புதன், 29 அக்டோபர், 2025

IND-24-31_பணம் படுத்தும் பாடு_ பகதூர் சாகசம்_தமிழில் முதல்முறையாக

 வணக்கங்கள் வாசகர்களே.. ஒரு கை என்றுமே ஓசை எழுப்புவதில்லை இன்று நமது அருமை நண்பர் அழகு ரங்கநாதனின் அன்பளிப்பாகக் கிடைத்த அபூர்வமானதொரு இந்திரஜால் காமிக்ஸின் ஸ்கேன்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. 



இந்த கதை வெளியிடப்பட்ட விவரம் 2-8, ஆகஸ்ட் -1987. விலை மூன்று ரூபாய். முழு வண்ணத்தில் சிறப்புற வெளியிடப்பட்டு வாசகர்களை மகிழ்வில் ஆழ்த்திய இந்த பகதூர் தோன்றும் சாகசம் நமக்கும் வாசிக்க கிடைத்தது நண்பர் அழகு அவர்களது அன்பினால்தான் சாத்தியமாயிற்று.. இந்த நூலின் தற்போதைய மார்க்கெட் விலை சுமார் ஆயிரம் ரூபாய். அப்படி இருக்க தான் அப்படியே வைத்திருந்து நல்ல விலைக்கு விற்கும் சாத்தியம் இருக்கும்போதும் சக வாசகர்களும் வாசிக்க ஒரு வழி செய்வோமே என்கிற தாராள எண்ணத்தில் ஸ்கேன்களை அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு நமது நன்றிகளுடன்..இதோ பகதூர்.. 



கதைசுருக்கம்.. 

இளைஞன் ஒருவன் தன் குடும்பத்தின் மீது கொண்ட அக்கறையினால் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கிறான்.. பொம்மைத் துப்பாக்கி வங்கியிலேயே விழுந்து விடுகிறது.. செய்தி வெளியில் வர பொம்மைத் துப்பாக்கிக் கடை உரிமையாளர் கலங்குகிறார். பகதூர் உதவியை போலீஸ் நாடுகிறது.. பகதூரின் உதவியாளர் முக்கியாவை பொம்மைத் துப்பாக்கிக்கடை உரிமையாளர் அணுகுகிறார். இருவரும் பகதூரை சந்தித்து விளக்குகிறார்கள்.. 



தங்கைத் திருமணத்துக்கு பணம் கொடுத்து விட்டுக் கிளம்புகிறான் கற்றுக்குட்டி கொள்ளையன் ராஜூ.. இதற்கிடையே ராஜூதான் குற்றம் புரிந்தவன் என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர் பகதூர் டீம்.. பிறகு என்ன நடந்தது?  

வடக்கு பாணி திருமணமும், அதில் இருக்கும் வரதட்சணை பிரச்சினையும், அதன் பின் விளைவுகளும் சுபமானதொரு முடிவும் என்று மிகவும் மங்களகரமான திருப்பங்களை உடைய இந்த கதை உங்களுக்கும் பிடித்துப் போகும்..  இந்த நூலை உங்களுடன் பகிர்ந்து கொல்வதற்கு முன்பாக சிறு கோரிக்கை.. 

மூன்றாவதுதொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ்பட்டியல் - (1983 - 1988)

1.       

22

52

29-12-85

NeradiModhal Part 1

Phantom

நேரடிமோதல் I

2.       

23

1

05-01-86

NeradiModhal Part 2

Phantom

நேரடிமோதல் II

3.       

24

4

25-01-87

Kolli Paambu

Phil Corrigan

கொல்லிப்பாம்பு

4.       

24

5

01-02-87

Pazhi Theertha Vizhi

Bahadur

பழிதீர்த்தவிழி

5.       

24

14

05-04-87

Vaarisu

Phantom

வாரிசு

6.       

24

26

28-06-87

Mohin Aattam Part 2

Phantom

மோகினிஆட்டம் II

7.       

24

31

02-08-87

PanamPaduthumPadu

Bahadur

பணம்படுத்தும்பாடு

8.       

24

37

13-09-87

RaatshaRatchagar

Bahadur

ராட்சஸரட்சகர்

9.       

25

1

03-01-88

Paarai Pavai Part 1

Phantom

பாறைப்பாவை I

10.    

25

2

10-01-88

Paarai Pavai Part 2

Phantom

பாறைப்பாவை 2

 

இன்னும் எட்டு புத்தகங்கள் நாம் எட்டி விட்டால்  இந்த மூன்றாவது தொகுப்பு நிறைவுபெறும்.. நண்பர்கள் உதவலாம்.. 

கூடுதல் விவரம் இதோ:

இதன் ஆங்கிலப் பதிப்பு 

அதே வெளியீட்டு எண் மற்றும் தேதிகள்.. விலையும் அதே.. 


அன்புடன் ,

தரவிறக்க சுட்டியை அழுத்தி வாசிப்பினைத் துவங்க அழைக்கிறோம் ஜானி வித் அழகு.. 


ஒரு கேள்வி:
அதென்ன 3வது தொகுப்பு??? முதல் & 2வது எப்போது வந்தவை.. எத்தனை எத்தனை உள்ளன?
சேலம் டெக்ஸ்விஜயராகவன்
பதில்:
ஆங்கிலத்தில் 800 புத்தகங்கள் தமிழில் 600 புத்தகங்கள் இவை முதலில் வெளிவந்தவற்றை தலைப்பு மட்டும் மாற்றி பின்னர் முழுமையாக மறுபதிப்பு கண்டவை. ஒரு புத்தகம் இரு மறுபதிப்புகள் என்று ஒரே கதை மும்முறை தமிழில் வந்துள்ளது.. இதுதான் செய்தி ஜி.

சின்னஞ்சிறுகோபு அவர்கள்:

நான் இந்திரஜால் காமிக்ஸ் தமிழ்& ஆங்கிலம் இதழுக்கு சந்தா கட்டியிருந்தேன். எனக்கு அந்த பத்திரிகைகள் நிற்கும்வரை தபாலில் வந்துக்கொண்டிருந்தது. இந்திரஜால் காமிக்ஸ் நின்றபோது எனது வருத்ததை அப்போது முத்தாரம் என்ற பத்திரிகையில் எழுதினேன். அந்த கடிதத்தை முத்தாரம் பத்திரிகையில் பிரசுரித்திருந்தார்கள்.
-சின்னஞ்சிறுகோபு.
செந்தில்நாதன் அவர்கள்:

இந்திரஜால் மூன்று வித காலகட்டமாக வெளிவந்துள்ளது -
1965 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது முதல் இதழை 60பைசா விலையிலும், அதன் பிறகு 70 பைசா, 1 ரூபாய் விலை மாற்றத்துடன் மொத்தம் 204 இதழ்களுடன் 1974 ம் வருடம் வரை வெளிவந்துள்ளது.

சில வருட இடைவெளிக்குப் பிறகு, அதே அகல்விளக்கு லோகோவுடன் 1980 ம் வருடம் முதல் 1.50 விலையுடன் வேதாளரின் கதையான கடலடி ரத்தினக் களவு நாடகம் மூலமாக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த்து. 1.50, 2.00 விலையில் அதே அகல்விளக்கு லோகோவைப் பயன்படுத்தி 1982 டிசம்பர் வரை 90 இதழ்களை வெளியிட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து அகல்விளக்கு லோகோ இல்லாமல் மலர் 1 இதழ் 1 என்றும் அகல்விளக்கு லோகோவிற்குப் பதில் அந்தந்த கதையின் நாயகரின் உருவப்படத்தையே பயன்படுத்தி 2 ரூபாய் விலையிலும். பிறகு, 3 ரூபாய் விலையிலும் 1988 வரை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளனர். அதன் பிறகு எதன் காரணத்தினாலோ இந்த இதழ்கள் நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய 23 வருடங்கள் வரை வெளியிட்டுள்ளனர்.

7 கருத்துகள்:

  1. உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் ஜானி ஜி 😘👍💐🙏😄

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் நம் மீது பாசம் கொண்ட நமது நண்பர்களே மதிப்புக்கு உரியவர். தோழர் அழகு ரங்கநாதன் அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  2. தொகுப்பு 1&2 விவரங்களை மீண்டும் ஒருமுறை பதிவிடுங்கள் ஜானி ஜி 💐😘🙏

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. மகிழ்ச்சி ஷேரிங் சார்.. முழு பட்டியல் மற்றும் தேவையான மிஸ்ஸிங் பட்டியல் அனுப்பி வையுங்கள். நன்றி

      நீக்கு
  4. இந்திரஜால் மூன்று வித காலகட்டமாக வெளிவந்துள்ளது -
    1965 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது முதல் இதழை 60பைசா விலையிலும், அதன் பிறகு 70 பைசா, 1 ரூபாய் விலை மாற்றத்துடன் மொத்தம் 204 இதழ்களுடன் 1974 ம் வருடம் வரை வெளிவந்துள்ளது.

    சில வருட இடைவெளிக்குப் பிறகு, அதே அகல்விளக்கு லோகோவுடன் 1980 ம் வருடம் முதல் 1.50 விலையுடன் வேதாளரின் கதையான கடலடி ரத்தினக் களவு நாடகம் மூலமாக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த்து. 1.50, 2.00 விலையில் அதே அகல்விளக்கு லோகோவைப் பயன்படுத்தி 1982 டிசம்பர் வரை 90 இதழ்களை வெளியிட்டுள்ளது.

    1983 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து அகல்விளக்கு லோகோ இல்லாமல் மலர் 1 இதழ் 1 என்றும் அகல்விளக்கு லோகோவிற்குப் பதில் அந்தந்த கதையின் நாயகரின் உருவப்படத்தையே பயன்படுத்தி 2 ரூபாய் விலையிலும். பிறகு, 3 ரூபாய் விலையிலும் 1988 வரை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளனர். அதன் பிறகு எதன் காரணத்தினாலோ இந்த இதழ்கள் நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய 23 வருடங்கள் வரை வெளியிட்டுள்ளனர்.

    பதிலளிநீக்கு

கீழே விழாத நிழல்_ராஜேஷ் குமார்_ஒரு ஏ ஐ முயற்சி..

  வணக்கங்கள் வாசகப் பூக்களே.. நமது அன்பு அண்ணன் திரு. ராஜேஷ் குமார் அவர்களது நாவல் ஒன்றின் அத்தியாயம் ஒன்றுக்கு gemini செயற்கை நுண்ணறிவினை ப...