வணக்கங்கள் அன்புள்ளங்களே..
இம்முறை நாம் கதை சுருக்கம் தெரிந்து கொள்ளவிருப்பது டோம்ப் ரைடர் சாகசமான புனித கலைப்பொருட்கள் பாகம் ஒன்று குறித்து.. நாற்பது ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க டார்க் ஹார்ஸ் நிறுவனத்தின் வெளியீடு இது..
நிறுவன குறிப்பு :
டார்க் ஹார்ஸ் காமிக்ஸ் எல்எல்சி மற்றும் அதன் உரிமதாரர்களால் 1986-2025 ஆம் ஆண்டு வர்த்தக முத்திரை (® அல்லது ™) மற்றும் பதிப்புரிமை பெற்ற (©) முழு உள்ளடக்கங்களும். டார்க் ஹார்ஸ், டார்க் ஹார்ஸ் காமிக்ஸ் மற்றும் டார்க் ஹார்ஸ் லோகோ ஆகியவை பல்வேறு பிரிவுகளிலும் நாடுகளிலும் பதிவுசெய்யப்பட்ட டார்க் ஹார்ஸ் காமிக்ஸ் எல்எல்சியின் வர்த்தக முத்திரைகளாகும். டார்க் ஹார்ஸ் என்பது எம்ப்ரேசர் குழுமத்தின் ஒரு பகுதியாகும் .
நிறுவன வலைத்தளம்:https://www.darkhorse.com/company/newsletter/
சாகசக்காரர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர், சமூக ஆர்வலர், உயிர் பிழைத்தவர்... புராணக்கதை. லாரா கிராஃப்டின் வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தாது! கப்பல் விபத்து, துரோகம், பண்டைய பொறிகள், தீர்க்கதரிசனங்கள் மற்றும் பாப்பராசி போன்றவற்றிலிருந்து அவள் தப்பித்தாள்.
கிராஃப்ட் மேனர் தீப்பிடித்து எரியும்போது, அது லாராவின் வாழ்க்கையைப் பற்றி யோசித்து, அவளுக்கு என்ன முக்கியம் என்பதைக் கண்டுபிடிக்க கட்டாயப்படுத்துகிறது. ஆனால் ஆபத்தான மற்றும் பழக்கமான ஒரு கலைப்பொருளில் கைகளைப் பிடித்த ஒரு மர்மமான எதிரியுடனான மோதல், லாராவை ஒரு கண்டம் தாண்டிய பயணத்தில், தான் சிறப்பாகச் செய்வதைச் செய்யத் தொடங்குகிறது... கல்லறைகளைத் தாக்கி, புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களைத் தேடுகிறது. டோம்ப் ரைடர்: அண்டர்வேர்ல்டில்
உள்ள நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒரு புதிய பாதையை உருவாக்கி , டோம்ப் ரைடராக தனது பாரம்பரியத்தைத் தொடரும் லாரா கிராஃப்டின் அடுத்த அத்தியாயத்தை அனுபவியுங்கள். சாகசம் காத்திருக்கிறது! • டோம்ப் ரைடர் ஒரு புதிய தொடருடன் டார்க் ஹார்ஸுக்குத் திரும்புகிறார்! • டோம்ப் ரைடர் ரசிகர்களுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் புதிய சாகசம் , மற்றும் அறிமுகமில்லாதவர்களுக்கு ஒரு சரியான தொடக்கப் புள்ளி. • நான்கு இதழ்கள் கொண்ட தொடர்.
இந்த பாகத்தில் மொத்தம் இருபத்தி இரண்டு பக்கங்கள் மாத்திரமே.. ஆனாலும் அதிரடிகளுக்குப் பஞ்சமில்லை.
கே@8 என்கிற செய்தி சேனல் நிருபர் கேட், லாரா கிராப்டை பேட்டி எடுக்கிறார். வீடு தீப்பிடித்து எரிந்து பபோனதாகவும் பழுது நீக்கம் செய்து கொண்டு காலத்தைக் கடத்தியதாகவும் அதற்கு தனது மாளிகையின் நிர்வாகி வின்ஸ்டன் ஸ்மித் உதவி வருவதாகவும் கூறுகிறாள்.
வீட்டை சரி செய்ததாகக் கூறினாலும் உண்மையில் தனது சாகசங்களில் ஈடுபட்டிருந்ததை நமக்குக் காட்சிகளாக விவரித்துக் கொண்டே தன்னுடைய வீட்டை செப்பனிடுவது குறித்து பேட்டியாளரிடம் சுவாரசியமாக அளந்து விடுகிறாள்..
உதாரணமாக இந்த சுவாரசியமான கேள்வி பதில்..
கேள்வி: அது உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் தீவிரமான வேலையாகத் தெரிகிறது. அதை எப்படி அணுகினீர்கள்?
பதில்: பெரும்பாலும் உள்ளுணர்வு, கேட்.
- கேள்வி: "நீங்கள் ஒரு உத்வேகம், நீங்கள் கடந்து வந்த அனைத்தும், உங்கள் சாதனைகள் அனைத்தும்--"
- பதில்: "சிறிதளவு மூளை, சிறிது லட்சியம் மற்றும் ஒரு பெரிய அறக்கட்டளை நிதி உள்ள எவராலும் செய்ய முடியாதது ஒன்றுமில்லை."
இதுபோன்ற அருமையான உரையாடல்கள் இந்த கதையில் இடம்பெற்றிருக்கிறது..
தன் தேடலில் ஒரு எதிரியும் அதே தேடலில் ஈடுபட்டிருப்பது தெரியவர அங்கே மோதல் வெடிக்கிறது..

எதிரியே கேட்கிறான்.. நான் யார் என்று உனக்குத் தெரிந்து கொள்ள ஆவலா என்று.. அதெல்லாம் தேவையில்லை என்று மோதலில் ஈடுபடுகிறாள் லாரா. எதிரியும் சளைத்தவனில்லை.. நிறைய அக்ரோபாட் வித்தைகளைக் கற்றவனாக தெரிகிறது.. காட்சிகள் படுவேகம்.. ஒரு கத்தியைத் தேடித்தான் இருவரும் வந்திருக்கின்றனர் என்பது தெரியவருகிறது. மோதலில் தப்பி விடுகிறான் எதிரி. கத்தியை லாரா கைப்பற்றி விடுகிறாள். கத்தியை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறாள் லாரா.
கதை பேட்டி துவங்கிய இடத்துக்கே வந்து விடுகிறது. பேட்டியின்போது கத்தி வைத்திருந்த கூண்டு உடைபட்டிருப்பது தெரியவருகிறது.
மேலும் கத்தி தேடும் படலம் அத்தனை சீக்கிரம் முடிவதில்லை.. என்று எதிரி சீடன் (போஸ்டுலன்ட் ) என்பவனிடம் இருந்து கடிதம் ஒன்றும் லாராவை வரவேற்கிறது.. அதனால் பேட்டியாளரை அப்படியே வேறு இடத்துக்கு நகர்த்திக் கொண்டு சென்று விடுகிறாள் லாரா.
அந்த கத்திக்கு வேறு துணைக் கத்தி இருப்பது போல தெரிகிறது. அதனை வைத்து என்ன சம்பவம் செய்யப் போகிறார்கள் என்பது அடுத்தடுத்த பாகங்களில் தெரிய வரும் என்ற செய்தியுடன் இந்த முதல் பாகம் நிறைகிறது..
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக