ஞாயிறு, 30 ஜூலை, 2023
சனி, 20 மே, 2023
VC 005_தப்புத் தப்பாய் ஒரு தப்பு_ஏஜெண்ட் ராபின் சாகசம்_வி காமிக்ஸ்
சித்திரக்கதை உலகின் நாயகன் நிக் ரைடர் (எ) ராபின் என்பவரை காமிக்ஸ் வாசகர் வட்டத்தில் உள்ளவர்கள் மிகவும் நன்றாகவே அறிவார்கள்.. அதைத்தாண்டி வெளி வட்ட வாசகர்களுக்காக சிறு செய்தி. இவர் இத்தாலிய போன்னெலி பதிப்பகத்தின் நாயகன். காவல்துறையில் உள்ள தனி அமைப்பின் காவலராக இவர் புரிந்த சாகசங்கள் அநேகம். அதில் வீடியோவில் ஒரு வெடிகுண்டு மிகவும் பிரசித்தமான ஒரு வெற்றிப் படைப்பு.. அமெரிக்கப் பிரஸிடென்ட் கொல்லப்பட்ட தருணத்தில் ஒரு வீடியோ பதிவு எடுக்கப்படுகிறது. அதனை துரத்தும் கும்பல்களின் பிடியில் இருந்து எப்படி சட்டத்தின் பாதுகாவலராம் நம் நாயகர் மீட்கிறார் என்பதே அந்த கதையின் ஒன் லைன்.. நிற்க..
திங்கள், 15 மே, 2023
காமிக்ஸ் செய்திகள் 15-மே
பழைய அட்டைப்பட பாணியில் இம்மாத புத்தக அட்டைப்படம் தயாராகிறது! இறுதிக்கட்ட பணியில் உள்ளது! எப்படியும் இம்மாத இறுதியில் வெளிவந்திடும்! இந்தியா பர்மா காட்டில் நடைபெறும் ஸ்பை த்ரில்லர்! இவரும் ஏஞ்சலா போல் ஸ்கோர் செய்வாரென நினைக்கிறேன்!
ரங்லீ காமிக்ஸ் அறிவிப்பு:
இனிய காலை வணக்கம்.
ரங்லீ காமிக்ஸிற்கு தாங்கள் தரும் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏
ஏப்ரல் மாதத்தில் உடல்நிலை சரியில்லாததால் ரங்லீ காமிக்ஸ் இதழ் வெளிக்கொணர இயலவில்லை. இந்த வாரத்தில் இதழ் அனைத்து சந்தாதாரர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டோம். இந்த தாமதத்தை ஒரு புரிதலோடு அன்பினால் அரவணைத்த அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல 🙏
சனி, 6 மே, 2023
010_ஏஞ்சலா_வகம் காமிக்ஸ்
இனிய வாசகர்களுக்கு வணக்கங்கள்..
வகம் காமிக்ஸின் பத்தாவது வெளியீடான ஏஞ்சலா இன்று வந்தடைந்தது.. நீதியின் காவல் நாயகி ஏஞ்சலா தனது சாகசத்தை நடத்திக் காண்பிக்கும் போர்க்களம் இந்த ஒன் ஷாட் கதை..
பிரபலமான இத்தாலிய செர்ஜியோ போனெலி நிறுவனத்திடம் இருந்து முறைப்படி காப்புரிமம் பெற்று இந்த நூலை இத்தாலிய மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து செம்மையாக அளித்துள்ளனர் வகம் நிறுவனத்தார்.. விலை ரூபாய் 150/ ல் 116 பக்கங்களில் ஒரு பக்காவான வைல்ட் வெஸ்ட் கதைக்களம் கருப்பு வெள்ளையில் நமக்காகக் காத்திருக்கிறது. நீதித் தேவதை என்று பொருள்படும் anjel of justice என்ற துணைப் பெயருடன் வெளியாகியிருக்கும் இந்த அதிரடி காமிக்ஸ் தவற விடக்கூடாத ஒன்று.
இதன் ஆசிரியர் பக்கம் உங்கள் ஆவலைத் தூண்டும்..
அடுத்த வெளியீடு..
வெள்ளி, 5 மே, 2023
யார் அந்த சிறுத்தை மனிதன்_லயன் காமிக்ஸ் புத்தக திருவிழா ஸ்பெஷல்
வணக்கங்கள் அன்பு வாசக உள்ளங்களே..
ஆன்லைன் புத்தக விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் தருவாயில் இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது யார் அந்த சிறுத்தை மனிதன்? என்கிற பாக்கெட் சைஸ் மினி சாகசம்..
68 பக்கங்களில் திருப்திகரமான வாசிப்புக்கும் மாணவப் பருவத்தில் இருக்கும் சிறார்கள் விரும்பி வாசிக்கும் விலையிலும் உகந்ததாக லயன் காமிக்ஸ் வெளியீடாக வந்திருக்கிறது.. இந்த சாகசம் ரிபெல்லியன் என்கிற பிரிட்டிஷ் காமிக்ஸ் சுரங்கத்தில் இருந்து நம்மை வந்தடைந்திருக்கிற பொக்கிஷம்.. விலை ரூ.30/-
the Leopard from lime street என்கிற தலைப்புடன் ஆங்கிலத்தில் வெற்றிபெற்ற இந்த கதையின் சிறு சுருக்கம் தருகிறேன். கதிரியக்க சிலந்தியால் நம் ஸ்பைடர் மேன் உருவானது போல் இவர் கதிரியக்க சிறுத்தை கடித்ததால் உருவான வீரர். மாணவப் பருவத்தில் சக சிறுவர்களால் தொல்லை தரப்படும் இந்த நாயகன் தனது மாமா அத்தையுடன் வசித்து வருகிறார். அத்தை பெயரும் ஜேன்தான்.
பள்ளி மாணவனாக மட்டும் நின்று விடாமல் பள்ளிக்குள் பத்திரிக்கை வைத்து நடத்தி வரும் இந்த சிறுவன் போட்டோ கிராபராகவும் இருந்து வரும் சூழலில் ஒரு கதிரியக்க சோதனை செய்து வந்து கொண்டிருக்கும் சிறுத்தை ஒன்று தப்பி வந்து கடித்து வைக்க தாவுதல், உள்ளுணர்வு, சிறுத்தையின் வேகம் மற்றும் பலம் பெற்று எதிரிகளை துவம்சம் செய்யும் நாயகனாக உருப் பெற்றிருக்கிறார்..
புதன், 3 மே, 2023
IND_22_ஊகூரு பிடாரி_1966_0.60_இந்திரஜால்அலெக்சாண்டர் வாஸ் பிறந்த தின விழா

https://www.mediafire.com/file/fugtepijh8t665d/ஊகூரூ+பிடாரி+No22.pdf/file
Ivo Milazzo - இவோ மிலாஸ்ஸோ-சித்திரக்கதை ஓவியர் குறிப்புகள்
வணக்கங்கள் வாசக உள்ளங்களே.. இவோ மிலாஸ்ஸோ (பிறப்பு 20 ஜூன் 1947) ஓர் இத்தாலிய சித்திரக்கதை ஓவியர் ஆவார். ஐவோ மிலாசோ, தனது முக்கிய கதை எழுத...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் நட்பூக்களே... மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத் தேடியையே எடுத்...





























































