வியாழன், 5 நவம்பர், 2020

தேடி வந்த ஆவி_நிமிடக்கதை_ஜானி சின்னப்பன்

 



கார் காத்திருந்தது.. 

அந்த பிரபல வங்கியின் நேர்மையான மேனேஜர் மிருகபூபதி காரில் ஏற கார் சட்டென வேகமெடுத்தது.. 

ஊட்டி..

சந்து பொந்துகளில்புகுந்து மலைப்பாதையில் கீழிறங்கிக் கொண்டிருந்த கார் ஒரு திருப்பத்தில் வேகமிழந்து நிற்க..

ட்ரைவர் சிம்மானந்த் தன் இருக்கையிலிருந்து கீழிறங்கி பானட்டைத் திறந்து ஆராயத் தொடங்கினான்.. 

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மிருகபூபதி காரை விட்டிறங்கி ட்ரைவரை கடிந்து கொண்டே ஒரு போனை எடுத்துக்கொண்டு சரிவுப்பாதையில் இறங்கத் துவங்கினார்.. பத்து..இருபது.. முப்பது..நாற்பது..ஐம்பது..

சிம்மானந்த் சுற்றிலும் நோக்க ஆளரவமேயில்லை.. நழுவலாக பானட்டை மூடிவிட்டு காரைக் கிளப்பி சரிவின் வேகத்தோடு அசுரப்பாய்ச்சலாக பாய்ந்து கீழிறங்கிக் கொண்டிருந்த மிருகபூபதியை மலைச்சரிவில் மோதித்தள்ளினான்.. காற்றிலெழும்பி எங்கோ போய் முட்டி மோதி சிதறியது அவரது உடல்..


வங்கி பணத்தில் கையாடல்  செய்திருந்தவனை ஆதாரத்தோடு பிடிக்க அவர் ஏற்பாடு செய்து கொண்டிருந்த தகவலை கேள்விப்பட்டிருந்தவன் அதற்குமுன் தானே முந்திக் கொண்டு விபத்தில் பலியாகியதுபோன்று சூழலை உருவாக்கிவிட்டிருந்தான்..

வங்கி மேனேஜரை காரை ஏற்றிக் கொன்ற  அன்றிரவே சிம்மானந்த் போய்க்கொண்டிருந்த காரின் குறுக்கே திடுமென நடு ரோட்டில் தோன்றிய உருவத்தைக் கண்டு அஞ்சி ப்ரேக்கை மிதித்தான்.. அது அவனது மேனேஜர் மிருகபூபதி போலவே இருந்தது.. வெள்ளை அங்கியில் எங்கோ பார்த்துக்கொண்டு நின்ற உருவம் நெருங்கி வர.. கடைவாயில் தென்பட்ட இரத்தக் கோடு நான் ஆவியாக்கும் என்பதாய்  கிலியூட்ட காரை விட்டிறங்கி ஓடியவனை ஹக்..ஹக்..ஹக்.. செவிக்கருகே துரத்திய கிசுகிசுப்பில் கலவரமடைந்து கண்தெரியாமல் அந்த இருட்டில் காலை வைக்க படுபாதாளம் அவனை அப்படியே உள்வாங்கிக் கொள்ள எங்கோ தட்....

சிம்மானந்தின் சேப்டர் ஓவர்..

இரத்த சகதியோடு பாறையொன்று பார்வைக்கு தென்பட சிம்மானந்தின் சிதறுண்ட உடலை நோக்கிக் கொண்டே கடைவாய் இரத்தத்தை துடைத்துக்கொண்டு என் அண்ணன் சாவுக்கு சீக்கிரமே பழிவாங்கிவிட்டேன் என மேனேஜரின் ட்வின் ப்ரதர் வராக செழியன் அங்கிருந்து நகர்ந்தார்... கேம் ஓவர்..👹

ஞாயிறு, 1 நவம்பர், 2020

யகாரியும் அதிசய கழுகும்



*யகாரியும் அதிசய கழுகும்*

*சரவெடி பட்டாஸாய் படபடக்கும் கலக்கல் காமெடி மொழிமாற்ற படக்கதை pdf*

இந்த காமிக்ஸ் பற்றிய நண்பர் திரு . கிரிதரனின் விமர்சனமே இங்கு அறிமுக உரையாக

நண்பர்களே, 100 அலிபாபாவும் 4000 திருடர்களும் காமிக்ஸ் மாதிரி அட்டகாசமான செம்ம ஜாலியான ஒரு காமிக்ஸ் படிக்க வேண்டுமா? கண்டிப்பாக இந்த அற்புதமான, யகாரியும் அதிசய கழுகும் காமிக்ஸ் படிக்கலாம். ஒவ்வொரு வரிக்கும் சிரித்துக் கொண்டே ஜாலியாக அனுபவிக்கலாம்.

    குட்டி பையன் யகாரியின் ஜாலியான சாகச அட்வென்சர் தான் கதைக்களம்.அவன் சந்திக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் விதவிதமானவை. சக்திமிக்க அதிசய கழுகு, குட்டி புயல் குதிரை, கடுப்பாகி கலாய்க்கும் வாத்து இதற்கு நடுவே சிங்கம், நரி, கரடி என அனைத்தும் உண்டு.

   அலிபாபா கதை போலவே இந்த கதையின் ஹீரோவும் அட்டகாசமாக, நம்மை வெடித்து சிரிக்க வைக்கும் வசனங்களை எழுதியிருக்கும் நம் திரு.அலெக்சாண்டர் வாஸ் sir தான். ஒவ்வொரு வசனமும் டாப் தான்.

   "மனுஷனுக்கு பொறந்த எருமையா இருப்பானோ, டிரஸ்ஸ கூட கலட்டாம தண்ணில குதிக்குறானே பேமானி", "முகத்த விட மூக்கு பெரிசா இருக்கு", " பனங்குருத்து கூலும் ஜெல்லி மீன் கருவாடும் பரிசாம்", " யாருடா அந்த இறகு முளச்ச எருமமாடு" , " கிள்ளுறதுக்கு சதை இல்லாதவனெல்லாம் துள்ளுற குதிரையை அடக்கப் பாக்குறான்", "பனம்பழத்தை கரடி நக்குன மாதிரி... எவன்டா அது", என்று ஒவ்வொரு வசனமும் அட்டகாசம்.

    கடைசியா ஒரு கவிதை... "வீணாக சுத்துன நீ காணாம போனது சோதனை! ஆள்விழுங்கி  மலையில அனாதையா மாட்டுனது வேதனை!! ஆனால் இப்போ குட்டிபுயல் குதிரையும் கூடவே கூட்டிட்டு வந்திருக்க பாத்தியா.. இது சாதனைய்யா!!!" இன்னும் இந்த மாதிரி கதைகளை நிறைய எதிர்பார்க்கிறோம் Sir..

   படித்து பாருங்கள் நண்பர்களே, இந்த குட்டி புயலையும் குட்டி பயலையும் எப்போதுமே மறக்க மாட்டீர்கள்.

.... இது போதுமே டவுண்லோட் செய்யுங்கள் .. படித்து மகிழுங்கள் .. கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவிடுங்கள்

https://bit.ly/3jICPqH

*யகாரியும் அதிசய கழுகும்*

*சரவெடி பட்டாஸாய் படபடக்கும் கலக்கல் காமெடி மொழிமாற்ற படக்கதை pdf*



சுறாக்கடல் மந்திரவாதி

 


சிறுவர் இலக்கிய வரிசை
*தங்கராஜாவின் சுறாக்கடல் மந்திரவாதி*

https://bit.ly/3oN5dvw

👱👴👵👶


நடுநிசிக் கொலை_பி.கே.மூர்த்தி_காமிக்ஸ் பிடிஎப் டைம்ஸ்.

 


நடுநிசிக் கொலை- பி.கே.மூர்த்தியின் துப்பறியும் மர்மக்கதை.

https://bit.ly/3kMrsPV

👿👽👿👽


ராண்டார்கையின் கேஸ் புக்


 *ராண்டாகையின் கேஸ்புக்*


அந்த காலத்தில் நடைபெற்ற குற்றங்களையும், அவற்றின் பின்னணியைப் பற்றியும் ஆராய்ந்து மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார். ஓவியர் ஸ்யாம் சங்கரின் ஓவியங்களும், அனைத்து அத்தியாயங்களை மெருகூட்டுகின்றன. அதில், தமிழ் நாட்டை உலுக்கிய லட்சுமி காந்தன் கொலை வழக்கைப் பற்றி கடைசி அத்தியாயத்தில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்த வழக்கு மூலம் ‘சூப்பர் ஸ்டார்’ தியாகராஜ பாகவதர் வீழ்ந்த கதை நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது.


லட்சுமி காந்தனுக்கு பள்ளிப்படிப்பு முடித்ததும் சட்டம் படித்து வக்கீலாகவேண்டும் என்கிற கனவு இருந்திருக்கிறது. வீட்டின் பொருளாதாரச் சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை. என்றாலும், தானே சட்டப்புத்தகங்களை வாங்கிப் படித்து அதன் நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறான். பொதுமக்களுக்கு உயில் எழுதுவது, அடமானப் பத்திரம் எழுதுவது, போர்ஜரி கையெழுத்து போடுவது போன்ற பல வேலைகளைச் செய்து மக்களையும், வக்கீலையும் இணைக்கும் சட்டத்தரகர் வேலையும் செய்திருக்கிறான். அவன் அகராதியில் நியாயம், தர்மம் என்கிற வார்த்தைகளுக்கு இடம் இருந்ததாகத் தெரியவில்லை. யாருக்கும், எதற்காகவும் பயந்த மாதிரியான சுபாவமும் கிடையாது.  பிறரை ஏமாற்றுவது, பித்தலாட்டம் செய்வது, பணம் பறிப்பது இவைதான் முக்கியத் தொழிலாக இருந்து வந்திருக்கிறது.


வழக்கில் இருந்த ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையை வாங்குவது சம்பந்தமாக, அவன் தாக்கல் செய்த பிராமாணப் பத்திரத்தில் வேறொருவர் கையெழுத்தை அவன் போர்ஜரி செய்து போட்டிருந்ததைக் கிரிமினல் செஷன்ஸ் நீதிபதி கண்டு பிடித்தார். அவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு ராஜமுந்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். ரயிலில் போகும் வழியில், போலீஸ்காரர்கள் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் நேரம், சினிமாவில் வரும் சம்பவத்தைப் போல கையில் விலங்குடன் கிருஷ்ணா ஆற்றில் குதித்து தப்பியிருக்கிறான். அதன் பிறகு பலத்த முயற்சிகளுக்கு இடையே அவனைத் தேடிப் பிடித்து அந்தமான் தீவில் இருக்கும் ஜெயிலில் கொண்டு போய் அடைத்தார்கள்.


இரண்டாம் உலகப் போரின் காரணமாக கைதிகள் எல்லாம் விடுவிக்கப்பட்டனர். சுதந்திரப் பறவையான லட்சுமி காந்தன், 1943 ல் ‘சினிமா தூது’ என்னும் பத்திரிக்கையை நடத்தினான். அதில் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி எழுதியன் மூலமாக அவர்களைப் ப்ளாக் மெயில் செய்து மூட்டை, மூட்டையாகப் பணம் சம்பாதித்தான். அவனது அட்டூழிங்களைப் பொறுக்க இயலாத தியாகராஜா பாகவதர், அந்தப் பத்திரிக்கையின் லைசென்ஸை ரத்து செய்யக் கோரி டில்லி மத்திய அரசுக்கு அப்பீல் செய்தார், ஆனால், லட்சுமி காந்தனே டில்லிக்கு சென்று அரசாங்கத்தின் போலி லட்டர் பேடைத் தானே அச்சடித்து, போர்ஜரி செய்து பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்தினான். சீக்கிரமே குட்டு வெளிப்பட்டு விடவே, தன் வன மாலி பிரஸ்ஸை ஆட்களை வைத்து அடித்து நொறுக்கி எதிரிகள் செய்து விட்டார்கள் என்று பழி போட்டு, பொதுமக்களிடம் இரக்கத்தைச் சம்பாரித்தான்.


இந்த நேரம், ‘இந்து நேசன்’ பத்திரிக்கையை தகிடு தத்தம் செய்து வாங்கி நடத்த ஆரம்பித்தான். அதில் தியாகராஜ பாகவதருக்கு என்று வாரா வாரம் சீரியலையே துவங்கிவிட்டான். பிரபலங்களின் பெயரை நேரடியாக எழுதாமல் பட்டப் பெயர் வைப்பான். உதாரணமாக பாகவதருக்கு ‘ஆசாரிப் பயல்’ என்கிற அடை மொழியில் எழுதுவான். ஆரம்பத்திலேயே பாகவதர் அவனுக்கு பணம் தருவதாகச் சொன்னாலும், அதை வாங்க மறுத்துவிட்டான். பொன் முட்டையிடும் வாத்திடம் இருந்து முதலிலேயே பணம் வாங்கிவிட்டால், அதற்குப் பிறகு லாபம் பார்க்க முடியாது என்பதுதான் அவனது கணக்கு. அவனது செய்கைகளுக்கு ஒரு அடிப்படை நியாயத்தைக் கற்பித்து தனது பத்திரிக்கையில் எழுதியிருந்தான். கண்ணகி பிறந்த நாட்டில், சினிமா நடிகைகள் விபச்சாரிகளையும் விட மோசமாகத் தவறுகள் செய்கிறார்கள். அதற்கு நடிகர்களும், தயாரிப்பாளர்களும் துணை போகிறார்கள். அந்தத் தவறுகளைக் களையெடுத்து, நாட்டைத் துப்புரவு படுத்தவே இந்தப் பணியைச் செய்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வேவு பார்ப்பதில் இந்தக் காலத்தைப் போல், அந்தக் காலத்திலும் மக்கள் இருந்திருக்கிறார்கள்! அதனால் பொதுமக்களின் அமோக ஆதரவும் லட்சுமி காந்தனுக்கு இருந்திருக்கிறது.


அந்த சமயத்தில், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த வடிவேலு என்பவனுடன் சண்டை மூண்டதால், அவனைப் பற்றிப் புகார் கொடுக்க சென்னை கோர்ட்டுக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத சில நபர்களால் கத்தியால் குத்தப்பட்டான். அந்த நிலையிலும் ஆஸ்பத்திரிக்குச் செல்லாமல், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுத்திருக்கிறான். பிழைத்து வந்து விடுவான் என்று எல்லோரும் நினைத்த நிலையில் அவன் இறந்து போனது பல சர்ச்சைகளுக்கும், சந்தேகங்களுக்கும் இடம் அளிப்பதாக இருந்தது. எந்த ஆதாரமும் இல்லாமல் தியாகராஜ பாகவதரையும், என். எஸ். கிருஷ்ணனையும், லட்சுமி காந்தனுடன் பழகிய நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர். வழக்கு நடக்கும் போது, அரசாங்கத் தரப்பில் இருந்த பல தில்லு முல்லுகள், குளறுபடிகள் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. ஆனால், ஏன்? எதற்காக? யாருக்காக? என்கிற விவரங்கள் யாருக்கும் தெரியாது. சென்னை உயர்நீதி மன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்ததது. அதன் பிறகு, லண்டன் பிரிவியூ கவுன்சிலுக்கு அப்ளை செய்து அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதால் பாகவதர் உட்பட அனைவரும் விடுதலை ஆயினர்.


லட்சுமி காந்தனுக்குப் பல எதிரிகள் இருந்தனர். அதனால், அவனைக் கொலை செய்தது யார் என்பது இன்று வரை தெரியாத மர்மமாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த வழக்கிற்கு செலவழித்ததன் மூலமாக, பாகவதர் தன் சொத்துக்கள் முழுவதையும் இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். சில வருடங்களில் இறந்தும் போனார்.  


லட்சுமி காந்தன், தான் இறந்து பிறகும் கூட பலரின் வாழ்க்கையை அழித்து விட்டுச் சென்றது மிகவும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் சம்பவம் ஆகும்.


*ராண்டார்கையின் கேஸ் புக்*

https://bit.ly/3kyWY3H

புதன், 28 அக்டோபர், 2020

ஜோடியாக்-4 சக்திகளின் சங்கமம்.. கோவையிலிருந்துர

 

திரு. பூபதி லட்சுமணன் அவர்களின் பிறந்தநாள், திரு.மதுரை இளங்கோ அவர்களின் திருமண நாள், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற சுப நிகழ்வுகள் நம்மை கடந்து சென்றுள்ளது, அந்த நாளில் வெளியிடவேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமும், ஆனால் லேப்டாப்பை தொட்டால் லேப்டாப்புடன் சேர்த்து எனக்கும் பூஜை நடக்கும் என்று மிரட்டல் வந்த காரணத்தினால் சற்றே தாமதமாக இன்று உங்களுக்காக, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்

படிப்பதற்கு முன் கான்சர் ராசியின் குணநலன்களை கூகிள் செய்து பார்த்துவிட்டு படித்தால் கதை புரிவதற்கு சற்று வாய்ப்புகள் அதிகம், மிக எளிமையான, எந்த ஒரு மிகைப்படுத்துதளும் இல்லாத ஒரு கதைக்களம், ஆங்காங்கே சில மயாஜாலங்களை தூவி இருக்கிறார்கள்

வழக்கம் போல படித்துவிட்டு உங்கள் பார்வையில் உள்ள குறை நிறைகளை விமர்சனமாக முன் வையுங்கள்

நன்றி!!!

https://www.mediafire.com/download/0o5q23arx8cxur2



திங்கள், 26 அக்டோபர், 2020

ஊரார் சொல் கேளேல்_ஒரு இரத்தக்காட்டேரியின் கதை

 


திரு Boopathi Lakshmanan அவர்களுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்🎂🎂🎂🎂🎂🎂



திரு பூபதி அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு சூடாக தயாரான

*ஊரார் சொல் கேளேல்*
சிறு *ஆயா* கதை

*ஊரார் பேச்சை கேட்காதீர்கள்
வீட்டம்மணி பேச்சை மட்டுமே கேட்டால் வாழ்வில் உயர் அடைவீர்கள்*

https://bit.ly/3olxucF

#COMICS_PDF_TIMES


ஞாயிறு, 25 அக்டோபர், 2020

தங்க மயில் தேவதை_முல்லை தங்கராசன்

 

































தொகுத்தளித்த சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் சாருக்கு நன்றிகளோடு.. 

தரவிறக்க சுட்டி:

கொன்றே தீர்ப்பேன்..ஜானி

 மாடஸ்டி-கார்வினின் *கொன்றே தீர்ப்பேன்*



சைப்ரஸ் தீவு..உற்சாகக் கூக்குரல்களின் மத்தியில் வழக்கமான கொண்டாட்டத்தோடு கடற்கரையெங்கும் இளம் ஜோடிகளின் கிறக்கங்களும், முதும் ஜோடியரின் அசைபோடுதலும், சின்னஞ்சிறாரின் கேளிக்கைகளும்..களைகட்டிக் கொண்டிருக்கும் வேளையில்.. சைப்ரஸின் பிரதான செக்போஸ்ட்.. 

அந்த ஜீப் பேரிகார்டுகளைத் தாண்டி செக்போஸ்ட் அலுவலகத்தினையொட்டி சரேலெனப் புகுந்து நின்றது.. இறுகிய முகமும் விறைப்பான யூனிபார்மும் அணிந்ததொரு உருவம்.. கரங்களில் இருந்த துப்பாக்கிகள் செக்போஸ்டின் காவலர்களை தோட்டா மழையால் நனைத்தன.. வயர்லஸ் எச்சரிப்புக்கே இடமின்றி இரத்த சகதியில் சட்டென விண்ணுலகம் ஏகினார்கள் காவலர்கள்.. அந்த உருவம் ஜீப்பிலேறிப் பறக்கடித்தது.. இலக்கு சைப்ரஸ் கடற்கரை...

நோக்கம்..

மாடஸ்டியினை தேடிப்பிடித்து அழிப்பது.. 


இளவரசி...


இளவரசி...




ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த மாடஸ்டி 


ம்ம்...என்றாள்..


கொஞ்சம் கடலைத்தான் இரசியேன்..

நாம் இத்தனை போராடித் திரும்பியிருக்கிறோம்..


கொஞ்சம் மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு கொடேன்.. 

-இது கார்வின்.


இல்லை.. எகிப்திய கடல் கொள்ளையர்களை வீழ்த்தி பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமான சரக்குகளை மீட்டுக் கொடுத்தோம்.. நம் அதிரடியில் கடற் கொள்ளையர் நால்வர் மரணம்.. பதினாறு பேர் பலத்த அடியோடு எகிப்திய தேச சிறை மருத்துவமனையில் உள்ளனர்.. அவர்கள் வந்த போட்டை ராக்கெட் லாஞ்சரின் நான்கைந்து குண்டுகளால் துளைத்தெடுத்தோம்.. 

இருந்தும்..


இருந்தும்?



தலைவன் வின்சென்ட் தப்பிவிட்டானே..


அவனை மாத்திரம் வளைக்காமல் விட்டுவிட்டோமே.. அடிபட்ட பாம்பை அடித்தே கொல்ல முடியாமல் போனதுதான் என் வருத்தம் என்ற மாடஸ்டியை நோக்கி புன்முறுவலுடன் கார்வின்..

இல்லை. இப்போதும் அவன் நம்மைத் தேடிவரத் தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டோம்.. எகிப்திய கடற்காவலில் பணிபுரிந்த அவன் ஒற்றனை இனம் கண்டு வைத்திருந்தோமல்லவா.. அவன் மூலமாகவே  நாம் சைப்ரஸ் தீவின் பிரபல நிஸ்ஸி கடற்கரையின் வெண்மணற்பரப்பில் நீலநிற கண்ணாடிக் கடலில் கால் நனைத்தமர்ந்திருப்போமென அத்தனை துல்லியமாக அவனறியாமலேயே ஒட்டு கேட்க வாய்ப்பளித்திருந்தோமே.. வருவான்..நிச்சயம் வருவான்..


கடற்கரையருகே தோட்டாக்களை வானில் உமிழ்ந்தவாறே ஜீப்பொன்று பாறையில் ஏறி விண்ணில் பறந்து டைவ் அடித்து இறங்கியது.. 


கொண்டாட்டங்கள் திடுமென அங்கே ஓய்ந்துவிட சுனாமி வந்தாற்போன்று அலறியடித்துக்கொண்டு வாரிச் சுருட்டிக் கொண்டு மக்கள் ஓட்டம்பிடிக்கலாயினர்.. எதிர்த்தோரை துப்பாக்கியால் விலக்கிக் கொண்டே பாய்ந்து வந்தது ஜீப்..


சரியாக அந்த இலக்கில் இறங்கிய வின்சென்ட் கையிலிருந்த ஜிபிஎஸ் வாட்சை கவனிக்க இதே இடம்தான்..இதே இடம்தானென கைக்கடிகாரத்தின் வெளிச்சப்புள்ளிகள் அம்புக்குறியிட்டன..


அவன் நின்ற இடத்தில் ஒன்றுமேயில்லை.. காலால் மணலை எத்த..வெள்ளை மணல் அப்படியே விசிறிப் பறந்தது.. சில எத்தல்களில் மாடஸ்டியின் கைப்பை கையிலகப்பட...விலகிப்பதுங்கிய ஜனங்களை நோக்கி கூக்குரலாக ஏய் மாடஸ்டி.. எங்கே இருக்கிறாய்.. தைரியமிருந்தால் நேரில் வா..மோதிப்பார்த்து விடலாம்..என கொக்கரித்தவனின் கையின் துப்பாக்கி மறுநொடி எகிறியது.. எங்கிருந்தோ பறந்து வந்த கார்வினின் கத்தி உபயம்..

மாடஸ்டி பாறையொன்றில் கம்பீரமாக எகிறிக் குதித்து வர..

மோதல் துவங்கியது...


கடும் யுத்தத்தின் முடிவில் மாடஸ்டியின் 

அதிரடியில் வின்சென்ட் விண்ணுக்குப் பறந்தான்..



ஹேப்பி ஆயுத பூஜை நண்பர்களே...



அவ்ளோதான்..


 கட் பண்ணா..

சைப்ரஸ் அதிபர் விருந்து..

கங்ராட்ஸ் மாடஸ்டி அண்ட் ப்ளைஸி என் சிரித்தார் சைப்ரஸ் அதிபர் டெமிட்ரிஸ் சில்லோரிஸ்..

குட் வொர்க் மாடஸ்டி..

அவனை கொன்றிருக்க அவசியமுண்டா ?

 யெஸ்.. அவனை உயிரோடு பிடித்து எகிப்துக்குப் பார்சல் போட்டு..

அதைவிட இங்கேயே அவனைப் பிரியாணி போட்டதே சரி..


க்ளிங்..


கண்ணாடி டம்ளர்கள் உரசிக் கொண்டன..


🍾🍸🍽️🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳


ஆசிரியர் குறிப்பு:

டாக்டர் ஏ.கே.கே.ராஜா அவர்களது ஸ்பைடர் படை வாட்ஸ் அப் குழுவின் கேள்விக்கான விடையாக பிறந்ததே இந்த சின்னூண்டு கதை...

நன்றி தோழர்களே.