வெள்ளி, 9 அக்டோபர், 2020

கார்வினின் கடந்த கால(ய)ங்கள்_ஜானி சின்னப்பன்

 வணக்கம் தோழர்களே..

மாடஸ்டி ப்ளைஸி - வில்லி கார்வின் ஜோடியின் அட்டகாசமான சாகஸங்களை வாசித்திருப்பீர்கள்.. ஒருவேளை கார்வினின் கடந்த கால காயங்கள் இப்படியானதாக இருந்திருக்கலாம் என்கிற ஒரு கற்பனையில் கதையை விவரிக்கிறேன்..

பீட்டர் ஓ டன்னலுக்கே புகழ்..

வனெஸ்ஸா கார்வின் -மார்ட்டின் கார்வினின் படுகொலைகள் நிகழ்ந்தபோது அனாதையாய் நின்ற சிறுவன் வில்லி கார்வினை விதி துரத்தத் துவங்கியது.. அவனுக்கோர் அடைக்கலமெனப் புகுந்தார் ரிச்சர்ட்.. பத்திரிக்கையொன்றின் ரிப்போர்ட்டர்.. அவரது அரவணைப்பில் சிறிது ஆசுவாசமான கார்வினின் விதி தொடர்ந்து துரத்தியது பத்திரிக்கையில் பிரபல கடத்தல் ஆசாமி ஜோஷ்வா தி க்ரூயலின்  அந்தரங்க டீல்களை தான் பணிபுரிந்து வந்த தி பிரேவ் ஜர்னலில் புனைப்பெயரில் எழுதிய ரிச்சர்ட்டை அடையாளம் கண்டு கொண்ட ஜோஷ்வா தனது காரில் கார்வினோடு பயணமாகிக் கொண்டிருந்த சமயம் குறுக்கிட்டு துப்பாக்கி குண்டுகளால் துளைத்தெடுக்கிறான் ஜோஷ்வா.. கார்வினையும் தன் இடத்துக்குக் கொண்டுபோய் போதைக்கடிமையாக்கி நாய் போல அலைக்கழித்து தனது போதைப்பொருள் கடத்தலில் பங்கேற்க வைக்கும் சமயம் தனது சாமர்த்தியத்தால் அவனிடமிருந்து தப்பி ஒட்டுமொத்த ஜோஷ்வா கும்பலை அழித்தொழிக்கும் கார்வின் தனது குற்றங்களுக்காக சிறையிலடைபட்டிருக்கும்போது அறிமுகமாகிறார் ஸ்னைப் டெப்.. அவருடன் சிறையிலிருந்து தப்பும் கார்வின் இரகசிய இடத்தில் கத்தி வீசும் கலையில் ஸ்னைப் டெப்டிடம் பயின்று தேர்ச்சியடைகிறான்.. அதுதவிர குத்துச்சண்டை போட்டிகளில் பந்தயத்துக்கு மோதுவதையும் வழக்கமாக்கிக் கொள்கிறான்...

திடீரென அவ்வப்போது எங்காவது தோன்றுவதும் அராஜகப்பேர்வழிகளை களையெடுப்பதுமாக இருக்கின்றனர் கார்வின்-ஸ்னைப் ஜோடி. இந்நிலையில் ஒரு மோதலில் ஸ்னைப் கொல்லப்பட, குத்துச்சண்டையில் தாறுமாறாக தன்னோடு மோதிய எதிரியின் சில்லைப் பெயர்ப்பதில் கவனமாக இருக்கும் ஒரு தருணத்தில் அதிரடி ரெய்டு நடத்தும் போலீசின் இரும்புக்கரங்களில் சிக்கி சிறையில் வாடும் கார்வினை சந்திக்கிறாள் நெட்வொர்க் இயக்கத் தலைவி மாடஸ்டி ப்ளைஸி.. அவனை மீட்டு தன்னுடைய அமைப்பில் இணைத்துக் கொள்கிறாள் மாடஸ்டி.. தன்னைக் காக்க வந்த ப்ளைஸியை இளவரசியாகவே மனதில் வரித்துக் கொள்கிறான் கார்வின்... கடுமையான பல சதித்திட்டங்களையெல்லாம் தாண்டி முன்னேறும் நெட்வொர்க் அமைப்பில் தனது விசுவாசமான செய்கைகளால் கார்வின் தொடர்ந்து மாடஸ்டியின் நன்னம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்கிறான்.. ஒரு கட்டத்தில் தனது நெட்வொர்க் அமைப்பினை கலைத்து அந்த அமைப்பிலிருந்த அனைவரையும் நல்ல விதத்தில் வாழ வகை செய்து விலக நினைக்கும் கட்டத்தில் அனாதை கார்வின் மாடஸ்டியின் துணையை மாத்திரமே நம்பி வாழ்கிறார்.. தொடர்கிறது அவர்களது சாகஸப் பயணம்..


இந்த கற்பனைக்கு எனக்கு ஊக்கமளித்த திரு.உதய், திரு.இரா.தி.முருகன், திரு.செல்வகுமார் ஆகியோரது ஸ்பைடர் படை வாட்ஸ் அப்


குழுவுக்கு என் நன்றியும் அன்பும்..


வாசகர் திரு.சந்திரமோகனின் கமெண்ட்..
👏👏👏👏💐💐💐💐நல்ல முயற்சி..! கதாபாத்திரங்களின் பெயர்களை நன்றாகவே தேர்வு செய்துள்ளீர்கள்.. நான் கார்வினின் கிளை கதையென ஏமாந்து போனேன்..😁🙏
தேங்க்யு சார்..


14 கருத்துகள்:

 1. Super Sir.... அடுத்தது என்ன.. என்கிற ஆவலுடன்... Waiting...

  பதிலளிநீக்கு
 2. கார்வினின்spin off மூலம்காமிக்ஸ் பயணத்தின் அடுத்த கட்டத்திற்க்கு சென்றுள்ளீர்கள். ஒவ்வொரு காமிக்ஸ் வாசகனும் அடையநினைக்கும் உயரம் இது. வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தோழர்...தங்களை மகிழ்விக்க என்னாலான முயற்சிகளை தொடர்கிறேன்..

   நீக்கு
 3. உண்மையில் இப்படி இருக்கலாமோ என நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
 4. ஜானி சார் உங்கள் பணி இனி வாசகராகமட்டும் இல்லாமல் ஒரு எழுத்தாளராகவும் தொடர ட்டும். வாழ்த்துக்கள் கரூர் ராஜ சேகரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தோழரே.. தங்கள் சேவையில் என்றும்தொடர்வேன்..

   நீக்கு

031_காத்திருக்கும் உலகம்_இயேசு கிறிஸ்து_விவிலிய சித்திரக்கதை வரிசை

 அன்பு நண்பர்களே, இன்று எங்கள் திருமண வாழ்வின் 17 ஆண்டுகள் நிறைவு தினம். வாழ்க்கையின் எத்தனை சோதனைகளையும் வென்றெடுக்க துணை ஒன்று வாழ்வில் இர...