அற்புதமாக வரலாற்றுப் பின்னணியுடன் நமது கண்முன் கொண்டு வருகிறது.😌

For pdf:

பாகம்- 4 சூனியக்காரி


வியாழன், 22 அக்டோபர், 2020

*ஓரியண்ட் எக்ஸ்பிரஸில் ஒரு கொலை*-அகதா கிறிஸ்டி

 


அயராத பணிகளுக்கு நடுவிலும் ஆர்வமுடன் காமிக்ஸ் தொண்டாற்றும் மதுரை இளங்கோ அவர்களுக்கு இன்று திருமணநாள் வாழ்த்துக்கள். 



திருமண நாள் சிறப்பு வெளியீடாக ...

*அகதா கிறிஸ்டியின் அபார நாவல் படக்கதை வடிவில் pdf  ஆக*

*ஓரியண்ட் எக்ஸ்பிரஸில் ஒரு கொலை*

*பரபரப்பூட்டும் மொழிமாற்ற மர்மப் படக்கதை*

ஐரோப்பாவுக்குக் குறுக்காக தனது மூன்று நாட்கள் பயணத்தைத் தொடங்குகிறது ஓரியண்ட் எக்ஸ்பிரஸ். குளிர் காலத்தில் அதிகம் பேர் பயணிக்க மாட்டார்கள் என்பதால் காலியாக இருக்கும் அந்த ரயில் இம்முறை மட்டும் ஏனோ ஃபுல்லாக பயணிகளால் இருக்கிறது. பெல்கிரேடில் நின்றுவிட்டு கிளம்பும் அந்த ரயில் பயணத்தின் இரண்டாம் நாளில் எதிர்பாராமல் நிகழ்ந்த பனிப் பொழிவில் சிக்கிக் கொண்டு நடுவழியில் நகர இயலாமல் நிற்கிறது.

ரயில் கம்பெனி டைரக்டர் பெளக்கும் துப்பறியும் நிபுணர் ஹெர்குல் பொய்ரெட்டும் அந்த ரயிலில் பயணிக்கின்றனர். பனிப்பொழிவில் சிக்கி ரயில் நகர இயலாத நிலையில் அதில் பயணித்த மில்லியனர் ஸைமன் ரேச்சட் உள்பக்கமாக பூட்டப்பட்ட தன் கம்பார்ட்மெண்ட்டுக்குள் ஒரு டஜன் முறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் படுகிறார். வெளியாட்கள் எவரும் வந்து கொன்றிருக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான நிலையில், கொலைகாரன் ரயிலிலேயே பயணிக்கும் பயணிகளில் ஒருவன் அல்லது ஒருவள்தான்.

அந்தக் குற்றவாளி யார் என்ற பெரும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை கண்டுபிடிக்கும் பொறுப்பு பொய்ரெட்டின் தலையில் சுமத்தப்படுகிறது. போலீஸ் வரமுடியாது, மோப்ப நாய்கள் கிடையாது, வெளியுலகிலிருந்து எந்தத் தகவலும் பெற முடியாது. இப்படி ஒரு வினோத சூழ்நிலை!

-இப்படி ஒரு அழுத்தமான முடிச்சைப் போட்டுவிட்டு தன் "MURDER ON THE ORIENT EXPRESS" நாவலைத் தொடங்குகிறார் மர்மக்கதை மகாராணி அகதா கிறிஸ்டி.

வழக்கைக் கையிலெடுக்கும் பொய்ரெட், ‌கொலை நடந்த இடத்திலிருந்து ஒரு துப்பு கண்டுபிடிக்கிறார். பின்னர்  விசாரணைகளில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன! கொலையுண்டவனுக்குத்தான் எத்தனை விரோதிகள் அந்த ரயிலினுள்ளேயே இருந்துள்ளனர் என்கிற பிரமிப்பான விஷயங்கள் வெளிவருகின்றன.  முடிவில் தர்க்கரீதியாக அலசி, எந்த ஒரு பாயிண்ட்டையும் மறுக்க இயலாதவாறு கொலை நிகழ்ந்த விதத்தை பொய்ரெட் விரிவாக விளக்கி கதையை முடிக்கும் போது படிக்கும் நம் மனதில் எழும் உணர்வு: பிரமிப்பு!

அகதா கிறிஸ்டியின் நாவல்களைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் கதை முடிவதற்கு முன்னேயே குற்றவாளி யாராக இருக்க முடியும் என்பதை யூகித்துவிட முயல்வோம். படித்து முடிக்கையில் ‘ஏமாந்தியா?’ என்னும் அகதாவின் கேலிச் சிரிப்பு நம் காதுகளில் ஒலிக்கும். இந்த கதையிலும் அப்படியே.

கதையின் முடிவில் குற்றவாளியும், குற்றம் நிகழ்‌ந்த விதமும் அகதாவால் விவரிக்கப்படும் போது, க்ளூ வாக கதை முழுதும் தூவப்பட்டிருந்த சில கண்ணிவெடிகளை நாம் நினைவு படுத்திக்கொண்டு  ‘அட!’ என பிரமிக்கப் போவது நிச்சயம். இந்த பிரம்மிப்பான நாவல்  மொழிமாற்று படக்கதையாக இன்று திரு.இளங்கோ அவர்களின் திருமணநாள் சிறப்பு வெளியீடு PDF வடிவில்

https://www.mediafire.com/download/epx4puvgdhf9trh

*அகதா கிறிஸ்டியின் அபார நாவல் படக்கதை வடிவில் pdf  ஆக*

*ஓரியண்ட் எக்ஸ்பிரஸில் ஒரு கொலை*

*பரபரப்பூட்டும் மொழிமாற்ற மர்மப் படக்கதை*

#COMICS_PDF_TIMES

வெள்ளி, 16 அக்டோபர், 2020

அங்கே தனிமை இருந்தது..



பிரபஞ்சத் தேடலில் 
தொலைந்தவனானேன் 
உன் கண்களின் 
பிரதிபலிப்பென் 
விழிகளில் 
பட்டுத்தெறித்ததொரு 
பிரகாச வினாடியில்... 
உன் கண்ணின் 
சக்தியில் கட்டுண்டேன்..
காணாமல் போனேன்..
இடமேது..
நான் தப்பிப்போக 
இப் பிரஞ்சவெளியில்..
உன்னில் ஐக்கியமாகிட 
ஒவ்வொரு அணுத்துகளும் 
துடிக்குதடி பெண்ணே... ஈர்ப்புவிசைக்கெதிராய் 
வேறென்ன செய்துவிட 
என்னாலியலும்..?
கரைகிறேன்..
உன்னுள் நான்..
நிறைகிறாய் 
என்னுள் நீ...
மீண்டும் அங்கே 
சலனமில்லாக்குளம் 
மாத்திரமே..
தன்னந்தனியாய்...

புதன், 14 அக்டோபர், 2020

அடுத்த வாரிசு_ஆய(யா) க(லை)தைகள் 64-எழுத்து வடிவில்

வணக்கம்.. விரைவிலேயே இதனை வேறு வடிவிலும் இரசிக்க வாய்ப்புண்டு...

ஆதி கார்பாத்தியா மலைகள் நடுவே
அந்த பயங்கர இரவில் நமது கதை துவங்குகிறது. ஓலங்களும் துப்பாக்கியோசைகளும் இரவின் நிசப்தத்தை கிழித்தன. மரண வாடை அங்கே வெகுவாக வீசியது..

உயிரை காப்பாற்றிக் கொள்வதில் மனிதர்களும் குதிரைகளும் அங்கே தோற்று கொண்டிருந்தனர். கோச்சுக்குள்ளே அபாயத்தின் அர்த்தம் என்னவென்று அறிய துவங்கி இருந்தான்  ஒரு பாலகன்.

திடீரென சாலையில் தீப்பந்தங்கள் வெளிச்சத்தை இறைக்க ஓநாய்கள் பின்வாங்கின.

தீப்பந்தங்களுக்கு நடுவே அவர்கள் பாதுகாப்பாக..சிறுவனோ அமைதியாக நன்றி ஜெபம் செய்தான்.

ஓநாய்கள் எங்களை கிட்டத்தட்ட கொன்றுவிட்டு இருக்கும்..மிகவும் மதிப்பு வாய்ந்த சரக்குடன் இங்கு வந்திருக்கிறோம்.நாங்களும் எங்கள் பிரபுவும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் ..

ஆம். இன்று அவை கொஞ்சம் வெறி பிடித்துத்தான் திரிகின்றன. பெட்ரோவின் 4 ஆடுகளை கொன்று விட்டன.

இது ஒன்று மட்டும் இனி யாரையும் இரவில் கொல்லப்போவதில்லை.

நாட்டுப்புறத்தில் இருக்கிற சொந்தக்காரர்களை பார்க்க போகிற சந்தோசம் வேற லெவல் தான் இல்லையா? (ஹீஹீஹீ..) சிறுவன் ஆண்ட்ரேயின் சுற்றுலாவின் சின்னதொரு பகுதிதான் நீங்க இப்போ பார்த்தது..இனிமே தானே இருக்கு ரியல் ஆட்டமே...
அடுத்த வாரிசு..
செர்காஸி பிரபுவின் மாளிகை வாயிலை அவர்கள் விரைவிலேயே சென்றடைந்தனர்.

இத்தனை தாமதம் ஏனோ? வெளியே வெறி பிடித்த மிருகங்கள் அலைகையில்  காவல் பணி மிகவும் சிரமமாக இருக்கிறதே..

நீ எங்களோடு வந்து இருக்க வேண்டும்  அவற்றிடம் உன்னை  வீசி எறிந்துவிட்டு வந்து இருப்போம்.

வெல்கம் மாஸ்டர் ஆண்ட்ரே உமது மாமாவும் குடும்பத்தாரும் உறங்கிவிட்டனர் நாளை நீங்கள் அவர்களை சந்திக்கலாம். உங்கள் அறையை பியோதர் காண்பிப்பான்.

தனிமையில் விடப்பட்ட சிறுவன் ஆண்ட்ரே தான் இங்கே வர மறுத்ததை நினைவு கூர்ந்தான்..

என் மாமனை நான் சந்திக்க விரும்பவில்லை அவரது குழந்தைகளையும் தான் எல்லோருமே எனக்கு புதியவர்கள்

ஆனால் வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது மகனே என் சகோதரர் மாபெரும் செல்வந்தர் மூப்படைந்து  விட்டார். அவருடைய வாரிசுகளில் நீதான் முதன்மையானவன்.

உன் பன்னிரண்டாம் அகவையில் உன்னை சந்தித்தே ஆகவேண்டும் என காத்திருக்கிறார் எங்களுக்கும் உன்னால் பெருமையே.

பக் 5

பின்னர் தகுந்த ஏற்பாடுகளோடு அவனை உரிய தினத்தில் அனுப்பி வைத்தனர்.

ஒரு சில நாட்களே அந்த  நாட்டுப்புறத்தில் சுற்றிவிட்டு வரப் போகிறாய்

அவர்கள் சொன்னதை நினைத்துப் பார்த்து வியந்தான். மரணத்தோடு பந்தயம் நடத்தி விட்டானல்லவா. வெகு நேரமாக ஜன்னலருகே அமர்ந்து தீப்பந்தங்கள் வயலில் அலைவதையும்
நாய்களின் குரைப்பொலியையும் கேட்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால் மறு தினமும் பகல் வெளிச்சத்தில் அது ஒரு கெட்ட சொப்பனமாக மாத்திரமே தோன்றியது

நீதான் ஆண்ட்ரே அல்லவா அருமையான சிறுவனாக தெரிகிறாய்  உன் தாய் தன் வாக்கை காப்பாற்றி விட்டாள் இவர்கள் என் குழந்தைகள் நிக்கோலாய் & யுடின்..

உன்னை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி ஆண்ட்ரே..
சிறுவர் குழாம் ஆனந்தமாய் எஸ்டேட்டை சுற்றி வந்தார்கள்.

அதோ தெரியும் பசும்புல் வெளியும் மீன்கள் நீந்தும் புனலும் பாலமும் அருமையானவை.

ஆம் நீ ஒரு நல்ல நீச்சல்காரன் என்றால் பாலத்தில் இருந்து குதித்து நீந்தி மகிழலாம்

பாலத்தின் இறக்கத்தில் வயல்வெளியில் கூட்டமாக விவசாயிகள் நின்றிருந்தனர்.

பாரேன் கீழே ஏதோ  நடந்திருக்கிறது

வா நாமும் போவோம்

Page6

அவர்கள் வருவதை கண்ட இரு விவசாயிகள் அவர்களை எதிர் கொண்டு ஓடினர்.

நீங்கள்தானா என்னவாயிற்று?

ஒரு ஓநாயை நேற்றிரவு கொன்று விட்டோம்.

ஓநாய்களை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் இறந்த ஒன்றைக் கூட பார்த்ததில்லையே

தலையை ஏற்கனவே வெட்டி எடுத்து விட்டோம் இப்போது வந்து பார்த்தால் ஓநாய்க்கு பதிலாக ஆட்டிடையன் ஒருவனது உடல் தலை இல்லாமல் கிடக்கிறது.

இது சாத்தான் வேலைதான் பாதிரியார் கான்ஸ்டன்டைனை ஓடிப்போய் அழைத்து வர வேண்டும்

ஆனால் ஆண்ட்ரேவை ஏதோ ஒன்று இழுத்து நிறுத்தியது..

நேற்று இரவு ஓநாயின்  தலையை கண்டேன் அந்த விவசாயிகள் என்ன சொல்கிறார்கள் புரியவில்லையே

இவன் பயந்துவிட்டான் நிக்கி..முகம் வெளுத்து விட்டது பார் இங்கேயே  இருக்கட்டும்.

சரி இங்கேயே காத்திரு ஆண்ட்ரே.

ஆண்ட்ரே தொலைவில் இருந்தவாறே கண்காணித்துக் கொண்டிருந்தான் நிலவரம் தெளிவாக தெரிந்தது .

சபிக்கப்பட்ட இடம் இது நெருக்கமாகப் போகாதே வென்சர்.

அந்த ஆடைகள் அவை இல்யாவுடையன..
ஐயோ இது உண்மை அல்ல

பக்..7

அந்தக் கொடூரமான செய்தி தீப்பற்றி கொண்டார் போன்று சகலருக்கும் போய் சேர்ந்தது சில மணி நேரம் கழிந்ததும் செர்காஸி பிரபுவின் மாளிகையில்..

இந்த அப்பாவி மேய்ப்பன் இல்யா என்னிடம் தான் வாழ்நாள் முழுவதும் பணியாற்றி வந்தான் அவனது இறுதி சடங்கை நடத்தி வையுங்கள் பாதர் கான்ஸ்டன்டைன்

மன்னியும் பிரபுவே தலையில்லா ஓநாய் கிடந்த இடத்திலேயே இவனது உடல்  தலையில்லாமல்  கண்டுபிடிக்கப்பட்டதால் இவனோர் ஓநாய் மனிதனாகதான் இருக்க முடியும்.

அதை பிரபுவால் மறுக்க முடியவில்லை. நிக்கோலாயும் யுடைனும் மதகுருவிடம் இறைஞ்சினார்கள்.

இது உண்மையல்ல..
அவன் நல்ல பண்புகளுடையவன். யாரைக் கேட்டுப்பார்த்தாலும் சொல்வார்கள்..

நிஜம்தான் குருவே. இதில் மறைபொருளாக வேறேதும் அர்த்தமிருக்கலாம்.

உமக்கு நினைவூட்டுகிறேன் பிரபுவே. ஓநாய் மனிதர்கள் தாங்கள் இறக்கும் வேளையில் மனித உருவில் தான் இருப்பார்கள்
இந்த மனித மிருகத்துக்கு இறுதி சடங்கு செய்வித்தல் தெய்வ நிந்தனை ஆகும்

எனவே அந்தி சாயும் வேளையில் மாளிகை பணியாளர்கள் முன்னிலையில் உடல் அது கிடந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது

பக்கம் 8
சோகத்துடன் அனைவரும் வீடு திரும்பும்போது கிசுகிசுப்பாக ஆண்ட்ரேயின் மாமன் பிள்ளைகள் தமக்குள் பேசிக்கொண்டது காற்றுவாக்கில் அவனை உசுப்பியது..

...அதை இன்றைக்கே செய்வோம்..

சரி நிக்கோலாய்..அப்புறம் நாளை மற்றவர்கள்..

அன்றிரவு நடுங்கும் மனதை அடக்கிக் கொண்டு ஜன்னலோரம் காத்திருக்கையில் திடீரென இரு உருவங்கள் பனிப்போர்வைக்குள் நடந்து செல்வதை கண்டான்.

அது நிக்கோலாயும்  யுடினும்தான் ..

நான் அவர்களை பின் தொடர்கிறேன்

பயம் அவன் கால்களை கவ்விய போதிலும் அதை தள்ளி முன்னேறினான்.

நிக்கோலாயிடம் சவுல் இருக்கிறது. கல்லறைக்குத்தான் அவர்கள் போகிறார்கள் நானும் சென்று என்ன நடக்கிறது என கண்டுபிடிப்பேன்..

பக்கம் 8

மெதுவாக பூனை போல பாதம் வைத்து முன்னேறி சென்ற போது அவர்கள் இருவரும் மண்ணைத் தோண்டுவதைக் கண்டு உறுதிப்படுத்திக் கொண்டான்.

வெளியே தலை காட்டாமல் அவர்களை சுற்றி வந்து மரங்களின் மறைவில் அவர்களை கண்காணிக்கிறேன்.

முடிந்த அளவுக்கு நெருக்கமாக அவன் போனபோது திடீரென சவக்குழியில் இருந்து ஒரு கை உயர்ந்தது..

அது நிக்கோலாய்தான்..யுடினிடம் எதையோ தருகிறான்..

பக்கம் 9
மறுபடியும் சவக்குழி மூடப்பட்டது. பின்னர் சவக்குழியில் தலைமாட்டில் சிறியதொரு குழியை தோண்டி யுடின் கையில் நிக்கோலாய் கொடுத்த பொருளைப் புதைத்தாள்..

இப்போது நிக்கோலாய் கையில் நீல நிற மெழுகுவர்த்தி முளைக்க அதன் தீ பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது.

சோகத்தின் அதிபதியே, தீமையின் வேரே..தீய ஆவியே..எம் சகோதரனைக் கொன்றவனை வஞ்சம் தீர்த்து அவனுக்குமாற்றாக வேறொருவனை நியமிப்போமென சபதம் எடுக்கிறோம்..

சடங்கைக் கவனித்துக் கொண்டிருந்த ஆண்ட்ரே மெல்ல விலக முயன்றபோது சுள்ளியொன்றில் கால்பட..

சரக்..

அய்யய்யோ..அவர்கள் இதைக் கேட்டிருப்பார்கள். நான் சிக்கிவிடக்கூடாது.

அச்சத்தின் உச்சியில் மரங்களினூடே கண்மூடித்தனமாக ஓடியவனை காலடியோசை பின்னாலேயே  துரத்தியது.

மூச்சிரைப்பும் அயர்ச்சியும் அவனை வீழ்த்திவிட முயல
தாறுமாறாக ஓடியவன் பாலத்தை வந்தடைந்தான்..பின்தொடரும் காலடியோசையைக் காணோம்..

ஆஹா.. அதோ பாலம்..மாளிகைக்கு விரைவிலேயே திரும்பிப்போய் விடலாம்..

மரங்களை விட்டு விலகி வயல்பரப்பில் கடந்து பாலத்தினை நெருங்கியபோது..

பயங்கரத்தையுணர்ந்து தடுமாறியவன் பாலத்தின் கைப்பிடியில் சாய்ந்தபோது ஒரு கழி கைக்குக் கிடைத்தது.

தன் முழுபலத்தையும் ஒன்று சேர்த்து அந்த ஓநாயை ஓங்கி ஒரே அடி...

சில மணி நேரத்துக்குப் பின்..தனிமையில் சிந்தனைகள் மண்டையைக் குடைந்திட தவிப்போடு அமர்ந்திருந்தான் ஆண்ட்ரே.. எப்படியாகிலும் இங்கிருந்து தன் ஊருக்கே ஓடிவிடுவதென தீர்மானித்து அதை எப்படி செய்வதென குழம்பிக் கொண்டிருந்தான்.

மறுதினம் காலையிலேயே அனைத்தும் விளங்கத் துவங்கிற்று..

ஆம் பிரபுவே.. நிக்கோலாய்தான்.. ஆற்றில் மிதந்து கொண்டிருந்தார். கீழே விழுந்ததில் தலை நசுங்கி விட்டிருந்தது.. எனது படகுக்குள் உடலை இழுத்துப்போட ஆனமட்டும் முயன்றேன். வேகமான நீரோட்டம் கடலை நோக்கி உடலை தள்ளிப்போய்விட்டது.

இந்தசோகத்தைத் தாங்கிக் கொள்ள முயற்சியுங்கள்..

சரி குருவே.. நடந்ததை மாற்ற இனி எப்படி முடியும்?!?

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் யுடின் அங்கே நின்று ஆண்ட்ரேயையே வெறித்துக் கொண்டிருந்தாள்..அவளிடம் உண்மையை சொல்ல துடித்த உதடுகளை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான் ஆண்ட்ரே.

இது என் மாமனை கொன்று விடும்.. அதிர்ச்சியை அவரால் தாங்கவியலாது..அவரிடம் எதையும் நான்சொல்லப்போவதில்லை. ஆனால் இன்றைக்கே கிளம்பிவிட தீர்மானித்திருக்கிறேன்..

#11
அன்றைய மதிய வேளையில் அவனது அறையின் கதவுகள் திறந்தன..அது யூடின்தான்.

நம்மிடையே அனைத்து திரைகளும் இப்போது விலகிவிட்டன.   நிக்கோலாய்தான் சிவப்பு ஓநாய். அன்றைக்கு நீ வந்த இரவில் உன்னை கொல்ல முயன்றது அவன்தான்.

எல்லா சொத்துகளும் உனக்கே கிடைத்து விட்டால் என்னாவது என்று நிக்கோலாய் அஞ்சினான்.

அவள் பேசப்பேச ஆண்ட்ரேயின் மனம் அதில் நிலைகொண்டு உருகத் தொடங்கியது.

நீ இல்யாவின் உடலைக் கண்டு பயந்தும் நீயாகவே இங்கிருந்து கிளம்பி விடுவாய் என்று அவன் கணக்குப் போட்டான்.  

நீ நேற்று மட்டும் எங்களை பின்தொடராதிருந்திருந்தால் உன்னைத் தாக்கியே இருக்க மாட்டான். இதை உன் மனநிம்மதிக்காக தான் சொல்கிறேன்.

என் உயிரைக் காத்துக் கொள்ளவே அவனை நான் கொன்றேன். எனக்கு அதில் மிகவும் வருத்தமே. உங்களுக்கு ஏன் இதுபோல் மாற்றம் ஏற்பட்டது என சொல்லேன்..

அது எங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய இரகசியம். நீ கிளம்ப நினைத்தால் உனக்கு உதவுகிறேன்..

இதை மாமாவிடம் சொல்லி மதகுரு மூலமாக ஏதேனும் செய்து குணமாக்கி இருக்கலாமே..?

அந்த கட்டமெல்லாம் தாண்டி விட்டது. இப்போது தெரிந்தால் என்னை உயிருடன் எரித்து விடுவார்கள். விடு. இன்றிரவு உன்னை சந்திக்கிறேன்.

#12
இருளின் போர்வையை உதறிக் கொண்டு முழு நிலவு மெல்ல மேலெழும்பிற்று..

இந்தப் பிரதேசம் எனக்குப்புதிது.. நாங்கள் எங்கு போகிறோம் என்பதும் புரியவில்லை. அவ்வப்போது நின்று என் முகத்தினையே உற்று நோக்குகிறாளே இவள்.. அப்படி என்னதான் தேடுகிறாளோ..?

முழு நிலவின் கிரகணங்கள் மேலே படப்பட புதிய சிந்தை அவன் மனதை ஆக்ரமித்தது.. அவன் அகம் மலரத் துவங்கியது.

இவள் என்னை இல்யாவின் கல்லறையை நோக்கித்தான் திரும்பவும் அழைத்துப் போகிறாள். பொய்யள். இவள் சொன்னதெல்லாமே பொய்யே.

ஆனால் இவள் மீதான கோபத்துக்குப் பதிலாக மகிழ்ச்சி வெள்ளம் பெருகுகிறதே. எதையோ கண்டடைந்ததான சந்தோஷமும் மிகுகிறதே..

அவன் எண்ணம் போன்றே அவனருகில் ஒரு கூட்டத்தார் பச்சை ஒளியுடனான மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு ஒன்றுகூடினார்கள்..

தயாராகு ஆண்ட்ரே..ஓநாய் மனிதர்களின் தலைவரே இங்கு வருகை தந்து உன்னை எங்களோடு சேர்த்துக்கொள்ளவிருக்கிறார்...

அற்புதம்..
அற்புதம்..

பக்-13
யுடின் தான் ஏற்கனவே இல்யாவின் கல்லறையின் தலைமாட்டில் புதைத்திருந்த பொருளை எடுத்தாள். அது ஒரு பெல்ட்.

இந்த மாந்திரீக இடைக்கச்சையை இல்யா தன் ஆடைகளுக்குள் மறைவாக எப்போதும் அணிந்திருப்பான்.

இதனை அணிந்து கொள். இது இனி உனதே..

நீ இனி எம்மில் ஒருவனே.

கணப்பொழுதில் அது நடந்தேறிற்று.

அப்போது இருளின் மறைவிலிருந்து செர்காஸி பிரபு வெளிப்பட்டார்.

ஆம் ஆண்ட்ரே.. நம் முன்னோர்களின் சாத்தான் வழிபாடு இனி நம்மால் தொடரும்.. அனைவரையும் அடிபணிய வைப்போம்.. இம்முழு நிலவின் பூரணஒளியில்  நீதான் என் வாரிசென முழுவதுமாக உணர்ந்து கொள்வாய்.

யுடின்..என் ஓநாய்த்தோல் இடைக்கச்சையைக் கொடு..

#14
ஆண்ட்ரேயின் புது வாழ்வு துவங்கியது.

பொறுங்க வாசகர்களே.. இன்னும் கொஞ்சம் போவோம்.. ஒரு வாரம் போனதும் ஆண்ட்ரே தன்னோட வீட்டுக்குக் கடுதாசி போட்டிருந்தான்.

இதைக் கேளேன்.. ஆண்ட்ரே அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறானாம்.. இன்னும் கொஞ்சகாலம் தங்கிவிட்டு வருகிறானாம்..

அவன் அங்கே போனால்தான் நாம் நினைத்தபடி அனைத்தும் நடக்கும் என்றேனே..

என்னா கண்ணுகளா..அவங்க என்ன பேசிக்கிறாங்க புரிஞ்சதா..ஹீஹீஹீ...

முற்றும்.

_ஜானி


ஊரார் சொல் கேளேல்..

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

கன்னித் தீவு_பார்னே வெர்ஷன்

 பாய்ந்து வந்து ஜிம்மைக் கட்டிக் கொண்டான் பார்னே.. ஏய் ஜிம் அந்த கடற்கரையெங்கும் அழகிகளாகவே நிரம்பியிருக்குமாமே...

ப்ரின்ஸ் தூங்கிட்டிருக்கிற நேரத்துலயே நைசா ஒரு விசிட்டடிச்சிரலாமே..அந்தத் தீவு வா..வா..வாவா..ன்னு கூப்பிட்டுட்டே கீதுபா... என்று ஐஸ் வைத்த பார்னேயை முறைத்தான் ஜிம்.. என் செல்லம்ல.. வாழ்க்கையில முக்காவாசி நீலக்கடலையே பாத்து வீணாய்டுச்சிப்பா.. ப்ளீஸ்..சு.கானை லைட்டா திருப்பேன்ன்...கெஞ்சலாகக் கதறும் பார்னேவை குறும்புப் புன்னகையோடு இரசித்த ஜிம்..ஓக்கே பெருசு அந்தத் தீவு அழகிகளோடு குத்தாட்டம் போட்டே ஆகணும்ன்றே... வந்து தொலை என்றபடியே சுக்கானை திருப்ப கழுகு வேகமெடுத்தது. 

...

தீவு..


ப்ரிஸ்மா தீவு..


ஆளரவமில்லாமல் காட்சியளிக்க...


பதட்டத்தோடு பாதம்பதித்தான் பார்னே... 

மரங்களிடையே புகுந்ததுதான் தாமதம்..

.....

....

அவனைப்

பிலுபிலுவென சூழ்ந்து கொண்டன காமக் கண்ணோடு பெண் கொரில்லாக்கள்...

பாவம்யா பார்னே..


இந்தத் தீவுக்கு இன்னொரு பெயர் கொரில்லாக் கன்னித்தீவு...ஹீஹீஹீ..என்றபடிக்கே...

பார்னே சாருக்கு ஒரு மாச லீவு..சுக்கான் திருப்பப்பட்டது...

கடத்தல் மன்னன் - எழுத்து வேந்தன்

 


கடத்தல் மன்னன் - எழுத்து வேந்தனின் விறுவிறுப்பான கதை

https://bit.ly/3nyyiup

#COMICS_PDF_TIMES

மோகினித் தீவு-அமரர் கல்கி

 


அமரர் கல்கியின் மோகினித் தீவு படக்கதை
முன்னர் தொடராக வெளியான, பின்பு படக்கதையாக

https://bit.ly/3iNLGHl

***

வேறு விதமான தொடராக..

அமரர் கல்கியின் மோகினித் தீவு தொடர்கதை.
வண்ணப்படங்களும், இரு வண்ணப்படங்களும் இணைந்தது.

https://bit.ly/3iLikJt

#COMICS_PDF_TIMES
திரு.சுரேஷ் சந்த் அவர்களுக்கு நன்றியும் அன்பும்..


மெரினாவின் தனிக்குடித்தனம்.

 


மெரினாவின் தனிக்குடித்தனம்.
சிறந்த நகைச்சுவை நாடகம்.
அத்தியாயத்திற்க்கு அத்தியாயம் சிரிப்புக்கு உறுதி.

https://bit.ly/3nCvNaf

#COMICS_PDF_TIMES

வெள்ளி, 9 அக்டோபர், 2020

கார்வினின் கடந்த கால(ய)ங்கள்_ஜானி சின்னப்பன்

 வணக்கம் தோழர்களே..

மாடஸ்டி ப்ளைஸி - வில்லி கார்வின் ஜோடியின் அட்டகாசமான சாகஸங்களை வாசித்திருப்பீர்கள்.. ஒருவேளை கார்வினின் கடந்த கால காயங்கள் இப்படியானதாக இருந்திருக்கலாம் என்கிற ஒரு கற்பனையில் கதையை விவரிக்கிறேன்..

பீட்டர் ஓ டன்னலுக்கே புகழ்..

வனெஸ்ஸா கார்வின் -மார்ட்டின் கார்வினின் படுகொலைகள் நிகழ்ந்தபோது அனாதையாய் நின்ற சிறுவன் வில்லி கார்வினை விதி துரத்தத் துவங்கியது.. அவனுக்கோர் அடைக்கலமெனப் புகுந்தார் ரிச்சர்ட்.. பத்திரிக்கையொன்றின் ரிப்போர்ட்டர்.. அவரது அரவணைப்பில் சிறிது ஆசுவாசமான கார்வினின் விதி தொடர்ந்து துரத்தியது பத்திரிக்கையில் பிரபல கடத்தல் ஆசாமி ஜோஷ்வா தி க்ரூயலின்  அந்தரங்க டீல்களை தான் பணிபுரிந்து வந்த தி பிரேவ் ஜர்னலில் புனைப்பெயரில் எழுதிய ரிச்சர்ட்டை அடையாளம் கண்டு கொண்ட ஜோஷ்வா தனது காரில் கார்வினோடு பயணமாகிக் கொண்டிருந்த சமயம் குறுக்கிட்டு துப்பாக்கி குண்டுகளால் துளைத்தெடுக்கிறான் ஜோஷ்வா.. கார்வினையும் தன் இடத்துக்குக் கொண்டுபோய் போதைக்கடிமையாக்கி நாய் போல அலைக்கழித்து தனது போதைப்பொருள் கடத்தலில் பங்கேற்க வைக்கும் சமயம் தனது சாமர்த்தியத்தால் அவனிடமிருந்து தப்பி ஒட்டுமொத்த ஜோஷ்வா கும்பலை அழித்தொழிக்கும் கார்வின் தனது குற்றங்களுக்காக சிறையிலடைபட்டிருக்கும்போது அறிமுகமாகிறார் ஸ்னைப் டெப்.. அவருடன் சிறையிலிருந்து தப்பும் கார்வின் இரகசிய இடத்தில் கத்தி வீசும் கலையில் ஸ்னைப் டெப்டிடம் பயின்று தேர்ச்சியடைகிறான்.. அதுதவிர குத்துச்சண்டை போட்டிகளில் பந்தயத்துக்கு மோதுவதையும் வழக்கமாக்கிக் கொள்கிறான்...

திடீரென அவ்வப்போது எங்காவது தோன்றுவதும் அராஜகப்பேர்வழிகளை களையெடுப்பதுமாக இருக்கின்றனர் கார்வின்-ஸ்னைப் ஜோடி. இந்நிலையில் ஒரு மோதலில் ஸ்னைப் கொல்லப்பட, குத்துச்சண்டையில் தாறுமாறாக தன்னோடு மோதிய எதிரியின் சில்லைப் பெயர்ப்பதில் கவனமாக இருக்கும் ஒரு தருணத்தில் அதிரடி ரெய்டு நடத்தும் போலீசின் இரும்புக்கரங்களில் சிக்கி சிறையில் வாடும் கார்வினை சந்திக்கிறாள் நெட்வொர்க் இயக்கத் தலைவி மாடஸ்டி ப்ளைஸி.. அவனை மீட்டு தன்னுடைய அமைப்பில் இணைத்துக் கொள்கிறாள் மாடஸ்டி.. தன்னைக் காக்க வந்த ப்ளைஸியை இளவரசியாகவே மனதில் வரித்துக் கொள்கிறான் கார்வின்... கடுமையான பல சதித்திட்டங்களையெல்லாம் தாண்டி முன்னேறும் நெட்வொர்க் அமைப்பில் தனது விசுவாசமான செய்கைகளால் கார்வின் தொடர்ந்து மாடஸ்டியின் நன்னம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்கிறான்.. ஒரு கட்டத்தில் தனது நெட்வொர்க் அமைப்பினை கலைத்து அந்த அமைப்பிலிருந்த அனைவரையும் நல்ல விதத்தில் வாழ வகை செய்து விலக நினைக்கும் கட்டத்தில் அனாதை கார்வின் மாடஸ்டியின் துணையை மாத்திரமே நம்பி வாழ்கிறார்.. தொடர்கிறது அவர்களது சாகஸப் பயணம்..


இந்த கற்பனைக்கு எனக்கு ஊக்கமளித்த திரு.உதய், திரு.இரா.தி.முருகன், திரு.செல்வகுமார் ஆகியோரது ஸ்பைடர் படை வாட்ஸ் அப்


குழுவுக்கு என் நன்றியும் அன்பும்..


வாசகர் திரு.சந்திரமோகனின் கமெண்ட்..
👏👏👏👏💐💐💐💐நல்ல முயற்சி..! கதாபாத்திரங்களின் பெயர்களை நன்றாகவே தேர்வு செய்துள்ளீர்கள்.. நான் கார்வினின் கிளை கதையென ஏமாந்து போனேன்..😁🙏
தேங்க்யு சார்..


Dc comics tamil covers

 




Pic credits tex sampath

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...