வணக்கங்கள் அன்புள்ளங்களே..
இணையத்தில் சித்திரக்கதைகள் என்பது ஏற்கனவே பலமுறை நாம் அலசி ஆராய்ந்து அதன் வாய்ப்புகளைப் பற்றி தொலைநோக்கோடு விவாதித்து வந்ததொரு விஷயம்தான்.. இயக்குனர் சிவக்குமார் அவர்கள் தன்னுடைய முதல் டிஜிட்டல் தளம் வாயிலாக சித்திரக்கதைகளை இன்னும் பிரம்மாண்டமாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. அவரது பெட்டியில் முத்து காமிக்ஸ் என்று ஒரு குழு மட்டுமே இருக்கிறது அவர்களுக்குள்தான் பேசிக் கொள்வார்கள் அவர்களது உலகம் தனி என்பதை மட்டும் அன்புடன் மறுக்கிறோம்.. இங்கே வெவ்வேறு தளங்களில் கலக்கி வரும் ஏகப்பட்ட நண்பர்கள், நட்பு நாடும் இதயங்கள் உள்ளனர். நாங்கள் சாண்டில்யனையும் வாசிப்போம், வேள்பாரியிலும் திளைப்போம்.. தொழில் நுட்பங்களிலும் முன்னோடிகளாகவே இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.. இங்கே தியாக சீலர்களும், கொடையாளர்களும் உண்டு.. இங்கே விற்பனையாகும் புத்தகங்களில் சிறு ஒரு பகுதியை கட்டிக் காப்பாற்றி வரும் வாசகர்கள் அதே சமயம் பெரும்பகுதியான நாவல்கள், இலக்கியங்கள், பொது அறிவு நூல்கள் போன்றவற்றிலும் தங்கள் குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த புத்தகங்களையும் வாசித்து விசாலமான பேரறிவும், பேருவகையும், பெரு சிந்தனையும் கொண்டவர்கள் நண்பர் திரு.சிவக்குமார் அவர்களே.. தங்கள் முயற்சிகளை பாராட்டுவதுடன் காமிக்ஸ் கிளப் என்னும் முன்னோடி இணைய தளத்தினையும் கொஞ்சம் ஆண்டுகள் முன்னரே நாங்கள் துவக்கி நடத்திக் காண்பித்த முன்னோடிகள் என்பதனையும் இங்கே பணிவுடன் பதிவு செய்து கொள்கிறோம்.. நன்றி..
இதோ குறும்பட இயக்குனர் சிவா அவர்களது பேட்டி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக