வெள்ளி, 31 அக்டோபர், 2025

IND-25-001_பாறைப்_பாவை_&_பதுங்கும்_புலிகள்_01_மாரிமுத்து விஷால்

 

3-9,ஜனவரி 1988 ல் வெளியான பாறைப்பாவை மற்றும் அதன் உள்ளே மற்றொரு கதையாக வெளியான பதுங்கும் புலிகள் ஆகிய சாகசங்கள் முதல் பாகம் நண்பர் காமிக்ஸ் எம்ஜிஆர் என்று செல்லமாக வழங்கப்படும் திரு.மாரிமுத்து விஷால் அவர்களால் அன்பளிப்பாக நண்பர் குணா கரூர் அவர்களது பிறந்ததினமான இன்று வெளியாகியுள்ளது.. இதன் அடுத்த பாகமும் இன்றே பகிரப்பட்டிருக்கிறது.. மூன்றாவது தொகுப்பில் மிஸ்ஸிங் லிங்க் என்று தேடப்படும் அபூர்வமான கதைகளில் இதுவும் ஒன்று.. இவை தவிர நமக்கு ஆவணப்படுத்தல் நிமித்தமாக தேவையான மூன்றாவது தொகுப்பின் பட்டியல் இதோ.. 






மூன்றாவதுதொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ்பட்டியல் - (1983 - 1988)

1.       

22

52

29-12-85

NeradiModhal Part 1

Phantom

நேரடிமோதல் I

2.       

23

1

05-01-86

NeradiModhal Part 2

Phantom

நேரடிமோதல் II

3.       

24

4

25-01-87

Kolli Paambu

Phil Corrigan

கொல்லிப்பாம்பு

4.       

24

5

01-02-87

Pazhi Theertha Vizhi

Bahadur

பழிதீர்த்தவிழி

5.       

24

14

05-04-87

Vaarisu

Phantom

வாரிசு

6.       

24

37

13-09-87

RaatshaRatchagar

Bahadur

ராட்சஸரட்சகர்

 இவற்றில் சில ஏற்கனவே ஸ்கேன் வடிவில் நம்மிடம் இருப்பினும் அவை வெளியிடப்பட ஹார்ட் டிஸ்க் பிரச்சினைகளால் நம்மால் தற்போது வெளியிட இயலவில்லை. ஆகவே இந்த புத்தகத்தை நூல் வடிவில் வைத்திருப்போர் ஸ்கேன் செய்து நம்முடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று அன்புடன் அழைக்கிறேன்.. பழிதீர்த்த விழி பகதூர் சாகசம்..இதில் ஹிப்னாட்டிசம் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கும்.. ராட்சச ரட்சகர் கூட சுவாரசியம்  நிறைந்த கதைதான்.. ஆங்கிலத்தில் இவற்றின் அனைத்து கோப்புகளும் ஒப்பாக இணையத்தில் உள்ளது. ஆனால் தமிழில் வியாபாரம் செய்யும் தோழமைகளால் சற்றே கிடைப்பதில் தாமதமாகிறது.. நாம் அனைவரையும் கோருவது ஒன்றுதான். உண்மையான புத்தகத்தின் மதிப்பு எப்போதும் டாப்தான் ஆனால் அனைவருமே வாசிக்கவும் வாங்கவும் வாய்ப்பில்லாத நிலையில் இருப்பவற்றில் இன்பம் கொள்வோமே.. இருக்கும் புத்தகத்தை ஒரு ஸ்கேன் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நட்பைப் பெருக்க வல்லது அல்லவா..? என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன்.. 

தரவிறக்க சுட்டி: 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு பிரமுகர் -ஜெயகாந்தன் -ஏ ஐ முயற்சி -பிரசாந்த்

நண்பர் பிரசாந்த்துக்கு வாழ்த்துக்கள்..