திங்கள், 14 ஏப்ரல், 2025

பான்சி பாட்டர்.. அறிமுகம்.

 தமிழ் வாழ்க.. தமிழ்ப் புத்தாண்டு மலர்க.. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 

மகா கவி பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்எனக் கவிபுனைந்தார்சமற்கிருதம்வங்காளம்இந்திபிரான்சியம்ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர்அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். இதோ சித்திரக்கதைகள் உலகின் வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப் படுகின்றன.. நமது வலைப் பூ இதுவரையிலும் சிறு சிறு கதாபாத்திரங்களையும் அடையாளப்படுத்தியிருப்பதுடன் அதன் ஒரு சிறு பகுதி தமிழாக்கமும் செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதோ பான்ஸி பாட்டர் உங்களுடைய பார்வைக்கு.. 

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்"
என்னும் உயரிய நோக்குடைய கவிஞன் அவர். இது அதற்கொரு மாதிரி மாத்திரமே.. 
தமிழினை கொண்டாடும் நாம் அவரது நினைவையும் இன்று நெஞ்சில் சுமப்போமே.. 
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன். 

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

The Road Graphic Novel_intro அறிமுகம் மற்றும் கதைச்சுருக்கம்..

 வணக்கம் நண்பர்களே.. 

இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தினமாக உலகத்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் பொதுமக்கள் தென்னங்குருத்து ஓலைகளை கொண்டு வந்து வாழ்த்தி அவரை வரவேற்றனராம்.. 

தி ரோட் விரைவில் லயனில் வர வாய்ப்புள்ள கிராபிக் நாவல்.. 

வாசகர்கள் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.. 


பூமியின் இயற்கை வளங்கள் குறைந்துவிட்ட ஒரு போஸ்ட் அபோகாலிப்டிக் பாழான நிலத்தில், பெயரிடப்படாத ஒரு தந்தை மற்றும் மகன் தங்கள் மனிதநேயத்துடன் உயிர்வாழ முயற்சிக்கும் கதை, மேலும் சில உயிர் பிழைத்தவர்கள் இறைச்சிக்காக மற்றவர்களை வளர்க்க விடப்படுகிறார்கள், இது கோர்மக் மெக்கார்த்தியின் இருண்ட மற்றும் மிகவும் தொலைநோக்கு நாவல்களில் ஒன்றாகும்.

கோர்மக் மெக்கார்த்தி 
இவர் அமெரிக்க எழுத்தாளர். 
கோர்மக் மெக்கார்த்தி (பிறப்பு சார்லஸ் ஜோசப் மெக்கார்த்தி ஜூனியர்; ஜூலை 20, 1933 - ஜூன் 13, 2023) ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார், அவர் பன்னிரண்டு நாவல்கள், இரண்டு நாடகங்கள், ஐந்து திரைக்கதைகள் மற்றும் மூன்று சிறுகதைகளை மேற்கத்திய, போஸ்ட்-அபோகாலிப்டிக் மற்றும் தெற்கு கோதிக் வகைகளில் எழுதினார். அவரது படைப்புகளில் பெரும்பாலும் வன்முறையின் கிராஃபிக் சித்தரிப்புகள் அடங்கும், மேலும் அவரது எழுத்து நடை நிறுத்தற்குறிகள் மற்றும் பண்புக்கூறுகளின் அரிதான பயன்பாட்டால் வகைப்படுத்தப்படுகிறது. அவர் சிறந்த அமெரிக்க நாவலாசிரியர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.
மெக்கார்த்தி ரோட் தீவின் பிராவிடன்ஸில் பிறந்தார், இருப்பினும் அவர் முதன்மையாக டென்னசியில் வளர்ந்தார். 1951 இல், அவர் டென்னசி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், ஆனால் அமெரிக்க விமானப்படையில் சேர அதை விட்டுவிட்டார். அவரது முதல் நாவலான தி ஆர்ச்சர்ட் கீப்பர் 1965 இல் வெளியிடப்பட்டது. இலக்கிய மானியங்களைப் பெற்ற மெக்கார்த்தி தெற்கு ஐரோப்பாவிற்குச் செல்ல முடிந்தது, அங்கு அவர் தனது இரண்டாவது நாவலான அவுட்டர் டார்க் (1968) எழுதினார். சட்ரீ (1979), அவரது மற்ற ஆரம்பகால நாவல்களைப் போலவே, பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஒரு மெக்ஆர்தர் பெல்லோஷிப் அவரை அமெரிக்க தென்மேற்குப் பயணம் செய்ய உதவியது, அங்கு அவர் தனது ஐந்தாவது நாவலான ப்ளட் மெரிடியன் (1985) ஐ ஆராய்ச்சி செய்து எழுதினார். ஆரம்பத்தில் இது ஒரு மந்தமான விமர்சன மற்றும் வணிக ரீதியான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அது அவரது மகத்தான படைப்பாகக் கருதப்படுகிறது, சிலர் இதை சிறந்த அமெரிக்க நாவல் என்று முத்திரை குத்தினர்.
 இவரது தி ரோட் ஒரு புலிட்சர் பரிசு வென்ற 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட கிராபிக் நாவலாகும்.
ஜேம்ஸ் டைட் ப்ளாக் மெமோரியல் பரிசையும் தட்டித் தூக்கியதாகும். 

திரைப்படமாக 2009ல் வெளியாகி கலக்கிய ஒன்றாகும். 
யூடியூபில் ட்ரெய்லர் காணுங்கள்.. 
கதைச் சுருக்கம்: 

குறிப்பிடப்படாத ஒரு பேரழிவின் விளைவாக ஏற்பட்ட அழிவு நிகழ்விற்குப் பிறகு, ஒரு ஆணும் அவனது இளம் மகனும் உயிர்வாழப் போராடுகிறார்கள், இது அனைத்து தாவர உயிரினங்களும் கிட்டத்தட்ட அனைத்து விலங்குகளும் இறந்து போகின்றன.[5] பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில், தங்கள் பயணத்தில் பொருட்களைத் தேடி, துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய நரமாமிசக் கும்பல்களைத் தவிர்த்து, அந்த ஆணும் சிறுவனும் கடற்கரைக்கு ஒரு சாலையில் பயணிக்கிறார்கள்.


பல ஆண்டுகளுக்கு முன்பு, பேரழிவுக்குப் பிறகு, அந்த மனிதனின் மனைவி ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள், அவள் படிப்படியாக நம்பிக்கையை இழக்கிறாள். அந்த மனிதன் கடைசி முயற்சியாக தங்கள் குடும்பத்திற்காக சேமித்து வைத்திருந்த மூன்று தோட்டாக்களில் ஒன்றைப் பயன்படுத்தி ஒரு ஊடுருவும் நபரைச் சுட்டபோது, ​​அவள் தன் தற்கொலையைத் தடுக்க வேண்டுமென்றே தோட்டாவை வீணடித்ததாக அவன் மீது குற்றம் சாட்டுகிறாள். உறைபனியில் தனது கோட் மற்றும் தொப்பியைக் கழற்றி, அவள் காட்டுக்குள் நடக்கிறாள், மீண்டும் ஒருபோதும் காணப்படவில்லை.


தற்போது, ​​நரமாமிசக் கும்பலின் ஒரு உறுப்பினரைச் சுட்டுக் கொன்ற பிறகு, அந்த மனிதனுக்கு ஒரே ஒரு தோட்டா மட்டுமே மிச்சம். ஒரு மாளிகையை ஆராய்ந்து, அவரும் சிறுவனும் அடித்தளத்தில் அடைக்கப்பட்ட மக்களைக் கண்டுபிடித்து, சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு உணவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நரமாமிசக் கும்பல்கள் திரும்பி வந்ததும், அந்த மனிதனும் அவனது மகனும் ஒளிந்து கொள்கிறார்கள். கண்டுபிடிப்பு உடனடியாக நிகழும் நிலையில், அந்த மனிதன் தனது மகனைச் சுடத் தயாராகிறான், ஆனால் தப்பியோடிய கைதிகளால் நரமாமிசம் உண்பவர்கள் திசைதிருப்பப்படும்போது அவர்கள் தப்பி ஓடுகிறார்கள்.


சாலையில் மேலும் கீழே செல்லும்போது, ​​அந்த மனிதனும் சிறுவனும் பதிவு செய்யப்பட்ட உணவு மற்றும் பொருட்களால் நிறைந்த ஒரு நிலத்தடி தங்குமிடத்தைக் காண்கிறார்கள். அவர்கள் விருந்துண்டு குளிக்கிறார்கள். ஒரு நாய் உட்பட மேலே சத்தங்களைக் கேட்கும்போது, ​​அந்த மனிதன் தங்குவது மிகவும் ஆபத்தானது என்று முடிவு செய்து முன்னேறுகிறான். அவர்கள் கிட்டத்தட்ட பார்வையற்ற ஒரு முதியவரைச் சந்திக்கிறார்கள், மகன் தந்தையை தன்னுடன் உணவைப் பகிர்ந்து கொள்ள வற்புறுத்துகிறான். பின்னர், இருவரும் பைக்குகளில் குழந்தைகளின் மண்டை ஓடுகளுடன் ஒரு முகாமை சந்திக்கிறார்கள். ஒரு புல்வெளியில் ஒரு தாயையும் மகனையும் ஒரு கும்பல் தாக்குவதைக் கண்டபோது, ​​அவர்கள் இந்த முகாமை விட்டு அவசரமாக நகர்கிறார்கள். அவர்கள் ஓடிவிடுகிறார்கள்.


கடற்கரையில், கடற்கரையில் ஒரு கப்பலைத் துரத்த நீந்தும்போது, ​​அந்த மனிதன் சிறுவனை தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க விட்டுவிடுகிறான். சிறுவன் தூங்கிவிடுகிறான், அவற்றின் பொருட்கள் திருடப்படுகின்றன. அந்த மனிதன் திருடனைத் துரத்திச் சென்று அவனிடமிருந்து எல்லாவற்றையும், அவனது ஆடைகளையும் எடுத்துக்கொள்கிறான். இது சிறுவனை மிகவும் வருத்தப்படுத்துகிறது, அந்த மனிதன் திரும்பிச் சென்று திருடனுக்காக துணிகளையும் ஒரு கேனையும் விட்டுவிடுகிறான்.


அவர்கள் ஒரு பாழடைந்த நகரத்தின் வழியாகச் செல்லும்போது, ​​அந்த மனிதன் ஒரு அம்பினால் காலில் சுடப்படுகிறான். கப்பலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு துப்பாக்கியால் அவன் தனது பதுங்கியிருப்பவரைக் கொன்று, வில்லாளியின் பெண் தோழியை அதே அறையில் காண்கிறான். வில்லாளனும் பெண்ணும் தங்களைப் பின்தொடர்ந்ததாக அந்த மனிதன் நினைக்கிறான், ஆனால் அது நேர்மாறானது என்று அவள் கூறுகிறாள். அவன் அவளை உடலைப் பார்த்து அழ விட்டுவிடுகிறான்.


பலவீனமடைந்த ஆணும் பையனும் தங்கள் வண்டியையும் பெரும்பாலான உடைமைகளையும் விட்டுவிடுகிறார்கள். அந்த ஆணின் நிலை மோசமடைந்து இறுதியில் அவன் இறந்துவிடுகிறான். ஒரு மனிதன் தன் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் நாயுடன் சிறுவனை அணுகுகிறான். அவர்கள் சிறிது காலமாக சிறுவனையும் அவனது தந்தையையும் பின்தொடர்ந்து வருவதாகவும், அவனைப் பற்றி கவலைப்பட்டதாகவும் மனைவி விளக்குகிறாள். தந்தை சிறுவனை "நல்ல மனிதர்களில்" ஒருவர் என்று சமாதானப்படுத்தி, அவனைத் தன் பாதுகாப்பில் எடுத்துக்கொள்கிறார்.


மற்றவை.. திரையில் காணலாம். அல்லது மிக எளிதாக கிராபிக் நாவலாக லயன் காமிக்ஸில் வலம் வருகையில் வாங்கி வாசித்து மகிழலாம்.. 


நன்றிகள்: ஸ்ரீராம் இலட்சுமணன் உடனடி கவனத்துக்குக் கொண்டு வந்தமைக்கு.. 

என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன்.

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

ஓநாய் தீவு புதையல் _ பொன்னி காமிக்ஸ்

 வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 

சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவும், எளிமையான வாசகர் வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற அக்கறையும் நண்பர்கள் பலரை தேடலில் ஈடுபட வைக்கிறது. திரைகடலோடியும் திரவியம் தேடும் நமது நண்பர்களில் திருமலை முக்கியமானவர். அவரது நெடுங்காலத் தேடலில் இதோ 1977ஆம் வருடம் மே மாதம் வெளியாகிய பொன்னி காமிக்ஸின் ஓநாய் தீவு புதையல் சித்திரக்கதை நம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார். 

      இதன் விடுபட்ட பக்கங்கள் அட்டை அனைத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் திரு.பூபதி, ராசிபுரம் அவர்களுக்கும் அபூர்வமான புத்தகத்தை நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் திருமலை அவர்களுக்கும் நன்றியுடன்... வாசக நட்ப்பூஸ் உங்களுடனும்  எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். 

இந்த 2025 தமிழ் புத்தாண்டில் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மண்ணில் பதிப்பிக்கப்பட்டு நிறைய வாசகர்களை சென்றடைந்து கால வெள்ளத்தில் காணாமல் போய் விட்ட ஓநாய் தீவு புதையல் இதோ உங்கள் பார்வைக்கு..  


தாய் தந்தையை இழந்த நாயகிக்கு பொக்கிஷம் ஒன்றின் வரைபடத்துடன் வந்த அத்தை ஆனந்த அதிர்ச்சி கொடுக்கிறாள். அவளுடன் நாயகரை அழைத்துக் கொண்டு பொக்கிஷம் ஒளித்து வைத்திருக்கும் தீவினை சென்றடைகிறாள் நாயகி.. இவர்களுடன் அத்தையின் ஆட்கள் சிலர் வந்து சேர்ந்து கொள்கின்றனர். தீவினை அடைந்தவர்களுக்கு பொக்கிஷம் மீதும் அதன் சொந்தக்காரியான நாயகி மீதும் ஆவல். யார் பொக்கிஷம் கண்டடைகிறார்களோ அவர்களுக்கே அவள் சொந்தம் என்று உயில் இருப்பதாக அத்தை கூற  நாயகரும் போட்டியில் கலந்து கொள்கிறார். தீவை ஆளுக்கொரு பகுதியாக பிரித்துக் கொண்டு தேடலில் இறங்குகிறார்கள். அவர்கள் கண்டடைந்ததோ ஓர் அரக்கன்.. அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் என்ன? இறுதியில் பொக்கிஷம் கண்டெடுக்கப்பட்டதா? வாராது வந்த மாமணியான அத்தையின் திடுக்கிடும் இன்னொரு பக்கம் என்ன?  என்பதனை பரபரப்புடன் பகிர்கிறது இந்த பொன்னி காமிக்ஸ். பொன்னியில் வெளியான மற்ற கதைகளைத் தேடிப் படிக்க ஏதுவாக ஸ்டாக் லிஸ்ட் பின் அட்டையில் வெளியிடப்பட்டிருக்கிறது. 


தரவிறக்க:  
https://www.mediafire.com/file/74eunvrkl5pzzvn/Onay+Theevu+Puthaiyal_ponni+1974+May.pdf/file


செவ்வாய், 1 ஏப்ரல், 2025

விமர்சனப் போட்டியும் கனவுலகமும்..

 

ஒரு ஹேப்பி நியூஸ்.. காமிக்ஸ் எனும் கனவுலகப் போட்டியில்
2014ல் வெளியான இரவே இருளே கொல்லாதே சித்திரக்கதையிலிருந்து விமர்சனப் போட்டி வைத்தனர். அதில்  பரிசைத் தட்டிட்டாரு நம்ம தோழர் @⁨Sures Thanapal⁩ கூடவே நானும்..ஹிஹி விமர்சிச்ச அத்தனை பேரையுமே பரிசால் மகிழ்விச்சிருக்காங்க.. 

அவர்கள்

@⁨Gunasekaran Muthuswamy⁩ 

@⁨discoverboo_Boopathi Rasipiram Nagpur⁩ 

@⁨~Baranitharan⁩ 

@⁨Sures Thanapal⁩ 

@⁨Cm Siva Ingam Cni 😇⁩ 

@⁨~Thottam Siva⁩ 

@⁨🤩Chris Ruban🥳⁩ 

@⁨சின்னமனூர் பி சரவணன்⁩ 

@⁨~Madhusoodhanan RK⁩

காமிக்ஸ் எனும் கனவுலக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சக வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் காமிக்ஸ் வாசக வட்டம் சார்பாக  நன்றிகள். 

அடுத்து நான் எழுதிய 

 இரவே இருளே கொல்லாதே விமர்சனத்திலிருந்து 

காமிக்ஸ் என்னும் கனவு உலகம் விமர்சனப்போட்டி 

தலைப்பு இரவே.. இருளே.. கொல்லாதே!

நடிகை ஒருத்தி தன்னுடைய எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டிப் பயணப்படுகிறாள். அப்போது கார் ஒரு விபத்தில் சிக்கி விட ஒரு குக்கிராமத்தில் சிகிச்சைக்காக தங்க நேரிடுகிறது. அவளை துரத்தும் இறந்த கால நினைவுகளில் அங்கிள் செஸ்டர் காமுகனாக துரத்திவர நிகழ்கால நடப்பில் சைக்கோ கொலையாளி ஒருவன் அவளை சுற்றிச்சுற்றி வலைப்பின்னலாக கொலைகளை நிகழ்த்தி வலைக்குள் சிக்க வைக்க முயற்சிக்கிறான். அவ்வப்போது கற்பனை கலந்த கனாக்களின் தாக்கமும் அவளை வாட்டியெடுக்கிறது. இந்த சைக்காலஜிக்கல் திரில்லருக்குள் கதைக்குள் கதையாக ஏகப்பட்ட கதைமாந்தர்கள் நிறைந்திருக்க நாம் காமிக்ஸ்தான் வாசிக்கிறோமா இல்லை இந்த அப்பாவிப் பெண்ணைத் துரத்திடும் பூச்சாண்டியின் கொடூரமான பல பாகத் திரைப்படத்துக்குள் ஒரு பாத்திரமாகி விடுகிறோமா என்ற சந்தேகமே எழுகிறது. வழக்கமான சைக்கோ த்ரில்லர்களின் கொலையாளிகள் பின்புலமாக கொலையாளியை  நியாயப்படுத்தும் ஒரு கதைப்பின்புலம் இருக்கும். இங்கே நட்பு வட்டம் ஒன்றும் அதன் தைரியத்தை சோதிக்கும் ஒரு ஹேங்மேன் வீடும் பல திகில் சம்பவங்களும் நம்மை ப்ரேம் பை ப்ரேம் திகைப்புக்குள்ளும் குழப்பத்திலும் சிக்கலுக்குள்ளும் கதையை விட்டு நகராவண்ணம் இறுக்கிக் கட்டிப் போட்டு விடுகின்றன.. ஜோயெல் காலெடேவின் கதையமைப்பும் ஓவியர் டெனிஸின் கொடூரப் பூசணிக்காய் இளிப்போவியங்களும் ஹ்யூபெர்ட்டின் இருளும் ஆழமுமான வண்ணங்களும் லயன் காமிக்ஸ் கதைத் தேர்வும் தீபாவளி மலராக வெளியிடப்பட்ட இம் மூன்று பாகக் கதையும் ஹாலோவீன் தினத்திலேயே வெளியிடப்பட்டு நம்மை ஹாரர் கதைக்களத்துக்குள் தள்ளிய விதமும் நிச்சயமாக சிறப்பானவை.. குறியீடாக பூசணிக்காய்களும்  புனுகுப்பூனை ஒன்றும் கதை நெடுக ஹாலோவீன் தொடர்புடைய காட்சிகளும் ஆங்காங்கே சரியான இடத்தில் வந்து ஒரு புரட்டுப்புரட்டி விட்டுப் போகிறது. ஆக மொத்தம் த்ரில் விரும்பும் பலமான இதயங்களுக்கும் கதையில் வரும் திரைப்பட ஓனரினைப் போல தைரியமாக பேய்ப்படங்களை ஒற்றை ஆளாக தியேட்டரிலேயே அமர்ந்து பார்க்கும் தில்லான வாசகர்களுக்கும் செமத்தியான ட்ரீட் இந்த இரவே..இருளே..கொல்லாதே..

நன்றிகள் அகெய்ன்.

நியாயம்தானே?!?

 ஒரு மனுஷன் உயிரோடு இருக்கும் போது, நமது ஊடகங்களை பெரும் உறக்கம் ஆட்கொண்டு விடுகிறது! 


50 ஆண்டுகளைத் தொட்டு நின்ற 2022-ல்.... அல்லது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்ற 2023-ல் இவர்களது சிந்தைகளில் முத்து காமிக்சின் ஸ்தபாகர் / சீனியர் எடிட்டர் தோன்றிடாது போனது ஏனோ - படைத்தவருக்கே வெளிச்சம்!


 *கபிஷ்* மீள்வருகையினை கேரள ஊடகங்கள் கொண்டாடித் தீர்த்தன - அது மிதமான 2 கலர் இதழாக இருந்த போதிலும்....


 *டின்டின்* ஹிந்தியில் வெளியான சமயம் தேசிய ஊடகங்களே திருவிழாவாக்கினர் அந்தப் பொழுதினை!!


இங்கே - ஆசிய கண்டத்திலேயே முதன்முறையாய் ஒரு நூறு இதழ்களை நாம் வெளியிட்டாலும் - 'அப்டி ஓரமா போயி வெளாடு தம்பி ' தான்!


And இன்றைக்கு மாண்டு போனவரை மாய்ஞ்சு... மாஞ்சு ஒளிவட்டத்துக்குக் கொண்டு வர போட்டி அரங்கேறுகிறது! தபால்தலை போடுறதா? புக்கு எழுதுறதா? என்ற பட்டிமன்றங்கள் நடந்து வருகின்றன!


இருக்கும் போது இதனில் ஒரு கால் பங்கு வெகுஜன ஊடகங்களின் வெளிச்சம்  கிட்டி இருந்தாலும் பூரித்துப் போயிருப்பாரே...!_ஆசிரியர் திரு.விஜயன் அவர்களது நியாயமான ஆதங்கம்..


சனி, 29 மார்ச், 2025

ஆசிரியர் திரு.எம்.சௌந்தரபாண்டியன் _அஞ்சலி

சிற்றிலக்கிய வகையான சித்திரக்கதைகள் வெகுஜனப் பார்வைக்கு வருவதும் கால ஓட்டத்தில் நிலைத்து நிற்பதும் பெரிய சவாலான நாட்கள் அவை. இந்திரஜால், அம்புலி மாமா போன்ற பெரும் பத்திரிக்கைகளுக்கு இணையாக தமிழில் களமிறக்கி சிவகாசி மண்ணுக்குப் பெருமை தேடித்தந்த முத்து காமிக்ஸின் புகழுக்கு காரணமான பெரியவர் திரு.சௌந்தரராஜன் இறைவனடி சேர்ந்து விட்டார். அவருக்காக இறைவனை வேண்டுவோம். 


திரு.ஜெயமோகன் தனது கட்டுரையில்

 முத்து காமிக்ஸ் நூல்களை நான் என் எட்டாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறேன்இன்றும்கூட மாதம் ஆயிரம் ரூபாய்க்கு அந்நூல்களை வாங்கிவிடுகிறேன்மூளை சூடாகாமல்இயல்பாக வாசிக்கத்தக்கவைவணிக எழுத்தின் சில்லறைப் பாவனைகளும் அற்றவைநம்மை சிறுவனாக உணரச்செய்பவைகுறிப்பாக நான் டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகன்என் நண்பர் கடலூர் சீனுஜா.ராஜகோபாலன் எல்லாருமே முத்து காமிக்ஸ் ரசிகர்கள்தான்.

ஐரோப்பிய ,அமெரிக்க காமிக்ஸ்களின் ஓவியச்சட்டகங்கள் மிகத்தேர்ச்சி கொண்டவைசினிமா எனக்குச் சலிப்பூட்டுகிறதுஅதில் நான் கற்பனை செய்ய ஏதுமில்லைஆனால் காமிக்ஸ் ஒரே சமயம் காட்சியனுபவமாகவும்என் கற்பனையைத் தூண்டும் வாசிப்பனுபவமாகவும் உள்ளதுஆகவேதான் இந்த மோகம்.

முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் மறைந்தார்அவருக்கு அஞ்சலி.

என தெரிவித்துள்ளார். சித்திரக்கதை வாசகர்களை துயரத்தில் ஆழ்த்தி மறைந்த ஐயா திரு.சௌந்தரபாண்டியன் தன் இறுதி மூச்சுவரை சித்திரக்கதைகளையே சுவாசித்தவர். மிக சமீபத்தில் ஒரு வாட்ஸ் அப் குழு அவருக்காக உருவாக்கப்பட்டிருந்தது. அதில் சித்திரக்கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்து தெரிவித்துக் கொண்டே இருப்பார். அந்த தீபத்தை தொடர்ந்து ஏந்திப் பயணிக்க வாசகர்களும் லயன் குடும்பத்தாரும் சித்திரக்கதை நேயர்களும் தயாராகவே இருப்பார்கள். அவரது கனவு என்றுமே இளமையாக இனிமையாக அன்னாரது நினைவுகளுடன் தொடரும்.. 

ஞாயிறு, 23 மார்ச், 2025

LC 465 இளமை எனும் பூங்காற்று_Tex Willer-Jan-2025

வணக்கம் தோழமை உள்ளங்களே.. நமது காமிக்ஸ் என்னும் கனவுலகம்

விமர்சனப் போட்டிக்காக விமர்சித்தது தங்களுக்கும் வாசிக்க எளிதாக இங்கே பகிர்கிறேன். 

நூல்: இளமையெனும் பூங்காற்று

 வணக்கம்..

ஜனவரி 2025ல் வெளியாகியிருக்கும் இந்த சித்திரக்கதை லயன் கிராபிக் நாவல் வரிசை வெளியீடாகும். வெளியீட்டு எண் 461. விலை ரூ.125/-

 


வன்மேற்கை மையமாகக் கொண்ட இக்கதையில் இரண்டு கோச் வண்டிகள் தொடர்ச்சியாகக் கொள்ளையடிக்கப்படுகின்றன. கொள்ளையரில் ஒரு சிறுவனும் இருக்கிறான். கொள்ளைப்பணத்தை சேகரிப்பவனும் அவனே. பாதிப்புக்குள்ளாவோருக்கு சிறிது பணமும் திருப்பித் தருகிறான் என்பதை டெக்ஸ் வில்லரும் கிட் கார்சனும் பைனல் கவுண்டி ஷெரீப் மூலமாகக் கேள்விப்படுகிறார்கள். இது புதிதாக இருக்கிறதே என்று யோசித்து இதில் ஈடுபடுபவர்களை பிடிக்கப் போயிருக்கும் கும்பலைத் தொடர்கிறார்கள்.. கட் பண்ணா..


 நம்ம ஹீரோயின் பெர்ல் ஹார்ட் தன்னுடைய இளமைப் பருவத்தில் கனடாவின் ஒன்டாரியோ ஏகாந்தமாக அமர்ந்திருக்கையில் காவலர்களுக்குத் தப்பியோடி வரும் ஒருவன் நட்பும் பின்பு அவன் மேல் காதலும் பிறக்கிறது. அவன் சடுதியில் இறந்து போனதால் விளைந்த பச்சாதாபம் இப்படி உருமாற்றம் பெற்று விட்டதா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. அவனது துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொள்கிறாள். பப்பல்லோ பில் நடத்தி வரும் வைல்ட் வெஸ்ட் ஷோவில் தானும் இணைய முயற்சிக்கிறாள். வரலாற்றில் முக்கியமானதொரு பாத்திரமான சாக மங்கை ஆனி ஓக்லே அங்கே ஏற்கனவே பணியில் இருப்பதால் இவளுக்கு வேலை கிடைக்காமல் போகிறது.


அவள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை ஓட்ட பசியைப் போக்க க்ளப்பில் இணைந்து பணியாற்றி அங்கேயிருந்து ஜோபூட் என்பவனுடைய நட்பும் கிடைத்து தன்னை வேசியென்று ஒதுக்காமல் இளவரசியென்று அழைக்கும் இரண்டாவது நபர் ஜோ பூட் என்பதால் அவனின் அருகாமையிலேயே இருக்க ஆசைப்பட்டு ஒரு கட்டத்தில்  அவன் இன்னுயிரைக் காக்க முயற்சிக்கிறாள். அப்படியே அவனுடன் தோழமை பூண்டு அவன் ரூட்டிலேயே கொள்ளைக்காரியாகி இருக்கிறாள். கட் செய்தால் டெக்ஸ் அண்ட் கிட் கார்சனுக்கு முன்பே கொள்ளையரின் உறைவிடத்தை செவ்விந்திய வழிகாட்டியின் உதவியோடு காற்றில் வீசும் புகையின் வாசத்தை மோப்பம் பிடித்தே சுற்றி வளைத்து விடுகிறது அவர்களைத் தேடிப் போன கும்பல்..

பெரும் முதலாளிகள் கொள்ளையருக்குப் பயந்து அமைத்த அந்த தனிப்படைக்குத் தலைமையேற்று நடத்துபவன் ஈவிரக்கமே துளியும் அற்ற ஹோஸ். அவன் பேர்ல் பெண் என்பது தெரிந்ததும் கிள்ளுக்கீரையாக எண்ணி அசிங்கப்படுத்த முயற்சிக்கும்போது திரௌபதியைக் காக்க கண்ணன் அருட்கரம் நீட்டினாற்போன்று வந்து சேர்கிறார்கள் டெக்ஸ் அண்ட் கார்சன். அவர்களிடம் ஹோஸ் சிறைப்பட்டுப் போக அனைவரும் ஊர் திரும்புகிறார்கள். வழக்கு நடக்கிறது. பெர்ல் தனது வழக்கை தானே வாதாடுவதாக தெரிவித்து நீதிபதி அனுமதியுடன் தன் தாய் நோய்வாய்ப்பட்டு இருப்பதால்தான் கொள்ளைக்காரியாகிப் போனேன் என்கிறாள். பத்திரிகைகள் இப்படி ஒரு பெண் கொள்ளைக்காரி வன்மேற்கில் முதன்முறையாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறாள் என்றால் சும்மா விடுவார்களா? சரித்திரத்தின் ஒரே பெண் கொள்ளைக்காரியாக பதிவு செய்யப்பட்ட உண்மை நபரான பெர்ல் ஹார்ட்டினை சுற்றி வளைத்துப் பேட்டி எடுக்கிறார்கள்.. நீதிமன்றம் அவளை குற்றமற்றவள் என்று விடுவித்தாலும் நீதிபதி அவளது கையொப்பத்தை ஒப்பிட்டு தன் தாய் எழுதியதாகக் காண்பித்த கடிதம் போலி என்று நிரூபிக்கிறார். ஆகவே சிறைக்கூடத்தில் ஐந்து ஆண்டுகள் அவளும் முப்பது ஆண்டுகள் ஜோ பூட் டும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பாகிறது. சிறையின் டைரக்டர் அவளை வைத்தே தன் சிறைச்சாலையை பிரபலமாக்குகிறார். அவளுக்கு வாசிக்க, எழுத  என்று ஏகப்பட்ட சலுகைகள்.  அவளைப் பற்றி ஏகப்பட்ட பத்திரிகைகள் எழுதித் தீர்க்கின்றனர்.  ஒரு கட்டத்தில் டைரக்டரை தன் கவர்ச்சியால் வீழ்த்தி விட்டு  தன் காதலனுடன் தப்பி மெக்சிகோ பறந்து விடுகிறாள். அங்கோ ஜோ தலைமறைவாகி விட மறுபடியும் அவல நிலைக்குள்ளாகிறாள். 


முன்பு டெக்ஸ் வில்லர் அவளை ஹோஸ் என்பானிடம் இருந்து விடுவித்தார் இல்லையா. அவன் பழிவாங்க துரத்துகிறான். ஜோ பூட்டை மடக்கி அவள் இருப்பிடம் அறிந்து அவன் வரும் முன்னர் டெக்ஸ் அண்ட் கார்சன் சென்று காத்திருந்து அவளைக் காப்பாற்றி அவளுக்கு விடுதலை கிடைத்து விட்ட தகவலைக் கூறுகிறார்கள். அவள் தன் நீண்ட கால கனவான பப்பல்லோ பில் நாடகக் குழுவில் இணைய விரும்புவதை தெரிந்து கொண்டு அங்கே இணைத்து விடுகிறார்கள். அங்கே நகைச்சுவை நாடகங்கள் இயற்றி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறாள். இனிய முடிவு. 

        உண்மைக் கதைகளை டெக்ஸ் வில்லர் என்னும் இனிப்பைத் தடவிக் கொடுத்தால் வாசகரிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்பது இந்தக் கதையில் இன்னும் ஒரு முறை நிரூபிக்கப்படுகிறது. இதோ இன்னொரு நிஜமான பாத்திரத்துடன் நம் பயணம் தென்றலாக வருடிப் போகிறது இளமை எனும் பூங்காற்றாய்!

எடிட்டர் பக்கம்.. 

சென்னை புத்தக திருவிழாவும் களை கட்ட இந்த புதிய புத்தகங்களை லயன் கொண்டு வந்துள்ளனர். 
சுவாரசியம் மிகுந்த வாசகர் பக்கம்.. 
அடுத்து பிப்ரவரி வெளியீடுகளின் விளம்பரங்கள்..
ஆர்வத்தை எகிற வைக்கும் பின் அட்டை.. 
ஆக ஒரு சிறப்பான வாசிப்பு அனுபவத்தை கொடுக்கக் கூடிய இந்த புத்தகம் பெரியவர்களுக்கானது. சிறுவர்கள் தவிர்க்கலாம். என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 

சனி, 22 மார்ச், 2025

041_மரண தேவதைகள்_நிக் ரைடர் சாகசம்_Vagam Comics

 வணக்கங்கள் வாசக வாசகியரே.. 



                 மார்ச்சினை சிறப்பிக்க வகம் கொண்டு வந்துள்ள மரண தேவதைகள்.. நியூயார்க் நகரம் ஒரு பரபரப்பில் இருக்கிறது. எங்கோ ஒரு மெடிக்கலில் திருட்டு நடந்துள்ளது. அதில் ஈடுபட்டவர்களைப் பற்றி விசாரித்ததில் ஏற்கனவே ஒரு சில கொள்ளைகளில் ஈடுபட்ட பெண்கள் கும்பலை ஒத்திருக்கிறது. விசாரணை தொடர மன்ஹாட்டனின் வணிக வங்கி ஒன்று அதே கும்பலால் கொள்ளையடிக்கப்படுகிறது. நிக் ரைடர் டீம் களமாடி இதில் சம்மந்தப்பட்டிருப்பது யார்? எந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்? ஏன் இந்த குழுவில் பெண்களே இத்தனை ஈவிரக்கமில்லாமல் கொல்லும் தேவதைகளாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் பாணியில் துப்பறிந்து தெளிவாக அறிந்து கொள்கிறார்கள். தங்கள் கடமைக்கு எல்லைகள் ஒரு தடை என்றாலும் அதையும் மீறிக் கொண்டு தங்கள் உயிரைப் பணயம் வைத்தாலும் அது தங்களுக்குப் புகழ் சேர்க்காது என்று நன்கு அறிந்திருந்தும் காலத்தின் அருமையையும் வாய்ப்பினைத் தவற விடாமல் அதிரடியாகத் தாக்கி மரண தேவதைகள் வேர் வரை அறுத் தெறிகிறார்கள்   நிக் ரைடர் குழு. இந்த பெரும் கொள்ளை மற்றும் கொலைகள் கொஞ்சமும் தயக்கமின்றி நடைபெற்றாலும் நிகழ்த்தும் பெண்களுக்கு கிடுக்கிப் பிடியாக பல சிக்கல்கள். அதனை வைத்து அவர்களை அச்சுறுத்தி தன் எண்ணம் போல் திசை திருப்பி லாபம் ஈட்டுகிறாள் கொடிய பெண் ஒருத்தி. அவளுக்குத் துணையாக அவளது கணவன். இருவரும் எப்படி வளர்ச்சி அடைந்தனர்? இப்படி ஒரு தேவதைகளின் படையை எப்படித் திரட்டினர்? அவர்கள் வீழ்ந்தது எவ்வாறு என்பதனை நாமும் சேர்ந்து துப்பறிந்து அறிந்து கொள்ள இம்மாதத்தின் மரண தேவதைகள் வகம் காமிக்ஸில் வந்திருக்கிறது. வாங்கி வாசித்து மகிழுங்கள்.. 

ஹைலைட்ஸ்:

ஒரு அபார்ட்மெண்ட்டில் தம்பதியர் மிரட்டப்படுகிறார்கள். ஹாலிவுட் திரைப்படங்களை ஒத்த காட்சி அமைப்பு. 

தான் வீழும் நிலை வந்தாலும் கடமை வீரரான காவலர் ஒருவர் மரண தேவதைகளில்  ஒருத்தியை வீழ்த்துவது. 



நிக் ரைடர் அதிரடியாக சிங்கத்தின் குகைக்குள் நுழைவது. 

இறுதியாக ஹா ஹா ஹா தொப்பி தொப்பி தொப்பி.. என்று ஒரு தொப்பி கொண்டு வரும் துரதிருஷ்டத்தை வைத்தே காமெடி ஏரியாவை டச் அப் செய்த விதம்.. 

போட்டி பொறாமை நிறைந்த உலகம் இது என்கிற கடுமையான மனநிலையை ஊட்டி ஊட்டி விஷமாக்கி வைத்திருக்கும் மம்மா. அதனால் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து சுட்டு தன் சக கொள்ளைக்காரிகளை வீழ்த்துவது தவறு என்று கூட எண்ணாத கடும் மனப்பான்மை.. 

 நண்பர் புகழேந்தியின் மொழி பெயர்ப்பு கதையோட்டத்துக்கு பலம். சென்ற இதழான ஆடம் வைல்ட் சாகசத்துக்கும் புகழ்தான் மொழிபெயர்ப்பாளர். அவருக்கு வாழ்த்துக்கள்.. 

140 ரூபாய்க்கு நல்ல வாசிப்புக்கு ஏற்ற கதையாக அமைந்திருக்கிறது இந்த மரண தேவதைகள். 

ஆடம் வைல்டின் மார்ச் மாத சாகசத்தில் ஓரளவுக்கு காட்டப்பட்ட அசுரனுடன் ஒரு மல்லுக்கட்டு இருக்கிறது என்று இந்த விரைவில் வருகிறது விளம்பரம் நமக்குக் காண்பிக்கிறது.. 
 
மனிதனுக்கும் மிருகத்துக்குமான இணைப்பு மிஸ்ஸிங் லிங்க் என்று அறிமுகபடுத்தப்பட்டிருப்பதால் அடிமையாகிப் போன அசுரனை மீட்டு வரும் வைல்ட் கதையாக இது இருக்க வாய்ப்பிருக்கிறது.. 


என்றும் அதே அன்புடன் ஜானி.. 




வெள்ளி, 21 மார்ச், 2025

In The Tiger's Lair_Phantom_FREW_002 இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இந்த பதிவில் நாம் காணப் போவது வேதாளரின் FREW_002 இதழ் புலியின் உறைவிடத்தில் எனப் பொருள்படும் இன் தி டைகர்ஸ் லெயர்... 

கதைக்குள் புகுமுன்பு ஒரு தகவல்.. வெள்ளை இளவரசி ராணி காமிக்ஸில் வந்த மிகவும் சிறந்த கதை. வனக்காவல் படையினரின் உருவாக்கம் மற்றும் வெள்ளை இளவரசி எப்படி வேதாளருக்கு உரியவராகிறாள் என்பதை மையப்படுத்தி வந்த கதை இது. கடந்த நான்கு ஆண்டுகளாக "வெள்ளை இளவரசி"க்கென தனித்தடம் அமைத்து தனி வாட்ஸ் அப் குழு உருவாக்கி அதில் போட்டிகளும் பரிசுகளும் வாரி இறைத்து ஒவ்வொரு மார்ச் மாதமும் முதல் தேதியில் இருந்து பதினாறு வரை குழுவினை இயக்க நிலைக்குக் கொண்டு வந்து அமர்க்களமாகக் கொண்டாடி மகிழ்வோம் ஆசிரியர் திரு.சரவணன், தோழர் திருப்பூர் குமார் இருவருடன் வாசகர்கள் அனைவரும். கவிதை, விமர்சனம், வசனங்களைக் கண்டு பிடித்தல், ஓவியம் வரைதல் என்று விதவிதமாக போட்டிகள் நிகழ்த்தி அதில் பங்கு பெற்ற அனைவருக்குமே பரிசுகளை அள்ளித்தந்து அபூர்வமான கதைகளையும் அற்புதமான பரிசுகளையும் மாதாந்திர காலண்டர்களையும் வழங்கி இந்த ஆண்டிலும் மிகப்பெரிய கொண்டாட்டமாகிப் போனது வாசகர்களுக்கு. நமது வாழ்த்துக்களையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்வோம்.. அதில் எனது விமர்சனம் பரிசினை வென்று எனக்கு அபூர்வமான எத்தனை விலை கொடுத்தாலும் எளிதில் கிட்டாத "ஆழ்கடல் அதிரடி" முத்து காமிக்ஸ் பரிசாக வழங்கி டெக்ஸ் வில்லரின் பனி மண்டலப் போராளிகள், ஜவஹர்லால் நேரு வாழ்க்கை சித்திரக்கதை என்று மூன்று முத்தான பரிசுகளையும் வழங்கி கூடவே நிறைய சிறப்பான ஓவியங்களை அனுப்பி வைத்துள்ளனர் நண்பர்கள். அனைவருக்கும் என் அன்பின் நெகிழ்வுகளுடன் பதிவினைத் துவக்குகிறேன்.. 

இணையத்தில் கிடைத்த ஓவியம் இந்த அழகி கான்னி மூரின் ஓவியம்.. 
வேதாளரின் கதையான புலியின் உறைவிடத்தில் என்று பொருள்படும் இந்த இரண்டாவது FREW பதிப்பானது இந்த அழகி அமெரிக்காவில் இருந்து பெங்காலி வந்திறங்குவதில் தொடங்குகிறது.. 

கேப்டன் மைக் ஸ்ட்ராங்க் என்பவர் இந்த அழகியின் பால்ய வயது தோழர். அவரை நேசித்து மணமுடிக்க வரும் இப்பெண்ணுக்கோ தன் கணவரோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்கிற பேரவா.. இதே ஆசை வேறு ஒருவருக்கும் இருக்கிறது.. அது இப் பெண்ணை கானகத்தில் காணாமல் போன தன் அன்புக் காதலனைப் பரிதவிப்புடன் தேடித்தேடி ஆபத்துகளில் சிக்கிக் கொள்ள வகை செய்கிறது.. உதவிக்கரம் நீட்டிட வருகிறார் வேதாள மாயாத்மா. வேதாளரின் பந்தார் படையினர் அப்பெண் ஆபத்துகளில் சிக்கிக் கொள்ளாமல் மறைந்தே பின்தொடர்ந்து பாதுகாப்பு நல்குகின்றனர். 


ஒருவழியாக வேதாளரின் மண்டைஓட்டுக் குகையில் அவரைத் தரிசித்து மயக்கமாகி நிலைக்குத் திரும்புகிறாள் கான்னி மூர். தன் காதலர் யாரால் காணாமல் போனார்? என்றறிய உதவி கேட்கிறாள். கேப்டன் மைக்குக்கு நேர்ந்த கதி என்ன என்பதனை கண்டறிய முயற்சிக்கிறார் வேதாளர். 

இந்த இடத்தில் கட் செய்து மைக் என்னவானார் என்று பார்த்தால்  ஒரு நாட்டின் ராணி ஆஸ்டா. தலைவன் மைக் ஏற்கனவே அவளைத் திருமணம் செய்திருக்கிறான். அடப்பாவி என்று நாம் நினைப்பதற்குள் அடுத்த குண்டு.. ராணிக்கு ஒன்பது திருமணங்கள் நிகழ்ந்து ஒவ்வொருவரின் தலையுமே கொய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் நீ வேறு டிசைன் என்கிறாள் அவள். ஆனால் உன்னை நான் எங்கே திருமணம் செய்து கொண்டேன் என்கிறான் மைக். நான் உன்னை காந்தர்வ மணம் (கண்டதும் காதல் மாதிரி) செய்து கொண்டேன் வா என் ராஜாவாக என்கிறாள்.    அவன் ஏற்கனவே இவளின் கைதியாக இருந்து தப்பியோடிய நபர். மீண்டும் சிறையிலேயே தள்ளி தண்ணீரும் பிரட்டும் உன்னை வழிக்குக் கொண்டு வரும் என்கிறாள்.. சிறைப் பறவையை மீட்பாரா வேதாளர்? 
கான்னியை நட்டாத்துல விட்டுட்டு வந்தாச்சு திரும்பிப் போனா கத்தியை எடுத்து சொருகிருவா.. இந்த ராணியா சரியான காட்டுவாசி.. முடியலைப்பா என்கிறான் மைக்.. 
திருமண ஆடையுடன் "வனத்துக்குள் பிரவேசித்த வனிதை" (தலைப்புக்குப்  பொருந்துதே?) வேதாளர் குகையில் ஆடை மாற்றிக் கொண்டு துணியைத் துவைத்து எடுத்துக் கொண்டு ட்ரோன்டலே நாட்டை நோக்கிப் பயணிக்கிறாள் வேதாளர் துணையுடன்.. 

 ஆஸ்டா ராணிக்கு வேட்டை, வதை, விளையாட்டு எல்லாம் இருந்தும் போர் அடிக்கிறதென்கிறாள். எத்தனை சொத்து சுகம் இருந்தாலும் ஒரு கட்டத்தில் வாழ்க்கை போர் அடித்து விடும் என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டு இவள். 
கான்னி பற்றி அவள் கேள்விப்படும் நேரம் வேதாளருடன் கான்னியே அவளது ராஜாங்கத்தில் புகுகிறாள். பெர்பக்ட் டைமிங்..  
வேதாளர் அவளை மட்டும் தனியே அரசியிடம் அனுப்பி என்ன நடக்கிறது என்பதை கவனிக்கிறார். அவளோ காதலனைத் தேடி வந்த காரிகையை சாட்டையடி கொடுக்கத் தயாராகிறாள். சூறாவளியாக அங்கே வந்து சாட்டையைப் பிடுங்கி வீரர்களை தாக்கி கான்னியை மீட்டுப் போகிறார் வேதாளர். 
மைக் தன்னைக் கைவிட்டு விட்டு ஓடிப் போகவில்லை என்றும் அவர் ராணியால் கடத்தப்பட்டார் என்பதையும் உணர்ந்து கொள்கிறாள் கான்னி. 
தலைப்பு "கடத்தல் ராணி" பரவாயில்லை அல்லவா? 
மைக்கை மீட்க மீண்டும் வருகிறார் வேதாளர். மைக் சிறைப்பட்டுக் கிடக்கும் இடத்துக்கு செல்கிறார். ராணியிடம் தனக்கு என்ன தொடர்பு என்பது பிளாஷ்பேக்காக திரையில் விரிகிறது.. சரி காமிக்ஸ் பக்கங்களாக.. 
பண்டைய முறைகளில் தீவிரமானவர் அரசர் டுராண்ட். அவருடைய  மகளான ஆஸ்டா தங்களுடன் சமாதானம் பேச வந்த ஆங்கில கேப்டனை தன் தந்தை காட்டுக் குதிரைகள் இரண்டில் இரு வேறு திசையில் கட்டி இழுபடவைத்துக் கொல்வதற்கு முயற்சிப்பதைத் தடுத்து தன்னை மணக்குமாறு கேட்டு அதற்கு மைக்கும் ஒப்புக் கொள்வதால் தலை தப்புகிறது. திருமணத்துக்கு முன் கோட்டைக்கு வெளியே நதியொன்றில் குளித்து வர வேண்டிய மைக் அங்கிருந்து தப்பி விடுகிறார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து சரியாக அவருக்குத் திருமணமாகும் நிலையில் தங்க மயில் சிறகு வந்து அச்சுறுத்துகிறது.. கடத்தவும் செய்கின்றனர் டுராண்டலே படையினர். இதுதான் நடந்தது என்று கூறிய மைக்கை மாறுவேடத்தில் கோட்டையை விட்டு வெளியேற்றி விட்டு அவருக்குப் பதிலாக கைதியாகிப் போகிறார் வேதாளர். அவரை சந்திக்க வந்த ராணியை மடக்குகிறார். அவளோ என்னை முத்தமிடு என்கிறாள்.. சளித் தொற்றுக்கு சிறந்த வழி இது என்று காமெடி செய்கிறார் வேதாளர். 

உன்னைக் கைது செய்து கொண்டு போகிறேன் என்கிறார் வேதாளர். நான் உன்னை ஏன் பிரியப் போகிறேன் என்கிறாள் காதல் வசப்பட்டு விட்ட ராணி ஆஸ்டா.. என்ன பொண்ணுடா இவ என்கிறார் வேதாளர். 
அவரை மீட்க வரும் கேப்டனும், கான்னியும் மீண்டும் சிக்கிக் கொள்ள "குதிரை வைத்தியம்" செய்ய முயற்சிக்கும் ராணியின் காட்டுக் குதிரைகளை தடுத்து வேதாளர் ராணியைக் கடத்த முயல வாயிற் கதவு அடைத்து அவளைக் காக்கிறார்கள் கோட்டைக் காவலர்கள்.. பின்னர் புலிகளோடு மோதுகிறார் மாயாவி. ராணிக்கு தான் செய்த தவறுகள் புரியவர, மயங்கிக் கிடக்கும்  வேதாளரைக் காக்க புலிகளால் கடுமையாக தாக்குதலுக்குள்ளாகிறாள்  ராணி. முன்னர் மாயாவியார் சுட்டிக் காட்டிய தான் ஒரு வரைமுறையற்று வளர்ந்த குழந்தை என்பதனை நினைத்துப் பார்த்ததாகவும் தன் மனதை மாற்றிக் கொண்டு விட்டதாகவும் தன் கால்கள், முகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு விட்டதாகவும் மூவரையும் விடுதலை செய்து உத்தரவிடுகிறாள் மனம் திருந்திய ராணி.. ஒரு காட்டு விலங்கு போன்று வளர்ந்தவள் காட்டு விலங்குகளால் அடிபட்டுத் திருந்தியதுதான் விதி.. மைக்-கான்னி தம்பதிக்கும், ராணிக்கும் விடை தருவதுடன் இந்த இரண்டாவது சாகசம் நிறைவடைகிறது. நன்றி வணக்கம்.. 
 







ரேகா காமிக்ஸ் பட்டியல்

 வணக்கம் நண்பர்களே.. 

திருப்பூர் குமார் தொகுத்துள்ள 

ரேகா காமிக்ஸ் பட்டியல் இதோ.. கிடைக்கும் அட்டைகளை பின்னர் இணைக்கிறேன். 

1. கொள்ளைகாரன் ஜிங்கோ 

2. காமெட் மாயாவி 

3. புதையல் விமானம் 

4. ரகசிய உளவளி 000

5. புயல் வீரன் 

6. டாப் சீக்ரெட்

7. இரவு கழுகுகள் 

8. பழிக்குப் பழி 

9. கொலைகார விஞ்ஞானி

10. ரெட் சிக்னல் 

11. வைரத்தீவு 

12. சிகப்பு ராணுவம்

13. மரண போராட்டம் 

14. மர்ம தலைவன் 

15. ஒற்றன் தேடிய ரகசியம்

16. விந்தியன் 

17. வெடிகுண்டு எக்ஸ்பிரஸ் 

18. நிச்சயிக்கப்பட்ட மரணம் 

19. ராணுவ ரகசியம்

20. விஷ ஊசி டாக்டர்

புதன், 19 மார்ச், 2025

042_மரணப் பாதையில்_ஆடம் வைல்ட்_வகம் காமிக்ஸ்

 வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே..இது வகம் காமிக்ஸ் "மரணப் பாதையில்" விமர்சனம்.

அடிமை வர்த்தகம் என்பது மனித இனத்தை பிடித்த சாபக்கேடு. மனிதனை மனிதன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே என்ற பாடலுக்கு அர்த்தமாக அடிமை வர்த்தகம் நடக்கும் தேசத்திலே அதனை எதிர்த்து நடக்கும் யுத்தத்தை முன்னெடுத்து செல்கிறார் நாயகன். முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக ஆரம்பித்து அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு இடையே ஓர் ஆராய்ச்சியாளனின் பார்வையில் இனப்படுகொலை ஒன்றை காண்பித்துக் கொண்டே அடிமை வர்த்தகம் ஓரிடத்தில் அழிக்கப்பட்டதால் மற்றொரு இடத்தை அதுவும் ஏற்கனவே புழங்கிய இடத்தையே மீண்டும் புதுப்பித்து மனித வர்த்தக சந்தையை திடமாக நடத்தலாம் என்று எண்ணி ஆக்கிரமிக்க நினைக்கும் எதிரிகளை பந்தாடுகிறார் ஆடம் வைல்ட். இழப்புகள் இருபக்கமும் இருந்தாலும் இறுதி வெற்றினை ஈட்டுகிறது ஆட்டம் வைல்டின் அணி.. இதற்கிடையே மிருக வேட்டையில் ஜோடியாகிப் போன இருவர் மனித வேட்டைக்கு களம் காண அடுத்த பாகத்தில் ஆடம் வைல்டை வேட்டையாட கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்புகிறது. இனி என்ன நடக்கும்?!? மரணப் பாதையில் பல மரணங்களை உதிர்த்தாலும் நீதியின் பக்கம் நின்று வெல்ல நினைக்கும் நாயகனின் பயணம் தான் என்னவோ? தொடர்கிறது இந்த மரணப் பாதை.. முதல் புத்தகத்தில் இருந்து இரண்டாவது புத்தகத்தை தனியாக படிக்க இயலும். இருப்பினும் ஆடம் வைல்டு ஒரு சிறந்த நாயகர். ஆகவே அவரை தொடர்ந்து ஆதரிக்க வலுவான கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் போனல்லி குரூப் கொண்டு வந்த கதை அல்லவா..  அதனால் ஆட்டத்தில் அனல் பறக்கிறது.. வகம் காமிக்ஸ் 42 வது வெளியிடான மரணப் பாதையில் விலை ரூபாய் 140 இல் அட்டகாசமாக அமைந்து இருக்கிறது. கருப்பு வெள்ளை ஓவியங்கள் நல்ல மஞ்சள் நிற காகிதம் அழகான எழுத்துருக்கள் அம்சமான மொழிபெயர்ப்பு சிறப்பான வடிவமைப்பு என ஒரு தரமான நூலை வாசித்த அனுபவம் கிட்டுகிறது..





சனி, 15 மார்ச், 2025

அறிமுகம்.. டிக்சி டூகன்

 


LGN 28 மூன்றாவது தினம் கிராபிக் நாவல்_IL TERZO GIORNO_Graphic Novel

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இது மூன்றாம் தினம் கிராபிக் நாவல்.. ஆளரவமற்ற இடங்கள் அதிலே தொடரும் மர்மங்கள் ஆபத்தில் சிக்கும் அப்பாவிகள் என்ற ரீதியில் இதுவும் ஒரு தனிஇடத்தைப் பெறும் ஒன் ஷாட் கதை. 

புத்தகக் கண்காட்சியில் விலை ரூ.90/-ல் வெளியிடப்பட்டுள்ள (10% தள்ளுபடியுடன் 80/- ரூபாய் மட்டுமே/-) லயன் கிராபிக்ஸ் நவல் வரிசையின் 28ஆவது வெளியீடு இந்த மூன்றாம் தினம்.. 



ஒரு சுவாரஸ்யமான கேள்வி பதில்

கேள்வி: படிச்சுட்டு இதயத்தை இழந்தவங்க எப்படி மறுபடியும் உயிரோட வந்தாங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்?

பதில்: Chaos மகன் Erebos மனதை குளிர்வித்தால் இறவா நிலை அடையலாம் அல்லது இறப்பை வெல்லலாம் என்பது போன்ற Egyptian mythology ஒட்டி இந்த கதை வடிவமைக்கப்பட்டுள்ளது._திரு.சுரேஸ் தனபால்

ஆக எகிப்திய புராணத்தைப் போன்றதொரு கதைதான் இந்த திகில் திரில் நிறைந்த கதை.. ஓவியங்கள் உங்களை ஒன்றுக்கு இரண்டு முறை அலசிப் பார்க்க வைக்கும்.. வித்தியாசமான பயணம் இந்தக் கதை. 

போன்நெலி குழுமம் வெளியிட்டுள்ள இந்த படைப்பு வினோதமான விசித்திரமான விபரீதமான மாந்தர்களை சித்திரங்களாக உலவ விடுகிறது.. 
 


ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!

                 இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்பகத்தின் முதல் வெளியீட்டைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு மற்றும் கதைச் சுருக்கம்.. 

          நிற்க.. திருவண்ணாமலையில் புத்தகத்திருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.. இம்முறை வழக்கமான காந்தி நகர் பைபாஸில் இல்லாமல் நகராட்சி ஈசானிய மைதானத்தில் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதில் உணவுத் திருவிழா இடம்பெறவில்லை என்கிறார்கள். ஓரிரு நாட்களில் மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்படலாம். தகவல் தெரிவிக்கிறேன்..  

இனி என்டர் தி பேண்டம் உங்கள் பார்வைக்கு.. 

மாண்ட்ரேக் புகழ் எழுத்தாளர் லீ பால்க்கின் தி பேண்டம்  என்றே பிரபலப்படுத்துவதில் இருந்து மாண்ட்ரேக் எத்தனை புகழ்பெற்ற பாத்திரமாக ஆஸ்திரேலியா வரை நிலைத்திருந்திருக்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சிட்னியில் இருந்து இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதும் ஆறு ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதன் ஓவியர் குறித்த குறிப்புகள் இல்லை. ஆனாலும் இந்த வகை ஓவியங்களை வரைந்தவர் யார் என்பதை போகிற போக்கில் அறிந்து கொள்வோம்.. 

வேதாள மாயாத்மாவின் தோற்றம் மற்றும் தொடர்ச்சி போன்றவை ஒவ்வொரு கதையிலுமே சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.. இந்த கதையிலும் துவக்கம் அதை வைத்துத்தான்.. 
இனி கதையின் சுவாரஸ்யமான அம்சங்கள்.. 
*கதை ஆரம்பிப்பதே மன்னார் வளைகுடாவில்... 
*அதில் வரும் இராணுவ வீரர் தான் மெட்ராஸில் இருந்து வருவதாக தெரிவிக்கிறார். 
*அரேபிய உடையில் வேதாளர் பாலைவெளியில் நிகழ்த்தும் சாகசம் இந்தக் கதை. 
*சுவாரஸ்யமான வசனங்கள் நிறையவே இருக்கின்றன..அதில் ஒன்று அமெரிக்காவின் மிஸ் அமெரிக்கா நீங்கள்தான்..இல்லையேல் தேர்வுக்குழு தவறு இழைத்திருக்கிறார்கள் என்று ஒரு வசனம் வரும்.. 
கப்பலில் பிரயாணித்து கொண்டிருக்கும் டயானா பால்மரிடம் இராணுவ வீரர் லெப்டினென்ட் பைரோன் பழகுகிறார்.. மோரிஸ் டவுனில் இருந்து புறப்பட்டதாக கூறும் டயானா தனக்குத் திருமணமாகி விட்டதையும் தெரிவித்து வைக்கிறார்.. இராணுவத்தினை சில தினங்களுக்கு முன்பாக மாபெரும் வனவாசிகள் சுற்றி வளைத்துக் கொண்டுவிட்டதாகவும் படுகொலை அரங்கேறியிருக்கும் நிலையில் அங்கே ஓர் மாவீரர் தோன்றி அவர்களை காப்பாற்றியதாகவும் அதனை தான் மெட்ராஸில் வான் தந்தியில் கேட்க நேர்ந்ததாகவும் பைரோன் தெரிவிக்கிறார். அவருக்கு விருதே தந்திருக்கலாம் ஆனால் மாயமாகி விட்டார் என்றதும் டயானாவுக்கு அவர் மாயாவியாரைத்தான் சொல்கிறார் என்பது புரிகிறது.. 
                      அவர்கள் பயணிக்கும் கப்பல் ஒரு புயலில் சிக்குண்டு கவிழ்ந்து விடுகிறது.. அதில் இருந்து தப்பும் பைரோன் ஒரு சில வாரங்களில் பெங்காலி வனத்துக்குள் அரும்பாடுபட்டு மாயாவியாரை அவரது மண்டையோட்டுக் குகைக்கே சென்று சந்தித்து தன்னுடன் டயானாவும் சிலரும் தப்பிக் கரை சேர்ந்ததாகவும் அரேபிய அடிமை விற்பனையாளர்களிடம் டயானா சிக்குண்டு தான் மட்டும் தப்பிக்க உதவியதாகவும் தெரிவிக்கிறார். வேதாளர் தனி விமானம் ஏற்பாடு செய்து கொண்டு பைரோன் துணையுடன் வனத்தில் இருந்து பாலைவனத்துக்கு இடம்பெயர்கிறார்.. அங்கே தேடல் துவங்குகிறது.. 
               செய்தி சேகரிக்க பணம் கொடுப்பது என்பது மிகவும் ரிஸ்க் நிறைந்தது.. உங்களிடம் இன்னும் அதிகம் பணம் இருக்கலாம் என்பதால் நீங்கள் கொல்லப்படவும் வாய்ப்பிருக்கிறது.. தங்க முட்டையிடும் வாத்து கதைதான்.. இங்கே மாயாவி தங்கத்தையே நீட்டுகிறார்.. அவரை பாலைப் பரப்பிலேயே புதைத்து விடும் வேகம் வெறியர்களுக்கு எழுவது உலக இயல்புதானே? கடைசி ஆசையாக கொஞ்சம் அருந்த நீர் கேட்கிறார்.. நீரை வாங்கி நெருப்பை அணைத்து விடுகிறார்.. காரிருள் அங்கே சூழ்கிறது.. 
வாங்கிக் கொள்ளுங்கள் வேதாள முத்திரை அற்பர்களே..!

அது வேதாளரின் முத்திரை என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டு அதிர்ந்து போகின்றனர் கயவர்.. பாலைவெளியில் டயானா அடைபட்டிருந்த கூடாரத்துக்கு அருகில் நின்ற காவலர்கள் வண்ணவண்ண வெளிச்சங்கள் திடீரென எழும்புவதைக் கண்டு திகைத்து அது என்ன என்று தெரிந்து கொள்ள கணநேரம் கவனமின்றி செல்கின்றனர். அந்த இடைவெளியில் டயானாவின் குகையில் புகுந்து விடுகிறார் வேதாளர். இருவரும் சந்தித்த மகிழ்ச்சி கலைவதற்குள் எதிரிகளிடம் அகப்பட்டு விடுகிறார் மாயாவி.. கடத்தல் கும்பல் தலைவன் இது வேதாளரேதான் என்பதை அறிந்து.. 
"சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கிறீர்.. இப்போது எதற்காக வந்தீர்? "என்று கேட்க.. 
என் குடையை மறந்து வைத்து விட்டேன்  என்கிறார் வேதாளர்...  
இன்னும் எத்தனை காலம்தான் இந்த அடிமை வியாபாரத் தொழில் என்று வினவுகிறார். 
நான் தலைவனாக இருக்கும்வரை இப்படித்தான் என்று கூறி அவரை ஒரு எறும்புப் புற்றுக்குள் திணித்து சித்திரவதைக்கு விட்டு விட்டு அந்த கயவர் கும்பல் புறப்பட்டு விடுகிறது.. 
அவரை மீட்கப் போராடும் டெவில் நரிக் கும்பலால் படாதபாடுபட்டு தன் எஜமானரைக் காப்பாற்றும் முயற்சியில் தோல்வியைத் தழுவும் வேளையில் ஒரு புதிரான ஆசாமி அவரை மீட்டு நரிகள் பூட்டியதொரு இழுவை வாகனத்தில் தன் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்று குணமாக்குகிறார்.. அவர் பாலைவெளித் துறவி என்று மக்களால் அழைக்கப்படுபவர் என்று பின்னர் வேதாளர் தெரிந்து கொள்கிறார். அவரது முகத்தைக் கண்ட முதல் மனிதர் என்று வேதாளர் துறவியைக் கூறுகிறார். இரு அபூர்வமான பிறவிகள் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர். எறும்புகளின் விஷமும், பாலை வெயிலும் வேதாளரை பலவீனமாக்கி இருக்கின்றன.. துறவி நரிகளை வளர்ப்பு மிருகங்களாக மாற்றி வைத்திருக்கிறார். ஒரு பெண்ணுக்காகவா இத்தனை தூரம் சிரமப்பட்டிருக்கிறாய் என்று வெறுப்புடன் கூறுகிறார் துறவி.. அவரது வாழ்க்கை வரலாறு சித்திரங்களாக விரிகிறது.. 
மிகவும் அழகான பெண் ஒருத்தியை காதலித்தவர் ஒரு கட்டத்தில் பிரிய நேர்கிறது. அவள் பின்னர் குழந்தை குட்டி என்று பெற்றுக் கொண்டு குடும்பத்தில் ஐக்கியமாகி விட துறவிக்கு வாழ்க்கை வெறுத்துப் போய் விடுகிறது.. ஆனால் என்னுடைய டயானா முற்றிலும் வேறுபட்டவள் என்கிறார் வேதாளர்.. 
                 இது இப்படி இருக்க சுல்தான் ஒருவரிடம் அடிமை விற்பன்னர் டயானாவை விற்க முயற்சிக்க காத்திருக்கிறது ஆன்டி க்ளைமாக்ஸ்.. சுல்தான் அமெரிக்கப் படைகளை நமக்கெதிராகத் திருப்பி விட்டு விடுவாய் என்று கடிந்து கொண்டு அடிமை வியாபாரியை ஓட விடுகிறார். டயானாவும் வேதாளரும் எப்படி சேர்ந்தார்கள்? அடிமை வியாபாரியை வேதாளர் முடக்கிப் போட்டு வியாபாரத்தை நிறுத்தினாரா என்பது விலாவாரியாக முப்பத்து மூன்று பக்கங்களில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.. பதிவு நீளமாக சென்றால் வாசிப்பதற்கு சிரமம் ஏற்படலாம் என்பதால் இத்துடன் இந்த கதையை முடித்து வைக்கிறேன்.. என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.. 
விரைவில்...


வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

No.1048_The Ghost on flight 302 _ The Phantom_கதை சுருக்கம்

 

நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போவது வேதாளரின் கதையான விமானத்தில் ஒரு பேய் என்கிற சித்திரக்கதை.. அதன் வெளியீட்டு விவரங்கள் கீழே.. 

கதை_நார்மன் வொர்க்கர்
 யார்இந்த நார்மன் வொர்க்கர்? இதோ அவரது புகைப்படம்.. 

இந்த வேதாளர் கதையை எழுதிய நார்மன் வொர்க்கர் யாரென தெரியுமா? இவர் இந்தியாவில் இராணுவ வீரராக திகழ்ந்தவர்.. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த சமயம் இந்தியாவில் போராடிய வீரர் இவர். 
இதோ அவரைப்பற்றிய குறிப்புகள்.. 

நார்மன் வொர்க்கர் (1927 - 5 பிப்ரவரி 2005) ஒரு பிரிட்டிஷ் காமிக் புத்தக எழுத்தாளர் ஆவார், லீ பால்க்கின் தி பாண்டம் இடம்பெறும் காமிக் புத்தகங்களில் அவர் செய்த பணிக்காக மிகவும் பிரபலமானவர் .

நார்மன் 1927 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கென்ட்டில் பிறந்தார். அவருக்கு 17 வயதாக இருந்தபோது, ​​அவர் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவில் போராடினார். அதன் பிறகு, 1950 களில் அது திவாலாகும் வரை தனது தந்தையின் தளபாடங்கள் தொழிற்சாலையில் பணியாற்றினார்.

நார்மன் ஒரு காமிக் புத்தக எழுத்தாளராக முடியும் என்று பரிந்துரைத்தவர் அவரது உறவினர், மாடஸ்டி பிளேஸ் - படைப்பாளர் பீட்டர் ஓ'டோனல் ஆவார். இது ஸ்வீடிஷ் காமிக் புத்தக நிறுவனமான செமிக்கிற்காக தி செயிண்ட் மற்றும் பஃபலோ பில் இடம்பெறும் கதைகளை நார்மன் எழுத வழிவகுத்தது .

செமிக் பத்திரிகையில் தான் நார்மன் தி பாண்டம் என்ற புனைப்பெயருடன் கதைகள் எழுதத் தொடங்கினார் . முதலில், அவர் "ஜே. புல்" என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தினார், ஆனால் அவர் விரைவாக தனது உண்மையான பெயருடன் கதைகளில் கையெழுத்திடத் தொடங்கினார்.

ஸ்காண்டிநேவிய பாண்டம் தயாரிப்பின் மிகவும் பிரபலமான எழுத்தாளர் நார்மன் என்று வாதிடலாம்; அவர் 2004 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு 127 கதைகளை எழுதி முடித்தார். வரலாற்று மீதான அவரது அன்பின் விளைவாக, பிற நூற்றாண்டுகளின் முந்தைய பாண்டம்கள் பலவற்றிற்கு பின்னணிக் கதைகளை வழங்குவதற்கு நார்மன் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் வேதாளர் கதை மாத்திரமல்லாது வார் பிக்சர் லைப்ரரி போன்ற அதிரடிக்கதைகளையும் இறங்கி அடித்திருக்கிறார். மிகவும் சிறந்த கதைகளை வாசகர்களுக்கு கொடுத்து அசத்தியவர். 

இது தவிர fantomen, FREW பதிப்பகத்தின் பிற கதைகளிலும் தன் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் இவராவார். 
சரி ஓவியங்களைத் தீட்டியவரைக் கவனிப்போமா? ஓவியங்கள் ஜோஸ் கேசனோவாஸ் சீனியரின் கைவண்ணம். இவரும் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரரேயாவார்.  
அவரைப் பற்றிய குறிப்புகள் இதோ. 
1934 இல் பார்சிலோனாவில் பிறந்த ஜோஸ் மரியா காஸநோவாஸ் மாக்ரி, இராணுவத்தில் பணியாற்றிய பிறகு 1957 இல் ஸ்பானிஷ் காமிக்ஸிற்காக வரையத் தொடங்கினார். அவரது ஆரம்பகால படைப்புகளில் ஃபியூச்சுரோவிற்கான "எல் பெக்வெனோ முண்டோ" (1957) மற்றும் சூப்பர்-ஸ்ட்ராங்கிற்கான "சூப்பர்ஃபுர்டே" (1958) ஆகியவை அடங்கும், இவை இரண்டும் ஃபெர்மாவால் வெளியிடப்பட்டன. 1961 ஆம் ஆண்டு ஆர். மார்ட்டின் (விக்டர் மோரா) எழுதிய "எல் ஜபாடோ"வின் சாகசங்களை அவர் 1962 ஆம் ஆண்டு முழுமையாகப் பொறுப்பேற்கத் தொடங்கினார்.

அவரது தொழில் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் கூட அவரது மிகவும் விரிவான, சிக்கலான பாணி வெளிப்பட்டு வந்தது. மேலும் ஹிஸ்டோரியாஸ் செலேசியன் (ஜூல்ஸ் வெர்னின் "லாஸ் இந்தியாஸ் நெக்ராஸ்", 1966) மற்றும் ஜோயாஸ் லிட்டராரியாஸ் ஜூவனைல்ஸ் ("அன் டெஸ்குப்ரிமியென்டோ ப்ரோடிகியோசோ" (1978) மற்றும் "எல் பெரோ டி லாஸ் பாஸ்கர்வில்ஸ்" (1982) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள்) பக்கங்களில் உள்ள கிளாசிக் கதைகளின் தழுவல்களில் இது சிறப்பாகக் காணப்பட்டது. இந்தப் படைப்புகளில் சில ஸ்பெயினுக்கு வெளியே உள்ள சந்தைகளுக்காக உருவாக்கப்பட்டன, மேலும் காஸநோவாஸ் ஸ்பெயினின் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்றான "எல் கேபிடன் ட்ரூனோ"வை ஜெர்மன் வெளியீட்டிற்காக வரைந்தார். இதனால், காஸநோவாஸ் உண்மையில் தனக்குக் கிடைக்கக்கூடிய நற்பெயரைப் பெறவில்லை, ஏனெனில் அவரது படைப்புகள் பல நாடுகளில் காணப்பட்டன, ஆனால் பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே. அவரது துண்டுகளைத் தேடும் ரசிகர்கள் ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, பின்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகளில் தேட வேண்டும். டச்சு வார இதழான டினாவிற்காக அவர் 1960களின் பிற்பகுதியில் "பொலியானா"வின் சாகசங்களை வரைந்தார்.

 இங்கிலாந்தில், 1970களின் பிற்பகுதியில் கிரெடிட்கள் வெளிவரத் தொடங்கியபோது, ​​2000AD மற்றும் ஸ்டார்லார்டின் பக்கங்கள் மூலம் அவரது பெயர் அறியப்பட்டது. அவர் உண்மையில் 1962 ஆம் ஆண்டிலேயே அநாமதேயமாக பங்களிக்கத் தொடங்கினார், ட்ரூ லைஃப் , லவ் ஸ்டோரி மற்றும் பல்வேறு காதல் நூலகங்களுக்கான கலைப்படைப்புகளை உருவாக்கினார்.தசாப்தத்தின் இறுதி வரை ஸ்டார் லவ் . 1970கள் மற்றும் 1980களின் முற்பகுதி முழுவதும் அவரது படைப்புகள் ஜூன் & ஸ்கூல்ஃப்ரெண்ட் , டாமி , சாண்டி , ஜின்டி , லிண்டி , பென்னி , எம்மா மற்றும் மாண்டி ஆகியவற்றில் வெளிவந்தன . அவர் எப்போதாவது மட்டுமே ஜட்ஜ் ட்ரெட்டை வரைந்தாலும், 1980களின் முற்பகுதியில் ஜட்ஜ் ட்ரெட் வருடாந்திரத்தின் பல்வேறு பதிப்புகளுக்காக அவர் வரைந்த மெகா-சிட்டி ஒன்னின் மற்றொரு குடிமகனான மேக்ஸ் நார்மலுடன் அவர் தொடர்புடையார் . ஐரோப்பாவின் பிற இடங்களில் பரபரப்பாக இருந்ததால், இங்கு அவரது பெரும்பாலான படைப்புகள் ஒற்றை துண்டுகளாக இருந்தன, பெரும்பாலும் 2000AD ("தார்க்ஸ் ஃபியூச்சர் ஷாக்ஸ்" மற்றும் "டைம் ட்விஸ்டர்ஸ்", சிலவற்றை ஆலன் மூர் மற்றும் பீட் மில்லிகன் எழுதியது), ஸ்க்ரீம்!! மற்றும் ஈகிள் . அவர் ஸ்டார்ப்ளேசருக்காக அரை டஜன் நீண்ட கதைகளை வரைந்தார் , அவற்றில் மிகல் கெய்ன் சாகசமான "சூப்பர்காப்" (1988). தனது மகனுடன் (ஜோஸ் காஸநோவாஸ் என்றும் அழைக்கப்படுகிறார்), அவர் 1991 இல் "சாம் ஸ்லேட் ரிட்டர்ன்ஸ்" வரைந்தார், மேலும் 1993 வரை வழக்கமான ரோபோ-ஹண்டர் கலைஞர்களில் ஒருவராக இருந்தார். 2004-05 ஆம் ஆண்டில் அவரது படைப்புகள் ஒரு பேய் வேட்டைக்காரனைப் பற்றிய ஜெர்மன் தொடரான ​​கீஸ்டர்ஜாகர் ஜான் சின்க்ளேரில் காணப்படுகின்றன மேலே கண்ட எழுத்தாளர் வொர்க்கருடன் இணைந்து இந்த ஒரு கதையில்தான் இயங்கி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.. 
ஒகே கதைக்கு வருவோமா? 


தி கோஸ்ட் ஆன் ப்ளைட் ௩௦௨(302) 
வேதாளர் பற்றிய குறிப்புகளுடன் கதை துவக்கம் பெறுகிறது.. வேதாளர் முதியவர் மோஸ் சந்திப்பு நிகழ்கிறது.   
 நாம் நடக்கும் சிலை மர்மம் வாசித்திருக்கிறோம் இல்லையா? ஆளரவமற்ற தீவில் எங்கோ பார்த்துக் கொண்டு நிற்கும் சில சிலைகள்.. கற்பனை சிறகுகளில் ஏறி இந்த கதைக்குள் பறந்து வந்து அவை அமைதியாக அமர்ந்திருப்பது பெங்கல்லா வனப்பகுதி மலையில்.. பார்வையாளர்கள், கவனிப்பவர்கள்  என்று மோஸ் அழைக்கிறார் அவர்களை.  வேதாளர் அவர்களை வெறும் கற்சிலைகளாக இருக்கலாம் என்று எண்ணுகிறார். ஒரு எரிமலை தன் சாம்பலை அந்த பகுதி எங்கிலும் வீசி வானைக் கருமையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அது எந்நேரமும் வெடித்து விடும் என்று ஒரு சந்தேகம். அந்த மலையை ஆராய ஏறிப் போகிறார் வேதாளர். உடன் ஹீரோ, டெவில் வர டெவிலை மட்டும் மலையில் அழைத்துக் கொண்டு ஏறி சிலைகள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்கிறார் வேதாளர். 
வானில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானம் அதே நேரத்தில் செயலிழந்து கீழே விழுவது போன்று வந்து கடைசி வினாடியில் மேலே ஏறிப் பறக்க அந்த அதிர்வில் தரையில் உருள்கிறார் வேதாளர். அப்போது அவருக்கு கனவா நிஜமா என்கிற நிலையில் ஒரு உருவம் ஐன்ஸ்டீன் போன்ற தோற்றத்தில் வந்து பெங்காலி முழுவதுமே அழிந்து போய்விட்டது அதற்கு தான் கொண்டு வந்த ஒரு கிருமிதான் காரணம் என்று கூறுகிறது. வேதாளர் மயக்கத்தில் இருக்கும்போதே ஆட்கள், செடி கொடிகள், பல்லுயிர்கள் அனைத்துக்கும் பேராபத்து நேர்ந்து விட்டிருக்கிறது.. 
அதற்குக் காரணமான நச்சு தான் சுமந்து வந்த விமானத்தில் ஒரு கைப்பெட்டியில் வைத்திருந்ததாகவும், விமானக்கடத்தல் ஒன்று இரண்டு கன்னியாஸ்திரிகள் வேடத்தில் வந்த கயவர்களால் நிகழ்ந்ததாகவும் அவர் வேதாளரிடம் தெரிவித்து மறைகிறார். வேதாளர் மண்டை ஓட்டுக் குகைக்கு விரைகிறார். வழியெங்கிலும் மரணம் தன் முத்திரையைப் பதித்திருப்பதைக் காண்கிறார். அங்கே குரான் தான் இறக்கும் முன் ஆக்சல் நடத்தி வரும் மருத்துவமனைக்கு சென்று அவரது மனைவி டயானாவை சந்திக்கக் கூறுகிறார். பின்னர் டாக்டர் ஆக்சலின் மருத்துவமனையிலேயே மயங்கி விழுகிறார் வேதாளர். கண்விழித்தால் தான் காண்பது அனைத்தும் பொய் என்பதும் விமானம் புறப்படும் தினத்துக்கு இரு தினங்கள் முன்னால் தான் இருப்பதையும் காண்கிறார். அவரை நம்ப மறுக்கும் டயானா, டாக்டர் ஆக்சல் வேதாளருக்கு மயக்கஊசி போட்டு படுக்க வைத்து விடுகிறார்கள்.. சும்மா விடுவாரா வேதாளர்..? 


தன் வனக்காவல் படை தலைமையை உஷாராக்குகிறார். ஆனாலும் சம்பவங்கள் தொடர்கின்றன... தானே முன் நின்று இதனை முடிக்க வேண்டிய நிலைமை என்பதைத் தெளிவாக உணரும் வேதாளர் டெவில் துணையுடன் மருத்துவமனையில் இருந்து தப்பி விட அவரை முடக்கிப் போட அவரது மனைவி டயானாவும், டாக்டர் ஆக்சலும் முயற்சிப்பதுதான் விதி.. ஆனால் நம்மவர் காட்டாறாயிற்றே.. எத்தனை தடைகள் எதிரே நின்றாலும் மோதித் தள்ளிக் கொண்டு சமுத்திரத்தை நோக்கிப் பாயும் நதி போன்று தன் பயணத்தை அதிரடியாகக் கொண்டு போகிறார் வேதாளர்.. விமானம் புறப்படுவதையும் அதில் விஞ்ஞானி ஏறுவதையும் அவரால் தடுத்து நிறுத்த முடியாமல் போனாலும் இராணுவ ஜெட் எடுத்துக் கொண்டு தானே பறந்து சென்று மிரட்டி கீழே எப்படியோ இறக்கி விடுகிறார் மாயாவி (எ) வேதாள மாயாத்மா... 




மாரடைப்பில் விஞ்ஞானி இறந்து விட, கடத்தல்காரர்கள் மடக்கப்பட, பேராபத்து ஏற்படுத்தும் பெட்டியுடன் ஜெட்டில் சென்று எரிமலைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் வீசி பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார் மாயாத்மா.. ஆம் இதுவும் அவருக்கான சிறப்புப் பெயர்தான்.. ஜனாதிபதி லுவாகா எல்லாவற்றையும் மூடி மறைத்து விடுகிறார். ஜெட் மட்டுமே அவருக்கு நட்டம்.. எரிபொருள் இல்லாததால் கடலுக்குள் இறக்கி விடுகிறார் வேதாளர்.. 
                        முதியவர் மோஸ் கூறியவாறே நமக்கும் மேலே நம்மை அக்கறையாகக் காப்பாற்றுவதற்காக கவனித்துக் கொண்டே இருக்கிறவர்களும் உண்டு என்பது இந்த கதையின் மூலமாக மாயாவிக்கு தெரியவருகிறது.. 
                 இதுவும் கிங் பியூச்சர் சிண்டிகேட்டின் காப்பிரைட் பெற்று வெளியிடப்பட்ட கதைதான். ஆஸ்திரேலிய FREW வெளியீடு.. 30+ பக்கங்களில் அதிரடியும், பேன்டசியும்  கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.. வேதாளர் வாழ்க.. நிறைவு.. 
என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி.. 

பான்சி பாட்டர்.. அறிமுகம்.

 தமிழ் வாழ்க.. தமிழ்ப் புத்தாண்டு மலர்க.. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..  மகா கவி பாரதியார்   " யாமறிந்த   மொழிக...