வியாழன், 18 டிசம்பர், 2025

இவரும் ஒரு மாயாவிதான்..-எழுத்தாளர் மாயாவி சிறு குறிப்பு



 மாயாவி (அக்டோபர் 2, 1912 - 1988) தமிழில் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர். கலைமகள், கல்கி ஆகிய இதழ்களில் தொடர்கதைகளாக அவை வெளிவந்தன. பெரும்பாலும் குடும்பப்பின்னணி கொண்ட உணர்ச்சிகரமான கதைகளை எழுதினார். மாயாவியின் இயற்பெயர் எஸ். கே. ராமன். செங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த சாம்பவர் வடகரை எனும் ஊரில் பிறந்தார். (தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பிறந்த ஊர் இது) 1937-ல் கலைமகள் இதழில் முதல் சிறுகதை ஜாதிவழக்கம் வெளியாகியது. கலைமகள், கல்கி போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதினார். அகில இந்திய வானொலிக்காக வானொலி நாடகங்களும் எழுதியிருக்கிறார். ஸ்டேஜ் மாயா என்ற பெயரில் ஒரு நாடகக்குழுவும் வைத்திருந்தார். அதில் பெரும்பாலும் வானொலி நாடகங்களை நடத்தினார். மாயாவி எழுதிய நாவல்களில் கண்கள் உறங்காவோ சிறந்தது. கல்கி இதழில் வெளிவந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நெருப்பு மைந்தன் ஜானி

 வணக்கங்கள் வாசக வாசகியரே நெருப்பு மைந்தன் ஜானியின் கதை இதோ: அத்தியாயம் 1: ஆரம்பம் ஜானி, ஒரு சாதாரண மனிதன். அவனது வாழ்க்கை ஒரு நாள் இரவு எதி...