சனி, 29 பிப்ரவரி, 2020

முகவரி...ஜானி

*முகவரி..*
நிலையற்று
நிம்மதியின்றி
தொந்தரவுகளை
தினசரி தாங்கி
ஆணிக்கும்
அஞ்சி
தண்ணீரை
தாராளமின்றி
தயக்கத்தோடு
கோரி
காமிராவாய்
உற்று நோக்கும்
விழிகளாய்
விரட்டித்திரிவது
கண்டும் 
காணாமலும்
திறந்திடும்
குழாயையும்
ஓசையின்றி
திறந்து
வீடுவாசல்
பெருக்க
சுணக்கம்
காட்டவும்
பயந்து
வீட்டு ஓனர்
எனும்
இடிஅமீன்களிடம்
அவஸ்தையனுபவித்து
வாடகை வாழ்
குடிகள்
அத்தனையும்
படும்பாடெதற்கு?!
நாலு காசை
சேர்த்து 
தனக்குரிய
முகவரியை
கண்டடையத்தானே..

-ஜானி

RC278 வேட்டைக்காரன்


















































Tex Calender Italiano 2026