புதன், 5 நவம்பர், 2014

யெகோவா தேவன் இஸ்ரவேலரை விடுவிக்கிறார்_jw.org சித்திரக்கதை வரிசையில்....

             அன்பு கொண்ட நெஞ்சங்களே! வணக்கம்! எனது வலைப்பூவுக்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்! 
         இந்த யெகோவா சாட்சிகள் சபையினரின் சித்திரக்கதை மூலம் விவிலியம் விளக்கத்தை சிறந்த ஓவிய அனுபவத்துடன் ரசிக்கும் வகையில் உருவாக்கியமைக்கு அவர்களுக்கு நன்றிகள். a great thanks to the jehovah witnesses who makes this to praise the lord by comics. thanks jw.org for allowing to translate it for the tamil speaking people around the globe. please add this in your tamil section. which will reach more than from my blog. thanks again.
               இந்த முறை நாம் வாசித்து மகிழ இருப்பது ஒரு மிகப் பெரிய வரலாற்றின் ஒரு சின்னஞ்சிறு பகுதி முன்னொரு காலத்தில் எகிப்துக்கு மிக மரியாதையாக வரவழைக்கப்பட்டு மன்னரின் அன்புக்குப் பாத்திரமாய் விளங்கிய இஸ்ரேலிய ஜனங்கள் புது மன்னரின் தலைமையின் கீழ் நசுக்கப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயமாக, அவர்களின் அடிமைகளாக அடங்கிக் கிடக்கிறார்கள். பிரமிடுகள் இன்ன பிற மாபெரும் கட்டிடங்களின் கலைகளை வகுத்து உலகை பின்னர் திரும்பிப் பார்க்க வைக்கும் திறமைகளை உள்ளடக்கிய சமுதாயம் யெகோவாவின் மக்கள். இறைவன் எப்போதுமே ஒரு இன மக்கள் நசுக்கப்பட்டு வதையுறுவதை விரும்புவதில்லையே. மோசே மூலமாக அவர்களுக்கு இரட்சிப்பை அனுப்புகிறார் இறைவன். அவர்களை அனுப்ப மறுக்கும் பார்வோன் மன்னன் மீதும் அவனது குடி மக்களின் மீதும் கடும் வாதைகளை அனுப்புகிறார். மிரண்ட மன்னன் தன் இருதய கடினத்தை தனது மகனின் மறைவுக்குப் பின்னர் மாற்றிக்கொண்டு இஸ்ரேலிய மக்களை தங்கள் சொந்த தேசத்துக்கே திருப்பி அனுப்புகிறார். அவ்வாறு திரும்பிக் கொண்டு இருக்கும் ஜனங்களுக்கு இறைவனது மேக ஸ்தம்பமும், அக்கினி ஸ்தம்பமும் வழிகாட்டியாக விளங்குவதையும் எகிப்திய மன்னன் மீண்டும் அவர்களை அடிமைப்படுத்தும் நோக்குடன் துரத்தி வருவதையும் பின்னர் இறைவனால் அழித்தொழிக்கப்படுவதையும் இந்த பதிவு உங்களுக்கு அற்புதமான சித்திரத் தரத்துடன் விளக்குகிறது.  



இம்மாத லயன் காமிக்ஸ் குழும வெளியீடுகளான சைத்தான் வீடு (வண்ணத்தில் விண்ணைத் தொடும் மற்றுமொரு மறுபதிப்பு) ரிப்போர்ட்டர் ஜானி சாகசம். ரூபாய் அறுபது விலையில் வெளியாகி காமிக்ஸ் உலகை கலங்கடித்துக் கொண்டுள்ளது. வாங்க மறக்காதீங்க. 


இதிலிருந்து ஒரு பக்கம்....
முன்னர் வெளியான கருப்பு வெள்ளை கதையின் அட்டைப்படம்.


அடுத்த நல்வரவு ஒரு நிழல் நிஜமாகிறது. இது ஒரு லார்கோ வின்ச் சாகசம். சைமனின் அதிரடிகள் தொடர்கிறது. (ஜானி, சைமன் நம்ம நேரம் பாய்ஸ்) 
விலை ரூபாய் நூற்றி இருபதில் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண ஆல்பம் அட்டகாசமாக வந்துள்ளது. இம்முறை சைமனின் அதிரடிகள் மிக அருமையாக வந்துள்ளன.



என்னை பொறுத்தவரை கருப்பு வெள்ளை மிக அசத்தல் நண்பர்களே!



வேற யாரோ ஹீரோவை வரவேற்க வேண்டிய நேரமோ என்கிற எண்ணங்களைத் தகர்த்தெறிந்து தங்கள் கொடியை நாட்டியுள்ளனர் நமது டெக்ஸ் வில்லர் பட்டாளம். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
அஸ்கு! புஸ்கு! வேங்கைகள் வீழ்வதேயில்லை. இருக்கும் கதைகளும் இனி வரும் கதைகளும் நம்ம ப்ளூ பெர்ரியை காமிக்ஸ் பிரபஞ்சத்தில் எந்த மூலையில் இருப்பினும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தபால்காரர்களாக மாற்றும் வல்லமை கொண்ட கதைகள் கொண்ட சித்திரத் தொடர் இது என்பதில் ஐயமேயில்லை! எனவே சீக்கிரம் கதை எழுத சொல்லுங்கப்பு! வாழ்க கேப்டன் டைகர்!  
சந்தா செலுத்த மறந்து விடாதீர்கள்! அடுத்த வருடத்தின் அதிரடிகளை தவற விடாதீர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன். நன்றி வணக்கங்கள்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...