புதன், 14 அக்டோபர், 2020

அடுத்த வாரிசு_ஆய(யா) க(லை)தைகள் 64-எழுத்து வடிவில்

வணக்கம்.. விரைவிலேயே இதனை வேறு வடிவிலும் இரசிக்க வாய்ப்புண்டு...

ஆதி கார்பாத்தியா மலைகள் நடுவே
அந்த பயங்கர இரவில் நமது கதை துவங்குகிறது. ஓலங்களும் துப்பாக்கியோசைகளும் இரவின் நிசப்தத்தை கிழித்தன. மரண வாடை அங்கே வெகுவாக வீசியது..

உயிரை காப்பாற்றிக் கொள்வதில் மனிதர்களும் குதிரைகளும் அங்கே தோற்று கொண்டிருந்தனர். கோச்சுக்குள்ளே அபாயத்தின் அர்த்தம் என்னவென்று அறிய துவங்கி இருந்தான்  ஒரு பாலகன்.

திடீரென சாலையில் தீப்பந்தங்கள் வெளிச்சத்தை இறைக்க ஓநாய்கள் பின்வாங்கின.

தீப்பந்தங்களுக்கு நடுவே அவர்கள் பாதுகாப்பாக..சிறுவனோ அமைதியாக நன்றி ஜெபம் செய்தான்.

ஓநாய்கள் எங்களை கிட்டத்தட்ட கொன்றுவிட்டு இருக்கும்..மிகவும் மதிப்பு வாய்ந்த சரக்குடன் இங்கு வந்திருக்கிறோம்.நாங்களும் எங்கள் பிரபுவும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் ..

ஆம். இன்று அவை கொஞ்சம் வெறி பிடித்துத்தான் திரிகின்றன. பெட்ரோவின் 4 ஆடுகளை கொன்று விட்டன.

இது ஒன்று மட்டும் இனி யாரையும் இரவில் கொல்லப்போவதில்லை.

நாட்டுப்புறத்தில் இருக்கிற சொந்தக்காரர்களை பார்க்க போகிற சந்தோசம் வேற லெவல் தான் இல்லையா? (ஹீஹீஹீ..) சிறுவன் ஆண்ட்ரேயின் சுற்றுலாவின் சின்னதொரு பகுதிதான் நீங்க இப்போ பார்த்தது..இனிமே தானே இருக்கு ரியல் ஆட்டமே...
அடுத்த வாரிசு..
செர்காஸி பிரபுவின் மாளிகை வாயிலை அவர்கள் விரைவிலேயே சென்றடைந்தனர்.

இத்தனை தாமதம் ஏனோ? வெளியே வெறி பிடித்த மிருகங்கள் அலைகையில்  காவல் பணி மிகவும் சிரமமாக இருக்கிறதே..

நீ எங்களோடு வந்து இருக்க வேண்டும்  அவற்றிடம் உன்னை  வீசி எறிந்துவிட்டு வந்து இருப்போம்.

வெல்கம் மாஸ்டர் ஆண்ட்ரே உமது மாமாவும் குடும்பத்தாரும் உறங்கிவிட்டனர் நாளை நீங்கள் அவர்களை சந்திக்கலாம். உங்கள் அறையை பியோதர் காண்பிப்பான்.

தனிமையில் விடப்பட்ட சிறுவன் ஆண்ட்ரே தான் இங்கே வர மறுத்ததை நினைவு கூர்ந்தான்..

என் மாமனை நான் சந்திக்க விரும்பவில்லை அவரது குழந்தைகளையும் தான் எல்லோருமே எனக்கு புதியவர்கள்

ஆனால் வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது மகனே என் சகோதரர் மாபெரும் செல்வந்தர் மூப்படைந்து  விட்டார். அவருடைய வாரிசுகளில் நீதான் முதன்மையானவன்.

உன் பன்னிரண்டாம் அகவையில் உன்னை சந்தித்தே ஆகவேண்டும் என காத்திருக்கிறார் எங்களுக்கும் உன்னால் பெருமையே.

பக் 5

பின்னர் தகுந்த ஏற்பாடுகளோடு அவனை உரிய தினத்தில் அனுப்பி வைத்தனர்.

ஒரு சில நாட்களே அந்த  நாட்டுப்புறத்தில் சுற்றிவிட்டு வரப் போகிறாய்

அவர்கள் சொன்னதை நினைத்துப் பார்த்து வியந்தான். மரணத்தோடு பந்தயம் நடத்தி விட்டானல்லவா. வெகு நேரமாக ஜன்னலருகே அமர்ந்து தீப்பந்தங்கள் வயலில் அலைவதையும்
நாய்களின் குரைப்பொலியையும் கேட்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால் மறு தினமும் பகல் வெளிச்சத்தில் அது ஒரு கெட்ட சொப்பனமாக மாத்திரமே தோன்றியது

நீதான் ஆண்ட்ரே அல்லவா அருமையான சிறுவனாக தெரிகிறாய்  உன் தாய் தன் வாக்கை காப்பாற்றி விட்டாள் இவர்கள் என் குழந்தைகள் நிக்கோலாய் & யுடின்..

உன்னை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி ஆண்ட்ரே..
சிறுவர் குழாம் ஆனந்தமாய் எஸ்டேட்டை சுற்றி வந்தார்கள்.

அதோ தெரியும் பசும்புல் வெளியும் மீன்கள் நீந்தும் புனலும் பாலமும் அருமையானவை.

ஆம் நீ ஒரு நல்ல நீச்சல்காரன் என்றால் பாலத்தில் இருந்து குதித்து நீந்தி மகிழலாம்

பாலத்தின் இறக்கத்தில் வயல்வெளியில் கூட்டமாக விவசாயிகள் நின்றிருந்தனர்.

பாரேன் கீழே ஏதோ  நடந்திருக்கிறது

வா நாமும் போவோம்

Page6

அவர்கள் வருவதை கண்ட இரு விவசாயிகள் அவர்களை எதிர் கொண்டு ஓடினர்.

நீங்கள்தானா என்னவாயிற்று?

ஒரு ஓநாயை நேற்றிரவு கொன்று விட்டோம்.

ஓநாய்களை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் இறந்த ஒன்றைக் கூட பார்த்ததில்லையே

தலையை ஏற்கனவே வெட்டி எடுத்து விட்டோம் இப்போது வந்து பார்த்தால் ஓநாய்க்கு பதிலாக ஆட்டிடையன் ஒருவனது உடல் தலை இல்லாமல் கிடக்கிறது.

இது சாத்தான் வேலைதான் பாதிரியார் கான்ஸ்டன்டைனை ஓடிப்போய் அழைத்து வர வேண்டும்

ஆனால் ஆண்ட்ரேவை ஏதோ ஒன்று இழுத்து நிறுத்தியது..

நேற்று இரவு ஓநாயின்  தலையை கண்டேன் அந்த விவசாயிகள் என்ன சொல்கிறார்கள் புரியவில்லையே

இவன் பயந்துவிட்டான் நிக்கி..முகம் வெளுத்து விட்டது பார் இங்கேயே  இருக்கட்டும்.

சரி இங்கேயே காத்திரு ஆண்ட்ரே.

ஆண்ட்ரே தொலைவில் இருந்தவாறே கண்காணித்துக் கொண்டிருந்தான் நிலவரம் தெளிவாக தெரிந்தது .

சபிக்கப்பட்ட இடம் இது நெருக்கமாகப் போகாதே வென்சர்.

அந்த ஆடைகள் அவை இல்யாவுடையன..
ஐயோ இது உண்மை அல்ல

பக்..7

அந்தக் கொடூரமான செய்தி தீப்பற்றி கொண்டார் போன்று சகலருக்கும் போய் சேர்ந்தது சில மணி நேரம் கழிந்ததும் செர்காஸி பிரபுவின் மாளிகையில்..

இந்த அப்பாவி மேய்ப்பன் இல்யா என்னிடம் தான் வாழ்நாள் முழுவதும் பணியாற்றி வந்தான் அவனது இறுதி சடங்கை நடத்தி வையுங்கள் பாதர் கான்ஸ்டன்டைன்

மன்னியும் பிரபுவே தலையில்லா ஓநாய் கிடந்த இடத்திலேயே இவனது உடல்  தலையில்லாமல்  கண்டுபிடிக்கப்பட்டதால் இவனோர் ஓநாய் மனிதனாகதான் இருக்க முடியும்.

அதை பிரபுவால் மறுக்க முடியவில்லை. நிக்கோலாயும் யுடைனும் மதகுருவிடம் இறைஞ்சினார்கள்.

இது உண்மையல்ல..
அவன் நல்ல பண்புகளுடையவன். யாரைக் கேட்டுப்பார்த்தாலும் சொல்வார்கள்..

நிஜம்தான் குருவே. இதில் மறைபொருளாக வேறேதும் அர்த்தமிருக்கலாம்.

உமக்கு நினைவூட்டுகிறேன் பிரபுவே. ஓநாய் மனிதர்கள் தாங்கள் இறக்கும் வேளையில் மனித உருவில் தான் இருப்பார்கள்
இந்த மனித மிருகத்துக்கு இறுதி சடங்கு செய்வித்தல் தெய்வ நிந்தனை ஆகும்

எனவே அந்தி சாயும் வேளையில் மாளிகை பணியாளர்கள் முன்னிலையில் உடல் அது கிடந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது

பக்கம் 8
சோகத்துடன் அனைவரும் வீடு திரும்பும்போது கிசுகிசுப்பாக ஆண்ட்ரேயின் மாமன் பிள்ளைகள் தமக்குள் பேசிக்கொண்டது காற்றுவாக்கில் அவனை உசுப்பியது..

...அதை இன்றைக்கே செய்வோம்..

சரி நிக்கோலாய்..அப்புறம் நாளை மற்றவர்கள்..

அன்றிரவு நடுங்கும் மனதை அடக்கிக் கொண்டு ஜன்னலோரம் காத்திருக்கையில் திடீரென இரு உருவங்கள் பனிப்போர்வைக்குள் நடந்து செல்வதை கண்டான்.

அது நிக்கோலாயும்  யுடினும்தான் ..

நான் அவர்களை பின் தொடர்கிறேன்

பயம் அவன் கால்களை கவ்விய போதிலும் அதை தள்ளி முன்னேறினான்.

நிக்கோலாயிடம் சவுல் இருக்கிறது. கல்லறைக்குத்தான் அவர்கள் போகிறார்கள் நானும் சென்று என்ன நடக்கிறது என கண்டுபிடிப்பேன்..

பக்கம் 8

மெதுவாக பூனை போல பாதம் வைத்து முன்னேறி சென்ற போது அவர்கள் இருவரும் மண்ணைத் தோண்டுவதைக் கண்டு உறுதிப்படுத்திக் கொண்டான்.

வெளியே தலை காட்டாமல் அவர்களை சுற்றி வந்து மரங்களின் மறைவில் அவர்களை கண்காணிக்கிறேன்.

முடிந்த அளவுக்கு நெருக்கமாக அவன் போனபோது திடீரென சவக்குழியில் இருந்து ஒரு கை உயர்ந்தது..

அது நிக்கோலாய்தான்..யுடினிடம் எதையோ தருகிறான்..

பக்கம் 9
மறுபடியும் சவக்குழி மூடப்பட்டது. பின்னர் சவக்குழியில் தலைமாட்டில் சிறியதொரு குழியை தோண்டி யுடின் கையில் நிக்கோலாய் கொடுத்த பொருளைப் புதைத்தாள்..

இப்போது நிக்கோலாய் கையில் நீல நிற மெழுகுவர்த்தி முளைக்க அதன் தீ பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது.

சோகத்தின் அதிபதியே, தீமையின் வேரே..தீய ஆவியே..எம் சகோதரனைக் கொன்றவனை வஞ்சம் தீர்த்து அவனுக்குமாற்றாக வேறொருவனை நியமிப்போமென சபதம் எடுக்கிறோம்..

சடங்கைக் கவனித்துக் கொண்டிருந்த ஆண்ட்ரே மெல்ல விலக முயன்றபோது சுள்ளியொன்றில் கால்பட..

சரக்..

அய்யய்யோ..அவர்கள் இதைக் கேட்டிருப்பார்கள். நான் சிக்கிவிடக்கூடாது.

அச்சத்தின் உச்சியில் மரங்களினூடே கண்மூடித்தனமாக ஓடியவனை காலடியோசை பின்னாலேயே  துரத்தியது.

மூச்சிரைப்பும் அயர்ச்சியும் அவனை வீழ்த்திவிட முயல
தாறுமாறாக ஓடியவன் பாலத்தை வந்தடைந்தான்..பின்தொடரும் காலடியோசையைக் காணோம்..

ஆஹா.. அதோ பாலம்..மாளிகைக்கு விரைவிலேயே திரும்பிப்போய் விடலாம்..

மரங்களை விட்டு விலகி வயல்பரப்பில் கடந்து பாலத்தினை நெருங்கியபோது..

பயங்கரத்தையுணர்ந்து தடுமாறியவன் பாலத்தின் கைப்பிடியில் சாய்ந்தபோது ஒரு கழி கைக்குக் கிடைத்தது.

தன் முழுபலத்தையும் ஒன்று சேர்த்து அந்த ஓநாயை ஓங்கி ஒரே அடி...

சில மணி நேரத்துக்குப் பின்..தனிமையில் சிந்தனைகள் மண்டையைக் குடைந்திட தவிப்போடு அமர்ந்திருந்தான் ஆண்ட்ரே.. எப்படியாகிலும் இங்கிருந்து தன் ஊருக்கே ஓடிவிடுவதென தீர்மானித்து அதை எப்படி செய்வதென குழம்பிக் கொண்டிருந்தான்.

மறுதினம் காலையிலேயே அனைத்தும் விளங்கத் துவங்கிற்று..

ஆம் பிரபுவே.. நிக்கோலாய்தான்.. ஆற்றில் மிதந்து கொண்டிருந்தார். கீழே விழுந்ததில் தலை நசுங்கி விட்டிருந்தது.. எனது படகுக்குள் உடலை இழுத்துப்போட ஆனமட்டும் முயன்றேன். வேகமான நீரோட்டம் கடலை நோக்கி உடலை தள்ளிப்போய்விட்டது.

இந்தசோகத்தைத் தாங்கிக் கொள்ள முயற்சியுங்கள்..

சரி குருவே.. நடந்ததை மாற்ற இனி எப்படி முடியும்?!?

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் யுடின் அங்கே நின்று ஆண்ட்ரேயையே வெறித்துக் கொண்டிருந்தாள்..அவளிடம் உண்மையை சொல்ல துடித்த உதடுகளை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான் ஆண்ட்ரே.

இது என் மாமனை கொன்று விடும்.. அதிர்ச்சியை அவரால் தாங்கவியலாது..அவரிடம் எதையும் நான்சொல்லப்போவதில்லை. ஆனால் இன்றைக்கே கிளம்பிவிட தீர்மானித்திருக்கிறேன்..

#11
அன்றைய மதிய வேளையில் அவனது அறையின் கதவுகள் திறந்தன..அது யூடின்தான்.

நம்மிடையே அனைத்து திரைகளும் இப்போது விலகிவிட்டன.   நிக்கோலாய்தான் சிவப்பு ஓநாய். அன்றைக்கு நீ வந்த இரவில் உன்னை கொல்ல முயன்றது அவன்தான்.

எல்லா சொத்துகளும் உனக்கே கிடைத்து விட்டால் என்னாவது என்று நிக்கோலாய் அஞ்சினான்.

அவள் பேசப்பேச ஆண்ட்ரேயின் மனம் அதில் நிலைகொண்டு உருகத் தொடங்கியது.

நீ இல்யாவின் உடலைக் கண்டு பயந்தும் நீயாகவே இங்கிருந்து கிளம்பி விடுவாய் என்று அவன் கணக்குப் போட்டான்.  

நீ நேற்று மட்டும் எங்களை பின்தொடராதிருந்திருந்தால் உன்னைத் தாக்கியே இருக்க மாட்டான். இதை உன் மனநிம்மதிக்காக தான் சொல்கிறேன்.

என் உயிரைக் காத்துக் கொள்ளவே அவனை நான் கொன்றேன். எனக்கு அதில் மிகவும் வருத்தமே. உங்களுக்கு ஏன் இதுபோல் மாற்றம் ஏற்பட்டது என சொல்லேன்..

அது எங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய இரகசியம். நீ கிளம்ப நினைத்தால் உனக்கு உதவுகிறேன்..

இதை மாமாவிடம் சொல்லி மதகுரு மூலமாக ஏதேனும் செய்து குணமாக்கி இருக்கலாமே..?

அந்த கட்டமெல்லாம் தாண்டி விட்டது. இப்போது தெரிந்தால் என்னை உயிருடன் எரித்து விடுவார்கள். விடு. இன்றிரவு உன்னை சந்திக்கிறேன்.

#12
இருளின் போர்வையை உதறிக் கொண்டு முழு நிலவு மெல்ல மேலெழும்பிற்று..

இந்தப் பிரதேசம் எனக்குப்புதிது.. நாங்கள் எங்கு போகிறோம் என்பதும் புரியவில்லை. அவ்வப்போது நின்று என் முகத்தினையே உற்று நோக்குகிறாளே இவள்.. அப்படி என்னதான் தேடுகிறாளோ..?

முழு நிலவின் கிரகணங்கள் மேலே படப்பட புதிய சிந்தை அவன் மனதை ஆக்ரமித்தது.. அவன் அகம் மலரத் துவங்கியது.

இவள் என்னை இல்யாவின் கல்லறையை நோக்கித்தான் திரும்பவும் அழைத்துப் போகிறாள். பொய்யள். இவள் சொன்னதெல்லாமே பொய்யே.

ஆனால் இவள் மீதான கோபத்துக்குப் பதிலாக மகிழ்ச்சி வெள்ளம் பெருகுகிறதே. எதையோ கண்டடைந்ததான சந்தோஷமும் மிகுகிறதே..

அவன் எண்ணம் போன்றே அவனருகில் ஒரு கூட்டத்தார் பச்சை ஒளியுடனான மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு ஒன்றுகூடினார்கள்..

தயாராகு ஆண்ட்ரே..ஓநாய் மனிதர்களின் தலைவரே இங்கு வருகை தந்து உன்னை எங்களோடு சேர்த்துக்கொள்ளவிருக்கிறார்...

அற்புதம்..
அற்புதம்..

பக்-13
யுடின் தான் ஏற்கனவே இல்யாவின் கல்லறையின் தலைமாட்டில் புதைத்திருந்த பொருளை எடுத்தாள். அது ஒரு பெல்ட்.

இந்த மாந்திரீக இடைக்கச்சையை இல்யா தன் ஆடைகளுக்குள் மறைவாக எப்போதும் அணிந்திருப்பான்.

இதனை அணிந்து கொள். இது இனி உனதே..

நீ இனி எம்மில் ஒருவனே.

கணப்பொழுதில் அது நடந்தேறிற்று.

அப்போது இருளின் மறைவிலிருந்து செர்காஸி பிரபு வெளிப்பட்டார்.

ஆம் ஆண்ட்ரே.. நம் முன்னோர்களின் சாத்தான் வழிபாடு இனி நம்மால் தொடரும்.. அனைவரையும் அடிபணிய வைப்போம்.. இம்முழு நிலவின் பூரணஒளியில்  நீதான் என் வாரிசென முழுவதுமாக உணர்ந்து கொள்வாய்.

யுடின்..என் ஓநாய்த்தோல் இடைக்கச்சையைக் கொடு..

#14
ஆண்ட்ரேயின் புது வாழ்வு துவங்கியது.

பொறுங்க வாசகர்களே.. இன்னும் கொஞ்சம் போவோம்.. ஒரு வாரம் போனதும் ஆண்ட்ரே தன்னோட வீட்டுக்குக் கடுதாசி போட்டிருந்தான்.

இதைக் கேளேன்.. ஆண்ட்ரே அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறானாம்.. இன்னும் கொஞ்சகாலம் தங்கிவிட்டு வருகிறானாம்..

அவன் அங்கே போனால்தான் நாம் நினைத்தபடி அனைத்தும் நடக்கும் என்றேனே..

என்னா கண்ணுகளா..அவங்க என்ன பேசிக்கிறாங்க புரிஞ்சதா..ஹீஹீஹீ...

முற்றும்.

_ஜானி


ஊரார் சொல் கேளேல்..

4 கருத்துகள்:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...