புதன், 4 மார்ச், 2020

*மாண்டு போன தினங்கள்*


உறக்கமின்றி
பாயைப் பிறாண்டி
உன் பெயரை
புலம்ப வைத்து
மெல்ல மெல்ல 
மாயமாகிப்
போனாயே...
உன் புன்முறுவலில்
உயிர்த்திருந்த என்
உற்சாக தினங்களை
உன்னோடே 
கொண்டுபோய்
எங்கோ 
கொட்டிவிட்டாயே..
மாண்டவன்
மீண்டெழ 
வழியில்லாமல்
வனாந்தரத்தில்
வீசிப் போகிறேன்
வார்த்தைகளை..
வாய்ப்புள்ளோர்
வாசிக்கட்டும்
வாழ்விழந்தவன்
வாழ்க்கையை..
*ஜானி சின்னப்பன்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Feb 2025 issues_பிப்ரவரி மாத காமிக்ஸ் இதழ்கள் விவரம்

 வணக்கங்கள் அன்பு வாசகர்களே..  இந்த பிப்ரவரி மாத வெளியீடுகள்  ரங் லீ காமிக்ஸ்  ஆந்தை இளவரசி  _சித்திரக்கதை மற்றும் வாசிப்புகேற்ப வரிகள் என்ற...