செவ்வாய், 25 நவம்பர், 2014

சூப்பர் ஸ்டார் டெக்ஸ் வில்லரின் மரணதூதர்கள் நாவல் வடிவில்!

வணக்கம் நண்பர்களே.
நம்ம லயன் காமிக்ஸில் வந்த டெக்ஸ் வில்லரின் அருமையானதொரு மெகா இதழ் மரண தூதர்கள். இதனை நாவல் வடிவில் சித்திரங்களே இல்லாமல் வாசித்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்கிற சிந்தனையில் சும்மா ஒரு முயற்சி செய்து பார்த்த வேளையில் (ஹி ஹி ஹி வேலையில்லா வேளையில்....) ஒரு நாவலாக உருமாறி இருப்பது தெரிந்தது. இதனை இவ்வளவு தூரம் டைப்பி விட்டு அப்புறம் உங்கள் பார்வைக்குக் கொண்டு வந்து பரிமாறாவிடில் அப்புறம் இந்த கிறுக்குத் தனமான காமிக்ஸ் கிறுக்கனின் காமிக்ஸ் கிறுக்கு வீணாகி விடுமோ என்கிற எண்ணத்தில் அப்படியே தருகிறேன். தாங்கள் படித்த மரண தூதர்கள் கதையினை நினைவில் கொண்டு வந்து நிறுத்தி லயனின் அதிரடி வீரர் டெக்ஸ் மற்றும் நண்பர் கார்சனின் நகைச்சுவைகளை கணக்கில் எடுத்துப் படித்துப் பார்த்து விட்டு அப்படியே நமது வரும் மாத வெளியீடான தி கிங் ஸ்பெஷல்! தவறாமல் வாங்கிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
 நமது லயன் குடும்பத்தின் நண்பர்கள் இதனை ஜஸ்ட் லைக் தட் எனப் படித்து விட்டு நாவல் பிரியர்கள் மத்தியில் சும்மா இந்தக் கதையை வாசித்துப் பார்த்து பின்னர் டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் வாங்குங்களேன் என்று தூண்டிவிட இந்தப் பதிவு உதவுமானால் நான் மிகவும் மகிழ்வேன்.
      இந்தப் பதிவினை ஒரு அபாச்சேயின் விடாப்பிடியுடன், ஒரு பரட்டையின் சாகசத் திறமையுடன், ஒரு வில்லரின் விஸ்வரூபமாம் த கிங் ஸ்பெஷல் வெளியிட்டுக் கொண்டாடும் நமது கிரேட் கௌபாய் ஆசிரியர் திரு விஜயன் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்....ஆர்வக் கோளாறு முயற்சியைப் பொறுத்தருள்வீர் சார்!
      இந்தப் பதிவில் ஒரு சித்திரமும் நான் பயன்படுத்தவில்லை. நாவல் மனப்பான்மை கொண்டு தனித்தியங்கும் கலாட்டாவான, எகிடுதகிடான அண்ணன் ராஜேஷ் குமார், சகோதரர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், இதய இயக்கி சித்தர் பாலகுமாரன், பிரியமிகு ரமணி சந்திரன், இந்துமதி அம்மாஸ், அன்பு நண்பர் ஆர்னிகா நாசர், மற்றும் இங்கு குறிப்பிடாவிட்டாலும் எங்கும் வாசக வட்டத்தினை  தன்பால் ஈர்த்து வரும் எழுத்தாள பெரியோர்கள், பேரன்பு மிக்கோர் ஆகியோரின் மெகா வாசகர் வட்டத்தின் லேசர் பார்வையை நமது காமிக்ஸ் பால் ஈர்ப்பதில் ஒரு சின்னதொரு சின்னஞ்சிறியதொரு முயற்சியாக இதனைக் கருதுகிறேன்.
      பிரியமிகு இலக்கிய விஸ்வரூப வாசகர்களே, நாவல் உலகினை தங்கள் பொற்கரங்களால் இது வரை அருமையாகத் தாங்கிப் பிடித்து, உங்கள் பலத்த கரவோசையால் உலகமெங்கிலும் வாழும் தமிழக மாந்தரின் இல்லங்களுக்கும் நாவல்களைக் கொண்டு சேர்த்து வரும் வாசக சிங்கங்களே!

இந்த வலைப்பூவுக்கு தங்கள் வரவு நல்வரவாகட்டும். தங்கள் வரவு நல்வரவாகுக.
என் வலைப்பூவுக்கு வந்திருக்கும் தங்களது அன்புக்கு நன்றிகள். இங்கு வருகை புரிந்து இந்த நாவல் வடிவினை வாசித்து தங்களின் மேலான கருத்துக்களையும் நடைமுறையில் ஒரு காமிக்ஸ் எந்த அளவுக்கு தாக்கம் மிகுந்ததாக உள்ளது என்பதனை அனுபவிக்கவும் உங்களை அழைக்கிறேன்.
டெக்ஸ் வில்லர் _ஒரு அந்த கால வன்மேற்கின் (அப்படின்னா ஓடிடுவீங்க!!) வைல்ட் வெஸ்ட் என சொல்லப்படும் அமெரிக்க சிவப்பிந்தியர்களை ஓரம் கட்டிவிட்டு ஐரோப்பியர்கள் தங்கள் உலகினை நிலை நாட்ட முயன்று வந்த காலம். நமது நாயகன் டெக்ஸ் வில்லர் ஒரு ரேஞ்சர் (போலீஸ் அதிகாரி). தன் சகா கிட் கார்சனுடன் சேர்ந்து புரிகின்ற சாகசங்கள் இன்றளவும் மிகப் பெரிய வரவேற்பை இத்தாலிய மண்ணில் பெற்று அட்டகாசமான வாசகர்களைக் கொண்டு தொடர்ந்து விற்பனையில் சாதித்து வருகிறது. சிவகாசியின் பிரகாஷ் பதிப்பகத்தார் சித்திரக்கதை வடிவில் இந்த வெற்றிகரமான தொடர்கதையை (ஒவ்வொரு கதையும் தனித்தனி சாகசம்) சுமார் முப்பது வருடங்களாக பதிப்பித்து வருகின்றனர்.
ஒரு மொழி பெயர்ப்பு நாவல் ஒன்றினை கொஞ்சம் வித்தியாசமாகப் படிக்கும் விதமாக உங்கள் அனுபவம் அமைந்திடும் என்கிற நம்பிக்கையில் சித்திரக்கதையினை கொஞ்சமே கொஞ்சம் நகாசு வேலை மட்டும் பார்த்துக் கொடுத்துள்ளேன். வாசித்துவிட்டு தங்கள் நண்பர்களில் யார் காமிக்ஸ் ரசிகரோ அவரை அள்ளிக் கொண்டு போய் இதில் வரும் சில அம்சங்களுக்கான விளக்கத்தைக் கோரி (அவர்கள் அலறிக் கொண்டு ஓடினாலும் விடாதீங்க! ஒரு வித்யாசமான அனுபவத்தினை இழந்துடாதீங்க!) பெற்று இரசித்து தங்கள் ஆர்ப்பரிப்பான ஆரவாரமான ஆதரவினை பிரகாஷ் பதிப்பகத்தார் மற்றும் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு நல்கிட வேண்டிக் கொண்டு எனது ப்ளேடை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்!
கடைசி வரிகளில் மீண்டும் சந்திப்போம்!
அமெரிக்க மண்ணின் புதியதொரு துவக்கம் கண்ட ஆங்கிலேயர்களது ஆரம்ப வருடங்களில் ஒரு நாள்....
         
ப்ளாக் ஸ்டாப்பில் ஒரு கடுமையான கோடை நாளில் முற்பகல் வேளை. வெங்கதிரோன் புகைவண்டி மையத்தில் காத்திருப்போரை தனது கதிர்களை அனுப்பிப் பொசுக்கிக் கொண்டிருந்தது.
அதோ அந்த பிளாட்பாரத்தில் நிற்கும் இரு கனவான்கள்தான் நமது நாயகர்கள்...
நெஞ்சுரம் மிக்க எருது போன்ற தோற்றத்துடன் கூரிய பார்வையுடன் நிற்பவர் டெக்ஸ் வில்லர்.
அவருக்கு அருகில் லேசர் தோற்றுப் போகும் பார்வையுடன் நம்மையும் துளைத்து வெளியேறும் வகையில் உற்று நோக்கும் கம்பீரமிகு செந்தாடிக்காரர் கிட் கார்சன்.

டெக்ஸ் பீனிக்சில் இருந்து வரும் வண்டிதானே அது? என்று ரயில்வே அதிகாரியை கேட்டார்.
யெஸ் ஸார் டாண் என்று டயத்துக்கு வந்து விட்டது _ரயில்வே அதிகாரி பதில் கூறினார்.
(இதற்கு மேல் அவர் கேட்டார், என்று கூறினார் _என்கிற ஆதிக்கால வார்த்தைகள் விடை பெறுகின்றன. உங்கள் விருப்பம்போல் வாசியுங்கள்! பை!)
என்ன முணுமுணுக்கிறாய்?
ம்ம்...கிரக நிலை சரியில்லை.
அந்த வண்டியில் மூட்டைமூட்டையாக நமக்கு பிரச்சினை வருவதாக என் உள்ளுணர்வு சொல்கிறது.
நீ ஒரு அவநம்பிக்கைப் பேர்வழி...
பொறுத்திருந்து பாரேன்.
பீனிக்ஸ் ரேஞ்சர் குழு தலைவர் இவ்வளவு சிரமப்பட்டு நம்மைத் தேடி வருகிறார் என்றால் அங்கே அவருக்கு தீராத தலைவலி அதை நம்மிடம் தள்ளி விட்டுப் போகவே வருகிறார் என்று கணிப்பதில் எந்தக் கஷ்டமும் இல்லை.
அவர் சொல்வதை சொல்லட்டும். நமக்கு இஷ்டமிருந்தால் சரி என்போம்.
இல்லையேல், லஞ்ச் கொடுத்து உபசரித்து விட்டு வந்த வழியே போங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவோம்.
நீதானே? – உன்னை எனக்குத் தெரியாதா?
இதோ...இவர்தான்!
சவக்களை தாண்டவமாடுகிறது.
உன் மூஞ்சியில் மட்டும் என்னவாம்?
வணக்கம் வில்லர்...வணக்கம் கார்சன். என்னை சந்திக்கக் காத்திருந்தமைக்கு நன்றி.
வெல்கம் கர்னல் பயணம் வசதியாக இருந்ததா?
குறை ஏதுமில்லை...! ஓ.கே. நாம் இடையூறு இன்றி உரையாட ஒரு நல்ல இடம் வேண்டுமே.
சாப்பாட்டு வேளையும் நெருங்கி விட்டபடியால் நாம் நேராக “கொலராடோ” வுக்கே போய்விடலாம்.
நமக்காக அங்கே ஒரு அறை அமர்த்தியிருக்கிறேன். உணவும் அங்கே நன்றாக இருக்கும். இரகசியம் பேச ஏற்ற இடம்.
ம்ம்..ருசித்து சாப்பிடும் மனோநிலையில் நானில்லை!
ஏகப்பட்ட பிரச்சினை வில்லர்!
நான் சொன்னேனில்லையா?
எங்கள் நவஜோக்கள் சம்பந்தப் பட்ட விவகாரமா?
இல்லை. வேறு வகையான பிரச்சினை இது.
அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் மதிய உணவைப் புசித்துக் கொண்டிருக்கும்போது, தான் அங்கே வரவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய சங்கதியை விலாவாரியாக எடுத்துரைத்தார் கர்னல்.
இரு வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்த இடத்தில் கிடந்த காலி மெஷின் கன் தோட்டாக்களை ஆராய்ந்ததில் தெரிய வந்த உண்மை இது...
மெஷின் கன்னா...?
இருவேறு குற்றங்கள் நடந்திருப்பதாக சொன்னீர்கள் – இல்லையா!
ஆமாம். முதல் சம்பவம் நடந்தது ஒரு மாதத்துக்கு முன்பு கரோனாடாஸ்ஸில் சுரங்கப் பிரதேசத்திலிருந்து டக்ஸனுக்கு வெள்ளித் தாதுகளை ஏற்றிச்சென்ற வண்டிகளை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதில் நான்கு பாதுகாவலர்களும், கண்டக்டரும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
அது நடந்து ஒரு வாரம் கழித்து ஃபேர் பேங்க்ஸ் பிரதேசத்தில் அரும்பொருள்களை ஏற்றிச்செல்லும் ஒரு சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தின் வண்டியைத் தாக்கி சர்வேயரையும், செக்யூரிட்டியையும் கொன்றிருக்கிறார்கள்.
இரண்டு சம்பவங்களிலுமே உயிர் பிழைத்தோர் எவருமிலர்!
கேட்டாயல்லவா?
அட..அநியாயமே...
அவர்கள் வசம் படுபயங்கரமான ஆயுதம் இருப்பதால் இணையற்ற ஆபத்தான கும்பலாக  அது கருதப்படுகிறது.
வாஸ்தவம்!
சரி...நடந்த புலனாய்வில் ஏதாவது உண்மைகள் வெளிவந்தனவா?
தடங்களை ஆராய்ந்ததன் மூலம் தாக்க வேண்டிய இடத்தை எப்படி வந்தடைந்திருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து எப்படித் தப்பி ஓடியிருக்கிறார்கள் என்று யூகிக்க முடிந்தது.
கேட்லிங் ஒரு பிரம்மாண்டமான ஆயுதம்..அதை மறைவாக எடுத்துச் செல்ல மிகப் பெரிய கூண்டு வண்டி தேவை!
அப்படிப்பட்ட வண்டியின் தடத்தை சுலபமாக அடையாளம் தெரிந்துகொள்ளலாமே...
உண்மைதான்...
ஆனால் தாக்குதல் நடந்து முடிந்ததும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் ஒரு திசையில் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
மெஷின்கன் குதிரைகளில் ஏற்றிச்செல்லும் அளவுக்குப் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு வேறு திசையில் எடுத்துச்செல்லப் பட்டிருக்கிறது.
சரியான கிரிமினல் மூளை!
மெஷின் கன்னை நிர்மாணிப்பதும், பிரிப்பதும் லேசுப்பட்ட காரியமல்ல...
டிபியன்ஸ் கோட்டையின் கமாண்டர் தன் வசமுள்ள கேட்லிங்கைப் பயன்படுத்துவதேயில்லை..அவை சுலபமாகத் தீப் பற்றிக்கொள்ளும் என்பதோடு...
அளவற்ற இயக்க நிபுணத்துவம் வாய்ந்த வல்லுனர்களை இராணுவம் அவருக்குக் கொடுக்கவில்லை என்பதும் காரணங்களாகும்.
சரியாகச் சொன்னாய் வில்லர்...
இராணுவம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது எனக்கு...
இராணுவத்தின் வசம் மட்டுமே இருக்க வேண்டிய அவ்வகை ஆயுதம் எப்படி சமூக விரோதிகள் கைக்குப் போய்ச் சேர்ந்தது என்ற கேள்வி உன் நெஞ்சில் தோன்றியிருக்குமே...
அந்தக் கேள்விக்கு விடை வெகு சுலபமானதாயிற்றே....! அந்தக் கோணத்தில் தேடல் மேற்கொள்ளப்பட்டதா?
விடுவோமா என்ன?
என்ன தெரிய வந்தது?
பெரிய சைபர்!
தேன் மேற்கு எல்லைப்புற காவல் மையங்களின் பொறுப்பதிகாரி கர்னல் பாரஸ் டிடமே நேரில் சென்றேன் நான். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார் என்னை.
பாரஸ்ட் மாதிரியான ஆட்களை உனக்கும் தெரியாதா என்ன?
நன்றாகவே தெரியும்!
கயவர்கள் வசமுள்ள கேட்லிங், அவருடைய ஆதிக்கத்திற்குள் உள்ள ஏதோ ஒரு கோட்டையிலிருந்துதான் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று நான் சந்தேகப்பட்டதாகக் கூறி எல்லா கோட்டைகளிலும் ஒரு புலனாய்வு நடத்த அவர் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கேட்டதாலேயே மனிதர் கொதித்துப் போய் விட்டார்.
அட அநியாயமே!
வியக்க ஏதுமில்லை கிட்...அம்மனிதரை நான் நன்கறிவேன்.
எருமை போல் உடம்பு பெருத்திருக்குமே தவிர மண்டைக்குள் துளி மசாலா கிடையாது.
இன்னும் நிறைய இருக்கிறது..
அவர் என்னைத் துரத்தியடித்ததோடு ஓயவில்லை..இதுபற்றி நான் விசாரித்துக் கொண்டு வந்தால் உள்ளேயே அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து கமாண்டர்களுக்கும் தந்தி அனுப்பியிருக்கிறது அந்த சதைப் பிண்டம்!
இது ஒன்றும் புதிதல்லவே – வெளியாளின் தலையீட்டை இராணுவத்தினர் ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை.
நிறைய தப்புகள் நடக்கும்..அவற்றை மூடி மறைப்பதில் சமர்த்தர்கள்.
நீங்கள் மெஷின் கன் பற்றி தெரிவித்த செய்தி பாரஸ்டின் ஆர்வத்தைத் தூண்டி விட்டு, அவர் அது பற்றி முழுவிபரமும் சேகரிக்க முற்பட்டிருக்கும் சாத்தியமும் நிறையவே உண்டு.
அப்போது சில உண்மைகள் தெரிய வந்தாலும் கூட தன் மீதோ தன் நிர்வாகம் மீதோ சந்தேகம் விழுந்துவிடாமலிருக்க மொத்த விவகாரத்தையும் மூடி மறைத்து விடுவார்!
பிரச்சினையே அதுதான் வில்லர்.
எங்களுடைய புலனாய்வு மேலே தொடரக் கூடிய வழிவகை புரியாமல் தேக்கம் கண்டு நிற்கிறது வில்லர்...
அதை அப்படியே கைவிடவேண்டிய நிலை – நீ மட்டும் உதவிக்கு வராவிட்டால்...
என்ன..நானா?
பார்த்தாயா நான் சொன்னேன்...நீ என்னை அவநம்பிக்கைப் பேர்வழி என்று கிண்டலடித்தாய்..மாட்டிக் கொல்லாதே...ஜாக்கிரதை!
இராணுவக் காரர்களிடம் எனக்கு மட்டும் நல்ல பெயர் என்றா நீங்கள் நம்புகிறீர்கள்?..கண்ணில் விழுந்த மணலாக அவர்கள் என்னை நினைக்கிறார்கள்...
ரொம்பவும் மிகைப்படுத்தவேண்டாம்...
உயர்பதவியில் உள்ள சிலருக்கு நீ சங்கடங்களைத் தந்திருக்கிறாய் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், அவுட் போஸ்ட்டுகளின் பொறுப்பதிகாரிகள் பலரின் நன்மதிப்பை நீ பெற்றிருக்கிறாய்.
அவர்களுக்கு நீ நிறைய உதவி செய்திருக்கிறாய்..எனவே அவர்கள் உன் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள்.
எனக்கு இவர் ஐஸ் வைக்கிற மாதிரியில்லை?
அதில் உனக்கு சந்தேகம் இருக்கிறதா என்ன?
அப்படியில்லை வில்லர். நீ பணி ஒய்வு பெற்றுவிட்டால் கட்டுப்பாடு ஏதுமின்றி சுதந்திரமாக நடமாடலாம். முடிச்சு விழுந்து விட்ட இந்த வழக்கில் சிக்கலை அவிழ்க்க உன்னால்தான் முடியும். அந்தக் கயவர்களை இப்படியே விட்டுவிட்டால் இன்னும் என்ன மாதிரியான அட்டூழியங்களை செய்வார்களோ. அவர்களுடைய அராஜகத்திற்கு ஒரு முடிவே இல்லாமல் போய் விடலாம்.
அம்மாதிரியான ஒரு பயங்கரமான ஆயுதத்தை ஜன நடமாட்டமுள்ள நகர பகுதியில் பிரயோகித்தால் ஏற்படும் விளைவை எண்ணிப்பார்!
எண்ணிப் பார்க்கவே நடுங்குகிறது...
இல்லை, இதுபற்றி நீ நன்றாக யோசித்துப் பார்க்கவேண்டும்.
நண்பா...இந்தக் கோரிக்கை உனக்கும் சேர்த்துத்தான்!
அவர் உன்னை மடக்கி விட்டார் என்று தோன்றுகிறது...நாசமாய்ப் போயிற்று!
சரி..உன் கருத்தை சொல்!
இதுவரை ஒவ்வொரு தடவையும் என் கருத்தை கேட்டுத்தான் நீ முடிவெடுத்து வந்தமாதிரி அல்லவா இருக்கிறது உன் பேச்சு!
ஓ.கே. கர்னல் கார்சனும் என் தீர்மானத்தை ஆதரித்து விட்டபடியால் உங்களுடைய கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.           
நான் எங்கே சரி என்று சொன்னேன்? உன்னை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிற நினைப்பு உனக்கு..ம்ம்..என் தலையில் எழுதி வைத்திருக்கிறான் பார்த்தாயா?
நீங்கள் சொன்னமாதிரி நாங்கள் எங்களிஷ்டப்படி காரியங்களை செய்துகொண்டு போவோம். இஷ்டப்பட்ட வேடங்களைப் போட்டுக் கொள்வோம்..இதில் ஒன்றும் வரையறை இல்லையே?
வரையறை போட்டுக்கொண்டால் முட்டுக்கட்டையாகி விடுமே..
உங்களுடிய புலனாய்வின்போது நிகழ்வுகளை அவ்வப்போது எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே முன் வைக்கிறேன்.
அவசியம் தெரிவிக்கிறேன்.
சில தினங்களுக்குப் பின்
பீஸ்பி நகரில் பிரதான தெருவில் ஜனங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்ததால் பாங்கிலும் ஏகப்பட்ட கூட்டம்..
அதோ ஷார்க்..வண்டியோடு வந்தாச்சு.
அடுத்த நடவடிக்கை நம்முடையது.
கிளம்புவோமா?
ஓ.கே.!
மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விடாதிருக்க நாம் தனித் தனியே உள்ளே நுழைவோம்.
இடைவெளி விட்டு ஒவ்வொருவராக பாங்கினுள் நுழைந்தது அந்த மூவர் குழு-
 கூட்டம் நிரம்பி வழியுது..இதுவும் நல்லதற்குத்தான்!
எக்ஸ்யூஸ் மீ மேடம்...
கத்துவதும் கத்தாமலிருப்பதும் உன்னிஷ்டம்...
எல்லோரும் அப்படியே அசையாமல் நில்லுங்கள்!
யாராவது விஷமத்தனமாக ஏதாவது செய்ய முற்பட்டால் இந்த பொம்பளை முதல் பலியாவதோடு உங்களில் யாருமே மிஞ்ச மாட்டீர்கள் – ஜாக்கிரதை!
கைகளை உயர்த்துங்கள்!
வந்த காரியத்தை கவனிப்போம்-
இந்தா பை – பெட்டகத்தைத் திறந்து இதைக் கரன்ஸியால் நிரப்பு.
வேகமாக நடடா..சோமாறி...
அஹ்!
சீக்கிரம்...சீக்கிரம்!
நீ..நீ..தப்பியோடமுடியாது!..ஷெரீப்...உன்னை....
அப்படியே கிட...
டுமீல்!
சரி..நாங்கள் கிளம்புகிறோம்..உயிரின் மீது ஆசை இல்லாதவர்கள் மட்டுமே கூச்சல் போட முற்படலாம் ஜாக்கிரதை!
வாருங்கள் – ஓடிப்போய் விடலாம்..
ஏறுங்கள்..வண்டியில்!
நல்லபடியாக முடிந்ததா?
கச்சிதமாக முடிந்தது. நீ குதிரைகளை உச்ச வேகத்தில் விரட்டத் தயாராக இரு!
ம்ம்.ஏறிக்கொள்ளுங்கள்!
உதவி...உதவி...-பாங்க்கை கொள்ளையடித்து விட்டு ஓடுகிறார்கள்!
இடியட்!
டுமீல்!
......யா......யா.......! ஒதுங்கிப் போங்கடா சனியன்களா!
கேட்டாயல்லவா..பாங்க்கை கொள்ளையடித்து விட்டு ஓடுகிறார்களாம் –
ஷெரீப்புக்கு தகவல் கொடு – சீக்கிரம்!
ஒரு வண்டியில் தப்பியோடுகிறார்கள் சார்...அவர்களை விரட்டிச் செல்ல நாம் ஒரு குழுவைக் கூட்டுவோம்!
அடுத்த சில நிமிடங்களில் ஷெரீப்பின் தலைமையில் ஒரு டஜன் நகரவாசிகள் திருட்டுக் கும்பலை விரட்டிக் கொண்டு கிளம்பினர்.
என் மொத்த சேமிப்பும் பாங்க்கில் இருந்தது.
குதிரை வண்டியில் அவர்கள் விரைந்து போய் விட முடியாது. நாம் விரட்டிப் பிடித்து விடலாம்!
டக்ளஸ் சாலையில் போயிருக்கிறார்கள் – அவர்கள் தப்பவே முடியாது.
இதற்கிடையே
யாராவது பின் தொடர்ந்து வருகிறார்களா?
இதுவரை இல்லை!
ஆனால் நிச்சயம் விரட்டிக் கொண்டு வருவார்கள் பாரேன்!
வரட்டும்..அவர்களை உரிய முறையில் வரவேற்போம் ஹீ! ஹீ! ஹீ!
சற்று நேரம் கழித்து
அதோ போகிறார்கள்..அந்த பழைய வண்டியில் அவர்கள் வேகமாகப் போய் விடமுடியாது என்று சொன்னேனில்லையா?
ஷெரிப்..இது ஒரு வேளை சூழ்ச்சி வழியாக இருக்கலாமோ?..ஏனென்றால் எந்த முட்டாளும் தேட்டை பொருளோடு குதிரை வண்டியில் போக மாட்டான்.
சுடும் வரம்புக்குள் நாம் நெருங்கியதும் சரமாரியாக சுடுவோம்..இதில் சூழ்ச்சிக்கு இடமேது?
ம்ம்..முன்னேறுங்கள் – நெருங்கி விட்டோம்!
சுடும் வரம்புக்குள் வந்துவிட்டோம்..நான் சிக்னல் கொடுத்ததும் சரமாரியாக சுடுங்கள்...
ஆனால் ஷெரிப் சிக்னல் தருமுன் வண்டியின் பின் புறம் சட்டென்று திறந்து கொண்டது.
அதன் உள்ளே எட்டுக் குழல் கொண்ட கேட்லிங் மெஷின் துப்பாக்கி இயங்கத் தயாராகிக் கொண்டிருந்தது.
ஜோ..உன் இன்னிசைக் கச்சேரியைக் கேட்க ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்! – நடத்து!
இதோ..ஆனால் இதன் இன்னிசை அவர்களுக்கு மரண கீதமாகப் போகிறது...
ரட்டட்டட்டட்....
இசம் முழக்கம் எப்படி!..ஹீ..ஹீ..ஹீ!
கடவுளே அவர்கள் வசம் மெஷின் கன் இருக்கிறது! ஹீய்ய்...ய்ய்
ஆஆஆஹ்!
பொத்!
ஈக்களைப்போல் அவர்கள் செத்து விழுகிற காட்சியைக் கண்டு ரசியுங்கள் தோழர்களே!
யாரையும் மிச்சம் வைக்காதே ஜோ!
எங்களைப் பிடிக்க இனி ஒருவன் பிறந்து வந்தால்தான் உண்டுடா மடையன்களா.
இறங்கி ஓடுங்கள் மறைவிடத்தை நோக்கி!
ஹீ...ஹீ...ஹீ...
ஓடி ஒளியுங்கள்!
என் காலில் தோட்டா பாய்ந்து விட்டது – தூக்கிச் செல்லுங்கள் என்னை...
தைரியமாக இரு ரிக்.
மெள்ள..மெள்ள..வலி பிராணன் போகிறது.
சத்! சத்! சத்! சத்! சத்! சத்!_ஈனத்தனமான குண்டுகளின் மழை தொடர்ந்து அதிரடியாகப் பெய்தது....

வாங்கடா...நெருங்கி வாங்க! என்று ஜோ வெறித்தனமாக அலறினான்.

கசாப்புப் போட்டது போதும் ஜோ!
இதற்கு மேலும் நம்மைப் பின் தொடர்ந்து வர அவர்கள் ஒன்றும் பைத்தியங்கள் அல்ல...தோட்டாவை வீணடிக்காதே!
ஓ.கே. ஷார்க்.
கேட்டாயா பேபி...இன்றைக்கு நீ பாடியது போதுமாம்_என்று அன்போடு அணைத்துக் கொண்டான் தனது இரத்த தாகம் மிகுந்த படுபயங்கரக் கொலைக் கருவியினை...
சண்டாளர்கள்!
போய் விட்டார்கள் ஷெரிப்..நம் பணத்தோடு!
இப்போது அவர்களைப் இன் தொடர்ந்து செல்வது தற்கொலைக்கு ஒப்பானது...
கொள்ளையர் வசம் மெஷின் கன்னா? – நான் கேள்விப்படாத விசித்திரம்!!!
வாருங்கள்..காயம்பட்டுக் கிடப்பவர்களை அழைத்துக் கொண்டு ஊர் திரும்புவோம். 
கயவர்களைப் பிடிக்கவும், ஒடுக்கவும் வேறு யாராவது சமர்த்தர்கள் வந்தால்தான் உண்டு....
20நிமிடங்களுக்குப் பின்
வந்து சேர்ந்து விட்டோம் தோழர்களே...சில்க் குதிரைகளோடு காத்துக் கொண்டிருக்கிறான்.
எல்லாம் சுமுகமாக முடிந்ததா ஷார்க்?
கச்சிதமாக!
நிறைய அகப்பட்டதா?
வாங்கிப் பிரித்துப் பார்! உன் கண்கள் குருடாகிப் போகும்!
அடிச்சக்கை..நல்ல வேட்டைதான்...
எப்போதும் இல்லாத அளவுக்கு பாங்க் பெட்டகம் நிரம்பி வழிகிறது என்று எனக்குத் துப்பு கிடைத்ததாக சொன்னேனில்லையா? அது இப்போது சரியாகி விட்டது.
துரத்திக் கொண்டு வந்தார்களா?
ஆமாம்..நிறையப் பேர் – ஷெரீப்பின் தலைமையில்.
நம்மைப் பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு நெருங்கி வந்தார்கள் முட்டாள்கள்!
ஜோவுக்கு ஏக ஜாலியாக இருந்திருக்குமே –
ஆமாம்...இஷ்டத்துக்குப் புகுந்து விளையாடிவிட்டான்..ஏகப்பட்ட பேர் காலி!
மெஷின் கன்னைப் பிரித்து விட்டாயா?
ஏறத்தாழ பிரித்து விட்டேன்.
சரி..கேட்லிங் பகுதிகளைக் குதிரையில் ஏற்றுங்கள் – நாம் உடனே கிளம்புவோம்.
சற்றைக்கெல்லாம் அந்த கயவர் கும்பல் ஆற்றோரமாக விரைந்து பயணமானது.
என் மனதில் என்ன எண்ணம் இருக்கிறது தெரியுமா?
சொல்லாதே – நானே யூகிக்கிறேன்...
கொள்ளையடித்த பணம், பொருட்கள் அத்தனையையும் எடுத்துக் கொண்டு பாப்லோவிடம் போவது முட்டாள்தனம்..வேறு விதமாகச் செய்தால் என்ன...
என்ன சரிதானா?
சேச்சே...அந்த மாதிரியான நினைப்பு தற்கொலைக்கு ஒப்பானது!
ஆனால் பாப்லோவினால் நம்மைத் தேடி வந்து பிடித்து விட முடியுமா?
நிச்சயமாக...உலகின் மறு கோடிக்கே நாம் போய் ஒளிந்துகொண்டு விட்டாலும் தப்பாமல் அங்கே வந்து சேருவான்.
நீ சொல்வதும் சரிதான்...
பாப்லோவுக்கு எதிராளியின் மனதில் ஓடும் எண்ணங்களைப் படித்தறியும் ஆற்றல் உண்டு..அவனுடன் விளையாடுவது விஷப்பாம்புடன் விளையாடுவதற்கு சமம்.
பலமணிநேரம் நிற்காமல் தொடர்ந்தது அந்தப் பயணம் –
முடிவில் ஆற்றைக் கடந்து மறுகரை ஏறியது அந்தக் கும்பல்
குதிரைகளுக்கு ஒய்வு கொடுக்கப்பட்டன....
மீண்டும் தொடர்ந்தது பயணம் –
இரு பாறைகளுக்கிடையே இருந்த குறுகலான பாதை வழியே பயணமானார்கள்.
அவர்களுக்கு மிகவும் பழக்கமான பாதை அது –
அந்தக் குறுகலான பாதை வழியே சுமார் அரை மணி நேரம் தட்டுத் தடுமாறி கடந்தார்கள்.
அந்த சமவெளிப் பிரதேசம் தென்பட்டது.
சொன்னேன் இல்லையா..அதோ வந்து விட்டார்கள் டான் கொலர்மியோ..
ஷார்க்கின் மூஞ்சியில் தென்படும் உற்சாகத்தை வைத்துப் போன காரியம் பழம் என்று தீர்மானிக்கலாம்.
வாப்பா ஷார்க்..போன காரியம் பழம்தானே?
எல்லாம் சுமுகமாக முடிந்தது பாப்லோ...வணக்கம் கொலர்மியோ!
நிறைய கிடைத்ததா?
இதோ..நீங்களே பார்த்து தீர்மானித்துக்கொள்ளுங்கள்!
ஹே...படு ஜோர்தான் போ!
இதை பத்திரப்படுத்த வேண்டும்!
ஏதாவது தொல்லை ஏற்பட்டதா?
எங்களுக்கு ஏற்படவில்லை.
எங்களைத் துரத்தி வந்த ஷெரிப்பின் கும்பலிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் பதில் வேறு மாதிரி வந்திருக்கும்.
நிறையப் பேர் செத்து விட்டார்களா?
சரியாகத் தெரியவில்லை...முதல் ரவுண்டு சுட்டவுடனேயே எங்களைத் துரத்தும் ஆர்வத்தைக் கை விட்டு விட்டார்கள்!
இரத்தமும்...மரணமும் – சே...நான் அங்கே இல்லாமல் போனேனே!
க்ளிக்! க்ளிக்!
வந்து அவற்றை மேஜை மீது கொட்டு ஷார்க்....கணக்கிடுவோம்!
இதோ!
ஓ..கண்ணுக்கு விருந்துதான் இல்லையா டான் கொலர்மியோ?
வாஸ்தவம்தான் பாப்லோ...எனக்கு இந்தப் பணம், தங்கம் இவற்றின் மீது எல்லாம் ஆர்வமில்லை...இவற்றை வைத்து நாம் செய்யப் போகும் காரியத்தில்தான் ஆர்வம்.
நன்றாகப் பயிற்சியளிக்கப்பட்ட சகல வசதிகளையும் பெற்ற ஒரு பெரும் படையை நாம் உருவாக்க வேண்டும்..அதன் தலைமைப் பொறுப்புக்கு ஏற்கனவே நான் ஒரு நபரைத் தேர்வு செய்து வைத்திருக்கிறேன்!
ம்ம்ம்...
கேப்டன் லாபெர்ட்டி?
ஆமாம்...அவரேதான்!
இங்கே நீங்கள்தான் பாஸ்...உங்களுக்கு யோசனை சொல்ல எனக்கு அருகதையில்லை...ஆனால் எனக்கு ஏனோ அந்த இராணுவ ஆசாமி மீது நம்பிக்கை ஏற்படவில்லை!
கேப்டன் லாபெர்ட்டி இப்போது படையில் இல்லை....விலகி வெகுகாலம் ஆகி விட்டது.
இப்போது என் உத்தரவுக்கு காத்துக் கிடக்கிறார். என் வலது கை என்று கூட சொல்லலாம்!
அவர் மீது நீ அவநம்பிக்கைக் கொண்டிருப்பதில் அர்த்தமிருக்கலாம்..ஆனால் விரைவிலேயே அவர் என் மகளை மணந்து மருமகனாகப் போகிறார் என்பதை மட்டும் நினைவில் இருத்திக் கொள்.
அவர் உன் வழியில் அநாவசியமாகக் குறுக்கிடுவார் என்கிற கவலையா உனக்கு?
அதுதான் பிரச்சினை என்றால் கவலையை விடு பாப்லோ...உன் பணி முற்றிலும் மாறிவிட்டதாக இருக்கும்...அவருடைய பாதை வேறாக இருக்கும்..
மிக்க நன்றி டான் கொலர்மியோ!
ஆனால் ஒரு வேண்டுகோள்..என் மறைவிடத்தை கேப்டனிடம் தாங்கள் ஒருபோதும் வெளியிடலாகாது!
புரிகிறது..இன்னமும் நீ அவரை நம்பவில்லையா?
ஆனால் என்னை நம்பு..நான் அதை இதுவரை அவரிடம் சொன்னதுமில்லை..இப்போதைக்கு சொல்லப்போவதுமில்லை.
அவர் மீது நம்பிக்கை இல்லை என்பதால் இல்லை என்பதால் அல்ல..என் மகளிடம் அவர் உண்மைகளை உளறி வைக்கக் கூடாதே என்பதற்காக..கிழவன் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள் அவள்.
என் இலட்சியங்களை ஒருபோதும் அவள் அங்கீகரிக்க மாட்டாள். ஆனால் என்றாவது ஒரு நாள் புரிந்துகொள்வாள்!
நேரமாகி விட்டது...நான் போயாக வேண்டும்!
கிடைத்திருப்பது எவ்வளவு பெறுமானமுள்ளது என்று தெரிந்து கொள்ள ஆர்வமில்லையா?
இல்லை பாப்லோ...உன்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது! நன்றி டான் கொலர்மியோ!

என் மீது இவ்வளவு நம்பிக்கையா....அந்த நம்பிக்கைக்கு என்றென்றும் பங்கம் வராமல் நடந்து கொள்வேன் என்று சத்தியம் செய்கிறேன்!

என் நிலத்தை அமெரிக்கர்கள் பறித்துக் கொண்டதையடுத்து நான் சமூக விரோதியாக உருவெடுத்தேன்.
ஆனால் உங்களோடு சேர்ந்தபிறகு, இன்றைக்கும் நான் எவரையும் சுட்டுக் கொல்லத் தயங்காத போதிலும் நான் ஒரு போக்கிரி என்கிற எண்ணம் எழவே இல்லை என் மனதில்..மாறாக, ஒரு நியாயத்திற்குப் போராடும் இலட்சியவாதியாகவே உணர்கிறேன்...
உன் ஆற்றலுக்கும் நீ காட்டும் ஆர்வத்துக்கும் உரிய பரிசு உரிய காலத்தில் உனக்குக் கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன் பாப்லோ!
சென்று வருகிறேன்!
போய் வா பாப்லோ!
டக்!
இதற்கிடையே –
இந்த நோட்டுக் கட்டை நான் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டால் யாருக்குத் தெரியப் போகிறது?
பளார்!
நோட்டுக் கட்டை எடுத்து மேஜை மீது போடுடா துரோகி..இல்லையேல் உயிரோடு தோலை உரித்து விடுவேன்.
என்னை மன்னித்து விடு பாப்லோ!
பளார்!
மறுபடியும் இந்த மாதிரி தப்பைப் பண்ணாதே – புரிந்ததா?
மற்றவர்களைப் போலவே உனக்கும் சம்பளம் தரப்படுகிறது. அது போதவில்லையா...ஓடிப் போய் விடு!
துரோகம் செய்ய நினைப்பவனை நான் மன்னிப்பதே இல்லை!
இந்தப் பணத்தில் நமக்கு உரிமையில்லை..கொலர்மியோவுக்கு சொந்தமானது இது. நீ விசுவாசமாக நடந்துகொண்டால் ஒருநாள் நீயும் பெரும் பணக்காரனாகலாம்.
நானொரு முட்டாள் பாப்லோ...இனி இந்த தப்பை செய்யவே மாட்டேன்!
அதுவரை எதிலும் கை வைக்கத் துணியாதே!
சில மணிநேரம் கழித்து-
டாடி திரும்பி வந்து விட்டார் - தெரியுமா?
தெரியும். தன் ராஜாங்கத்தைப் பார்க்கப் போயிருந்தார் இந்த விசுவாசமிக்க நாயை இங்கே விட்டு விட்டு!
அப்படியெல்லாம் பேசாதே மைக். என் தந்தை உன்னை நிஜமாகவே நேசிக்கிறார்!
ஆனால் என்னைத் தன்னோடு வைத்துக் கொள்ள விரும்புவதில்லையே?
அவரை உனக்குத் தெரியாது. உன்னை மாதிரி இல்லை அவர், ரொம்பப் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளக் கூடியவர்.
என் தந்தைக்கு இலட்சியக் கனவு ஒன்று உண்டு. நீ இங்கே முனைப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கையில் சில வேளைகளில் அவருக்கு தனிமை தேவைப் படுகிறது...
அதாவது ஃபாக்டரி சம்பந்தமாக நான் நச் நச்சென்று கேள்விகள் கேட்டு அவரை நச்சரிக்கும்போது – அப்படித்தானே?
அப்படித்தான்!
ஆனால் அவருக்கு நீ மிகவும் வேண்டப்பட்டவராகப் போவது உறுதி!
அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்!
ஒருவாரம் கழித்து – ஹூ வாசுகா கோட்டையில் –

ஏற்கனவே பாய்யார்ட் மற்றும் பௌவி கோட்டைகளுக்கு போய் வந்து விட்டதாக சொல்கிறாய்!
ஆமாம் கர்னல் ட்ரென்டன்!
நீ இங்கே வந்திருப்பதிலிருந்து இன்னமும் நீ எதையுமே கண்டுபிடிக்கவில்லை என நினைக்கிறேன்...
ஆமாம்..அதுதான் உண்மை!
அவ்விரு கோட்டைகளிலும் மெஷின் கன் எதுவும் காணாமல் போகவில்லை!
இங்கே உனக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என நான் நினைக்கவில்லை!
அந்த கேட்லிங் விஷயத்தில் ஜெனரலின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அவற்றை ஸ்டாக் வைத்திருக்கிறார்...
ஒரு பீரங்கி அளவுக்குப் பெரிதாக இருக்கும் ஆனால் வீரியமோ குறி வைப்பதில் துல்லியமோ போதாது.
வெடி மருந்து சிதறி சுலபமாக அசிங்கமாகிவிடும். அதனால் இயக்கத்திலும் குளறுபடி ஏற்படுவதுண்டு...இவற்றைக் கையாள பயிற்சி பெற்ற நபர்களும் குறைவுதான்.
கொடுக்க வேண்டுமே என்பதற்காக அவற்றை எங்களுக்கும் தந்திருக்கிறார்களே தவிர நான் அவற்றைப் பயன்படுத்துவதே இல்லை.
அடச்சே...பொதுமக்களின் பணம் எப்படி எல்லாம் விரயமாகிறது!!!
அவற்றைப் பராமரிக்கும் செலவை மிச்சப்படுத்த ஃபாக்டரியில் இருந்து வந்த பார்சலைக் கூட பிரிக்காமல் அப்படியே வைத்திருக்கிறேன்...
என்னோடு வாருங்கள் – காட்டுகிறேன்!
ம்ம்...பார்சல் பிரிக்கப்படாமலேயே இருந்தால் அவை துருப்பிடித்துப் போகாதா?
துருப்பிடிக்காது கார்சன்..நன்றாக கிரீஸ் தடவப்பட்டு விசேஷ உறை போர்த்தப்பட்டு புற சக்திகள் எதுவும் அதன் மீது பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் பாதுகாப்பாக உள்ளது.
பெட்டிக்கு வெளியே எடுத்தால்தான் துருப்பிடிக்கும் அபாயம் உண்டு!
கேப்டன் பார்சன்...
யெஸ் ஸார்!
ஸ்டோர் ரூம் சாவியைக் கொடு!
சாவி தேவையில்லை ஸார்...கதவு திறந்தேதான் இருக்கிறது!
திறந்திருக்கிறதா?
ஆமாம் ஸார்...சார்ஜண்ட் ஹால் ப்ரூக் பீரங்கிகளைத் துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறார் ஸார்.
ஓகோ..சரி - நீ போகலாம்.
தாங்க்யூ ஸார்!
வாருங்கள்.
மறுநிமிடம் –
சார்ஜண்ட் ஹால் ப்ரூக்!
யெஸ் சார்!
நம்மிடமுள்ள கேட்லிங்குகள் எங்கே இருக்கின்றன – காட்டு!
கேட்லிங்குகளா சார்...? உறை கூட இன்னும் பிரிக்கப்படவேயில்லையே சார்...
அது தெரியும் எனக்கு – அந்த பெட்டிகளைக் காட்டு!
கேட்லிங்குகள் எதையும் யாரும் திருடிக்கொண்டு போய் விடவில்லை என்று உறுதி செய்து கொள்ள வந்திருக்கிறார்கள்.
பைத்தியக்காரர்களைப் பார்ப்பது போலல்லவா எங்களைப் பார்க்கிறான்!
இப்பக்கமாக வாருங்கள்!
சில வினாடிகளில் –
இதோ இருக்கின்றன சார்!
நம்மிடம் எத்தனை இருக்கின்றன சார்ஜெண்ட்?
ஆறு சார்! இதோ இந்த ஆறு பெட்டிகள்தான் சார்!
ம்ம்...
சார்ஜெண்ட் அந்தப் பெட்டிகளைத் திறக்கலாமா?
வந்து...
அவர் சொல்கிறபடியே செய்...மிஸ்டர் வில்லர் சரியான சந்தேகப் பேர்வழியாக இருப்பார் போலிருக்கிறது.
கிண்டல் வேண்டாம் கர்னல்!
கேட்லிங்கின் பாகங்கள் எப்படிக் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்க விரும்புகிறேன் அவ்வளவுதான்!
சற்று நேரத்தில் நீங்கள் பார்க்கலாம்...
க்ரீச்!
பார்த்தீர்களா....?
நீங்கள் சொன்னது சரிதான். இந்நிலையில் இவை துருப்பிடிக்க வாய்ப்பேயில்லை.
சரி அடுத்த பெட்டியைப் பார்க்கலாமா சார்ஜெண்ட்?
டெக்ஸ் ஒவ்வொரு பெட்டியாக சோதனையிட்டார்.
டொம்!
ஆனாலும் உனக்கு இவ்வளவு அவநம்பிக்கை ஆகாது வில்லர்!
ம்ம்..
டொம்!
ட்ரென்டனின் கிண்டலைப் பற்றி அக்கறை கொள்ளாமல் ஒவ்வொரு பெட்டியாக காலால் எற்றிக் கொண்டே வந்தார் டெக்ஸ் –
இந்தப் பெட்டி ஏன் வேறு விதமாக ஒலிக்கிறது...?
டொக்!
சண்டாளப்பயல் – நாசமாகப் போக!   
மற்ற பெட்டிகள் எல்லாம் ஒரே மாதிரி ஒலிக்கின்றன ...
பாருங்களேன் இது மட்டும் வித்தியாசமாக ஒலிக்கிறது!
உண்மைதான் வில்லர்!
சார்ஜண்ட்...இந்தப் பெட்டியையும் கொஞ்சம் திறந்து காட்டுங்களேன்!
கர்னல்!
திறந்து காட்டு ஹால் ப்ரூக்!
தெய்வமே....!
அட அநியாயமே!
தொலைந்தது போ!
சில்லறைக் கருவிகள் நிரப்பப்பட்டிருக்கிறது!
இப்போது சொல்லுங்கள் கர்னல் சந்தேகப் பேர்வழியாக நானிருப்பதில் அர்த்தம் இருக்கிறதா இல்லையா என்று...!
எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது...
என்ன ஒரு விபரீதம்!
இதற்குத் தகுந்த சமாதானம் சொல்லவேண்டும் சார்ஜென்ட்!
நானா...? எனக்கு எதுவும் தெரியாது..
கும்!
தடால்!
வில்லர் உனக்கென்ன பைத்தியமா?
இல்லை...எப்போதும் இல்லாத அளவுக்கு புத்தி ரொம்பத் தெளிவாக இருக்கிறது.
நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ..கடைசிப் பெட்டியை நான் காலால் எற்றியபோது சார்ஜெண்டின் முகம் வெளுத்துப் போனது!
என்ன நான் சொன்னது சரிதானேடா இடியட்!
சற்று முன் நீ குளறி தடுமாறியது ஏனென்று சொல்!
அப்படியில்லை, வந்து நான்..
கும்!
டொம்!
போதும்...விடு – வில்லர்!
என் நம்பிக்கையைப் பொய் என்று மறுத்த எவனையும் நான் லேசில் விடுவதில்லை!
வில்லர் இன்னமும் முதற்கட்டத்தையே தாண்டவில்லை என்று ட்ரெண்டனுக்குப் புரியவில்லை...
எங்கிருந்து வந்து முளைத்தான் சண்டாளன்...
எழுந்து கொள் ஹால் ப்ரூக், வில்லர் அவனை ஒன்றும் செய்யாதே!
அந்தப் பெட்டி பற்றி உனக்கு என்ன தெரியும் சொல்!
இதோ பார்..இன்னொரு முறை உனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னாயோ குடலை உருவி மாலை போட்டு விடுவேன் ஜாக்கிரதை.
ஸார்...நான் வாயைத் திறக்கும் முன்பே இப்படி இவர் அச்சுறுத்தினால் எப்படி பதில் சொல்வது?
வில்லர் உன் மீது கை வைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் இந்த ஸ்டோருக்கு நீதான் பொறுப்பதிகாரி. பெட்டியிலிருந்த கேட்லிங் மாயமாக மறைந்தது எப்படி? அந்த இடத்தில் உபகரணங்கள் வந்து சேர்ந்தது எப்படி? என்று வியாக்கியானம் தர நீ கடமைப்பட்டிருக்கிறாய்!
என்னை நம்புங்கள் சார்...உண்மை சற்றுமுன் வெளிப்பட்டபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை ஸார்!
எக்ஸ்க்யூஸ் மீ...நான் குறுக்கிடலாமா?
தாராளமாக!
இப்படித்தான் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன்.
கும்!
மடார்! கிராஷ்!
அங்கே என்னதான் நடக்கிறது ஸார்!
ஹால் ப்ரூக் ஹாஸ்பிடலுக்கு போக வேண்டிய நெருக்கடி ஏற்படுமுன் அவனை கொண்டு போய் ஜெயிலில் அடைத்து வை கேப்டன்!
ஸார்..வந்து ஜெயில் என்று சொன்னீர்கள்..
ஆமாம்...ஜெயிலில் போட்டு வை இவனை!
காரணம் புரியாமல் குழம்பி நின்றார் கேப்டன்.
வில்லர் நீ என்னோடு என் ஆபீஸுக்கு வா...உன்னை நான் சும்மா விடப் போவதில்லை!
ஐயோ..என்ன செய்யப் போகிறாய் என்னை..
பிரச்சினை முற்றிக் கொண்டு போகிறது!
ட்ரென்டன் சொல்வதும் சரிதான் டெக்ஸ்...
வரம்பு மீறிப் போய் விட்டாய்!
உன் கேள்விகள் தொலைகிறது வில்லர் அவனை பெற்றவளே வந்தாலும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு நொறுக்கித் தள்ளிவிட்டாயே – சரியா?
இரண்டு கேள்விகள் கேட்டது தப்பாகிவிட்டதா என்ன?
சரியான எத்தன்...அண்டப் புளுகன் – இம்மாதிரி ஈனப் பிறவிகளை பெண் இவளும் பெற்றிருக்க மாட்டாள்..
ஹூம்...யார் யார் தலை உருளப் போகிறதோ?
குடிக்கலாமா?
என்ன கேள்வி இது கர்னல் வேண்டாம் என்று நாங்கள் ஒருபோதும் சொல்வதில்லை!
என்ன நாடகம் இது கர்னல்?
அங்கே நான் சொன்ன வார்த்தைகளை வைத்துக் கேட்கிறாயா...
ஆமாம்.
கேப்டன் பார்சனுக்கு முன்னால் என் ஆட்களை விட்டுக் கொடுக்காமல் பேச வேண்டிய நெருக்கடி எனக்கு இருந்ததே ..உன் நலத்துக்காக!
உங்கள் நலத்துக்காக...
சியர்ஸ்!
உட்காருங்கள். ஹால்ப்ரூக்குக்கும் இதற்கும் நேரடி சம்பந்தம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
கூட்டுக் களவாணிப்பயல் அவன்!
இன்னும் கொஞ்சம் எனக்கு நீங்கள் வாய்ப்பளித்திருந்தால் உண்மையை உளற வைத்திருப்பேன்!
அந்த வழிமுறையை நான் அங்கீகரிக்க முடியாது!
ஓ.கே. அவன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் உண்மையை அவனே வெளிப்படுத்தப் போகிறான்...அப்படியொரு வழிமுறை இருக்கிறது!
என்ன அது?
என் திட்டத்துக்கு நீங்கள் சம்மதித்தால் இன்றிரவே அந்த நாடகத்தை நாம் அரங்கேற்றிவிடலாம்.
அன்றிரவு-
சார்லி நீ நாசமாகப் போக...என்னைப் பட்டினி போட்டு விட்டாயோ என்று பயந்து விட்டேன்.
தவறு என்னுடையதல்ல சார்ஜண்ட்.
உத்தரவுப் படிதான் நான் நடந்து கொள்கிறேன்!
முட்டாள்...திறப்பு வழியாக உணவுத் தட்டை உள்ளே கொடுக்காமல் கதவைத் திறந்து கொண்டு வந்து நிற்கிறான்.
தட்டை அங்கே வைக்கட்டுமா...
மேஜை மீது வை!
உள்ளே இருப்பது நீ என்று கூட எனக்குத் தெரியாது. இம்முறை என்ன தப்பு செய்தாய்..
அரிய வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்காது.
கேப்டனை மறுபடியும் எதிர்த்துப் பேசினாயா?..அஹ்...
சுதந்திரம்!
யாருமில்லை...
அங்கே நிற்கிறவன் சாண்ட்லர் – அவனுடைய பார்வையில் படாமல் ஓடிப் போய் விட வேண்டும்.
லாயத்துக்குப் போய்விட்டால் தப்பி விடலாம்...
அஹ்..
கூச்சல் போடாதே!
இது எனக்கு வேண்டும்!
அந்த மடையர்கள் விழித்தெழுமுன் நான் விரைய  வேண்டும்.   
கனைத்து விடாதே..புண்ணியமாகப் போகும்!
சில நிமிடங்களுக்குப் பின் –
கதவைத் திற பாப்!
சார்ஜண்ட் ஹால்ப்ரூக். என்ன இது?
விலகு அப்பால்
மேலே பேசாமல் கதவை திறங்கள்!
பிரச்சினையைத் தவிர்க்க உங்களுடைய ரைபிள்களை என்னிடம் ஒப்படையுங்கள்..
சமர்த்துப் பசங்கள்!
ஆனால் நான் இப்போதும் இராணுவத்தில் இருந்தால் இந்தத் தப்புக்கு உங்களை அரெஸ்ட் செய்யச் சொல்லி இருப்பேன்...
ஆனால் சார்ஜண்ட் ஹால்ப்ரூக் தன் வேலையை விட்டு பல நிமிடங்களாகி விட்டன.
இனி இந்த ரைபிள்கள் வெட்டிச் சுமை...
அப்போது கோட்டையின் பிரதான கதவுக்கு அருகே மூன்று உருவங்கள் இருட்டிலிருந்து வெளியேறின...
வில்லர்...எல்லாமே நீ திட்டமிட்டபடி நடந்தேறி விட்டது – கிடைத்த வாய்ப்பை ஹால்ப்ரூக் நழுவ விடவில்லை.அவன் இப்படி ஓடிப் போனதே குற்றத்தை நிரூபிப்பதாக உள்ளது.
இனி நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவனைப் பின் தொடர்ந்து சென்று எங்கே போகிறான் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
அவ்வப்போது எனக்கு நிலவரத்தை தெரியப் படுத்து வில்லர்.
நிச்சயமாக.
கிளம்பு கிட்...
அவனைப் பார்வையிலிருந்து தப்பவிடாத அளவுக்கு நெருக்கமாக போய்க் கொண்டிருப்போம்.
அவன் சுலபத்தில் நழுவ முடியாது.
ஒரு வார கடுமையான முயற்சிக்குப் பின் விடை கிடைக்கவிருக்கும் சமயத்தில் கோட்டை விட்டு விடுவேனா என்ன? 
கேட்லிங்கை தாரை வார்த்துக் கொடுத்தவன் இவன்தான் என்கிறாய்.
அதில் உனக்கு சந்தேகமா என்ன?
பக்கம் 101
இது எவ்வாறு அவனுக்கு சாத்தியமாயிற்று? பாக்கெட்டில் போட்டு மறைத்து எடுத்துக் கொண்டு போகிற மாதிரியான சின்ன கருவி இல்லையே?
வேறு சில உபாயங்கள் எல்லாம் இருக்கின்றன நண்பா!
ஹால்ப்ரூக் தான் ஆயுதங்களை பராமரிக்கும் பொறுப்பதிகாரி. பழுதுபட்ட ஆயுதங்களை சரி செய்ய வெளியே, அவற்றை அவன் அனுப்ப முடியும்..
கேட்லிங்குகளை பிரிக்கவேயில்லையே..பின்னே எப்படி பழுதடையும்?
வேண்டுமென்றே அதன் பாகங்களைத் தோண்டி பழுதடைந்த மாதிரி காட்டியிருக்கலாம்.
மிலிட்டரி சிஸ்டம் பற்றி என்னை விட உனக்கு நன்றாகத் தெரியுமே... தேவைப்படுவதெல்லாம் ஒரு கையெழுத்து ஒரு முத்திரை – யாரும் எந்தக் கேள்வியையும் கேட்கமாட்டார்கள்.
ரைபிள் மாதிரியான ஆயுதங்கள் செல்லும் பெட்டியில் பிரிக்கப்பட்ட கேட்லிங்கை அனுப்புவதில் கஷ்டமேயிராது. விலாசம் பழுது நீக்கும் ஒர்க் ஷாப் ஒன்றின் பெயர். எடுத்துச் சென்றவன் அவனுடைய கூட்டாளிகளில் ஒருவனாக இருக்கலாம்.
இப்போது அந்த கேட்லிங்கினை வைத்து ஜனங்களை மிரட்டி கொன்று கொள்ளையடித்து வரும் கும்பலை சேர்ந்தவன் எவனோ அப்படித்தானே?
சமூக விரோத கும்பலின் மறைவிடத்தை நோக்கித்தான் இவன் போவான் என்று நம்புகிறாயா?
நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்தான் அது நடக்கும்.
அநேகமாக அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபரின் வீட்டுக்குப் போய் அங்கே சில தினங்கள் பதுங்கிக் கிடக்க அவன் பிரியப்படலாம்....
அந்தப் புது ஆசாமி மீது கண் வைத்திருந்தால் கும்பலின் மறைவிடத்தை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டலாம்...
உண்மைதான்...ஆனால் தாமதத்தை நாம் தவிர்க்கப் பார்க்க வேண்டும்!
ஹால்ப்ரூக்கை மேலும் அரை மணி நேரம் பின் தொடர்ந்தார்கள்.
நாம் கொஞ்சம் மெதுவாகவே போகலாம். அவன் நோகாலெஸ் நோக்கிப் போகிறான்...அங்கே அவன் சுலபத்தில் நம்மிடமிருந்து கழற்றிக் கொண்டு போக முடியாது. நாம் பின் தொடர்ந்து வருவது அவனுக்குத் தெரியவே கூடாது. இல்லையேல் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாகி விடும்.
வாஸ்தவம்தான்!
மறுநாள் காலை நோகாலெஸில்...
நான் சொன்னேனில்லையா? அவனுடைய குதிரை இதோ நிற்கிறது பார்!
ம்ம்...
இன்னமும் வியர்வை அடங்கவில்லை...அவன் சற்று முன்னர்தான் வந்து சேர்ந்திருக்க வேண்டும்.
சார்ஜெண்ட் ஹால்ப்ரூக் பற்றியா நீங்கள் பேசுகிறீர்கள்?
ஏன் அவனை உனக்குத் தெரியுமா?
ஹூவாசுவா கோட்டையிலுள்ள அத்தனை போரையும் எனக்குத் தெரியும். அதிலும் குறிப்பாக இங்கே வந்து குடித்து கும்மாளமிட்டுப் போகிற நபர்களை நன்றாகவே தெரியும்.
குடித்துக் கும்மாளமிட ஏற்ற இடம் இங்கே எது?
“கிரீன் ஸ்டார்!” அங்கே மதுவகைகள் தரமாக இருப்பதோடு அழகிகள் பலரை சந்திக்கும் வாய்ப்பும் உண்டு!
ஹால்ப்ரூக் சாவகாசமாக இருக்கிறானா...அல்லது...
சரியாகக் கேட்டீர்கள்...    
ஹால்ப்ரூக் ரொம்ப உல்லாசமான பேர்வழிதான்....ஆனால் இன்று ஏனோ ஏதோ பிசாசு அவனைத் துரத்திக் கொண்டு வருகிறமாதிரி கலவரப்பட்டுப் போயிருந்தான்.
நூற்றுக்கு நூறு சரி....
இந்தா பணம் எங்களுடைய குதிரைகளை நன்றாகப் பார்த்துக் கொள்.  
ஹால்ப்ரூக்கைத் துரத்திக் கொண்டு அலையும் இரண்டு பிசாசுகள் நாங்கள்தான்!
சற்று நேரம் கழித்து –
அவன் இங்கே இருப்பான் என்று எதிர்பார்க்கிறாயா?
இங்கே வந்திருப்பான்...ஆனால் இன்னமும் இங்கேயே இருப்பானா என்று தெரியவில்லை.
தேடிப்பார்ப்போம்!
அடிசக்கைன்னானாம்!
என்ன கிட் வாயைப் பிளக்கிறாய்...?
லாயக்காரன் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. அங்கே நிற்கும் பெண் பேரழகிதான் இல்லையா?
உம்ம்...மனத்தைக் கட்டுப் படுத்து கிட். நாம் இங்கே வந்திருப்பது சுகிப்பதற்கு அல்ல...
ம்ம்...
அதைப்பற்றி பேசக்கூடக் கூடாதா?
பேசலாம்...ஆனால் அத்தோடு நிறுத்திக் கொண்டுவிட வேண்டும்.
போட்டவுடன் ஜிவ்வென்று எகிறுகிற மாதிரி ஏதாவது ஸ்பெஷலாக ஊற்றிக் கொடப்பா....
எனக்கு முதலில் கொடு – நான் இங்கே வாடிக்கையாக வருகிறவன்!
விடாதே ஜிம்...
எங்களுக்குப் பிறகுதானேடா நீ வந்தாய்...
உன் வீரப் பிரதாபங்களை எல்லாம் அந்த மேனா மினுக்கியிடம் வைத்துக் கொள்!
கேட்டாயா ஜிம்...மேனா மினுக்கி என்கிறான் என்னை!
நீ சொன்ன வார்த்தைகளை வாபஸ் வாங்கிக் கொண்டு இந்த அழகியிடம் மன்னிப்புக் கேள் கிழவா...
இல்லையேல் உன்னை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவேன்!
கொஞ்சம் பொறு இளைஞனே!
முதலில் விஸ்கியைக் குடிக்க விடு என்னை...
சரி..இனி வைத்துக் கொல்லலாமா – நீ ரெடியா?
இந்தா... அஹ் சத்! கும்! ஏய்...இங்கே என்ன கலாட்டா? சண்டாளா! தடதட்! மடல்! தடால்!
இது போதுமா...இல்லை இன்னும் வேண்டுமா...
உன்னை நான் என்ன பண்ணுகிறேன் பார்!
அண்ணன் என்ன பண்ணுவதாக உத்தேசம்?
கும்!
அடிப்பதற்கு அல்ல குடிப்பதற்கு தான் பாட்டில்கள் முட்டாள்!
ஸ்...ஆபத்து – விலகு!
நாசமா போறவனே...
டமார்ர்!
இப்படித்தானா குறி வைக்கிறது...சொதப்பி விட்டாயே?
இப்போது பார்...இது எப்படி இருக்கிறது..
கும்!
இரண்டு பேரும் ரொம்பவும்தான் துள்ளுகிறார்கள்.
வாருங்கள் உதைத்து வெளியே தூக்கி எறிவோம்உச்சக்கட்டம் வந்திருக்கிறது – ஜாக்கிரதை.
நெருங்கி வரட்டும் விடியற்காலையிலேயே இவ்வளவு கூத்து என்றால் இரவில் ஆட்டம் படு ஜோராக இருக்கும் போலிருக்கிறதே!
கும்! கும்!
பேசிக் கொண்டிராதே எதிர்த்துத் தாக்கு!
பின்னே நான் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று நீ நினைத்தாய்?
கும்!
க்ராஷ்ஷ்!
மறுபடியும் நாற்காலித் தாக்குதலா?
காலில் உதைத்தால் நாற்காலி என்னுடையதாகி விடும்!
சத்!
மடார்!
பிடித்துக் கொண்டு விட்டேன் – ஓடி வாருங்கள்!
விடுடா..சனியனே...குதிரை என்று நினைத்து விட்டாயா என்னை...
சத்!
இந்தா...இந்த குத்தையும் வாங்கிக் கொண்டு அப்புறமாகக் கீழே விழு!
கும்!
ஆஆஹ்!
வலுவாகத் தாக்கு கிட்..! லேசாகத் தட்டினால் பயல்களுக்குப் புரியாது!
உத்தரவு கமாண்டர்!
ணங்! கும்!
இது போதுமா சொல்?
என்னைப் பார்த்துக் கற்றுக் கொள்!
போதும் – நிறுத்துங்கள்!
அட..யாரது – கிட்! யாரென்று பாரேன்...
த்சொ...சீருடையில் இல்லாததால் சட்டென்று அடையாளம் தெரியவில்லை!
என்னை இப்போதாவது கீழே விடலாமில்லையா?
உன் நல்ல நேரம்!
தொலைந்து போ!
பொத்!
வில்லர்! கார்சன்!
ஹலோ கேப்டன் லாபெர்ட்டி!
இங்கே நீங்கள் போட்ட ஆர்ப்பாட்டம் தூக்கத்திலிருந்த என்னைத் தூக்கி வாரிப் போட்டு விட்டது!
ஆரம்பித்தது நாங்களில்லை!
நடந்தது என்னவோ நடந்து விட்டது..எல்லாவற்றையும் மறக்க ஊற்றிக் கொள்வது ஒன்றுதான் சரியான தீர்வு
எல்லோரும் பாருக்கு வாருங்கள் – மொத்த செலவும் என்னுடையது.
அருமையான யோசனை!
எல்லோரும் பாருக்குப் போகலாம் வாருங்கள்!
இங்கே அமர்ந்து கொள்ளலாம் கேப்டன்!
கேப்டன் இல்லை வில்லர் .. நான் பதவி விலகி விட்டேன்!
அதனால்தான் நீ கோட்டையில் தென்படவில்லையா..
ஹூவாசுகா கோட்டைக்குப் போயிருந்தீர்களா என்ன?
நேரே அங்கிருந்துதான் வருகிறோம்!
ஏன் படையிலிருந்து விலகி விட்டாய்....தகுதியற்றவன் எல்லாம் தலைக்குமேல் இருந்து ஆட்டிப் படைக்கிறான் என்றா...
அது ஒரு நீண்ட கதை கார்சன் –
சரி. நீங்கள் இங்கே வந்திருப்பது ஏன்.../
ஒரு ஆளைப் பின் தொடர்ந்து வந்தோம். அவனை உனக்கும் தெரியும் என நினைக்கிறேன்.      
சார்ஜெண்ட் ஹால் ப்ரூக்!
ஹால் ப்ரூக்....! அவனை நீங்கள் பின் தொடரக் காரணம்....
சொல்லலாமா டெக்ஸ்?
தாராளமாக!
நடந்ததை டெக்ஸ் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
அவன் இங்கேதான் இருக்கிறான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டீர்களா?
அதற்கு எங்கே அவகாசம் இருந்தது? நாங்கள் வந்த உடனே அமளி துவங்கி விட்டது. உடனடியாக நாங்கள் வந்த காரியத்தை கவனிக்க வேண்டும். இல்லாவிடில் பயல் நழுவி விடுவான்.
கேலிக் கூத்தாகி விடும்.
ஆனால் அப்போது டெக்ஸ்சும் கார்சனும் நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கத்தில் ஹால்ப்ரூக் இருந்தான் –
நாசமாகப் போக...என்னை எப்படிக் கண்டு கொண்டார்கள்.
இவர்கள் என்னைத் தேடியலைந்து கொண்டிருக்கையில் நான் வெளியேறி எங்கேயும் போக முடியாது!
அவர்களைத் தீர்த்துக் கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.
ஜாக்கிரதை!
டுமீல்! கிராஷ்!
நாசமாகப் போக!
டுமீல்! தென்பட்டானா? ம்ம்... ஆ! க்ராக்!
ஆஆஹ்!
ஆட்டம் முடிந்தது!
தொலைந்தான்!
இவன் ஹால் ப்ரூக்!
யெஸ்!
நம்மைத் தீர்த்துக் கட்ட முற்பட்டிருக்கிறான்!
ஒருவேளை அவனுடைய இலக்கு நானாகவும் இருக்கலாம்..
அதெப்படி?
அப்படித்தான்!
உங்கள் நோக்கமும் என் நோக்கமும் ஏறத்தாழ ஒன்றேதான்!
சார்ஜெண்ட் ஹால்ப்ரூக் அல்லவா இவன்?
ஆமாம்..ஹூவாசுகா கோட்டையில் இருந்து வந்த ஆசாமி!
அவரேதான்!
நெட்..உடனே வரச் சொல்லி ஷேரீப்புக்குத் தகவல் கொடு!
உடனே ஏற்பாடு செய்கிறேன் கேப்டன்!
ஷெரீப்பிடம் பேசிவிட்டு பிறர் இடையூறு இல்லாத ஒதுக்குப் புறமாகப் போய் நாம் உரையாடலாம்! 
உன்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை லாபெர்ட்டி. உன் நோக்கம்தான் என்ன?
அதைச் சொல்லத்தான் ஒதுக்குப்புறமாகப் போவோம் என்றேன். ஏனென்றால் யார் காதிலாவது அது விழுந்தால் ஆபத்தாகிவிடும்.
கேட்டாயா கிட்....ராஜாங்க இரகசியம்.
கிண்டலுக்காக அப்படி நீ சொன்னாலும் உண்மை ஏறத்தாழ அதுதான் வில்லர்!
எந்த சூழ்நிலையில் ஹால்ப்ரூக்கின் மரணம் சம்பவித்தது என்று ஷெரீப்புக்கு விளக்கிவிட்டு, இரு தோழர்களும் லாபெர்ட்டியோடு தத்தம் குதிரைகளில் நகரைவிட்டு வெளியேறினர்.
நெடிய பயணத்திற்குப் பின்...
இப்போது சொல் லாபெர்ட்டி உன் இரகசியங்களை...
அதற்காகத்தானே இங்கே கூட்டி வந்திருக்கிறேன்!
நான் படையை விட்டு விலகி விடவில்லை என்று நீங்கள் தெரிந்து கொள்ள  வேண்டும்.  என் மேலதிகாரிகளின் திட்டப்படி நான் ஆடிய நாடகம் அது.
அட ஆண்டவா...
புலனாய்வில் நான் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள அப்படியொரு நாடகம் அவசியப்பட்டது.
நான் மேற்கொண்டிருக்கும் புலனாய்வும், நீங்கள் மேற்கொண்டிருக்கும் புலனாய்வும் அடிப்படையில் ஒரே விஷயத்தைப் பற்றியதுதான்.
கேட்லிங் கும்பல் பற்றி உனக்கும் தெரியுமா என்ன?
நிறையவே தெரியும் வில்லர்...கேட்லிங்கை வைத்துக் கொண்டு பொது மக்களிடையே பீதியை விதைத்துக் கொண்டிருக்கும் கும்பலின் பின்னால் பாப்லோ கான்ட்ரோஸின் பலமும் டான் கொலர்மியோவின் சாணக்கியமும் இருப்பது எனக்கு உறுதிபட தெரிய வந்துள்ளது.
பாப்லோ ஊரறிந்த கேடிப்பயல்...யார் அந்த டான் கொலர்மியோ?
கேள்விப்பட்டதேயில்லையே?
செல்வாக்குமிக்க செல்வந்தர். நோகாலெஸுக்கும் பிஸ்பீக்கும் இடையே எங்கோ தன் பாசறையை அமைத்துக் கொண்டிருக்கிறார்...அவருடைய மகள் ஒரு நாட்டிய நிகழ்ச்சியின்போது எனக்கு அறிமுகமானாள்.
அவளுடன் நான் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு என்னை அவள் தன் தந்தையிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள்.
திருமணம் செய்துகொள்ளும் உத்தேசமோ?
கிண்டலடிக்காதே கார்சன். விஷயம் இதை விட சிக்கலானது.
சரி மேலே சொல்!
டான் கொலர்மியோவை நான் சந்தித்தபோது, அவருடைய ஒரே மகளின் மீது நான் கொண்டிருந்த பிரியத்தைப் புரிந்து கொண்டவர் என் பதவியைப் பற்றி நுணுக்கமாகக் கேட்டறிந்ததோடு முடிவில் பதவியை விட்டுவிட்டு வந்து தனக்கு வலது கரமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஹே! என்ன ஒரு ஆள்!
அவருக்கு நீ என்ன பதில் கொடுத்தாய்?
அவருடைய கோரிக்கை நன்றாகவே இருந்தபோதும் அதுபற்றி யோசித்து ஒரு முடிவுக்கு வர அவகாசம் வேண்டும் என்று சொன்னேன்.
நான் நிச்சயம் சம்மதிப்பேன் என்கிற தெனாவட்டில் என்னை தங்களில் ஒருவனாக எண்ணிவிட்ட டான் கொலர்மியோ தன் திட்டத்தை வெளியிட்டார். அதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.
ஒரு நாள் என்னை தன் தனியறைக்குள் அழைத்துச் சென்று அமெரிக்க நாட்டின் வரைபடத்தை காட்டி –
இங்கே பார் லாபெர்ட்டி..கிலா ஆற்றில் இருந்து மெக்ஸிகோ எல்லை வரையிலான நிலப்பரப்பு ஒரு காலத்தில் எனக்கு சொந்தமாக இருந்தது.
என்ன உங்களுக்குச் சொந்தமாக இருந்ததா?
ஆமாம்...ஸ்பெயின் நாட்டு அரசருக்கும், என் மூதாதையர்களுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி அதுதான் உண்மை. இந்தப் பத்திரங்களே சான்று!
மேற்கொண்டும் சில தகவல்களை ஆதாரப்பூர்வமாக எனக்கு விளக்கினார்.
1848 பிப்ரவரி 2ல் முடிவுக்கு வந்த அமெரிக்க மெக்ஸிகோ யுத்த முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்திலும் இது உருது செய்யப்பட்டிருக்கிறது.
அந்த ஒப்பந்தப்படிதான் பிற பகுதிகளோடு அரிசோனாவும் அமெரிக்காவுக்கு சொந்தமானது.
அன்று –அதாவது 1848ல் அரிஸோனாவின் எல்லை இன்றுள்ளது போல இல்லை. கிலா ஆறுவரை வியாபித்திருந்தது.
ம்..
அதாவது உங்களுடைய நிலம் மெக்ஸிகோவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது...
கரெக்ட்...எனவே, என் நிலத்தின் மீதான என் ஆதிக்கத்தை யாருமே மறுக்கவில்லை...
ஆனால் 1853 ல் பிரச்னை ஆரம்பமானது.
அந்த ஆண்டில்தான் மெக்ஸிகோவின் சர்வாதிகாரி சாண்டா தன் ஆடம்பர செலவிற்கு பணம் தேவை என்று மெரிடியன் பேசினை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டார்.
எல்லைக் கோடு இதன் காரணமாக இடம் மாறியது!
மெக்ஸிகோ அரசிடமிருந்து நஷ்ட ஈடு கோரினீர்களா?
வங்கிக் கொண்டு நிலத்தை விட்டுக் கொடுத்து விடுவதா...நோ! நோ!இன்னமும் அந்த நிலத்தின் மீது உரிமை கொண்டாடுகிறீர்களா?
அதில் என்ன தப்பு...அது என்னுடைய நிலம்.
என் உரிமையை நிலை நாட்ட இந்த பத்திரங்களை வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளிடம் நான் காட்டியபோது கேலியாக நகைத்தார்கள்!
ஆணவக்காரர்கள் சிரித்துவிட்டுப் போகட்டும். என் நிலத்தை எப்படியாவது மீட்பது என்று தீர்மானித்தேன்.
எப்படி?
என் பிரத்யேக படை பலத்தைக் கொண்டு!
என்ன தமாஷ் இது – டான் கொலர்மியோ?
தமாஷா இல்லையா என்று பொறுத்திருந்து பார்....
சிறிய ஆனால் வீரிய மிக்க என் படையைக் கொண்டு இப்பகுதியில் உள்ள சில கோட்டைகளைக் கைப்பற்றி நான் யார் என்று அந்த அமெரிக்கர்களுக்குப் புரியவைப்பேன்.
இப்போதுள்ள நிலவரப்படி மெக்ஸிகன் அரசு என் முயற்சியை ஆதரிக்கும்...இந்த சிறு துண்டு நிலத்துக்காக இன்னொரு எல்லை யுத்தமா என்று அமெரிக்காவும் விட்டுக் கொடுத்து விடும்...
இந்த முயற்சியில் நீ என் தரப்பில் ஒத்துழைக்க வேண்டும் – செய்வாயா கேப்டன் லாபெர்ட்டி?
சுத்த பைத்தியக்காரத்தனம்!
நீ என்ன பதில் தந்தாய்?
சரி என்றேன்!
அது என் கடமை..அவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள அவருக்கு அருகில் இருப்பதுதான் விவேகம் என்று கணக்குப் போட்டேன்!
கர்னல் ட்ரென்டனிடம் இதுபற்றி நான் பேசினேன். அவர் தன் மேலதிகாரிகளிடம் இது பற்றிப் பேசினார். அனைவரும் சம்மதித்தனர்.
முறைதான்!
இந்தக் கட்டத்தில்தான் நீ அவரோடு ஒட்டிக் கொண்டாயோ?
ஆமாம்!
ஆனால் அவர் என்னை அன்றும் சரி; இன்றும் சரி நம்பவில்லை!
எவ்வாறு படை திரட்டப் போகிறீர்கள் என்று நான் கேட்டதற்கு  பணத்தால் ஆகாதது எதுவுமில்லை. பணத்தை எங்கிருந்து பெறுவது என்று எனக்குத் தெரியும் என்றார்.
விரைவிலேயே ஒரு வழிமுறையை அவர் கண்டுபிடித்தார். பாப்லோவின் தலைமையில் இயங்கும் கேட்லிங் கும்பலை அனுப்பி குறுக்கு வழியில் – கொள்ளை கொள்ளையாகப் பணம் திரட்டினார்.
பாப்லோ ஒரு சுதந்திரக் காட்டு விலங்கு...அவனுக்கு ஏனோ இவரது இலட்சியத்தின் மீது முழு மூச்சான ஈடுபாடு!
கேட்லிங் கும்பல் கொலர்மியோவுக்காக பாடுபடுகிறது என்று உறுதியாக நீ நம்புகிறாயா?
துளி சந்தேகமும் கிடையாது.
ஆனால் அவ்வுன்ன்மையை போகப்போகத்தான் தெரிந்து கொண்டேன். ஏனெனில் பாப்லோ சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இவர் என்னை நம்புவதேயில்லை.
சமீப காலம் வரை இவர்கள் எங்கிருந்து கேட்லிங்கைக் கடத்தி வந்தார்கள் என்று கூடத் தெரியாது. இன்றைக்கும் அவர்களுடைய மறைவிடம் எதுவென்று தெரியாது எனக்கு.
அது – அவருடைய தொழிற்சாலையில் இல்லையா?
நல்ல தமாஷ் போங்கள்!
என்னை எப்படி ஓரம் கட்டி வைத்திருக்கிறாரோ அதே போல தன் மகளுக்கும் தன்னுடைய செயல்பாடுகள் தெரியாதவாறு இரகசியமாக வைத்துக் கொள்கிறார்.
தன் நிலத்தை மீட்பது பற்றிய தன் இலட்சியத்தைக் கூட அவர் தன் மகளிடம் வெளியிட்டதில்லையா?
தன் செல்ல மகளிடம் அது ஒரு நிறைவேறாத கனவு என்பதாகக் காட்டிக் கொள்வாராம். அவளும் ஐயோ பாவம் என அங்கலாய்ப்பாளாம்.
டானின் இலட்சியமோ, கனவோ எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் கண்ட இடங்களில் மரணத்தை விதைத்து விட்டுப் போகும் கேட்லிங் கும்பலை அப்படியே விட்டு விட முடியாது.
அவர்களுக்கு எதிராகத்தான் நான் போராடிக்கொண்டு இருக்கிறேன் வில்லர்.
உங்களுடைய முயற்சியை சுலபமாக்க நான் உதவிட முடியுமென்று நம்புகிறேன்.
மேலே சொல்!
பாப்லோவின் ஆட்களில் ஜே.கே. என்று ஒருவன் இருக்கிறான், பாக்டரிக்கும் கயவர் கும்பலின் மறைவிடத்துக்கும் வந்து போய்க் கொண்டிருப்பவன் இவன்.
கணவாய்ப் பகுதியிலுள்ள அவர்களுடைய மறைவிடத்தை அவன் மூலமாக கண்டுபிடித்துவிட முடியும் என்று நம்புகிறேன்.
கணவாயா?
சீக்கிரமே அதற்கான முயற்சியை நீ துவங்க வேண்டும் லாபெர்ட்டி!
அது சுலபமல்ல வில்லர்...பாப்லோ ஒரு கொடிய மிருகம். ஜேகேக்கு அவன் என்றால் சிம்ம சொப்பனம்.
அவனை எப்படியாவது சரிக்கட்ட வேண்டும்.
எவ்வளவு கொடிய மிருகமாக இருந்தாலும் அதை ஒடுக்கவும் ஒரு வழி இருக்கும்.
ஜேகேயை நீ மீண்டும் சந்திப்பாயோ?
ஆமாம்...இன்னும் சில தினங்களில் – இங்கே நோகாலெஸில்தான் இருக்கிறான்.
அவனை நீ சம்மதிக்க வைக்க வேண்டும் லாபெர்ட்டி. அந்த கயவர் கும்பலின் முடிவு காலம் சீக்கிரமே வந்து விடும் என்றும், அவர்களைக் கண்டுபிடிக்க அவன் உனக்கு உதவி செய்தானேயானால் இராணுவத்தினரிடமிருந்து அவனை நீ காப்பாற்ற முடியும் என்றும் சொல்..சீக்கிரமே ஏதாவது உபாயம் செய்து அவனை வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்...
ஒரே ஒரு உபாயம்தான் – பணம்; வில்லர், பணம்!!!
சென்ற சந்திப்பின்போது பாப்லோவின் சொத்தில் ஒரு பங்கு அவனுக்குக் கிடைக்கும் என்று ஆசை காட்டினேன். அவனுக்கு சபலம்தான்.
நல்ல நேரம்...
நமக்கு எதிராகப் போய்விடமாட்டானே?
அந்த சந்தேகமே வேண்டாம்.
அவர்களுடைய மறைவிடம் மெக்ஸிகன் எல்லையினுள் இருப்பதாகத் தெரிகிறது. ட்ரென்டனின் உதவியை நான் கோருவதாக இருந்தாலும் கூட அவரால் செய்யக் கூடியது எதுவுமில்லை!
ஆனால் அந்தக் கஷ்டம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திரப் பறவைகள். எங்கும் போகலாம் – வரலாம்!!
ஆமாம்!
கிரீன் ஸ்டாரில் எங்களுக்கு ஒரு அறை கிடைக்குமா லாபெர்ட்டி?
கிடைக்கலாம்.
கிடைத்தால் நல்லது...அடிக்கடி தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.
நாங்கள் ஜேகேயுடன் பேசுவதில் பிரச்சினை ஏதும் வருமா?
வராது...
ஆனால் நான் அவர்களிடம் உங்களைப் பற்றிய விபரங்களை முதலில் சொல்லிவிடுவது நல்லது.
ஓ.கே.
கிரீன் ஸ்டாரில் ஒரு அறையை அமர்த்திக் கொண்டதும் அடுத்த இரு தினங்களுக்கு அவர்கள் உருப்படியாக எந்தக் காரியமும் பண்ணவில்லை..
லாபெர்டியின் ஆசாமி வருவதை எதிர்பார்த்து மதுபானக்கடையில் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் நாள் இரவு ஜேகே வந்து சேர்ந்தான். ஆட்டம் முடிய வெகு நேரம் ஆகுமோ வில்லர்...?
இல்லை...ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது.
ஆட்டம் முடிந்ததும் என்னோடு வர முடியுமா?
ஓ....ஷ்யூர்!
ஏதாவது செய்தி உண்டா?
ஆமாம்..அது பற்றி பேசத்தான் அழைக்கிறேன்.
நாம் உத்தேசித்த படி ஒரு ஒப்பந்தத்துக்கு வரும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது..
இதோ கிளம்பிவிட்டேன்.
கொஞ்ச தூரம் காலாற நடந்தால் சற்றுமுன் சாப்பிட்ட உணவு சுலபமாக செரிக்கும்..
இருபது நிமிடங்களுக்குப் பின் ஒரு சிறு குடிசையில் –
நான் சொன்னேனே...அந்த நண்பர்கள் இவர்கள்தான் ஜேகே – வில்லர்....கார்ஸன்!
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
ஹலோ!
அவர்களை இப்படி நீ சந்தேகக் கண்ணோடு பார்க்கத்தேவையில்லை!
ஓகே!
கேப்டன் சொல்வது சரியே...பாப்லோவின் மறைவிடத்தை எங்களுக்கு காட்டி விட்டு நீ காணாமல் போய் விடலாம்.  
என் பங்குக்குரிய பணம்?
அந்த விவகாரம் உனக்கும் லாபெர்ட்டிக்கும் இடையிலானது. எங்களுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை.
ஆமாம், அந்தப் பொறுப்பு என்னைச் சார்ந்தது ஜேகே!
ஓ.கே. அப்படியானால் இப்போதே நாம் கிளம்பிவிடலாம்.  நான் ரெடி!
நீ என்ன சொல்கிறாய் வில்லர்?
நாங்களும் தயார்தான் என்றபோதிலும் ஹோட்டல் வரை போய் திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது.
இன்று பிற்பகலில் நாங்கள் சேகரித்த பட்டாசுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
டைனமைட் குச்சிகள் லாபெர்ட்டி!
அதற்கு இருவர் போக வேண்டுமா என்ன...நான் மட்டும் போய் எடுத்து வருகிறேன்!
அதுவும் சரிதான்.
அந்த கணவாய் பற்றிய கூடுதல் விபரங்களைக் கேட்டறிய இந்த அவகாசம் எனக்குப் பயன்படும்.
சரி...நான் சென்று வருகிறேன்!
கார்சன் சென்ற பிறகு –
அங்கே சென்றடைய எவ்வளவு நேரம் பிடிக்கும்?
நாலைந்து மணி நேரம்.
கொஞ்சம் கூடுதல் அவகாசம் தேவைப்படலாம். ஏனெனில் பயணத்தின் கடைசிப் பகுதியை மற்றவர்களுக்கு சந்தேகம் வராமலிருக்க நாம் கால்நடையாகவே கடப்பது நல்லது.
அடுத்த அரை மணி நேரத்துக்கு ஜேகேவை மடக்கி மடக்கி கேள்விகள் பல கேட்டார் வில்லர். அந்த கணவாயின் அமைப்பு, தப்பியோடும் பாதை, கும்பலின் ஆள் பலம், காவலாளிகளின் எண்ணிக்கை, கட்டிடம் அமைந்துள்ள இடம் போன்ற விவரங்களைக் கேட்டறிந்து கொண்டார். அவருடைய விசாரணை முடிவடைந்த தருணத்தில் கார்சன் திரும்பி வந்தார்.
எல்லாம் சுமுகமாக முடிந்தது டெக்ஸ்...டைனமைட்டுகளை குதிரை மீது ஏற்றிவிட்டேன்!
ஜேகே யிடம் இன்னும் ஏதாவது கேட்க வேண்டுமா?
இல்லை!
அப்படியானால் நாம் கிளம்பலாம்.
சற்றைக்கெல்லாம் ஜேகே வழிநடத்திச் செல்ல மற்ற மூவரும் உடன் விரைந்தனர்.
இந்த விவகாரத்துக்கு சுலபமாக முற்றுப்புள்ளி விழாது என்று தோன்றுகிறது எனக்கு.
ம்ம்...
முணுமுணுக்காதே கிட்..மூன்று தினங்களுக்கு முன் ஒவ்வொரு கோட்டையாக ஏறி இறங்கி நொந்துபோய்க் கிடந்தது மறந்து விட்டதா?
இப்போது அந்த கொலைகாரக் கும்பலை அதன் தூக்கத்தில் அதிரடியாகப் போய் எதிர்கொள்ளும் எதிர்பார்ப்போடு குதிரைகளில் விரைந்து கொண்டிருக்கிறோம்.
தூக்கத்தில் என்றா சொன்னாய்...முதல் முழக்கத்திலே அனைவரும் சுதாரித்துக் கொள்வார்களே?
ஆனால் இடைப்பட்ட அவகாசத்தில் நாம் ஏதாவது சாதிக்க வேண்டும். அவர்களுடைய தலைவனின் கழுத்தில் கை வைத்து விட்டோமேயானால் மற்றவர்களை கட்டுக்குள் வைத்திடலாமில்லையா?
ம்..ம்..!
ஆனால் பாப்லோ பணிந்து போவதை விட உயிரை விடுவதே மேல் என் நினைக்கிற ஜென்மம்.
நான் சென்ஸ்!
துப்பாக்கியின் பாரல் தொண்டையில் அழுத்திக் கொண்டிருக்கையில் ஹீரோவாக நடந்து கொண்ட எவனைப் பற்றியாவது நீ கேள்விப் பட்டிருக்கிறாயா?
ஆனால் பாப்லோவை துப்பாக்கி முனையில் நிறுத்துவது சுலபமல்லவே!.. 
ஒரு பேச்சுக்கு சொன்னேன்!
அங்கே சென்ற பிறகு நிலைமைக்கு ஏற்றவாறு நம் யுக்தியை வகுத்துக் கொள்வோம்!
கைவசம் உள்ள டைனமைட்டுகளைக் கொண்டு எதிரிகளின் துப்பாக்கிகளை செயலிழக்கச் செய்து விட முடியும். அப்புறம் என்ன?...
ம்...ம்...
மூஞ்சியை ஏன் இப்படித் தொங்கப் போட்டுக் கொள்கிறாய் கிட்?
இது மாதிரியான அனுபவம் நமக்கு ஒன்றும் புதிதல்லவே?
இல்லைதான்...
ஆனால் அவர்கள் வசம் மெஷின் கன் இருக்கிறது என்பதை நீ மறந்து விட்ட மாதிரித் தோன்றுகிறது. கேப்டன் உன் கருத்து என்ன?
உன் கஷ்டத்தை மறுப்பதற்கில்லை!
கேப்டன் நீயுமா?
அவநம்பிக்கையில் டாக்டர் பட்டம் கொடுப்பதானால் கார்சனுக்குத்தான் முதலில் கொடுக்க வேண்டும்.
விட்டாயானால், இப்போதே நமக்கு சமாதி கட்டுவதைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடுவான்.
படவா ராஸ்கல்....
ஹா...ஹா...ஹா...
பேச்சை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.....இல்லையேல், ஓட்டைவாய் உதவாக்கரைகள் என்று ஜேகே நம்மைப் பற்றி மட்டமாக நினைத்து விடப்போகிறான்.
அந்த நால்வர் குழு தொடர்ந்து முன்னேறியது.
சில தினங்களுக்கு முன் கொள்ளையர் கும்பல் சென்ற மாதிரியே ஆற்றோரமாகவே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அவர்களைப் போலவே ஆற்றின் குறுக்காகப் பாலத்தைக் கடந்து விரைந்தனர்.
நில்லுங்கள்! குதிரைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்!
ஓய்வு நமக்கும்தான் தேவைப்படுகிறது!
அலுப்பாகி விட்டதா கிட்?
இருட்டில் குதிரையை விரட்டிக் கொண்டு போவது ஒன்றும் சொகுசுப் பயணம் இல்லையே?
இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டுமோ?
2 மணி நேரப் பயணம் பாக்கி இருக்கிறது.
கணவாய் இங்கிருந்து வெகு தொலைவு இல்லைதான். ஆனால் இனி பாதை மிகவும் கரடுமுரடாக இருக்கும்.
மேட்டில் ஏறி இறங்கி கால்வாய் வழியாகவே போக வேண்டும்.
மாற்றுப் பாதை ஒன்று இருக்கிறது. குதிரை வண்டி போகிற அளவுக்கு அகலமானது. பாதையும் நன்றாக இருக்கும். டான் கொலர்மியோவின் வீட்டுக்குப் போகிற பாதையாதலால் காவலும் கடுமையாக இருக்கும்.
பிறர் கண்ணில் படாமல் கணவாயை நாம் சென்றடைந்து விட முடியுமா?
கஷ்டம்தான்....ஆனால் முடியாதது அல்ல..பொது மக்கள் யாரும் கால்வாய் இருப்பது தெரியாமல் இவ்வழியே போக துணிய மாட்டார்கள் என்பதால் காவல் மிக மிக சொற்பமே!
நமக்கு சாதகமான அம்சம்.
இருக்கும் ஒன்றிரண்டு காவலாளிகளும் விழிப்போடு இருக்கிறார்களா அல்லது குளிரை சமாளிக்க பாட்டிலை ஊற்றிக் கொண்டு விழுந்து கிடக்கிறார்களா என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
நிலவரம் நான் இரண்டாவதாக குறிப்பிட்டமாதிரி இருந்து விட்டால் யார் கண்ணிலும் படாமலேயே நாம் போய்விடலாம்.
நிலவரம் அப்படியே இருக்கட்டும்.
இருட்டில் நாம் ரொம்ப கவனமாக முன்னேற வேண்டும்.
ம்...ம்..
மேட்டில் ஏற ரொம்பவும்தான் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால் முடிவில் கால்வாயைத் தொட்டு விட்டனர்.
குதிரைகளின் குழம்புகளை எதையாவது கொண்டு மறைப்பது நல்லது. பாறைப்பகுதியாதலால் குளம்பொலி வெகு தொலைவுக்கு கேட்கும் அபாயம் உண்டு.
நல்ல யோசனை!
குழம்புகளை மூடி மறைத்தபின்னர் ஒருவர் ஒருவராக நிதானமாகக் குதிரைகளை நடத்தி சென்றனர்.
20 நிமிடங்களுக்குப் பிறகு...
முதல் காவல் மையம் சமீபத்தில் இருக்கிறது. எனவே, குதிரைகளை இங்கேயே விட்டுப் போவதுதான் நல்லது.
சரி...
சரியான யோசனைதான்.
ஒரு வேளை பின் வாங்கி ஓட நேரிட்டால்..என்பதால் இந்த யோசனையா?
இந்த பிராந்தியத்தில் குதிரைகளுக்குப் பஞ்சமே கிடையாது.
நம்முடைய பட்டாசுகளை எடுத்துக் கொள்ள மறந்துவிடாதே!
மறக்கக்கூடிய விஷயமா அது...
ஜீவ மரண விவகாரமாயிற்றே?
ரெடியா?
நிறைய எடுத்துக் கொண்டாயா?
ஒரு மாபெரும் யுத்தமே நடத்தி விடலாம்!
புறப்படுவோமா?
கிளம்புங்கள்.
குறுகலான கணவாய் பாதை வழியே இரகசியமாக நால்வரும் முன்னேறினார்கள்.
உம்..ம்.
வாயில் வைத்த பாட்டிலை எடுக்க இஷ்டமே இல்லை போலிருக்கிறது.
நல்ல வாய்ப்பு வாருங்கள், நழுவி விடுவோம்!
அடச்சே அதுக்குள்ளாற காலியாகிடுச்சே.
ச்சே! மயிரிழையில் என் தலை தப்பியது.
ஒருவனை டபாய்த்து விட்டு வந்து விட்டோம்..
மற்றவர்களும் இப்படி பாட்டிலோடு உறவாடிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்கும்!
சற்று தொலைவு சென்றதும் –
இங்கே இரண்டு காவலாளிகள் இருப்பார்கள். பாதை சற்று அகலமாக இருக்குமாதலால், மறைந்து ஓடிப் போவது சற்று கடினம்.
அதோ இருக்கிறார்கள். எதைப் பற்றியோ சுவாரஸ்யமாக வம்பளந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைத் தாண்டி விட்டீர்களானால் வழியில் வேறு உபத்திரவம் கிடையாது. நேராக கணவாய்க்குள் பிரவேசித்து விடலாம்.
என்ன பிரித்துப் பேசுகிறாய்?
ஆமாம். பாப்லோவின் மறைவிடத்துக்கு உங்களை வழிநடத்திச் செல்வேன் என்று வாக்குறுதி அளித்தேன்.  இங்கே வரை கொண்டு வந்து சேர்த்து விட்டேன். இனி நான் மேலே ஓர் அடி எடுத்து வைத்தாலும் என் தலைக்கு ஆபத்து வந்து சேரும்.
உன் தீர்மானத்தை மாற்றிக் கொள்வதற்கில்லையா – நீ உடனிருந்தால் உபயோகமாக இருக்கும்.
ஸாரி வில்லர்....இவ்வளவு தூரம் வந்ததே மகா தப்பு!
ஏதாவது குளறுபடி ஏற்பட்டு நான் காட்டிக்கொடுத்து விட்ட உண்மை பாப்லோவுக்குத் தெரிய வந்தால் உலகின் மறு கோடிக்கே நான் போனாலும் உயிர்தப்ப முடியாது.
சரி. நீ இஷ்டப்படாவிட்டால் நான் கட்டாயப்படுத்தப் போவதில்லை!
இன்னொரு தகவல்...பள்ளத் தாக்கை சென்றடைந்ததும் அங்கே ஒரு பெரிய குகையைக் காண்பீர்கள்....பதுங்கிக் கிடக்க ஏற்ற இடம் அது...
கொஞ்சம் நீ அவசரப்படாதே!
உங்கள் காவலாளிகளை கடந்து சென்ற பின் நீ திரும்பிவிடலாம்.
ஒரு வேலை அவர்கள் சுதாரித்துக் கொண்டால், அவர்களின் கவனத்தை நீ திருப்ப வேண்டும்.
ஓ.கே.
முதலில் யார் போவது?
நான் போகிறேன்!
அடுத்து நீ வரவேண்டும்- சிக்னல் கொடுத்ததும் கிளம்பு.
ஓரிரு நிமிடங்களுக்குப் பின் ஓசைப்படாமல் பூனை போல் பதுங்கிப்பதுங்கி ஓட்டம் பிடித்தார் டெக்ஸ்-
காவலாளிகளின் உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கையில் பாறைகளிடையே தாவித்தாவி ஓடினார் டெக்ஸ்-
அவர்களுடைய கவனத்தை ஈர்க்காமலேயே மறுமுனையை சென்றடைந்து விட்டார்.
அதோ டெக்ஸ் சைகை செய்கிறார் கார்சன்...புறப்படு. குட் லக்!
ம்ம்..தாங்க்யூ!
ஆனால் கார்சனுக்கு அதிர்ஷ்டம் போதவில்லை...அவர் பாதி தொலைவு கடந்திருந்த வேளையில்...
அடேய்!
நில்!
டுமீல்! டுமீல்!
லியோன்...என்ன விஷயம்?
ஒரு ஆள் ஓடுகிறான்.
அதோ..அங்கே!
ச்சே...அவனைப் பார்த்து விட்டார்கள்!
டுமீல்!
சண்டாளன் அதோ அங்கே ஒருவன் நிற்கிறான் பார்.
இனி நேரடி நடவடிக்கைதான்!
ஆஆ!
லாபெர்ட்டி!
சாக்கடைப் புழுக்களா!
ஐயோ!..கடவுளே!
டுமீல்!
ஆஆ! க்ராக்!
நாம் பின்வாங்கி விடுவது நல்லது வில்லர், கேப்டனுக்கு காயம் பட்டு விட்டது.
ஏற்பட்ட சத்தம் எல்லோரையும் உசுப்பி விட்டிருக்கும்!
காயம் பலமா?
தோளில் குண்டு துளைத்திருக்கிறது...பின் கொலர்மியோவின் வீட்டை சென்றடைந்து விட்டால் பிழைக்க வைத்து விடலாம்-
கடவுளே!
தோட்டா முழக்கத்தைக் கேட்டு முதல் காவலாளி அங்கே நெருங்கி வந்தான் –
இவ்வளவு உள்ளே அப்படி யார்தான் வந்திருக்க முடியும்?
ஆல்ரைட்...குதிரைகளைத் தேடிப் பிடித்து ஏறுங்கள். நம் துப்பாக்கிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
நாம் இங்கே வந்து போன தடயமே இருக்கக் கூடாது!
குட் பை! – குட் லக்!
குட் பை...முதல் காவலாளி விழிப்புற்றிருப்பான் அவனைத் தாண்டும்போதும் ஜாக்கிரதை!
ஜேகே..துரோகி!
ஆ! டுமீல்!
கேப்டன் லாபெர்ட்டி...
குற்றுயிராக இருப்பதாக நினைத்தேன். கேப்டனின் செயல்வேகம் பிரமிப்பூட்டுகிறது.
இனி அவனால் தொல்லை ஏதுமிராது.
இதற்கிடையே-
அவன் இன்னமும் பாறைக்கிடையேதான் பதுங்கிக் கிடக்கிறான். அவனை நான் கவனித்துக் கொள்கிறேன்!
டுமீல்!
நாசமாகப்போக என்னைக் கொன்று விட்டுதான் ஓய்வான் போலிருக்கிறதே!
கொஞ்சம் பொறுமையாக இரு...அடுத்த தோட்டா அங்கிருந்து வராமல் உறுதி செய்கிறேன்!
அதைத் தொடர்ந்து –
டுமீல்! சத்! ஆ! டம்!
இடைஞ்சல் அகன்று விட்டது பிரதர்...
நிச்சயம்தானா?
இப்போது உறுதிதான் ஆனால் புதிய இடையூறுகள் வந்து சேரலாம். எனவே, ஓடிப் போய்விடுவோம் வா!
துப்பாக்கி முழக்கத்தால் உசுப்பி விடப்பட்ட வீரர்கள் ஒரு டஜன் பேர் ஏற்கனவே குதிரைகளில் ஏறி புறப்பட ஆயத்தமாகி விட்டார்கள்.
எமிலியோவும், லாயோனும் ஏதோ பிரச்சினையில் இருக்கிற மாதிரித் தெரிகிறது. என்னவென்று போய்ப் பார்த்து வாருங்கள்! பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து யாருமே இங்கே வரவில்லையாதலால் அவ்விருவரும் ஏகமாகக் குடித்து விட்டு தங்களுடைய நிழல்களையே பார்த்து மிரண்டு சுட்டுத்தள்ளுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆல்ரைட் பாப்லோ!
வாருங்கள் போகலாம்!
எமிலியோ, லியோன் பற்றி பாப்லோ சொன்னதை நீ அங்கீகரிக்கிறாயா?
ஆமாம். அது ஒன்றும் புதிதல்லவே?
நிஜமாகவே அந்நியர் ஊடுருவல் இருக்குமேயானால்...
உனக்கென்ன பைத்தியமா? சாத்தானின் மறு அவதாரம் மாதிரி இருக்கும் பாப்லோவின் மறைவிடத்துக்கு வர யார்தான் துணிவார்கள்...
விஷ்ஷ்...
டைனமைட்...!
டம்மார்!
திருப்புங்கள் குதிரைகளை...
டம்மால்!
ம்ம்..சீக்கிரம்...ஆபத்து!
என்னமாய் தலை தெறிக்க ஓடுகிறான்கள் பார்த்தாயா?
டைனமைட் தாக்குதலின் முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது.
அவர்கள் இடத்தில் உன்னை வைத்துப் பார்க்க ஆசை எனக்கு.
அடுத்த பட்டாசை அவர்களுடைய தலையைக் குறிவைத்து எறியட்டுமா?
நம் இலட்சியம் அது அல்லவே?
லாபெர்ட்டி குகைக்குள் சென்று மறைய அவகாசம் தர அவர்களை கொஞ்ச நேரம் தேக்கி நிறுத்தி வைப்பதுதான் நம் நோக்கம்...சரி வா போகலாம்!
ம்ம்...
அடுத்து அவர்கள் என்ன செய்வார்கள்?
யார் பாப்லோ கும்பலா?
நம்மைத் தேடி வருவார்கள்...மூன்று காவலாளிகளும் செத்துக் கிடப்பதைக் காண்பார்கள். அங்கே வேறு எவரும் இல்லாதது கண்டு நாம் ஓடிப் போய் விட்டோம் என்று தீர்மானிப்பார்கள்.
கிட்...பதுங்கு!
பைத்தியக்காரக் கும்பல் எதிரில் இருக்கிறது.
என்னதான் நடந்தது ஹெர்னடோ?
டைனமைட் ஸார்...வானத்திலிருந்து மழை மாதிரி பொழிந்தது.
நாசமா போக..
மேலிருந்து எறிந்தார்கள் என்கிறாயா?
எமிலியோவும் லியோனும் நிலை கொண்டிருந்த அடுத்த இடத்தில் எதிரிகள் இருந்திருக்கக் கூடும்.
அப்படியானால் இரண்டு காவலாளிகளும் தொலைந்தார்களா என்ன?
இதற்கிடையே –

நாம் இப்படிப் போவதால் இசகுபிசகாக மாட்டிக் கொண்டுவிட மாட்டோம் என்பது உறுதிதானா...
அப்படித்தான் நம்புகிறேன் – அத்தோடு நமக்கு வேறு வழியும் இல்லை!
நீ இங்கே நின்று அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டிரு.. நான் போய் மாற்றுப் பாதை எதுவும் தென்படுகிறதா அல்லது பதுங்க ஏதாவது குகை அமைப்பு இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்.
ஓ.கே.!
இதற்கிடையே-
ஷார்க்! நீ அந்த வழியாக மேலே போய் ஒவ்வொரு பாறையின் பின்னாலும் பார்..
அவர்களில் ஒருவனையாவது உயிரோடு கொண்டுவா. எங்கிருந்து வந்து முளைத்தார்கள் என்று கேட்டறிய வேண்டும்.
யாருமே கண்ணில் படாவிட்டால் வானை நோக்கி மும்முறை சுடு. அதைக் கேட்டு ஹெர்ண்டோவும் அவனுடைய தோழர்களும் கணவாயினுள் தைரியமாக நுழையட்டும்.
புரிந்து கொண்டேன் பாப்லோ...
வாருங்கள் தோழர்களே.......போகலாம்!
டக்! டக்!
சைத்தான்கள் இந்த வழியாக வருகிறான்கள்.....எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விடப் போகிறோம்!
மேட்டுப் பகுதியை வந்தடைந்ததும் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து சென்று நாலாதிசைகளிலும் தேடலாயினர் –
உங்களுடைய கை துப்பாக்கியில் இருக்கட்டும்..பார்வை விழிப்போடிருக்க வேண்டும் தோழர்களே!
அப்போது –
பிரச்சினை ஏதுமில்லையே கிட்...
இல்லை...நேராக நம்மை நோக்கி வந்து விடுவான்களோ என்கிற பயம் ஒரு சில வினாடிகளுக்கு இருந்தது.
முதலில் ஒரு குழு நேராக இங்கேதான் வந்து கொண்டிருந்தது. பிறகு ஏனோ திரும்பி நேர் மேலே உள்ள பாதையை நோக்கிப் போய் விட்டது.
கவலைப்படாதே...டைனமைட்டை எறிந்த அந்நியர்கள் இப்போதும் மேட்டுப் பகுதியில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதே அவர்களின் நோக்கம்.
நம் முயற்சி தோற்றுப் போனபின் நாம் பின்வாங்கி ஓட்டம் பிடித்திருப்போம் என்றும் டைனமைட்டை எறிந்தது யாரும் நம்மைப் பின்தொடர்வதைத் தவிர்க்கவே என்றும்தான் பத்துக்கு ஒன்பது பேர் எண்ணுவார்கள்.
கணவாயில் ஊடுருவல் பேர்வழி எவரும் இப்போது இல்லை என்பதை உறுதி செய்யவே முயற்சிக்கிறார்கள்...
உன் கணிப்பு சரி என்றே படுகிறது!
டெக்ஸ் சொன்னது சரிதான் என்று விரைவிலேயே நிரூபணமானது-ஷார்க் குழுவினர் அங்கே கண்டதெல்லாம் அங்கே கண்டதெல்லாம் மூன்று காவலாளிகளின் சடலங்களை மட்டுமே-
நச்சுப் பாம்புகள் திரும்பி ஓடி விட்டன ஷார்க்.
சரி...நாம் திரும்பலாம்...
கிளம்புமுன் சாலையில் ஆபத்து ஏதுமில்லை என்று பாப்லோவிடம் சிக்னல் கொடுப்போம்.
டுமீல்!
அதோ...ஷார்க்கின் சிக்னல்! கிளம்புங்கள் தோழர்களே அந்த ஆட்கள் நரகத்தில் போய்ப் பதுங்கிக் கிடந்தாலும் தேடிப் பிடித்து என்னிடம் கொண்டு வந்து சேருங்கள்.
நிச்சயம் செய்து முடிப்போம் பாப்லோ!
கிளம்புங்கள் போவோம் தோழர்களே...
டக்!
சொன்னேனில்லையா...அந்த துப்பாக்கி முழக்கம் பாதையில் ஆபத்து ஏதுமில்லை என்று தெரிவிக்கவே!
இவர்கள் அவர்களைப் பிடித்து விடுவார்களா என்ன?
யாரை – ஜேகேயையும், லாபெர்ட்டியையுமா? சந்தேகம்தான். ஜேகே சமர்த்தன்...மேலும் இருட்டில் பாதை மாறிப் போய்விடும் ஆபத்து உண்டு. அவர்களை இந்த கும்பல் பிடித்து விடவே முடியாது.
அடுத்து பாப்லோவும் மற்றவர்களும் என்ன நடவடிக்கையில் இறங்குவார்கள்?
கொஞ்ச நேரம் இதுபற்றி விவாதிப்பார்கள்..அப்புறம் காவலை பலப்படுத்திவிட்டு தூங்கப் போய்விடுவார்கள்.
தேடச் சென்ற குழு திரும்பி வர காத்திருக்க மாட்டார்களோ?
தமாஷ் பண்ணுகிறாயா? தேடி விட்டுத் திரும்ப பல மணி நேரம் பிடிக்கும் என்று அவர்கள் நன்கு அறிவார்கள்.
மீண்டும் இங்கே அமைதி நிலவியதும் நாமிருவரும் நைஸாக நழுவி விடலாம்!
இன்னமும் பாப்லோ மீது உனக்கு அக்கறை இருக்கிறதா?
பின்னே? மொத்தக் கும்பலையும் மடக்க அவன் அவசியம்!
இதற்கிடையே மூன்று சடலங்களையும் புதைக்க ஏற்பாடு செய்து விட்டு, காவலுக்கு ஆட்களை அனுப்பி விட்டு பாப்லோவும், மற்றவர்களும் –
ஹெரண்டோவும் அவன் கூடச் சென்ற ஆட்களும் விடிவதற்குமுன் திரும்பப் போவதில்லை. அவர்களுக்காக குளிரில் காத்திருப்பது வேட்டி வேலை. வாருக்னால் திரும்பிப் போகலாம். ஆனால் இம்மாதிரி இரவுகளில் என் விழிகளில் உறக்கம் அறவே இராது.
வந்த அயோக்கியர்கள் யாராக இருக்கும் என்று நீ நினைக்கிறாய் பாப்லோ?
அரைமணி நேரமாக அதே நினைப்புதான் எனக்கு....இப்படி இருக்கலாமோ என்றொரு சந்தேகமேனக்கு...
லாபெர்டியின் வாடை வீசுகிறது இந்த விவகாரத்தில் அல்லது ஹால்ப்ரூக்கை சுட்டுத் தள்ளிய அந்த ரேஞ்சர்களின் சேஷ்டையாகவும் இருக்கலாம்.
லாபெர்ட்டியா? உனக்கென்ன பைத்தியமா? அவரும் டான் கொலர்மியோவின் ஆள் அல்லவா?
ஆமாம்...ஆனால் அந்த இராணுவ ஆசாமியின் போக்கில் புதிர் இருக்கிறது...
இது என்ன புதுக்கதை....
என் கணிப்பு அப்படி!
இது பற்றி கொலர்மியோவிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் ஏனோ அவர் தன் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.
அவருடைய மகளை லாபெர்ட்டி மணந்து கொள்ளவிருக்கிறார் இல்லையா?
நம் மறைவிடத்தை லாபெர்ட்டியிடம் வெளியிடவேயில்லை என்று சத்தியம் செய்கிறார். ஆனால் ஏனோ அவர் பேச்சில் எனக்கு நம்பிக்கையே இல்லை.
ஹெராண்டோ அந்தக் கும்பலைப் பிடித்துக்கொண்டு வருவான் என்று உறுதிபட நம்புகிறேன். அவர்களிடையே லாபெர்ட்டியும் இருந்தால் பழி தீர்த்துக்கொள்ள அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வேன்.
குட்நைட் பாப்லோ...உண்மை வெளிவரட்டும்.
அடுத்த பத்தாவது நிமிடம் அங்கே அனைத்து விளக்குகளும் அணைக்கப் பட்டு விட்டன. பூரண நிசப்தம் நிலவியது அங்கே.
சற்றைக்கெல்லாம்-
எல்லாமே அடங்கி விட்டது பிரதர். நாம் இனி செயலில் இறங்கலாம்.
ம்..ம்...
பாப்லோ எந்தக் குடிசையில் பதுங்கிக் கிடப்பான்?
குகை கோயிலுக்கு எதிரே உள்ள குடிசை என்று ஜேகே சொல்லியிருக்கிறான். அங்கே 24 மணிநேரமும் காவல் இருக்குமாம்.
பதுங்கிப் பதுங்கி மெள்ள முன்னேறி குடிசைப்பகுதியை நெருங்கினார்கள் தோழர்கள் இருவரும்.
இடைஞ்சல் இன்றி இந்த அளவு நெருங்கிவிட்டோம். – குட்!
இந்த இடம்.........?
அதைத்தான் நானும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்!
ஓடி வா....மேலே போகலாம்.....
இதோ!
கட்டிட சுவரோடு சுவராக பதுங்கிப் பதுங்கி முன்னேறினார்கள்-
முடிவாக-
வந்து விட்டோம்!
அந்தக் காவலாளியை எப்படி வீழ்த்தப் போகிறோம்.
அது ஒன்றும் கஷ்டமில்லை!
ம்ம்...ஒத்தாசை பண்ணு கிட்.
நான் மேலே கூரைக்கு போக வேண்டும்!
அவனுக்கு நேர் மேலே இருந்து சறுக்கி வந்து அவனை ஓசைப்படாமல் அடித்து வீழ்த்தி விடுகிறேன்...
சூப்பர் ஐடியா!
ஆனால் ஒன்று – உனக்கு ஆபத்து உருவானால் நான் துப்பாக்கியைப் பயன்படுத்த தயங்கமாட்டேன்!
அப்படியொரு நெருக்கடி ஏற்படாது.
ரெடியா?
ம்ம்...ஏறு!
மேலே வந்து விட்டேன்..
நான் மேலே வந்து விட்டதை அவன் தெரிந்து கொள்ளவேயில்லை...
சுருட்டை பற்ற வைக்கிறான்...
சர்
விஷ்ஷ்...
ஆவ்வ்.. சத்! டுமீல்! சபாஷ்! முட்டாள் பயல்!
வா...கிட் – உள்ளே போக இனி தடையில்லை...
இதோ!
பாப்லோவின் அறைக் கதவை உடைத்தார் டெக்ஸ் -  
டமார்!
டுமீல்! சளார்! அப்படியே இரு! டெக்ஸ்!
பதறாமல் உள்ளே வா நண்பனே!
கதவருகே காவல் நில் கிட்!
ஓகே.
மிஸ்டர் பாப்லோ...நீதானே!
நீங்கள் யார்?
நான் டெக்ஸ் வில்லர்...அவர் என் நண்பர் கிட் கார்சன்!
இதை நான் முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க வேண்டும்...
முதல் குழு நெருங்கி வருகிறது டெக்ஸ்!
நம் விசிட்டிங் கார்டை தாராளமாக வழங்கு!
உற்சாகம் தரும் சங்கதியாயிற்றே!
டுமீல்!
டிஷ்! தொலைந்தோம்- ஓடுங்கள்!
சட்டென்று சங்கதியை புரிந்து கொண்டு விட்டார்கள்!
என்னிடம் என்ன நீ எதிர்பார்க்கிறாய்?
தெரியாதது மாதிரி பேசாதே...ஷூவை எடுத்து மாட்டிக்கொள்!
உன் அருமை நண்பர் டான் கொலர்மியோவைப் போய்ப் பார்க்கலாம் வா!
சண்டாளர்கள்...எப்படித் தெரிந்தது இவர்களுக்கு...?
அந்த முட்டாள் எழப் பார்க்கிறான்.
சொய்ங்..
எழுந்து ஓடு எங்கேயாவது வெளியே!
நாசமாகப் போக!
உன் நண்பர்களிடமும் சொல்லிவை – இந்தப் பக்கம் தலை காட்டக் கூடாதென்று –
அந்த நீசப் பயல் லாபெர்ட்டியா உன்னை இங்கே கூட்டி வந்தது?
அதைப் பற்றி நீ ஏன் விசாரப்படுகிறாய்?
அந்தத் துரோகிதான் டான் கொலர்மியோவிடமிருந்து எங்களுடைய மறைவிடத்திலிருந்து மறைவிடத்தை கேட்டறிந்திருக்கக் கூடும்.
அவனை நேரில் சந்திக்கும்போது நீயே கேட்டுத் தெரிந்துகொள்.
நீ இப்படியே திரும்பிப் போய் விட முடியாது..அப்படியொரு எண்ணம் இருந்தால் நீ பைத்தியக் காரன்!
எங்கே இன்னொரு முறை சொல்...
இதற்கிடையே –
எத்தனை பேரை நீ பார்த்தாய் ரமோன்?
இரண்டே பேர்...! என்னைத் தாக்கினார்கள்!
இப்போது பாப்லோவைப் பிணைக்கைதியாக்கி வைத்துள்ளனர்.
டைனமைட்டை எறிந்த அதே ஜோடியாகத்தானிருக்கும்!
இருக்கவே முடியாது ஷார்க்...இந்த பிராந்தியம் முழுவதும் அலசி விட்டோமே.
எங்கேயாவது பதுங்கிக் கிடந்திருக்கக் கூடும்!
எங்கே?
குகை அமைப்பினுள்!
அதனுள் நாங்கள் சென்று தேடியிருக்க வேண்டும்.
நடக்கிற காரியமா? அதற்கு நூறு வாசல்கள் உண்டு...
உள்ளே தேடித் பார்த்திருக்கலாம்.
பின்வாங்கி ஓடியிருப்பார்கள் என்கிற தப்பான முடிவுக்கு வந்து விட்டோம்...பாப்லோவும் அப்படியே அபிப்ராயப்பட்டார்.
ஹூம் - நடந்ததை பேசி என்ன பிரயோஜனம்....இனி ஆக வேண்டியதைப் பற்றி ஆலோசிப்போம்..
மெஷின்கன் தான் ஒரே தீர்வு – எனக்கு ஒத்தாசைக்கு யாராவது வாருங்கள்!
இதற்கிடையே –
வெளியே என்ன நடக்கிறது?
மயான அமைதி நிலவுகிறது.
அதிரடியாக ஏதாவது செய்ய நினைக்கிறார்களோ?
இருக்கலாம்!
கவலையே வேண்டாம் கிட்...அருமை நண்பர் பாப்லோ நம்வசம் இருக்கும்போது நமக்கு எதுவும் சம்பவிக்காது.
தெனாவட்டுப் பேச்சு. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாரடா நீசனே!
என்ன சொன்னாய்?
விரியன் பாம்பு!
எழுந்து நில்லடா சாக்கடைப் புழுவே!
வோ!
டான் கொலர்மியோவை சந்திக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது.
எனக்கு ஓரடி முன்னால் நீ நடந்து போ..என் வின்செஸ்டரின் முனை உன் பிடரியிலேயே இருக்கும்.
விஷமத்தனமாக ஏதாவது செய்ய முற்பட்டால் மூளை சிதறிப் போகும் ஜாக்கிரதை!
வெளியேறியதும் உன் நண்பர்களை எச்சரித்து வை – ஏடாகூடமாக ஏதாவது செய்து தொலைக்காதீர்கள் என்று –
அப்புறம் மூன்று நல்ல குதிரைகளுக்கு ஏற்பாடு செய்!
நான் மறுத்தால்?
மறுத்துத்தான் பாரேன்...
ம்ம்..கைகளை உயர்த்தியவாறு நட வெளியே!
இதற்கிடையே-
ஜோ...உனக்கென்ன பைத்தியமா...இதை நீ பிரயோகிக்க முடியாது.
பாப்லோவை நான் நன்கறிவேன். தோல்வியை எப்போதுமே சகித்துக் கொள்ள மாட்டார்.
நீ சுட்டால் அவரும் சாக நேரிடுமே.
யார் சொன்னது?
என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்.
அதோ வெளியேறி வருகிறார்கள்!
நான் சொன்ன மாதிரி அவர்களை எச்சரித்து வை!
ம்ம்..சொல்லப் போகிறாயா இல்லை நரகத்திற்கு இப்போதே அனுப்பி வைக்கட்டுமா?
சண்டாளன்!
நண்பர்களே. கவனமாகக் கேளுங்கள்...
ஒரு துப்பாக்கி என் தலையைக் குறி வைத்தபடி இருக்கிறது. என்னை மீட்க எந்த முயற்சியிலும் இறங்காதீர்கள். மூன்று குதிரைகளைத் தயார் செய்து குடியிருப்பின் வெளி விளிம்பில் தயாராக நிறுத்தி வையுங்கள்.
அவர்களுடைய பதிலைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்!
ஷார்க் ....பதில் சொல்...

நீங்கள் சொன்னதைக் கேட்போம் பாஸ். அப்படியே நடந்து கொள்கிறோம்.
சரி...இனி நிதானமாக நடந்து போ.
ம்ம்..சீக்கிரம்!
போங்கள்..உங்களை அவர்கள் பார்த்து விடலாகாது.
அதோ அவர்கள்!
பாஸ்...நான்தான் ஜோ!
ஜோ – அப்படியானால் மெஷின் கன்னை வைத்துக் கொண்டிருக்கின்றானா?
ஜோ...ஆரம்பி!
படுத்துப் பதுங்கு கிட்!
ரடட்டடடடட்
கேட்லிங்....!
ச்சே...பாஸும் படுத்துக் கிடப்பதால் கீழே குறிவைக்க முடியவில்லை.
எங்கேயாவது பத்திரமாக ஒதுங்கு கிட்...தலை ஜாக்கிரதை.
தரையோடு தரையாக ஊர்ந்து ஒரு பாறையின் பின்னால் வந்து விட்டார்கள்  டெக்ஸ்சும்  கார்சனும்.
போ...உள்ளே.
பாப்லோ?
அதோ ஓடுகிறான் விஷப் பாம்பு.
அப்பாடா...ஒரு வழியாகத் தப்பிப் பிழைத்தேன்!
டுமீல்!
கேட்லிங்கை வைத்துக் கொண்டு அட்டூழியம் பண்ணுகிறார்கள்!
முதலில் அதற்கு ஒரு முடிவு கட்டுவோம்-
புஸ்ஸ்....
விஷ்ஷ்... சொய்ய்ய்ங்!
டம்மால்!
கேட்லிங்கின் சரித்திரம் முடிந்தது.
அடுத்த பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது.
நாசமாகப் போக...
ஓடிவா கிட்.. சீறிவரும் தோட்டா நம் டைனமைட் குச்சியைத் தொட்டால் நாம் கொத்துக் கறியாகிப் போவோம்..
இப்போது...நீதான் அவநம்பிக்கைப் பேர்வழி...
நம்மை வேட்டையாடக் கிளம்பியிருக்கும் நாய்கள் எத்தனை?
ஏழு அல்லது எட்டு!
எழுந்த சப்தம் காவலாளிகளை வரவழைத்திருக்கும் எனவே, ஒரு டஜன் எருமைக்கடாக்களை நாம் சமாளிக்க வேண்டியதிருக்கும்.
இங்கே இரண்டு பேர்!
ஆஆஹ்!
விஷ்ஷ்....
என் அருமை தொப்பி போச்சு.
வா..வெளியேறி விடலாம்!    
இதோ வந்து விட்டேன்.
வீழ்த்துங்கள் அவனை!
உன் பாட்டானாலும் முடியாது!
அடிபட்டு விட்டதா உனக்கு?  
ஓடு...உள்ளே!
எனக்கா....காயமா – நோ!      
அவர்களைத் தேக்கி வை கிட்!
ஓ.கே.
சண்டாளர்கள்!
ஏதோ எங்களாலான பரிசு..பெற்றுக் கொள்ளுங்கள்!
டைனமைட்!
ஓடு – வெளியே!
விஷ்ஷ்!
டம்ம்மால்!
அதோ போகிறார்கள் நல்ல பாம்பின் வாரிசுகள்...
சண்டாளன் பாப்லோ நிற்கிறான் பார்!
முட்டாள்கள்!
தப்பிவிட்டானே....ச்சே!
ம்ம்..
எனக்கு பாதுகாப்பு கொடு கிட்...
கிழவன் விடாது சுடுகிறானே!சத்! படார்! டம்மால்!
உங்களை நேரே பரலோகத்துக்கு அனுப்பி வைத்து விட்டுதான் மறு வேலை!
ஆ!
நாசமாகப் போக!
கையில் காயத்தோடு தப்பி விட்டதே அந்த கொடிய விலங்கு!
ஆனால் அடுத்த இரு தோட்டாக்கள் அவனைப் பலி கொண்டன.
ஆஆஹ்!
தொப்!
அட...பாப்லோ அல்லவா?
வா ஓடிப்போய் விடலாம்...இல்லையேல் இவனுக்கு நேரிட்ட கதிதான் நமக்கும் ஏற்படும்!
சரியாகச் சொன்னாய்...அந்த இரு அமெரிக்கர்களும் சாத்தானின் வாரிசுகள்!
வா...குதிரையிலேறி ஓடிப்போய் விடலாம்!
பப்லோவின் மரணம் காட்டுத் தீ போல் அங்கிருந்த கயவர்களிடையே பரவியதும் அனைவரும் உயிர்பிழைக்க லாயத்தை நோக்கி ஓடினர் –
எதிரிகள் பின் வாங்குவதாக நினைக்கிறேன் – சரிதானே?
உயிர்பிழைத்தால் போதும் என்று ஓடுகிறார்கள்!
விரட்டிச் செல்வோமா?
வெட்டிவேலை...
பாப்லோவின் மரணமும் கேட்லிங்கின் அழிவும் இங்கிருந்த கும்பலுக்கு விழுந்த மரண அடிகள்!
நம் தோழர்களை விரட்டிச் சென்றவர்களை மறந்து விட்டாயே?
கூலிப்பட்டாளம் அவர்கள் திரும்பிவந்து இங்கேயுள்ள நிலவரத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டதும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள்.
இனியும் இங்கே நாம் தாமதிக்க காரணம்......
நீ ரொம்பவும்தான் அவசரப்படுகிறாய் கிட்!
பாப்லோவின் குடிசைக்குச் சென்று கொள்ளைப் பொருட்களை எங்கே ஒளித்து வைத்துள்ளார்கள் என்று பார்ப்போம் வா!
பார்த்து விட்டு...
வண்டி அகப்பட்டால் நம்மோடு எடுத்துப் போவோம்!
ஆனால் அங்கே சென்று பார்த்தபோது-
நம்மை யாரோ முந்திக் கொண்டுவிட்ட மாதிரி தெரிகிறது.
ஒரு விளக்கை எடுத்து வா – சீக்கிரம்!
மறுகணம் –
ச்சே..எல்லாம் போய்விட்டது!
பாப்லோவின் ஆட்கள் காரியவாதிகள்!
ம்ம்..
மற்றவர்கள் துப்பாக்கியை தூகிகொண்டு அலைந்த வேளையில் யாரோ இங்கே வந்து தங்கத்தை அள்ளிப் போயிருக்கிறார்கள்!
பாங்க்குகளும், சுரங்கங்களும் அதிர்ஷ்டம் இல்லாதவை-
சரியாகச் சொன்னாய்...
ஆனால் நம் இலட்சியம் இந்தக் குழுவை நிர்மூலமாக்குவது – அதை நாம் செய்து முடித்து விட்டோம்!
இனி நாம் நேரே போய் டான் கொலர்மியோவைக் கண்டு கொள்வோம்!
வேறு வேலை ஏதுமில்லை நமக்கு!
என்ன விவகாரம்!
இந்த இனிஷியலைப் பாரேன்!
விநோதமாக இருக்கிறதே...பாப்லோவின் ஆட்கள் கைக் குட்டையை பயன்படுத்துகிற வர்க்கம் இல்லை!
பழக்கம் இருக்கட்டும் கிட்....தரத்தைக் கவனி...மேல்மட்ட ஜனங்களிடம்தான் இம்மாதிரியான கைக்குட்டைகள் இருக்கும்!
அல்லது இராணுவ அதிகாரிகள் மாதிரியான ஆசாமிகள் வைத்திருப்பார்கள்..
சரியாகச் சொன்னாய். இந்த ML என்ற இனிஷியல் எதையும் ஞாபகப்படுத்தவில்லையா உனக்கு?
அடடே...கேப்டன் லாபெர்ட்டியின் இனிஷியல்கள் இவை! மைக் லாபெர்ட்டி.....!
நான் நினைத்தேன் நீ சொல்லிவிட்டாய்!
அது நிஜமானால் இங்கே எப்படி வந்தது இது?
அதே கேள்விதான் என் நெஞ்சிலும்!
இதற்கான விடை தேட இது நேரமில்லை. நேரத்தை வீணடிக்காமல் டான் கொலர்மியோவைத் தேடித் போவோம்.
பீதியடைந்து அவன் ஓடிப் போனாலும் போகலாம்!
ஓடிப்போன காவலாளிகளில் எவனாவது ஒருவன் விஷயத்தை அவர் காதில் போட்டிருக்கலாம். மனிதர் நம் பிடியில் அகப்படாமல் தப்பியோடினால் அது நம் துரதிர்ஷ்டம்!
அப்படியெல்லாம் நடந்திராது!
ஜேகேயும் லாபெர்ட்டியும் சென்றடைந்து விட்டார்களேயானால் கேப்டன் அவர்களை மடக்கிப் போட்டிருக்கலாம்.
வாஸ்தவம்!
ஆனால் அப்படி நடந்திருக்குமா என்று உறுதிப்படுத்த சான்று ஏதுமில்லை. எனவே, நாம் வாய்ப்பைக் கோட்டை விடலாகாது.
இருவரும் லாயத்துக்கு சென்று இரண்டு குதிரைகளைத் தயார் செய்து ஜன சந்தடியற்றுக் கிடந்த கனவாய்ப்பகுதியில் பயணமாயினர்.
நாம் மாற்றுப்பாதையில்தானே போக வேண்டும்?
ஆமாம்..அதுதான் நேராக டான் கொலர்மியோவின் வீட்டிற்குப் போகும் என்று சொன்னான். கேப்டனை ஜேகேயினால் காப்பாற்றிவிட முடியாது என்றா நீ நினைக்கிறாய்?
நான் அப்படி சொல்லவில்லையே...லாபெர்டிக்குப் படுகாயம். ஜேகேவின் வழிமுறை என்னவோ?
அதைப்பற்றி நாம் இப்போது அதிகம் அலட்டிக் கொள்ளவேண்டாம். அங்கே சென்றடைந்ததும் நிலவரம் தானே தெரியவரும்.
விடியத்தொடங்கி விட்டது...நாம் வேகமாகப் போக முடியும். விரட்டு!
அதன் பிறகு ஓரிரு வார்த்தைகளை மட்டும் அவ்வப்போது பரிமாறிக்கொண்டு மிச்ச தூரத்தை மௌனமாகக் கடந்தனர்.
மூன்று மணி நேர கடுப் பயணத்தின் முடிவில் டான் கொலர்மியோவின் இடத்தை நெருங்கி விட்டனர்.
வந்துவிட்டோம் கிட்!
அதோ அங்கே தெரிகிற நபர் ஜேகே தான் என்று நினைக்கிறேன்!
அவர்களும் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது நல்ல செய்தி.
லாபெர்ட்டி இரட்டை வேடதாரி என்கிற உண்மை தெரியவந்தால் டான் கொலர்மியோவின் மகள் என்ன தீர்மானத்துக்கு வருவாளோ?
அந்தக் கவலை உனக்கு எதற்கு....காதலர்களின் தனிப்பட்ட பிரச்சினை அது....
ம்ம்..
சில நிமிடங்களுக்குப் பின்...
வெல்கம் பிரண்ட்ஸ்....உயிரோடு நல்ல ஆரோக்கியத்தோடு உங்களைக் காண சந்தோஷமாக இருக்கிறது.
கேப்டன் எப்படி இருக்கிறார் ஜேகே?
இங்கே வந்ததும் காயத்திற்கு  நான் கட்டுப்போட்டேன். அதையடுத்து ஒரு நிமிடம் கூட விட்டகலாமல் டான் கொலர்மியோவின் மகள் அவரை கவனித்து வருகிறாள்.
அவர் காயமடைந்தது எப்படி என்று அவளிடம் சொல்லி விட்டாயா என்ன?
இல்லை வில்லர்! சாலையில் காயமுற்றுக் கிடந்த கேப்டனை நான் தற்செயலாகப் பார்த்து அழைத்து வந்ததாக சொல்லி இருக்கிறேன். சாலை வழிப்பறிக்கு ஆளானவர் என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கிறாள்.
தன் திட்டத்தை செயல்படுத்துமுன் உங்களுடைய முயற்சி நல்லபடியாக முடிந்தது என்று உறுதி செய்து கொள்ள விரும்புகிறார் கேப்டன்.
அதுதான் உறுதியாகிவிட்டதே இப்போது-
கணவாயில் ஒரு பெரிய சண்டை நடந்தது ஜேகே. அதன் விளைவு – பாப்லோ தன் சகாக்கள் சிலருடன் பரலோகம் போய் விட்டான்!
வாவ்!...அப்படியானால் பணம், தங்கம் எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி விட்டீர்களல்லவா?
அதிர்ஷ்டமில்லை ஜேகே!
என்ன சொல்கிறீர்கள்...
பணம், தங்கம் எல்லாம் மாயமாக மறைந்து விட்டன! என்ன...கிண்டலா?
நிஜம்!
கீழ்த்தர ஜென்மம் ஒன்று சண்டை நடப்பதை சாதகமாக்கிக் கொண்டு அத்தனையையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டது.
அப்படியானால் நான் உயிரை பணயம் வைத்து உங்களுக்குத் துணை போனது எல்லாம் வேஸ்ட் என்று சொல்ல வருகிறீர்களா?
பதறாதே ஜேகே!
திருட்டுக் கும்பலை சேர்ந்தவன் என்பதைக் கண்டுகொள்ளமாட்டோம் என்பதுதான் எங்களுடைய வாக்குறுதி. பணம் சம்பந்தப்பட்டவரை நீ லாபெர்ட்டியிடம்தான் பேச வேண்டும். ஆனால் நாங்கள் டான் கொலர்மியோவிடம் பேசும்வரை நீ இதுபற்றி வாயைத் திறக்காதே – புரிந்ததா? சரி...எங்களை இப்போது கேப்டனிடம் கூட்டிச் செல்.
த்சொ!
பின்னர்-
வந்து விட்டார்கள் கேப்டன்!
நாங்கள் நெருங்கி வரலாமா?
வில்லர்! கார்சன்!
வணக்கம் மேடம்...நங்கள் கேப்டனின் நண்பர்கள்! எங்கள் தோழர் எப்படி இருக்கிறார்?
தேறி வருகிறார்.
ஆனால் கட்டுப் போடலாம் என்றால் என்னைக் காயத்தைப் பார்க்கவே விடமாட்டேன் என்கிறார்!
அவளுடைய வார்த்தைகளை நம்பாதீர்கள்...நானொன்றும் தேறவே இல்லை...அது சரி...நீங்கள் எப்படி இங்கே-
இந்த வழியாகப் போய்க் கொண்டிருந்தோம். நடந்ததை ஜேகே மூலம் அறிந்தோம். இது எப்படி நடந்தது என்று எங்களிடம் விவரிக்கலாமில்லையா? உன்னை இப்படி காயப்படுத்திய நாயை தேடிக் கண்டுபிடித்து பழிவாங்க நாங்கள் உதவலாமில்லையா?
பீட்ரிஸ்...எங்களை விட்டு கொஞ்சம் விலகிப் போயேன்...ப்ளீஸ்!
சரி போகிறேன்..நிறைய பேசி சோர்ந்து போகாதீர்கள்...
உங்களுடைய தந்தைக்கு அவகாசமிருந்தால் வந்து எங்களிடையே கலந்து கொள்ளுமாறு சொல்ல முடியுமா மேடம்?
என் தந்தையா?
நாங்கள் இங்கே வந்ததே ஃபீனிக்ஸ் ரேஞ்சர் தலைமையகத்திலிருந்து அவருக்கு ஒரு சேதி சொல்லவே!
சரி...நான் அவரிடம் சொல்கிறேன்!
அவள் வெளியே போனதும் –
என்ன நடந்தது அங்கே?
சொல்கிறேன் லாபெர்ட்டி...
கேப்டன் பின் வாங்கி சென்றபிறகு அங்கே நடந்த சம்பவங்களை சுருக்கமாக எடுத்துரைத்தார் டெக்ஸ்!
ஸாரி வில்லர்! அந்த நரக பூமியில் உங்களைத் தனியே தவிக்க விட்டு நான் விலகி வந்ததை நினைக்கையில் குற்றவுணர்வு உறுத்துகிறது.
சரியாகச் சொன்னாய் நரகம் என்று-
டான் கொலர்மியோவின் முகமூடியைக் கழற்றும் பணி மட்டுமே பாக்கி இருக்கிறது.
அதனால்தான் பீட்ரிசை இங்கிருந்து போகச் சொன்னேன்.
அவளுடைய தந்தைக்கு எதிராக நீ செயல்படுவது தெரிந்தால் கொதிப்படைவாள் என்று நினைக்கிறாயா?
தனக்கும் துரோகமிழைக்கப் பட்டு விட்டதாக நினைப்பாள்!
பக்கம் 272
எனக்கு இடப்பட்ட மேலிடத்து உத்தரவு அப்படி என்று சொல்லி புரிய வைத்து விடலாம். அவளுடைய தந்தையை நல்வழிப்படுத்தும் முயற்சி இது என்பதால் அவள் என்னை மன்னித்து விடக் கூடும்.
கேப்டன்..டான் கொலர்மியோ வந்து கொண்டிருக்கிறார்.
சில வினாடிகளுக்குப் பின்-
உள்ளே வரலாமா?
வாருங்கள்...உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்!
நான் டெக்ஸ் வில்லர்..இவர் என் நண்பர் கிட் கார்சன்.
உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
என்னால் ஏதாவது காரியம் ஆக வேண்டுமா?
முன் அனுமதியில்லாமல் உங்கள் வீட்டினுள் பிரவேசித்தமைக்கு மன்னிக்க வேண்டும். பாப்லோவின் மறைவிடத்தில் எங்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது கேப்டனுக்குக் காயம் ஏற்பட்டது எங்களை ரொம்பவும் கிலேசப் படுத்தி விட்டது...பார்த்து நலம் விசாரித்து விட்டுப் போக வந்தோம்.
நெத்தியடியாகப் போட்டு உடைக்கிறானே – சண்டாளன்!
நீ...நீ....என்ன சொன்னாய்?
விஷயம் உங்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும் டான் கொலர்மியோ!
உங்களுடைய நிலத்தை மீட்க நீங்கள் திரட்டிய தனிப்படை விவகாரம் தோற்றுப் போனது. நேற்றிரவு ஜேகே வழிகாட்டிச் செல்ல, நான், கேப்டன், கிட் மூவரும் கணவாய்க்குள் சென்று பாப்லோ கும்பலை நிர்மூலமாக்கி விட்டோம்!
நம்பவே முடியாத சங்கதி. பாப்லோ செத்து விட்டதாகவா நீ சொல்கிறாய்?
பக்கம் 275
அதுதான் நிஜம் – ஒருவகையில் அது உங்களுக்கு நல்லது என்பேன்!
உங்களுடைய நிலம் பறிபோனதில் கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டது இயல்பே..ஆனால் நீங்கள் தீட்டிய திட்டத்தில் பல உயிர்கள் பலியாகி இரத்த ஆறு ஓடியிருக்கும் ஆபத்து இருந்தது.
அதைக் கேட்டு அதிர்ந்து போன பெரியவர் மௌனமாகிப் போய் தொப்பென்று நாற்காலி ஒன்றில் விழுந்தார்.
ஓ...எல்லாமே நாசமாகிப் போனதா...
நீ சொல்வதும் ஒருவேளை சரியானதாக இருக்கலாம்...அது ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத கனவுதான்.
என்னைக் காட்டிக் கொடுத்தது யார்? கேப்டன் லாபெர்ட்டியா?
இல்லை..பாப்லோ கும்பல் நடத்திய வழிப்பறி கொள்ளை அக்கிரமங்கள்...கேப்டன் லாபெர்ட்டி பின்னால்தான் வந்தார்.
பாப்லோ சந்தேகப்பட்டது சரியாகிவிட்டது. லாபெர்ட்டி இரட்டை வேடம் போட்டிருக்கிறான்!
இரட்டை வேடமில்லை ஸார்..மூன்று வேடங்கள்!
என்ன அர்த்தத்தில் அப்படி சொல்கிறாய் வில்லர்?
அப்புறமாக அந்த விஷயத்துக்கு வருகிறேன்.லாபெர்ட்டி முதலில் இதற்கு பதில் சொல் – இந்த கர்சீப் உன்னுடையதுதானே?
ஆமாம் – என்னுடையதுதான் – யார் இதைக் கொடுத்தார்கள்...?
நானே கண்டெடுத்தேன்!
எங்கே?
உன்னால் யூகிக்கவே முடியாது...
கணவாயில்...களவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில்.
இது எப்படி அங்கே வந்தது?
இதே கேள்வியைத்தான் நானும் கேட்டேன் – இல்லையா கிட்?
நீதான் அங்கே போனதேயில்லை என்று சொல்லியிருக்கிறாயே- பின்னே எப்படி இது அங்கே வந்தது?
நீ என்ன சொல்ல வருகிறாய் வில்லர்!
புரிய வைக்கிறேன்.
உன் காயத்தைக் கொஞ்சம் காட்டேன் – பார்ப்போம்.
கொஞ்சமும் எதிர்பாராவிதமாக சட்டென்று போர்வைக்குள்ளிருந்து துப்பாக்கி பிடித்த கையை வெளியே நீட்டினான் லாபெர்ட்டி.
உன்னை பரலோகத்திற்கு அனுப்பாமலே என் இலட்சியத்தை ஈடேற்றிக் கொண்டு விடலாம் என்றுதான் எண்ணினேன். ஆனால் எனக்கு வேறு வழியே இல்லாமல் பண்ணிவிட்டாய் நீ!
ஜேகே நீ கிட்டை கவனி!
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
டெக்ஸ்...என்ன இழவு இது – ஒரேயடியாகக் குழப்புகிறது எனக்கு!
சற்று அமைதியாக இரு கிட்!
நிறைய விஷயங்களை விளக்கவேண்டிய பொறுப்பு லாபெர்ட்டிக்கு இருக்கிறது.
விளக்கமா....? சமர்த்தன் நீ உனக்கு எதற்கு விளக்கம்!
எப்போது சந்தேகம் ஏற்பட்டது உனக்கு!
இரண்டு வினாடிகளுக்கு முன்- அந்தத் துப்பாக்கியைக் கண்டவுடன்
ஆனால் ஏற்கனவே உன் நெஞ்சில் சந்தேகம் துளிர்விட்டிருக்க வேண்டும். அந்தக் கைக்குட்டை விவகாரமா?
இல்லை. அது என் மண்டைக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது அவ்வளவுதான்.
ஆனால் அப்போது விழுந்த சந்தேக வித்து முளை விட்டது – உன் காயத்துக்குக் கட்டுப் போட்டதாக ஜேகே என்னிடம் சொன்னபோது!
அந்த சந்தேகம் ஊர்ஜிதமானது பீட்ரிசுக்கு நீ உன் காயத்தைக் காட்ட மறுத்ததாகக் கேள்விப் பட்டபோது.
காயமடைந்த ஒரு நபருக்கு ஒரு பெண்தான் நன்றாகப் பணிவிடை செய்ய முடியும். ஆனால் நீ காயமடையவேயில்லை என்கிற உண்மை வெளியாகி விடக் கூடாதே என்கிற கவலை உண்டு.
சரியாக யூகித்து விட்ட உன் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறேன்.
அட...நாசமாகப் போகிறவனே!
என்ன கண்றாவி இதெல்லாம் லாபெர்ட்டி.....?
என்ன கார்சன் இன்னுமா புரியவில்லை உனக்கு?
கிரீன் ஸ்டாரில் நாம் சந்தித்து உரையாடியபின் பாப்லோவையும் அவனது சகாக்களையும் ஒழித்துக் கட்ட உங்களை நான் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டேன்.
கொள்ளை பொருட்களை என்னுடையதாக்கிக் கொள்ள நான் வகுத்த சூழ்ச்சித் திட்டம்!
ஆமாம்...அந்த கும்பலை தனியொருவனாக என்னால் ஒழித்துக் கட்ட முடியாது என்பது நிதர்சனமான உண்மைதானே? உங்களுடைய சகாயம் எனக்குத் தேவைப்பட்டது.
நான் உங்கள் பக்கம் என்று தப்புக் கணக்குப் போட்டு உயிரைப் பணயம் வைத்து நீங்கள் போராடினீர்கள்.
முடிவில் பணம் எனக்கு சொந்தமாக வேண்டுமெனில் உங்களையும் நான் ஒழித்துக் கட்டினால்தான் உண்டு.
எனவேதான் ஆரம்பமுதல் என் சூழ்ச்சிக்கு உடந்தையாக இருந்து வந்திருக்கும் ஜேகேயின் உதவியோடு எனக்கு படுகாயமுற்றிருப்பதாக நாடகமாடினேன்.
கணவாய்ப்பகுதியில் தோட்டாக்கள் நாலாதிசையிலும் சீறிப் பாய்ந்து கொண்டிருந்ததால் அப்படியொரு நாடகத்தை அரங்கேற்றுவதில் கஷ்டமே இருக்கவில்லை!
காயம்பட்டு விட்டதால் நாங்கள் திரும்புவதாக சொல்லி உங்களை நம்ப வைத்தோம்..
பாப்லோ ஆட்களை அனுப்பினால், தேடி வருபவர்களின் பார்வையில் பட்டுவிடாத தொலைவுக்கு மட்டுமே நாங்கள் திரும்பினோம்!
பின்னர் மீண்டும் பாப்லோவின் இடத்தை நோக்கி முன்னேறினோம்.
நாம் பிரிந்த இடத்தை நாங்கள் மீண்டும் வந்தடைந்தபோது துப்பாக்கியின் முதல் முழக்கத்தை கேட்டோம்.
வில்லரும், கார்சனும் தாக்குதலைத் தொடங்கிவிட்ட மாதிரித் தோன்றுகிறது.
என்ன விபரீதம் என்றறிய ஆட்கள் ஓடுகிறார்கள். பாதை சந்தடியற்றுக் கிடக்கிறது.
நாங்கள் எதிர்பார்த்த சாதகமான சூழல் நிலவியது.
பாப்லோ உங்களைத் தாக்குவதில் முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த வேளையில்...
பொக்கிஷ அறைக்கு நாங்கள் சென்றோம்...
அங்கிருந்தவற்றை மொத்தமாக வாரிக்கொண்டோம்..
ஜேகே தயாராக நிறுத்தி வைத்திருந்த வண்டியில் அனைத்தையும் ஏற்றினோம்.
உங்களிடையே நிகழ்ந்து கொண்டிருந்த மோதல் ஒரு முடிவுக்கு வந்த பொது நாங்கள் வெகுதொலைவு விலகி வந்து விட்டோம்.
நம் திட்டம் முழு வெற்றி -  ஜேகே.
அதிர்ஷ்டம் நம் பக்கம் இருக்கிறது.
புத்திசாலி எவனும் செய்கிறமாதிரி, இங்கே வருமுன் தங்கத்தை ஓரிடத்தில் பத்திரமாகப் புதைத்து வைத்து அதன் வரைபடத்தையும் தயாரித்து எடுத்துக் கொண்டோம். பின்னர் சாவகாசமாக வந்து அதை எடுத்து அனுபவிப்பது எங்கள் நோக்கம்-
என் வியர்வையைத் துடைக்க பயன்படுத்திய கைக்குட்டை மட்டும் அங்கே விழுந்து தொலைக்காவிடில் எங்களுடைய விஷயம் வெளிவந்திராது...நாம் தொடர்ந்து நண்பர்களாகவே இருந்திருப்போம்.
விரியன் பாம்பின் வம்சாவளியில் வந்த உன் நட்பு எங்களுக்குத் தேவையில்லை லாபெர்ட்டி!
கோபமடையாதே வில்லர். நான் உன்னிடம் சில பொய்களே சொல்லியிருக்கிறேன்.
ஆமாம்..மூன்று சங்கதிகளைத் தவிர நோகாலெஸில் நான் உன்னிடம் சொன்னவை அனைத்துமே உண்மை!
ஒன்று – டான் கொலர்மியோ தன் திட்டத்தை என்னிடம் விவரித்த பிறகு அதில் பல மில்லியன்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததும் நான் உண்மையிலேயே படையை விட்டு விலகி விட்டேன். ட்ரென்டன் என்னைப் பற்றி உன்னிடம் எதுவுமே சொல்லாததற்குக் காரணம் அவருக்கு எதுவுமே தெரியாது என்பதுதான்.
இரண்டு- படையை விட்டு விலகுமுன் சார்ஜண்ட் ஹால் ப்ரூக்கின் உதவியோடு கேட்லிங்கைக் கடத்தி வந்தேன். அவன் விசாரிக்கப்பட்டால் உளறி விடுவான் என்று அவனைத் தீர்த்துக் கட்டினேன்!
அச்செயல் உன் மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வழிவகுத்தது.
எவனையும் பார்த்த மாத்திரத்திலேயே இவன் ஒரு அயோக்கியன் என்று சரியாகக் கணித்து விடுவேன்...ஆனால் உன் விஷயத்தில் தோற்றுப்போனேன். இதற்காக நீ பெருமைப் பட்டுக் கொள்ளலாம் லாபெர்ட்டி.
தாங்க்யூ வில்லர்!
சரிதான் வாயை மூடுடா சாக்கடைப் புழுவே..கதை இத்தோடு முடிந்து விடவில்லை.
பக்கம் 291
ஏனில்லை....? விசையை இழுத்தால் நொடியில் கதை முடிந்து விடுமே!
பின்னே ஏன் தயக்கம்!
சொல்ல வேண்டியது கொஞ்சம் பாக்கி இருக்கிறதே...
மூன்று -  நான் பீட்ரிஸிடம் பிரியம் கொண்டது காதலின் காரணமாக அல்ல. உண்மைக் காரணத்தை நான் சொல்லவும் வேண்டுமா என்ன?
அயோக்கிய ராஸ்கல்...
இனியும் நான் தாமதிக்கக் காரணமில்லை!
உங்களிருவரையும் தீர்த்துக் கட்டினால்தான் நான் நிம்மதியாக சுகபோகங்களை அனுபவிக்க முடியும்...
அப்படியில்லையடா நாயே – சாகவேண்டியது அவர்களல்ல....நீதான்!
எதிர்பாராத அந்த திருப்பத்தினால் எல்லோரும் ஒருகணம் செயலிழந்து போனார்கள்...ஒரே ஒரு கணம்தான்.
கிட்...நல்ல வாய்ப்பு!
நழுவ விடுவேனா என்ன?
டுமீல்!
செத்துப்போ சனியனே!
லாபெர்ட்டியும் ஜேகேயும் மடிந்தனர்.
போர் ஓய்ந்து விட்டது பிரதர்..நீ ஓ.கே.தானே!
சிறு சிராய்ப்பு கூட இல்லை!
டாடி!
நடைமுறைக்கு ஒவ்வாத இலட்சியத்தை வைத்துக்கொண்டிருந்த எனக்கு இந்த முடிவு...
உன் தந்தைக்கு என்ன மேடம்?
இறந்து விட்டார்!
ஓ...மை காட்!
ஜேகேயின் கடைசித் தோட்டா....! தவறுதலாகத் தாக்கி விட்டான் அந்த முட்டாள்!
ஸாரி பீட்ரிஸ்......
இதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது...ஜெயிலுக்குப் போகிற கஷ்டம் இனி இவருக்கு இல்லை அல்லவா...
லாபெர்ட்டி, கொலர்மியோ மற்றும் ஜேகே மரணமடைந்ததையடுத்து கேட்லிங் விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. ஜேகே, லாபெர்ட்டி இருவரின் உடல்களும் நோகாலெஸ் ஷெரீப் வசம் ஒப்படைக்கப் பட்டது. தங்களுடைய பாஸினை உரிய மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்ய கொலர்மியோவின் ஊழியர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆனால் டெக்ஸ்சும், கிட்டும் இவற்றை எல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. பீட்ரிசை சமாதானப்படுத்திவிட்டு இருவரும் கிளம்பி விட்டனர்.
லாபெர்ட்டியின் பாக்கெட்டிலிருந்த வரைபடத்தின் உதவியோடு புதைக்கப்பட்ட கொள்ளைப்பொருட்களை மீட்டு விடலாம்.
நமக்கேன் அந்த வேலை? உரிய நபர்கள் கவனித்துக் கொள்ளட்டும்.
லாபெர்ட்டி ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்....
நம்மை ஏறத்தாழ பரலோகத்திற்கு அனுப்பி வைக்க இருந்தானே!
அவன்மீது உனக்கு சந்தேகம் என்று  என்னிடம் நீ சொல்லவேயில்லை.
அதை சந்தேகம் என்று சொல்ல முடியாது....ஒருவகையான குறுகுறுப்பு......அவ்வளவுதான்...
லாபெர்ட்டியின் கைக்குட்டை அங்கே கிடந்ததற்கு வேறு காரணமும் இருக்கலாம் என்பதால் அதை நான் முதலில் சீரியஸாக எடுத்துக்கொள்ள வில்லை.
அப்போது எழுந்த குறுகுறுப்பு சந்தேகமாக மாறக் காரணமாக இருந்தவன் ஜேகே – அப்புறம் அந்தப் பெண்....
சின்னச்சின்னப் புதிர்கள்...ஆனால் ஒன்றன்பின் ஒன்றாக நிகழவே அவைகளை ஒருங்கிணைத்துப் பார்க்கத் தோன்றியது.அவனுடைய காயத்தைக் காட்டுமாறு நீ அவனிடம் சொன்னபோது உன் சந்தேகம் உறுதியாகிவிட்டதா?
இல்லை...உறுதியாகியிருந்தால் துப்பாக்கியில் கை வைத்துக் கொண்டல்லவா அந்தக் கோரிக்கையை விடுத்திருப்பேன்!
போர்வைக்குள்ளிருந்து அந்தக் கை வெளிவரும்போது அதன் பிடியில் நீட்டிய துப்பாக்கி இருந்தது நான் கொஞ்சமும் எதிர்பாராத ஒன்று.
நாம் அதிர்ஷ்டசாலிகள்...
சந்தேகமில்லாமல்! அந்தப் பெண் மட்டும் தெய்வம் போல் அந்த வேளையில் அங்கே வந்திராவிடில் நம் ஆவிகள் இந்நேரம் விண்ணில் பறந்து கொண்டிருந்திருக்கும்....
உனக்குப் பறக்கத் தெரியுமா?
தெரியாது....தெரிந்து கொள்ளவும் இஷ்டப்படவில்லை.
ஓ.கே...இம்முறை நான் எதிர்வாதம் செய்யப்போவதில்லை!_சவால்களை சந்தித்து, சந்தித்து சிந்தையில் சாகசங்களை சிந்தித்து, சிந்தித்து சூடான நண்பர்கள் இருவர் தம் அத்தனை அதிரடிகளையும் மறந்து லேசாகிச் சிரித்தனர்.
      
-முற்றும்-
வணக்கம் தமிழ் நாவல் உலகை விஸ்வரூப ஆதரவினால் அரவணைத்து வரும் அன்பான வாசகர்களே! தங்கள் வரவுக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி.
நிற்க!
ஒரு சித்திரக்கதையினை நாவல் வடிவில் மாற்றினால் அதன் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்கிற சோதனை முயற்சிதான் இந்த நாவல் வடிவ சித்திரக்கதை. எங்களை வைத்து சோதனையா என்கிற நண்பர்கள் தயவுகூர்ந்து மன்னிக்கவும். இந்த நாவலில் வரும் நாயகர்களும், அவர்களது அதிரடிகளும், நிகழும் களங்களும், தமிழ் மண்ணில் இருந்து நம்மை அப்படியே மெக்ஸிகோ தேசத்தின் தகிக்கும் மண்ணிற்குத் தூக்கிக்கொண்டு போய் சடுதியில் இறக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அமெரிக்க மண்ணின் யுத்தக் களங்களில் ஒரு வித்தியாசமாக தனது நிலத்தை மீட்க அமெரிக்க தேசத்திடமிருந்து மீட்டிட போராடும் ஒரு போராளியின் கதை இது. ஆனால் அவர் தேர்ந்து எடுத்த பாதையோ கொடூரமான பாதை. அவரது நோக்கம் நன்றாக இருந்ததாலேயே அவரை மதிப்பு குறையாமல் நடத்துகின்றனர் நமது கதையின் நாயகர்கள் டெக்ஸ் வில்லரும், உற்ற தோழர் கிட் கார்சனும். தொலைந்து போன கேட்லிங் வகை இயந்திரத் துப்பாக்கியை மீட்கும் பணி இருவருக்கும் அவர்களது தலைமையிடத்திலிருந்து தரப்படுகிறது. அதனை மீட்கும் முயற்சியில் முதலில் சார்ஜன்ட் ஹால்ப்ரூக் அந்த துப்பாக்கியை திருட உதவி செய்திருப்பதனை தங்கள் புலனாய்வில் கண்டறிகிறார்கள் டெக்ஸ் அண்ட் கார்சன். அவன் சிறையிலிருந்து தப்பி செல்ல விட்டு பின்னர் அவனை பின்தொடர்ந்து நோகாலெஸ் சென்றடைகிறார்கள். அங்கே அவர்கள் உயிரைக் காக்கும் கேப்டன் லாபெர்ட்டியின் உதவியுடன் ஒரு பாழடைந்த செவ்விந்தியக் குடியிருப்பை சென்றடைகிறார்கள் டெக்ஸ் அண்ட் கார்சன். அந்த இடத்தில் மறைந்து இருந்துதான் அவ்வப்போது வங்கிக் கொள்ளைகளையும் வழிப்பறிகளையும் அரங்கேற்றுகிறது பாப்லோவின் கொலைவெறிக் கூட்டம். இந்த கும்பல் சேர்க்கும் பணம் பின்னர் ஒரு நாள் அமெரிக்காவின் இராணுவத்தை எதிர்த்திட உதவிடும் என்கிற ஒரு விவசாயியின் குறிக்கோள் அது என்பது அங்கே தெரிய வருகிறது. முடிவு தாங்கள் இப்போது அறிந்திருப்பீர்கள்!  
  தாங்கள் தங்களது காமிக்ஸ் நண்பர்களிடம் இந்த காமிக்ஸ் இருப்பின் வாங்கி சித்திரக்கதை வடிவிலும் ஒரு முறையேனும் வாசித்துப் பாருங்களேன் என்கிற ஒரு வேண்டுகோளையும் இங்கே முன் வைக்கிறேன். வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரகாஸ் பப்ளிஷர்ஸ் ஸ்டாலில் வாசக நண்பர்கள் கொத்துக்கொத்தாய்க் காத்திருப்பார்கள். வாங்களேன்? காமிக்ஸ் குறித்து சும்மா ஒரு பார்வை, ஒரு விவாதம், ஒரு அலசல் செய்து வருவோம். அப்படியே தாங்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்தால் அவர்களுக்கேயான தனிச்சுவை மிகுந்த சித்திரக்கதைகளும் கிடைக்கும். அவர்களது விருப்பங்களை நீங்கள் அறிந்து கொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையுமே?
என்றும் அதே அன்புடன்   
தங்கள் நண்பன் ஜானி!
பின் இணைப்பு 
கதை நிகழும் களம் குறித்த மேப்!

6 கருத்துகள்:

  1. கலக்கிறீங்க ஜானி சார். டெக்ஸ் படத்தைப் போட்டு. நாவலாக வெளியிட்டாலும் தல கலெக்ஷன் அள்ளுவார் போலிருக்கே. தூள்.

    பதிலளிநீக்கு
  2. கடினமான முயற்சி ஜி, அற்புதம் . வாழ்த்துக்கள் . எத்தனை நேரம் ஆனது ஜி, இவ்வாறு மாற்ற ? .

    பதிலளிநீக்கு
  3. அவர் பெயரைக் கேட்டாலே சும்மா அதிரும் இல்லையா? இது நாவல் வாசிப்பாளர்தம் மேலான கவனத்தினை சித்திரக்கதைகள் பக்கம் திருப்ப கடுகளவு உதவினாலும் அதுவே எனக்கும் காமிக்ஸ் ரசிகர்களுக்கும் பெரு மகிழ்ச்சியை வரவழைக்கும் அல்லவா? தங்கள் கருத்துகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. விஜி! இது பலநாள் கனவு! இன்று நனவானது! தங்கள் கருத்துக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  5. அட்டகாசம் அருமையான முயற்சி

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...