சனி, 22 பிப்ரவரி, 2020

நீங்காத உன் நினைவில்...

உதிராத இலைகளும்
உலகினில் இருக்கக்கூடுமோ...?
உண்டு..
உன் நினைவென்
மனதில் ஆண்டுகள்
பல கடந்தும்
பச்சைப்பசேலென
பதிந்து கிடக்கிறதே..

உன் விரல் ஸ்பரிசம்
என் மேனியினை
உரசுகையில்
எழும் ஆற்றலால்
அழியாவரம் காண்கிறதே...

உன் சுவாசத்தின்
மென் காற்று
என்னை தழுவுகையில்
இளமை தன்னை
புதுப்பித்துக் கொள்கிறதே..
- ஜானி

2 கருத்துகள்:

  1. தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது நீங்காத உன் நினைவில்… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    பதிலளிநீக்கு

The Road Graphic Novel_intro அறிமுகம் மற்றும் கதைச்சுருக்கம்..

 வணக்கம் நண்பர்களே..  இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தி...