சனி, 22 நவம்பர், 2014

பழமையும் புதுமையும்!

வணக்கங்கள் அன்பு நண்பர்களே! இன்று நண்பர் லக்கி லிமட் அவர்களுக்கு பிறந்த நாள்! ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்த அட்டை ஸ்கான் கவனியுங்கள். இது பழைய ஒரு புத்தகம். இதனை சரி செய்து காண்போர் மயங்கும் வண்ணம் சீர் செய்திட்டால் எப்படி இருக்கும் என்கிற உழைப்பில் உருவான இதன் கீழே இருக்கும் அட்டையைக் கவனியுங்கள்! 
இது போன்று சீர் செய்து உங்களால் வெளியிட முடியும் எனில் அது காமிக்ஸ் உலகுக்கு உங்களது ஆழ்ந்த பங்களிப்பாக இருக்கும் என்பதே எனது ஆலோசனை!

மற்றவை? அப்புறமே! விடை பெறுகிறேன்! 

6 கருத்துகள்:

  1. இரண்டாவது படம் பார்ப்பதற்குப் புதிதாக இருந்தாலும், அஃது அழகாக இல்லை. நிறங்கள் ஆங்காங்கே திட்டுத் திட்டாக இருக்கின்றன. முதலாவது, பார்க்கப் பழையதாகத் தோற்றமளித்தாலும் அதில் நுணுக்கம் தெரிகிறது, அழகு இருக்கிறது. என்ன சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் நண்பரே! மீண்டும் முயற்சித்து சரி செய்திடுகிறேன்! தங்கள் கனிவான கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஓ! அப்படியானால் உண்மையாகவே அது குறைதானா? நான் என்ன நினைத்தேன் என்றால், பழைய படங்களைப் புதுப்பிக்கும்பொழுது இப்படித்தான் ஆகும் போல என்று. நான் ஒன்றை நினைத்துச் சொல்ல, அதை நீங்கள் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள, தமிழ்ச் சித்திரக்கதை உலகிற்கு நன்மையே! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் போன்ற மதிப்பு மிக்க வாசகர்களைக் கொண்டிருக்கும் எந்தப் பத்திரிக்கையும் அவர்களின் விமர்சனங்களைக் கொண்டே தம்மை செதுக்கிக் கொள்கின்றன என்பதே உண்மை நண்பரே! தங்களது அன்புக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. உங்கள் போன்ற மதிப்பு மிக்க வாசகர்களைக் கொண்டிருக்கும் எந்தப் பத்திரிக்கையும் அவர்களின் விமர்சனங்களைக் கொண்டே தம்மை செதுக்கிக் கொள்கின்றன என்பதே உண்மை நண்பரே! தங்களது அன்புக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...