சனி, 7 அக்டோபர், 2023

083_நடுநிசி வேட்டை_பொன்னி காமிக்ஸ்_செந்தில்நாதன் _முதன்முறை இணையத்தில்..

 இனிய வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. 



நடுநிசி வேட்டை.. 

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ சூப்பர் ஹீரோ சாகசம் போல இருந்தாலும் பக்கா பேய்க்கதை.. அதுவும் இறுதி வெற்றி பேய்க்கே என்பதால் திகில் கூடுகிறது.. பீட்டர், ஸ்டெல்லா, ரமேஷ் மற்றும் மாதவன் இந்த கதையின் மையப்புள்ளிகள். ஓமனா என்கிற அழகு நங்கை ஏமாற்றப்பட்டதால் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளுக்கு பேயுருவம் கிடைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை திகிலுடன் துவங்கி திகிலுடன் முடித்திருக்கிறார்கள்.. இந்த பொன்னி காமிக்ஸ் நம்மைக் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.. பொன்னி காமிக்ஸின் குறிப்பிடத்தக்க இதழ்களில் இதுவும் என்று என்றால் மிகையாகாது.. ரூபாய் 1.20 ல் செம்ம மிரட்டல். வாசிக்கத்தவறினால் இழப்பு கண்டிப்பாக உங்களுக்குத்தான். இதனை வாசிக்க நமக்காக சிரத்தை எடுத்து ஸ்கேன் செய்து அன்பளித்த திரு. செந்தில் நாதன் அவர்களுக்கு குழுவின் சார்பிலும்,  வலைப்பூ சார்பிலும்  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அபூர்வமான இந்த புத்தகம் இணையம் காண்பது இதுவே முதன்முறை.. தவற விடாதீர்கள்..

கதையினை வாசிக்க பிடிஎப் லிங்க்: 

https://www.mediafire.com/file/8ohfp520l0bijd0/Ponni+Comics+83+-+Nadunisi+Vaettai.pdf/file

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...