ஞாயிறு, 25 அக்டோபர், 2020

கொன்றே தீர்ப்பேன்..ஜானி

 மாடஸ்டி-கார்வினின் *கொன்றே தீர்ப்பேன்*



சைப்ரஸ் தீவு..உற்சாகக் கூக்குரல்களின் மத்தியில் வழக்கமான கொண்டாட்டத்தோடு கடற்கரையெங்கும் இளம் ஜோடிகளின் கிறக்கங்களும், முதும் ஜோடியரின் அசைபோடுதலும், சின்னஞ்சிறாரின் கேளிக்கைகளும்..களைகட்டிக் கொண்டிருக்கும் வேளையில்.. சைப்ரஸின் பிரதான செக்போஸ்ட்.. 

அந்த ஜீப் பேரிகார்டுகளைத் தாண்டி செக்போஸ்ட் அலுவலகத்தினையொட்டி சரேலெனப் புகுந்து நின்றது.. இறுகிய முகமும் விறைப்பான யூனிபார்மும் அணிந்ததொரு உருவம்.. கரங்களில் இருந்த துப்பாக்கிகள் செக்போஸ்டின் காவலர்களை தோட்டா மழையால் நனைத்தன.. வயர்லஸ் எச்சரிப்புக்கே இடமின்றி இரத்த சகதியில் சட்டென விண்ணுலகம் ஏகினார்கள் காவலர்கள்.. அந்த உருவம் ஜீப்பிலேறிப் பறக்கடித்தது.. இலக்கு சைப்ரஸ் கடற்கரை...

நோக்கம்..

மாடஸ்டியினை தேடிப்பிடித்து அழிப்பது.. 


இளவரசி...


இளவரசி...




ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த மாடஸ்டி 


ம்ம்...என்றாள்..


கொஞ்சம் கடலைத்தான் இரசியேன்..

நாம் இத்தனை போராடித் திரும்பியிருக்கிறோம்..


கொஞ்சம் மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு கொடேன்.. 

-இது கார்வின்.


இல்லை.. எகிப்திய கடல் கொள்ளையர்களை வீழ்த்தி பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமான சரக்குகளை மீட்டுக் கொடுத்தோம்.. நம் அதிரடியில் கடற் கொள்ளையர் நால்வர் மரணம்.. பதினாறு பேர் பலத்த அடியோடு எகிப்திய தேச சிறை மருத்துவமனையில் உள்ளனர்.. அவர்கள் வந்த போட்டை ராக்கெட் லாஞ்சரின் நான்கைந்து குண்டுகளால் துளைத்தெடுத்தோம்.. 

இருந்தும்..


இருந்தும்?



தலைவன் வின்சென்ட் தப்பிவிட்டானே..


அவனை மாத்திரம் வளைக்காமல் விட்டுவிட்டோமே.. அடிபட்ட பாம்பை அடித்தே கொல்ல முடியாமல் போனதுதான் என் வருத்தம் என்ற மாடஸ்டியை நோக்கி புன்முறுவலுடன் கார்வின்..

இல்லை. இப்போதும் அவன் நம்மைத் தேடிவரத் தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டோம்.. எகிப்திய கடற்காவலில் பணிபுரிந்த அவன் ஒற்றனை இனம் கண்டு வைத்திருந்தோமல்லவா.. அவன் மூலமாகவே  நாம் சைப்ரஸ் தீவின் பிரபல நிஸ்ஸி கடற்கரையின் வெண்மணற்பரப்பில் நீலநிற கண்ணாடிக் கடலில் கால் நனைத்தமர்ந்திருப்போமென அத்தனை துல்லியமாக அவனறியாமலேயே ஒட்டு கேட்க வாய்ப்பளித்திருந்தோமே.. வருவான்..நிச்சயம் வருவான்..


கடற்கரையருகே தோட்டாக்களை வானில் உமிழ்ந்தவாறே ஜீப்பொன்று பாறையில் ஏறி விண்ணில் பறந்து டைவ் அடித்து இறங்கியது.. 


கொண்டாட்டங்கள் திடுமென அங்கே ஓய்ந்துவிட சுனாமி வந்தாற்போன்று அலறியடித்துக்கொண்டு வாரிச் சுருட்டிக் கொண்டு மக்கள் ஓட்டம்பிடிக்கலாயினர்.. எதிர்த்தோரை துப்பாக்கியால் விலக்கிக் கொண்டே பாய்ந்து வந்தது ஜீப்..


சரியாக அந்த இலக்கில் இறங்கிய வின்சென்ட் கையிலிருந்த ஜிபிஎஸ் வாட்சை கவனிக்க இதே இடம்தான்..இதே இடம்தானென கைக்கடிகாரத்தின் வெளிச்சப்புள்ளிகள் அம்புக்குறியிட்டன..


அவன் நின்ற இடத்தில் ஒன்றுமேயில்லை.. காலால் மணலை எத்த..வெள்ளை மணல் அப்படியே விசிறிப் பறந்தது.. சில எத்தல்களில் மாடஸ்டியின் கைப்பை கையிலகப்பட...விலகிப்பதுங்கிய ஜனங்களை நோக்கி கூக்குரலாக ஏய் மாடஸ்டி.. எங்கே இருக்கிறாய்.. தைரியமிருந்தால் நேரில் வா..மோதிப்பார்த்து விடலாம்..என கொக்கரித்தவனின் கையின் துப்பாக்கி மறுநொடி எகிறியது.. எங்கிருந்தோ பறந்து வந்த கார்வினின் கத்தி உபயம்..

மாடஸ்டி பாறையொன்றில் கம்பீரமாக எகிறிக் குதித்து வர..

மோதல் துவங்கியது...


கடும் யுத்தத்தின் முடிவில் மாடஸ்டியின் 

அதிரடியில் வின்சென்ட் விண்ணுக்குப் பறந்தான்..



ஹேப்பி ஆயுத பூஜை நண்பர்களே...



அவ்ளோதான்..


 கட் பண்ணா..

சைப்ரஸ் அதிபர் விருந்து..

கங்ராட்ஸ் மாடஸ்டி அண்ட் ப்ளைஸி என் சிரித்தார் சைப்ரஸ் அதிபர் டெமிட்ரிஸ் சில்லோரிஸ்..

குட் வொர்க் மாடஸ்டி..

அவனை கொன்றிருக்க அவசியமுண்டா ?

 யெஸ்.. அவனை உயிரோடு பிடித்து எகிப்துக்குப் பார்சல் போட்டு..

அதைவிட இங்கேயே அவனைப் பிரியாணி போட்டதே சரி..


க்ளிங்..


கண்ணாடி டம்ளர்கள் உரசிக் கொண்டன..


🍾🍸🍽️🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳


ஆசிரியர் குறிப்பு:

டாக்டர் ஏ.கே.கே.ராஜா அவர்களது ஸ்பைடர் படை வாட்ஸ் அப் குழுவின் கேள்விக்கான விடையாக பிறந்ததே இந்த சின்னூண்டு கதை...

நன்றி தோழர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...