புதன், 26 பிப்ரவரி, 2020

திரையேறா திருப்பங்கள்..


எங்கோ ஒரு குக்கிராமந்தனில்
பாட்டி கதைகள் கேட்டு
கேலி ஜாலியாய்
கவலையற்று சுற்றித்திரிந்து
திரைப்படம் பல கண்டு
உள்ளுணர்வு உந்தித்தள்ள
உறக்கம் தொலைத்த
இரவுகள் நீள
உள்ளூர் விட்டகன்று
தாயின் அன்போடு
பிசைந்து தந்த
கை சோறு மறந்து
எந்திரமாய் சமைத்துப் போடும்
உணவக வாழ் உயிரினங்களாய்
மாநகர வீதிகளில் சிக்கி
கைக்காசு தொலைத்து உறக்கமின்றியலைந்து
உறக்கம் தொலைத்தே
கதைபல யோசித்து
கற்பனை கோர்த்து
மனதிலே அழித்தழித்து
மீண்டுமெழுதி
கஷ்டங்கள் பல தாண்டி
பிரசவித்த கதையை
நடைநடையாய்
அனுதினமும் பலப்பல
நிறுவனங்கள் ஏறியிறங்கி
நாக்குத்தள்ள பல்லோருக்கு
தான் சொன்ன கதை
வேறொருவர் தனதாய்
படமெடுத்து திரைஏகி
பட்டாசாய் வெற்றி பெற
தான் நொந்து நூலாகி
தனதே என நீதி கோரி
நீதிமன்றப் படியேறும்
கதை பறி கொடுத்த தன்
கனவை பலி கொடுத்த
கதாசிரியர்கள் பலருக்கு
இதுவென் கவிதாஞ்சலி
.. ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...