வணக்கங்கள் வாசகவாசகியரே..
நண்பர் இயக்குனர் சிவகுமார் அவர்கள் பல ஆண்டுகளாக திரைத்துறையில் இயங்கி வருபவர். நிறைய தேசிய விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறார். அனைத்தும் சுயாதீனக் குறும்படங்கள் கலைப்படங்களுக்காக. 2021 வாக்கில் அவரை எனக்கு தெரியவந்தது. அப்போது என் முதல் புத்தகம் வந்திருக்கவில்லை. ஆனால் எனது ஒரு கதை ஜீரோ டிகிரி வெளியிட்ட அரூ அறிவியல் புனைகதை புத்தகத்தில் வெளிவந்திருந்தது. அதைப் படித்து அதில் நான் எழுதியிருந்த "பாஞ்சஜன்யம்" எனும் கதை பிடித்துப்போய் என்னைத் தொடர்பு கொண்டார். முதலில் அக்கதையை ஒரு மணி நேர சுயாதீன கலைப்படமாகவே திட்டமிட்டிருந்தார். வசன ரீதியாக இருந்த சிலவற்றை காட்சி ரீதியாக மாற்றி எழுதிக்கொடுத்திருந்தேன். பிறகு அது நிகழாமல் போனது. கோரோனா காலகட்டம் வேறு. அவருக்கும் சில நெருக்கடிகள். பிறகு போன வருடம் அழைத்து,
காமிக்ஸ்க்குக்கென புதிதாக ஓர் இணைய தளம் தொடங்கவிருக்கிறேன்.
தமிழ் இலக்கியக் கதைகளை காமிக்ஸ்சாக்கி வெளியிட வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. அதற்கு உங்கள் கதையையும் எடுத்துக்கொள்ள விழைகிறேன். உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டிருந்தார். நானும் தந்தேன். அவரது ஆசையின் விளைபயன் தான் இந்த இணைய தளம். இன்று தான் இந்த தளம் லான்ச் ஆகியிருக்கிறது. கூகுள் லாகின் இருந்தால் போதும் எவரும் வாசிக்கவியலும். வாரம் ஒருமுறை கதைகள் பதிவேற்றம் செய்யப்படும்.
தலைச்சன் கதையாக
தமிழிலிக்கியத்தின் தலைச்சன் புதுமைப்பித்தனின் 'கபாடபுரம்' வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து
பாலகுமாரனின் 'கடற்பாலம்', எஸ். ராமகிருஷ்ணணின் 'தாவரங்களுடன் உரையாடல்', என்னுடைய 'பாஞ்ச ஜன்யம்' ஆகிய கதைகள் அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரும். காமிக்ஸ் வாசிக்கும் நண்பர்கள் ஆதரவு தரக்கேட்டுக் கொள்கிறேன்.
https://www.sivacomics.com/
- எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன்
கபாடபுரம் கதை அருமையா மண்டைக்கேறிக்கிச்சு. இதை நேரடியா படிக்க முடியாதவங்க அருமையா வாசிச்சு எஞ்சாய் பண்ணலாம்.. கண்டிப்பா போய் விசிட் அடிங்க..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக