திங்கள், 24 நவம்பர், 2014

தோன்றியது ...மனதில் என்றோ ஒரு நாள்....

நகர நரகத்தின் நடுவே
நசுங்கி நசுங்கி இடையே
கவிதை வரையும் கவிஞன் நான்!

பூக்களைக் கொன்று விட்டு
காகிதப் பூக்களின் புன்னகையில்
நிஜ வாசத்தைத் தேடும்
நகர வாசிகளில் ஒருவன் நான்!

ஓடி ஓடி ஓடித் திரிந்து
ஒன்றும் இல்லையென உணர்ந்து
கால் தேய்ந்து  பின்னோக்கி ஓடியது
தவறென ஓடிக்கொண்டே யோசிக்கிறேன்!

அமைதிப் புறாவைக் கொன்று சமைத்து
தின்று சண்டைக் கோழிகளை
வளர்த்து சவால் விட்டு
என்றும் சமாதானத்தை யாசிக்கும் பூமியிது!
_நகரத்தில் அடையாளமில்லாமல் நின்று போன அடையாளமில்லா ஒருவன்!!!
   

3 கருத்துகள்:

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...