வெள்ளி, 27 அக்டோபர், 2023

பாலைவனப் புதையல்_மாயாவி 009_ராஜா காமிக்ஸ்

 வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே.. 

இம்முறை பாலைவனப் பகுதியில் புதையல் வேட்டை துவங்குகிறது.. மாயாவி 009 எதிரிகளை எப்படி முறியடிக்கிறார் என்பதனை இந்த ராஜா காமிக்ஸில் நாம் காணவிருக்கிறோம்.. 

கோட்டும், டையுமாக குதிரையின் மீதேறிப் பறக்கும் கனவானின் காட்சியோடு அட்டைப்படம் நம்மை வரவேற்கிறது. விலை ரூபாய் 1.50யில் ஐம்பது + பக்கங்களில் ஆச்சரியமூட்டும் ஓவிய ஜாலங்களுடன் நமக்கு அருமையானதொரு படைப்பு காணக் கிடைக்கிறது. இந்த நூலினை நாம் வாசிக்க அன்பளித்திருக்கும் திரு. செந்தில்நாதன் அவர்களை வாழ்த்துவோம்.. 

  

கதையின் நாயகன் மாயாவி தீபக் ஒரு தீவில் உள்ள எழும்புகளால் கட்டப்பட்ட கோட்டை ஒன்றின் மர்மத்தை அறிந்து கொண்டு வர செல்கிறார். அவரைத் தடுத்து சுட்டுத்தள்ள நினைக்கும் கும்பலிடம் போலி பிம்பத்தை நிஜமான உருவமாகக் காண்பிக்கும் கருவி மூலமாக தப்புகிறார். 
அவர்களது தலைவியிடம் பீதியுடன் சென்று கூற தலைவி தாட்சா தனது சதி வலையை விரிக்கிறாள்.. தனது கருவி தொலைந்து போன நிலையில் கோட்டைக்குப் போய் யாரையுமே காணாமல் திகைத்து நிற்க அப்போது தனது நாடகத்தினை கிராமப் பெண் வடிவில் நிறைவேற்ற வந்து நிற்கும் தலைவியின் சதியில் சிக்கினாரா நாயகன் மாயாவி தீபக்? விவரமாக அறிந்து கொள்ள வாசியுங்கள் பாலைவனப் புதையல்.. 

இந்த நூலை தரவிறக்கி வாசிக்கும் விருப்பமுள்ளவர்களுக்கான சுட்டி: 

3 கருத்துகள்:

  1. படித்த புத்தகங்களையே திரும்ப திரும்ப போடாம, படித்தும்,திரும்ப கிடைக்காத அரிய காமிக்ஸ்களை வழங்கி காமிக்ஸ் பிரியர்களை மகிழ வைக்கும் ஜானி சாருக்கு வாழ்த்துக்கள் ❤️💐❤️

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. செந்தில் நாதன் அவர்களுக்கு இந்த நன்றி வாழ்த்தை பார்வர்ட் செய்கிறேன்.

      நீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...