ஞாயிறு, 16 மே, 2021

ஏகாந்தத்துடன் ஓர் ஏக்கம்_ஜானி சின்னப்பன்

 

சிந்தை  மயங்கும் 

மாலைப் பொழுதுகள் 

உன் வரவையெண்ணி தவங்கிடக்கிறது.. 

என்னை நீ கடந்து போகும் 

ஒவ்வொரு வினாடியும் 

உன் இருத்தலின் அதிர்வுகள் குத்தூசியாய் இதயத்தில் 

உருவாக்கும் மின்னதிர்வுகளைப் பற்றி உனக்கெப்படித் தெரியும்.. 

தொலைவில் சூரியன் 

இந்த கண்ணுக்கெட்டா பறிமாற்றத்தை  கீற்றாய்ப் 

பாயும் தன் மெல்லிய 

ஒளியலைகளில் 

அளவெடுத்து நகைக்கிறது.. 

கடந்து சென்ற 

உன் காலடியின் 

ஓசை தேய்வில் 

உயிரே தேய்வதாய் 

உருக்கொள்ளும் பிரமையை உண்மையோவென 

யோசிக்கிறேன்.. 

ஏகாந்த வெளியின் 

தென்றல் வருடலாய் 

மாறிப்போன உன் 

இருப்பின்மையின் 

சூன்யத்துடன்.. 

_ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தருகிறேன் எனை நான்!_ஜானி சின்னப்பன்

  பறந்திட சிறகுகள் தருகிறேன்.. அறிந்ததை சொல்வாயா கிளியே? விரிந்திட வானைத் தருகிறேன்.. தெரிந்ததை சொல்வாயா மேகமே? சலசலக்க இலைகள் தருகிறேன...