திரு.ராஜேஷ்ராமன்-சாய் பாலா அவர்களது சீரிய முயற்சியில், திரு.ரஞ்சித் இன்னொரு பாகத்தில் உங்களை சந்திக்க வருகிறார்கள் நிழல்களின் நூற்றாண்டின் பாத்திரங்கள்.. ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே...
ஆசிரியர் திரு.சரவணன் அவர்களின் விமர்சனம்..
🌓நிழல்களின் நூற்றாண்டு பாகம் 4️⃣🔥
ஜூன் 1767 இல் பிரான்சில் உள்ள ஜெ விடான் என்ற இடத்தில் கதை தொடங்குகிறது. அது ஒரு பயங்கரமான இரவு.அடர்ந்த காட்டில் பெண் ஒருவரை ஒரு பயங்கரமான விலங்கு தாக்க வருகிறது. ஆனால் அப்புறம்தான் உணருகிறது அவ் விலங்கு,அது தனக்கு வைத்த பொறி என. ஆனால் அதற்குள் அனைத்தும் முடிந்து விடுகிறது.காரணம் மிகப்பெரிய துப்பாக்கி ஒன்று வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அப்பெண் அவ் விலங்கின் இதயத்தை நோக்கி சரியாக சுட்டு விடுகிறாள்.அதேநேரம் அவ் விலங்கு வேட்டையர்கள் ஆல் சூழப்பட்டு, தாக்கப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பி செல்லும் அவ் விலங்கு, அவ்வழியே செல்லும் ஒரு வண்டியில் அடைக்கலம் அடைகிறது. அந்த வண்டியில் நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ள அபியு டி ராக்கு பெருனி இருக்கிறார். இங்குதான் அது விலங்கு அல்ல சாத்தானாக மாறியுள்ள மார்க்கஸ் டி அணிபர் பிரபு. அவருக்கு சைலீனா எவ்வளவோ சிகிச்சை செய்தும் காப்பாற்ற முடியாமல் இறந்து விடுகிறார். அதேநேரம் போப்பின் தூதுவர் அபி யூ டி ராக்கு பெருனியை சந்தித்து சாத்தானின் படத்தை காண்பித்து போப்பை உடனே சந்திக்குமாறு தூதுவன் தெரிவிக்கிறான்.
ஒரு மிக பயங்கரமான இரவில் லூசியானா என்ற இடத்தில் டோனெஷ்சா தன்னுடைய சூனிய சக்தி அனைத்தையும் பயன்படுத்தி சக்படா என்ற தெய்வத்திற்கு உயிர் பலி கொடுத்து சக்படா நேரில் தோன்ற பில்லிசூனியம் செய்கிறாள்.
அந்த பயங்கரமான இரவில் அவள் வீடு திரும்பும் பொழுது வெல்ட் மேன் என்றழைக்கப்படும் பிரபு டி ஹோல் பேக் கவலை தோய்ந்த மனதுடன் இவள் வருகைக்காக காத்திருக்கிறார். இவரின் கவலை என்ன என அந்த சூனியக்காரி கேட்கும்பொழுது சைலினாவிர்கு தன் மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும், அதை வைத்து அவள் தன்னை மிரட்டுவதாகவும், அவளுக்குத் தேவையான விண்கல்லை கொடுத்தால் மட்டுமே அவருடைய குழந்தையை ஒப்படைத்ததாகவும் இல்லையேல் சாத்தானிடம் குழந்தயை ஒப்படைப்பதாக மிரட்டுகிறாள் என கூறுகிறார்.
1768 ரொக்ப்ரூன் எஷ்டெட்.
மிகப் படுபயங்கரமான இரவு அது. இருள் சூழ்ந்த இடம் அது.666 ஆண்டு தண்டனை காலம் முடிந்து அந்த கொம்பு உடைய சாத்தான் வெளி வருகிறான்.
அதேநேரம் டோநெசா தனது பில்லி சூனியத்தின் மூலம் தனது இஷ்ட தெய்வமான சக்படாவை தனது பிரபுவின் மகளை தேடி கண்டுபிடிக்க ஏவுகிறாள்.
அதேநேரம் கொம்புடைய சாத்தானுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு வால்ட் மேனை கொலை செய்ய கிளம்புகிறாள்.
குழந்தையை தேடிச்சென்ற சக்படா ஆபத்தில் இருக்கும் பொழுது அவரை விடுவித்து வால்ட் மேனை வரவழைக்க முயற்சிக்கிறான் சாத்தான். அதேநேரம் தனது சூனிய சக்தியால் கொம்புடைய சாத்தானிடம் தொடர்பு கொள்கிறாள் சூனியக்காரி.அவளைத் தேடி வரும் ஹோல் பேக் அவளின் உயிரற்ற சடலத்தை பார்த்து அலறுகிறார்.
----------- 🧛🏻♀️🦸🏻♂️👹 ---------
இக்கதையை தேர்ந்தெடுத்து கடுமையாக மொழிபெயர்த்து நண்பர்களுக்கு அற்பணிக்கும் காமிக்ஸ் நண்பரான 👬🏻ஜானி அண்ணன் ❤️அவர்களின் முயற்சிக்கு மனமார்ந்த நன்றி.🙏
பின்குறிப்பு🧐
இக்கதை மக்களிடையே காணப்பட்ட மூட நம்பிக்கையையும், மதகுருமார்களின் ஆதிக்கத்தையும், ஆண்டவருக்கும் சாத்தானுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தையும், அறிவியலுக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே ஏற்பட்ட போட்டிகளையும் மிக அற்புதமாக வரலாற்றுப் பின்னணியுடன் நமது கண்முன் கொண்டு வருகிறது.😌
For pdf:
Link broken bro :(...
பதிலளிநீக்கு