புதன், 21 ஜனவரி, 2026

தங்கத் தாமரை பதிப்பகத்தின் லேட்டஸ்ட் வெளியீடுகள்.

 வணக்கங்கள் அன்புள்ளங்களே.. 

இந்த புத்தகத் திருவிழாவை சிறப்பிக்கும்பொருட்டு தங்கத்தாமரை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு ரங்லீ காமிக்ஸ் வாயிலாக விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் சித்திரக்கதைகள் மொத்தம் நான்கு தலைப்புகளில் வெளியாகியுள்ளன... அவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.. 

SNo

கதை

கதாசிரியர்

விலை

1

டெவில் டேவிட்

பிகேபி (மிஸ்.கவிதா)

Rs.120/-

2

மியாவ் மீனா

பாக்கியம் ராமசாமி

Rs.70/-

3

குண்டு பூபதி

பாக்கியம் ராமசாமி

Rs.70/-

4

காதல் காவலர் அப்புசாமி

பாக்கியம் ராமசாமி

Rs.90/-

 இந்த நான்கு புத்தகங்களையும் நமது அன்புக்குரிய "சுபா" அவர்களது சொந்த பதிப்பகமான தங்கத்தாமரை பதிப்பகம் மூலமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.. அதற்கான அட்டை மற்றும் டிசைன் ஆகியவற்றில் நமது சகோதரர் திரு.கணேஷ் பாலா அவர்கள் பணியாற்றி இருக்கிறார். முதலாவது புத்தகமான டெவில் டேவிட் அண்ணன் பிகேபி அவர்கள் தனது தங்கையின் பெயரினை புனைப்பெயராகக் கொண்டு கதை புனைந்திருக்கிறார் என்பது சுவாரசியமானது.. 










அனைத்து புத்தகங்களையும் ரங்லீ காமிக்ஸ் வாயிலாக சந்தாதாரர்கள் இம்மாத சந்தாவில் பெற்றுக் கொள்ளலாம். தனியே பெற விரும்புபவர்களுக்கு 

தொடர்பு எண்கள்: Ranglee Comics: 9043045312  

கூடுதல் விவரங்கள் அறிய விரும்புவோர் கட்டுரையைத் தொடரலாம்.. 


பாக்கியம் ராமசாமி குறிப்புகள்: 



ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ. ரா. சுந்தரேசன் (சூன் 1, 1932 - திசம்பர் 7, 2017) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

தனிப்பட்ட எழுத்தாளராக அறியப்பட்டதற்கும் மேலாக, நெடுங்காலம் குமுதம் என்னும் தமிழ் வார இதழில் ஆற்றிய பணிகளுக்காகவே இவர் அதிகம் அறியப்படுகிறார். அவ் வார இதழில் பல சிறுகதைகளும் தொடர்கதைகளும் புதினங்களும் மற்றும் அதன் சகோதரப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்த மாலைமதியில் பல குறு புதினங்களும் எழுதியுள்ளார்.

இவரது, அப்புசாமி மற்றும் சீதாப்பாட்டி என்னும் கதாபாத்திரங்கள் இறவாப் புகழ் பெற்றுள்ளன. 1963ஆம் ஆண்டில் இவ்விரு கதாப்பாத்திரங்களையும் கொண்டு முதல் கதையைக் குமுதத்தில் எழுதினார். தொடர்ந்து பற்பல நகைச்சுவைச் சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றை உருவாக்கினார். இவற்றில் சில ஜெயராஜ் ஓவியம் கொண்டு சித்திரக் கதைகளாகவும் வெளி வந்துள்ளன.'அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்', 'மாணவர் தலைவர் அப்புசாமி', 'அப்புசாமியும் 1001 இரவுகளும்' ஆகியவை பிரபலமானவை. தற்போது அப்புசாமி.கொம் என்ற நகைச்சுவை வலைத்தளத்தை நடத்தி வந்தார்.

'அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை' என்ற அமைப்பையும், 'அக்கறை' என்ற அமைப்பையும் பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். சிறந்த இசைக் கலைஞர்களைக் கொண்டு 'அப்புசாமி - சீதாப்பாட்டி இசைக் கூடல்' என்ற அமைப்பை துவங்கி நடத்தி வந்தார்.

படைப்புகள்

  1. பாசாங்கு
  2. மனஸ்
  3. கதம்பாவின் எதிரி
  4. முள்ளின் காதல்
  5. தேடினால் தெரியும்
  6. மாணவர்தலைவர் அப்புசாமி
  7. அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
  8. ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்
  9. சீதாப்பாட்டியின் சபதம்
  10. அப்புசாமி படம் எடுக்கிறார்
  11. ஆகஸ்ட் தியாகி அப்புசாமி
  12. அப்புசாமியும் கலர் டி.வி.யும்
  13. அப்புசாமியின் தாலிபாக்கியம்
  14. ஆகாசவாணியில் அப்புசாமி
  15. அப்புசாமி பரீட்சை எழுதுகிறார்
  16. அப்புசாமியும் அற்புதவிளக்கும்
  17. பாமரகீதை
  18. பெண் பார்த்தல் ஒரு பேத்தல்
  19. அப்புசாமி 80 (இரு தொகுப்புகள்)

பட்டுக்கோட்டை பிரபாகர்@ பிகேபி குறிப்புகள்..
பட்டுக்கோட்டை பிரபாகர் (பிறப்பு: 30 ஜூலை 1958) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், திரைக்கதை வசன கர்த்தா மற்றும் பதிப்பாளர் ஆவார். இவர் குறிப்பாகத் துப்பறியும் கதைகள் மற்றும் குற்றப்புதினங்களுக்கு (Crime & Detective Thrillers) உலகத்தமிழர்களிடையே மிகவும் பிரபலமானவர். 
முக்கிய விவரங்கள்:
  • பரத் - சுசீலா: இவரது கதைகளில் வரும் 'பரத்' மற்றும் 'சுசீலா' ஆகிய இரண்டு துப்பறியும் கதாபாத்திரங்கள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
  • படைப்புகள்: நூற்றுக்கணக்கான நாவல்கள், சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களை எழுதியுள்ளார். ஆரம்பகாலத்தில் 'ராதா பிரபா' என்ற புனைப்பெயரிலும் எழுதி வந்தார்.
  • திரைத்துறை: இவர் திரைப்படங்களுக்குத் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதிலும் தடம் பதித்துள்ளார். 'இமைக்கா நொடிகள்', 'காப்பான்', 'சமுராய்', 'ஜெயம் கொண்டான்' போன்றவை இவர் பணியாற்றிய சில முக்கிய திரைப்படங்களாகும்.
  • சின்னத்திரை: 'கோபுரம்', 'வரம்', 'பரமபதம்' போன்ற மெகா சீரியல்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார்.
  • இதழியல்: 'உங்கள் ஜூனியர்' மற்றும் 'உல்லாச ஊஞ்சல்' போன்ற இதழ்களை நடத்திய அனுபவம் இவருக்கு உண்டு. 
பட்டுக்கோட்டை பிரபாகர் ...
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ...
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ...
சமீபத்திய தகவல்கள் (2024-2025):
  • தற்போதைய காலத்திற்கு ஏற்ப, இவர் தனது படைப்புகளை மின்புத்தகங்களாகவும் (E-books) ஆடியோ புத்தகங்களாகவும் (Audio Books) வெளியிட்டு வருகிறார்.
  • 2024-2025 காலகட்டத்திலும் பல்வேறு இணையதளங்களில் இவரது புதிய சிறுகதைகள் மற்றும் தொடர்கள் வெளியாகி வருகின்றன.
  • சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடி வரும் இவர், தடிமனான நாவல்களை விடச் சிறுகதைத் தொகுப்புகளை வாசிப்பதில் உள்ள நன்மைகளைப் பற்றிய தனது கருத்துக்களை அண்மையில் பகிர்ந்துள்ளார்
  • அண்ணனின் முகநூல் ஐடி..
  • https://www.facebook.com/groups/1913896735546063/user/100010130148103/



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கத் தாமரை பதிப்பகத்தின் லேட்டஸ்ட் வெளியீடுகள்.

 வணக்கங்கள் அன்புள்ளங்களே..  இந்த புத்தகத் திருவிழாவை சிறப்பிக்கும்பொருட்டு தங்கத்தாமரை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு ரங்லீ காமிக்ஸ் வாயிலாக ...