இனிய வணக்கங்கள் பிரியமுள்ள தேவனின் சமூகத்தாரே!
உங்கள் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக! உங்கள் இல்லங்களில்
சமாதானமும், சந்தோஷமும் ஆளுகை புரிவதாக. மிகுந்த ஆசீர்கள் உங்களை நிரப்புவதாக.
தேவனின் அருமையான சமூகத்தின்
வாசனையானது, அடர் புகை எழும்பும் நறுமணம் வீசிடும் சாம்பிராணியின் வாசனைக்கொத்தது.
வாழ்வின் எல்லா அம்சங்களும் தனி மனிதனாக இருக்கும்போது சுவைப்பதில்லை. அதே ஒரு
சமுதாயத்தில் மக்களோடு மக்களாக நெருங்கிய உறவோடும், பிரியத்தோடும், அன்போடும்
மக்களை அரவணைத்து செல்வதிலும் வாழ்வின் சுவையானது கூடுகிறது.
அதே சமயம், கொடுமைகளும், தீயவைகளும் நிறைந்த
சமூகத்தில் வாழ்கையில் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை. அன்பும்,
பாசமும், நட்பும் போலி வார்த்தை அலங்காரமாய் மட்டுமே நின்றுவிடும் அவலம் நிகழ்வது
கண்கூடு. அப்படிப்பட்ட சமுதாயத்தில் வாழ்கையில் நிம்மதி கிலோ என்ன விலை என்கிற
நிலையே இருக்கும். தீயவை மாறவும் நல்லவை நிலைக்கவும் இறைவனது திருச் சித்தம் அந்த
சமுதாயத்தை அக்கறையோடு கவனித்திடவும் அவரது அன்பும் கிருபையும் மழையாகப் பொழியவும்
வேண்டியது அவசியம். அப்படியொரு ஆபத்து மிகுந்த சமுதாயம் திருந்தாவிடின் அதற்கு
என்ன நேரிடும்? விவிலியம் விரிவாக உரைத்திடும் வரலாறுகளில் லோத்தின் சரிதமும்
ஒன்று. லோத் இறைவனின் அன்புக்குப் பாத்திரமானவர். அவர் வசித்தது சோதோம் என்கிற ஒரு
பெரிய நவநாகரிகப் பட்டணத்தில்.... பட்டணம் எனில் மகா பெரிய பட்டணம். நாகரிகத்தின்
உச்சமும், அநாகரிகத்தின் எச்சமும் ஒன்று சேர்ந்து பட்டொளி வீசித் திகழும் பட்டணம்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகரித்து, அநியாயமும், அராஜகமும், கொலை, கொள்ளையும்
உயர்ந்து பட்டணத்தின் துர்நாற்றம் அதிகமானபோது இறைவன் தனது தூதரை அங்கே இருந்த ஒரே
நியாயவான் லோத்தின் இல்லத்துக்கு அனுப்புகிறார். அந்தத் தூதரையும் தங்களது
விருப்பத்துக்குப் பயன்படுத்த அனுப்புமாறு அந்த அனாகரிகவாதிகள் மிரட்டல்
விடுக்கும் தருணத்தில் இறைவனது சித்தம் வேறாக இருக்கிறது. அந்த ஆபத்தான
கூட்டத்தாரிடமிருந்து, அவர்களது கண்களுக்கு தப்ப வைத்து லோத்தையும் அவரது
குடும்பத்தாரையும் அந்த பட்டணத்திலிருந்து மீட்கிறார் இறைவன். பின்னர் அந்த
நகரையும், அதே போன்றே அருகில் அக்கிரமக்காரர்கள் நிறைந்து வழியும் கொமோரா
பட்டணத்தினையும் கந்தக, அக்கினி மழையினை பொழியப் பண்ணி அழித்தொழித்து விடுகிறார்.
அந்த அழிவினை திரும்பிப் பாராதீர்கள் என்கிற தேவ தூதர்களின் உத்தரவினை மீறி
திரும்பி நோக்கிய லோத்தின் மனைவி உப்புக்கல் சிலையாகிறாள். அவள் நின்ற பகுதியே
பின்னர் சாக்கடல் என அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. சித்திர வடிவில் வார்த்த யெகோவாவின் சாட்சிகள் சபைக்கு நன்றிகள்.
கதை தொடர்கிறது!
லூக்கா _ ஒரு சரித்திர எழுத்தாளர். அவரது பார்வையில் இயேசு கிறிஸ்து கூறியது “அவ்வாறே
லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள், வாங்கினார்கள்,
விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் போன நாளில்
விண்ணிலிருந்து பெய்த தீயும், கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிட மகன்
வெளிப்படும் நாளிலும் அவ்வாறே நடக்கும். அந்நாளில் வீட்டின் மேல் தளத்தில்
இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே
வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்து விடுவர். தம் உயிரை இழப்பவரோ அதைக்
காத்துக் கொள்வர்.”
சங்கீதங்கள் 101:3 ல் மன்னர் தாவீது இவ்வாறு பாடுகிறார். இழிவான எதையும் என்
கண்முன் வைக்க மாட்டேன். நெறி தவறியவரின் செயலை நான் வெறுக்கிறேன். அது என்னைப்
பற்றிக்கொள்ளாது.
எபேசியர் 6 ல் 1-3 கூறுவது என்னவெனில் “பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக்
கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. உன் தந்தையையும்,
தாயையும் மதித்து நட என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை. இதனால் நீ
நலம் பெறுவாய். மண்ணுலகில் நீடூழி வாழ்வாய் என்பதே அவ்வாக்குறுதி.
அப்புறம்
நம்ம லயனின் அடுத்த பாய்ச்சல் நிகழவிருப்பது----
டெக்ஸ் என்கிற தமிழ் காமிக்ஸ் அரசனின் மகுடம் இன்னுமொருமுறை சூடப்படவிருப்பது----
வல்லவர்கள் வீழ்வதில்லையில்-----
நூறு ரூபாய் விலையில்----
முன்னூறு ப்ளஸ் அதிரப் பண்ணும் பக்கங்களில்----
மிஸ் பண்ணவே பண்ணாதீங்க!
ஏரோப்ளான் பறக்க விடும் அடுத்த கதை வானமே எங்கள் வீதி!
கலக்கும் கதையாக உருப்பெற்றுள்ளது அட்டைப்படத்தின் வண்ணக்கலவையிலேயே தெரிகிறது. நிச்சயம் உங்கள் மனதினை ஈர்க்கும் வகையிலான கதையாக அமைந்து உங்களை மகிழ்விக்க வருகிறது. வாங்க மறக்காதீங்க!
அப்புறம்
நம்ம லயனின் அடுத்த பாய்ச்சல் நிகழவிருப்பது----
டெக்ஸ் என்கிற தமிழ் காமிக்ஸ் அரசனின் மகுடம் இன்னுமொருமுறை சூடப்படவிருப்பது----
வல்லவர்கள் வீழ்வதில்லையில்-----
நூறு ரூபாய் விலையில்----
முன்னூறு ப்ளஸ் அதிரப் பண்ணும் பக்கங்களில்----
மிஸ் பண்ணவே பண்ணாதீங்க!
ஏரோப்ளான் பறக்க விடும் அடுத்த கதை வானமே எங்கள் வீதி!
கலக்கும் கதையாக உருப்பெற்றுள்ளது அட்டைப்படத்தின் வண்ணக்கலவையிலேயே தெரிகிறது. நிச்சயம் உங்கள் மனதினை ஈர்க்கும் வகையிலான கதையாக அமைந்து உங்களை மகிழ்விக்க வருகிறது. வாங்க மறக்காதீங்க!
ஓகே நண்பர்களே! தற்சமயம் விடை பெறுகிறேன்.
நல்லவை எங்கிருந்தாலும் தேடி எடுத்து வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கை மிக அழகாகவும் அருமையாகவும் ஆசீர்வதமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை என்கிற இனிய சொற்றொடருடன் பதிவை நிறைவு செய்கிறேன்! மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் நண்பன் ஜானி! பை!
நல்லவை எங்கிருந்தாலும் தேடி எடுத்து வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கை மிக அழகாகவும் அருமையாகவும் ஆசீர்வதமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை என்கிற இனிய சொற்றொடருடன் பதிவை நிறைவு செய்கிறேன்! மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் நண்பன் ஜானி! பை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக