வணக்கங்கள் அன்பு வாசக உள்ளங்களே..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. இந்த புத்தாண்டில் உங்களுக்கான சிறு பரிசு ஒன்றினைக் கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.. கடந்து போன தினங்களில் எல்லாம் சிறப்பான தருணங்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.. உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.. வரும் ஆண்டு வித்தியாசமான ஆண்டாக மனதில் நிலைக்க நம்மாலான நற்செயல்களை செய்வதில் கவனங்களை திருப்பி மகிழ்வோம்..
மானவ்ஸ் நகரம்: அக்டோபர் 24, 1848இல் மாநகரமானது; அப்போது இது போர்த்துக்கேய மொழியில் "கருப்பு ஆற்றங்கரையில் அமைந்த நகரம்" என்ற பொருள்படும் Cidade da Barra do Rio Negro என அழைக்கப்பட்டது. செப்டம்பர் 4, 1856இலிருந்தே தற்போது அறியப்படும் பெயரில் அழைக்கப்படலாயிற்று. மனௌசு அமேசான் மழைக்காடுகளின் நடுவே அமைந்துள்ளதால் இதனை அடைய படகுகள் மூலமோ வானூர்தி மூலமோவாகத் தான் செல்ல இயலும். சாலைகளால் இதற்கு அணுக்கம் இல்லை. இந்த தனிமைப்படுத்தலால் நகரத்தின் பண்பாடும் இயற்கை அழகும் அழிபடாது உள்ளது. பிரேசிலியப் பழங்குடிகளின் பழக்கவழக்கங்கள் மற்றெந்த ஊரகப் பகுதியை விட இங்குதான் பாதுகாக்கப்படுகிறது. பிரேசிலிய அமேசான் வனப்பகுதிக்கு செல்லும் நுழைவாயிலாக இது அமைந்துள்ளது. உலகின் மிகச்சில இடங்களிலேயே இந்தளவிலான தாவர, மர, பறவை, பூச்சி, மீன் வகைகளைக் காணவியலும். நமது கதையின் ஆரம்பப் புள்ளி அங்கிருந்துதான் துவங்குகிறது.. பிரேசில் தேசம்.. பொக்கிஷங்களின் தேசம்.. ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கம்.. அங்கே ஒரு மறைவிடத்தை கண்டுபிடிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.. அதனை ஆராயப் புகுகையில் ஒரு இரகசியமான ஒளிவிடம் பாறைகளால் மறைக்கப்பட்டுள்ளதை கண்டறிகிறார்கள்.. அந்த பாறைகளை தகர்த்ததும் நடப்பது என்ன? அவர்கள் சந்தித்த சக்தி எப்படிப்பட்டது என்பதனை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக