சனி, 4 அக்டோபர், 2025

ஓ என் அன்பே _ விசித்திரமான திருமணங்கள்_ துணுக்கு செய்தி

கவுண்டஸாக மாறிய கசாப்புக் கடைக்காரரின் மகள்



க்ளோசெஸ்டரில் ஒரு பிரபலமான கசாப்புக் கடைக்காரரின் அழகான மகள் மேரி கோல், தனது அசாதாரண அழகால் எப்போதும் எதிர் பாலினத்தின் கவனத்தை ஈர்த்து வந்தார். ஒரு நாள், தெருவில் நடந்து செல்லும்போது, ​​குதிரையில் அமர்ந்திருந்த ஒரு இளம் அதிகாரி அவளை வெளிப்படையான ஆர்வத்துடன் பார்த்தார்.

அவர்  பெர்க்லியின் பிரபு, அவளுடைய அழகில் அவர் மிகவும் மயங்கி, அவளை அறிமுகப்படுத்திக் கொள்ள  ஆர்வமாக இருந்தார். மேரி அழகாக இருப்பது மட்டுமல்லாமல், புத்திசாலி மற்றும் திறமையானவள் என்பதை அவர் விரைவில் உணர்ந்தார். அவர்கள் ஆழமாக காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஒரு குறுகிய காதல் உறவுக்குப் பிறகு, ஏர்ல் மற்றும் மேரி ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், பிரபுக்கள் சபை இந்த திருமணத்தை அங்கீகரிக்கவில்லை, மேலும் சட்டத்திற்கு இணங்க அவர்கள் பகிரங்கமாக மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர், மேலும் ஒரு கசாப்புக் கடைக்காரரின் மகள் ஒரு கவுண்டஸ் மற்றும் பெரிய எஸ்டேட்டுகளின் எஜமானி ஆனாள்.

வியாழன், 2 அக்டோபர், 2025

வினோத கொலையாளி_இன்ஸ்பெக்டர் கருடா_தொடர்..003

 

வணக்கங்கள் வாசகர்களே..  இது வினோத கொலையாளி.. பறவைகளால் தாக்குண்ட டாக்டர் படேல் மனைவி கடத்தப்படுகிறார். அவரைக் கண்டுபிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் கருடாவுடன் ஒரு கிராமத்துக்கு செல்கின்றனர் கருடா குழுவினர். அங்கே.. 
அந்த கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை அடையாளம் காண்கின்றனர்.. 

லீலாவைக் காதலித்தவனே அவளைக் கடத்தியவன் என்பது தெரியவருகிறது.. அவளை மறந்து விடு என்று அச்சுறுத்துகிறான் அந்த கயவன்.. மறுக்கும் கருடா குழு சிறைப்படுகின்றனர். தொடரும்.. 

ஏஜெண்ட் கெஸ்ட்ரல் மற்றும் க்ரோனோ கிரிஸ்டல்

 வணக்கம் நட்பூஸ்... 

பிடிஎப் வடிவில் தரவிறக்கி வாசியுங்கள்.. 

https://www.mediafire.com/file/mv3hvrb5zts7jqw/ஏஜென்ட்+கெஸ்ட்ரல்+மற்றும்+க்ரோனோ+க்ரிஸ்டல்.pdf/file

ஏஜெண்ட் வீரன் _ ஏ.ஐ. மூலமாக உருவாக்கிய கதை.

 






மேலும் வாசிக்க பிடிஎப் ஆக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.. 

https://www.mediafire.com/file/i192cxfuu7calci/ஏஜென்ட்+வீரன்.pdf/file





வகம் காமிக்ஸ் தீபாவளி மலர் தகவல்

 







வரும் தீபாவளிக்கு நிக் ரைடரின் மூன்று கதைகள் (ஹாட் கேஸில்) வெளிவர உள்ளது. சென்ற வருடம் த்ரில்லர் தீபாவளி ஸ்பெஷலில் மூன்று வெவ்வெறு கதைகளை வெளியிட்டிருந்தோம். அதே போல் வெளியிட கம்பெனி நிர்வாகம் ஒத்துக்கொள்ளளாததால், இந்த வருடம் நிக் ரைடர் கதைகளையே மூன்று கதைகளாக (ஒரே இதழில்) வெளியிட உள்ளோம். 


முதல் கதை ( சைனா டவுன்)

இது நிக் ரைடரின் ஆரம்பகால கதை. சைனா டவுனின் முதல் ஆக்ஷன், த்ரில்லர் கதை.


இரண்டாவது கதை ( நார்த்போர்ட் மர்மம்)


ஆறாத வடுக்கள் கதையோடு ஒரு சிறு கருவை எடுத்துக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியுள்ளார், இதன் கதாசிரியர். நார்த்போர்ட்டிலிருந்து வரும் ஒரு கடிதத்தை எடுத்து கொண்டு, நார்த்போர்ட் செல்கிறார். அங்கே நடைபெறும் மர்மத்தை துப்புதுலக்குகிறார், நிக் ரைடர்.


மூன்றாவது கதை ( காகிதக் கொலைகள்)

ஒரு உணவகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை அதன் பிண்ணனி என்பதை நிக் ரைடர் & மார்வின் துப்பறியும் கதை


இம்மூன்று கதைகளும் வரும் தீபாவளி இதழில் வெளிவர உள்ளது.


இதன் விலை 500/-

முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் கூரியர் இலவசம்.


இதோடு திரு. ஆசிரியர் வல்லிக்கண்ணன் எழுதிய ஊர்வலம் போன பெரியமனுஷி சிறுவர் சிறுகதையும், 50/- ரூபாய் விலையில் வெளிவரவுள்ளது. இதனுடன் ஈரோடு கார்த்திக் எழுதிய ரகசியத் தீவு சரித்திர நாவலும் வெளிவரவுள்ளது.

தேவையுள்ளவர்கள் 9894692768 Gpay எண்ணிற்கு பணம் அனுப்பிவிட்டு அதே எண்ணிற்கு முகவரியை தெரிவித்தால், புத்தகங்களை அனுப்பி வைக்கப்படும். நன்றி


புதன், 1 அக்டோபர், 2025

காவல் காமிக்ஸ்..உண்மையான காவல் துறை வழக்குகள்.._அறிமுகம் ௦௦1

 ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் நட்பூஸ்.. தங்கள் பணி தொடர்புடைய ஆயுதங்கள், நூல்கள், கணக்குப் புத்தகங்கள், பயன்படுத்தும் வாகனங்களை இறைவனின் ஆசீர் வேண்டி பூஜையில் வைத்து எடுத்துக் கொண்டாடுவதே ஆயுத பூஜை.. என்ஜாய்.. நமக்குத் தெரிந்ததெல்லாம் மொழிபெயர்ப்பும் புதுக்கதைகளை அறிமுகம் செய்வதும் மாத்திரமே.. எனவே சிறு மொழிபெயர்ப்பினைத் துவக்கி வைக்கிறேன்.. தொடரும்.. 


சனி, 27 செப்டம்பர், 2025

ஆயிரம் தலை கேட்கும் அதிசய மாயாவி-திரு.K.V.கணேஷ் பிறந்த தின ஸ்பெஷல்

 அன்பிற்கினிய நண்பர் திரு.கேவிஜி என்று அழைக்கப்படும் kv.கணேஷ் அவர்களது பிறந்ததினம் இன்று.. சென்னையை மையமாகக் கொண்டு தன் வாழ்வில் பல சாதனைகளை செய்து வரும் அண்ணன் கேவிஜி இன்னும் பல சிறப்பான நிகழ்வுகளையும் மகிழ்ச்சியான தருணங்களையும் வாழ்வில் நிறைவாக அடைய இறைவனை வேண்டுவோம்.. 


மொழிபெயர்ப்பாளர், சக வாசகர், நண்பர் திரு.kv.கணேஷ். 

இனிய இந்த நிகழ்வைக் கொண்டாடி மகிழ நம் வாசகர் வட்டத்துக்கும் அவருக்கும் சிறு அன்பளிப்பாக என்னால் இயன்ற சிறுவர் நாவல் ஒன்றைப் பகிர்கிறேன்.. 
ஆயிரம் தலை கேட்கும் அதிசய மாயாவி.. 1982ம் ஆண்டில் ரூ.1.25 (ஒரு ரூபாய் மற்றும் நாலணா என்போம்) விலையில் வசந்தி பப்ளிகேஷன் சார்பில் 29வது வெளியீடாக மலர்ந்து பின்னர் ஒரு காலத்தில் நம் அன்புக்குரிய நண்பர்களால் தேடிப்பிடித்து விலைக்கு வாங்கப்பட்டு அதனை ஸ்கேன் வடிவில் மாற்றி தேடலில் ஈடுபட்டுவரும் சக வாசகரான என்னுடன் பகிரப்பட்ட அபூர்வமான புத்தகம் இது. நண்பர்கள் டெக்ஸ் சம்பத், ரஞ்சித் இருவரையும் இவ்விடம் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.. 

           இந்த நூலை அந்த கால புத்தக நிறத்திலேயே வடிவம் மாற்றாமல் கொடுத்திருக்கிறேன். வாசித்து இன்புறுங்கள்.. அவசியம் எனில் வெண்மையாக்கி விடலாம். ஆனால் எழுத்துக்கள் அந்த வெண்மையில் அடிபட்டு விடும் என்பதாலும் வாசிக்க ஏதுவான நிறத்தில் இருப்பதாலும் மாற்றமின்றி பகிர்ந்துள்ளேன். என்ஜாய்... 







ஆரவல்லி, சந்திரகுமார், குரங்கு மாயாவி என்று நிறைய நபர்களை சந்திக்கவிருக்கிறீர்கள். துடிப்பான கதை இது.. ஒரு ஓரமாக தரவிறக்கி வைத்து விட்டு கடமை முடிந்தது என்று மட்டும் இருந்து விடாதீர்கள் என்பது என் அன்பு வேண்டுகோள்..  
அதிகாலையில் அதிர்ச்சி
குறிகார கிழவி 
மாலை மறைந்தது 
ஆரவல்லியின் முடிவு 
பாலைவன மாளிகை.. 
இவை எல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? புத்தகத்தில் இருக்கிறது நட்பூஸ்.. சென்று வாசித்து மகிழ அழைக்கிறேன்.. கம்மான்.. 
தரவிறக்க சுட்டி..
https://www.mediafire.com/file/serxlc8l1bpxs6h/Ayiram_Thalai_ketkum_athisaya_Mayavi_VP_publications_KVG_Birthday_gift.pdf/file


வினோத கொலையாளி_இன்ஸ்பெக்டர் கருடா_தொடர்..002

வணக்கங்கள் வாசக உள்ளங்களே.. 


ராணிகாமிக்ஸில் வேதாளர் தோன்றும் விசித்திரப் பறவைகள் டிசம்பர் மாதம் 16-31, 1990 இதழாக மலர்ந்த 156வது இதழ்தான் விசித்திரப்பறவைகள்.. பறவைகளை வைத்து கடத்தலில் ஈடுபடும் ஒரு விசித்திர மனிதன் மற்றும் அவனது நோக்கம்தான் கதை.. அதனைக் கண்டுபிடிக்க மாயாவியாரே பறவைகளால் கடத்தப்படுவதை விரும்பி மஞ்சள் கோட் அணிந்து செல்கிறார்.. கடத்தல் காரனின் நோக்கத்தையும் கண்டுபிடிக்கிறார். அந்த கதையை இங்கே குறிப்பிடக் காரணம் உள்ளது.. இன்ஸ்பெக்டர் கருடாவிடம் என்னை ஒரு காக்கை உளவு பார்க்கிறது என்று ஒருவர் புகாருடன் சந்திக்கிறார்.. வெகு எளிதாக தட்டிக் கழித்து விடும் சமாச்சாரமாக தோன்றினாலும் அந்த புகாருக்கு மதிப்பளித்து கருடா விசாரணையைத் துவக்குகிறார்.. அதுதான் இந்த வினோத கொலையாளி.. தொடர்கிறது.. 


முதல் பேனலில் காண வருமுன் என்று திருத்தி வாசிக்கவும்..
வீட்டில் மனைவி லீலாவைக் காணோம் என்று மருத்துவர் திகைக்கையில் ஒரு மகிழுந்து அவர்கள் கவனத்தை ஈர்த்தவாறே அங்கிருந்து வேகமாக புறப்பட்டு செல்கிறது. 
மூக்கை சுற்றிக் கூறினாலும் நண்பன்தான் டாக்டர்.. 
இதில் வேறு லிமிட்டுக்குள் காவல் ஆய்வாளர் சென்று கொண்டிருக்கிறார்.. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்... தொடர்வோமா... 
என்றென்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி.. 


 

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

வினோத கொலையாளி_இன்ஸ்பெக்டர் கருடா_தொடர்..001

 வணக்கங்கள் அன்பு வாசக நட்பூக்களே.. 

         பல்வேறு பணிகளுக்கிடையில் அரியதொரு புத்தகத்தின் அபூர்வமான தொடர் ஒன்றை வாசித்து மகிழ சிறிது நேரம் கிடைத்தது.. அந்த தொடர்தான் விநோதக் கொலையாளி.. முத்து காமிக்ஸ் வாரமலரில் அருமையாக வெளியிடப்பட்டு பின்னர் முழுமையும் இணையத்தில் கிடைத்தாலும் கூட இன்றுதான் இந்தக் கதையை வாசித்து மகிழ்ந்தேன்.. தொடர்ந்து உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் சிறு ஆசை... ஏற்கனவே நூல் வடிவிலும், இணையத்திலும் வாசித்து விட்ட நண்பர்கள் ஸ்கிப் செய்து விடலாம்.. புதிய வாசகர்களை எப்படியேனும் சித்திரங்கள் பக்கம் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்கிற காரணத்துக்காக அவ்வப்போது என் வலைப்பூவில் கொண்டு வந்து மணம் வீசச் செய்வது என் வாடிக்கை..யாராயினும் ஏதேனும் வருத்தங்கள் அடைந்தால் ஜஸ்ட் ஒரு செய்தி அனுப்பினால் உடனே பதிவை நீக்கி விடுவேன். ஆகவே நம் நட்பை முன்னிட்டு இந்த தொடரை வாசிக்க மட்டும் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.. புதிதாக வாசிப்பவர்கள் மட்டும் தங்கள் கமெண்ட்ஸ் அனுப்புங்கள்.. நன்றி. 

ஒரு காக்கைக்கா மருத்துவர் அலறுகிறார் என்றால் நீங்கள் இன்னும் காக்கையிடம் வம்பிழுத்ததில்லை என்று அர்த்தம்..அதன் கூடு இருக்கும் திசையில் சென்றதில்லை என்று அர்த்தம்..அதன் முட்டை என்ன வண்ணத்தில் இருக்கும் என்று ஆராய மரத்தின் மீதேறி அதன் கூட்டை எட்டிப் பார்க்கவில்லை என்று அர்த்தம்.. சும்மாவேனும் கல்லைத் தூக்கி அதன் மீது எரியவில்லை என்று அர்த்தம்.. இவை அனைத்தையும் செய்து காக்கை உங்கள் தலையில் வந்து ஒரு கொத்து விட்டிருந்தால் வாருங்கள் வாசக நெஞ்சமே.. நீங்க நம்மாளு.... 
ராணி காமிக்ஸில் வெளியாகி மிரட்டிய கதை ஒன்று இருக்கிறது..விசித்திரப் பறவைகள்.. நினைவிருக்கிறதா? கமெண்டில் பதிவிடலாம்.. நன்றி.. 



ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

RC 001 அழகியை தேடி... 007 சாகசம் -சிறு விமர்சனம்

 அழகியை தேடி.. 007 ராணி காமிக்ஸ்சில்  வந்த முதல் ஜேம்ஸ்பாண்ட் கதை.

 கதையின் பெரும் பகுதி  ஐவரி கோஸ்ட் எனப்படும் கானா நாட்டில்தான் நடைபெறுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தின் ஜனாதிபதிகள் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கும் ஒரு கும்பல் ஸ்மெரிஷ் அமைப்புடன் இணைந்து சிற்பி ஒருவர் வடிவமைக்கும் சிலையின் அடியில் வெடிகுண்டு ஒன்றை பொருத்துகின்றனர். அதனை விழா நடக்கும்போது அதிபரிடம் தருவதுதான் இலக்கு. வெடிகுண்டு வெடித்தால் அதிபர் சாவார் நாட்டை புரட்சியாளர்கள் மூலம் பிடித்து விடலாம் என்பது அவர்களுடைய எண்ணம் அதனை முறியடிக்க முதலில் ஒரு அழகியை தேடிப் போகிறார் ஜேம்ஸ் பாண்ட். அந்த அழகியை மடக்கி   தங்கள் கட்டுக்குப்பாட்டுக்குள் கொண்டுவர ஜேம்ஸ் பாண்ட் உடன் இணைத்து சில புகைப்படங்களை எடுத்து விடுகிறார்கள் அந்த புகைப்படங்களை வைத்து அவளை மிரட்டி அவளுடைய காதலன் ரூபி என்பவரை மடக்கிறார்கள் அவர்தான் நீக்ரோ புரட்சிக்காரர்களின் மூளை. இந்த அழகை வைத்து ரூபின் மூவ்களை அறிந்து கொள்ளும் ஜேம்ஸ் பாண்ட். சம்பவத்தின்  நூல் பிடித்து சென்று சேரும் இடம் தான் கானா நாட்டின் தலைநகரான அக்கரா. (தற்போது என் மைத்துனர் அங்கே பணி புரிந்து வருவதால் எனக்கு இந்த கதை ரொம்பவே ஸ்பெஷல் ) அக்ராவில் உள்ள சிற்பியின் மகளான நீக்ரோ மாடலிங் அழகி ஒருத்தியை தன்னுடன்  அழைத்துக்கொண்டு அக்கரா சென்றடைகிறார். சிலை மர்மம் அறிந்து வெடி குண்டினை செயலிழக்க வைக்கிறார். மிஸ்டர்.ரூபியை இரும்புக் குழம்பை மேலே ஊற்றி அழிக்கிறார்.  குர்த் உட்பட சில பாத்திரங்கள் ஜேம்ஸ்சுடன் மோதி மண்ணைக் கவ்வுகிறார்கள்

சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள். வாயில் பாட்டிலை ஊற்றி குடித்து விட்டுத் தூங்குவது போல ஒருவனை செட் அப் செய்து விட்டுப் போகிறார் ஜேம்ஸ். 🤣. அவருடன் மோதும் குண்டு மங்கை ஒரு அதிரடிப் பெண் என்றாலும் தப்பானவர்கள் பக்கம் இருந்து தோற்றுப் போகிறார்.. இந்த கதையில் மதிலைத் தாண்டும் வாக்கிங் ஸ்டிக் கருவி ஒரு ஸ்பெஷல் கேட்ஜெட். பிஸ்டல்கள் அதிகம் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன.. இந்த புத்தகம் குறித்த கூடுதல் தகவல்கள் அல்லது தங்கள் அனுபவங்களை அல்லது வேறு தளத்தில் இந்த கதை குறித்து இதுவரை வெளியாகியுள்ள செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால் தாராளமாக பகிரலாம். நன்றி.

தொடர்புடைய இடுகை 

1. https://johny-johnsimon.blogspot.com/2019/11/rc-001-007.html

குழப்பத்தின் விளிம்பில் ஓர் உலகம்_glenat பதிப்பகம்

வணக்கங்கள் அன்புள்ளங்களே.. இன்று அறிமுகம் ஒரு கதை.. அரக்கர்களின் வீழ்ச்சி என்று பொருள்படும் இந்த கதையின் முதல் பாகம் இது.. இதன் பிரெஞ்சு வெர...